Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

நீங்கள் நிதித்துறையில் ஒரு தொழிலை கருத்தில் கொள்ள வேண்டியதற்கான 5 காரணங்கள்

வருட இறுதி நெருங்குகிறது, அதன் அர்த்தம் புதிய வருடமும், அதனோடு பல மாற்றங்களும் வரப்போகிறது என்பதே. புதிய ஆண்டொன்றின் தொடக்கம் என்பது பலரது வாழ்க்கையில் அவர்கள் அடுத்த கட்டத்திற்குள் நுழையும் வாசலாக அமையும், அதிலும் குறிப்பாக பள்ளி வாழ்க்கையை முடித்துக்கொண்டு, தங்கள் உயர்கல்வியைத் தொடங்க மற்றும்/அல்லது பணியிடத்தில் நுழையத் தயாராகும் மாணவர்களுக்கு இது இன்றியமையாத காலமாகும்.

உங்கள் நேரம், ஆற்றல் மற்றும் வளங்களை முதலீடு செய்ய ஒரு குறிப்பிட்ட துறையைத் தேர்ந்தெடுப்பதென்பது மிகவும் குழப்பமாகவும் கடினமாகவும் இருக்கலாம், அதிலும் குறிப்பாக இந்த தீர்மானம் உங்கள் வாழ்க்கை முழுவதையுமே வடிவமைக்கப் போகிறது எனும் போது உருவாகும் சிக்கல் தவிர்க்கவியலாதது.

பெரும்பாலான தனிநபர்களுக்கு நிதித் துறை என்பது  எப்போதும் முதல் தெரிவாக இருப்பதில்லை என்றாலும், இது அபரிமிதமான ஆற்றலைக் கொண்ட ஒரு துறையாகும். பெருந்தொற்றுக்குப் பிந்தைய காலகட்டத்தில் நாட்டை பொருளாதார மறுமலர்ச்சியை நோக்கி இட்டுச் செல்ல உதவும் புதிய தலைமுறை நிதி வல்லுநர்களை வரவேற்க, குறிப்பாக இலங்கை தயாராக உள்ளது.

உள்ளூர் பங்குச் சந்தை பெரும் நம்பிக்கையை வெளிப்படுத்துவதால், எளிதாக வணிகம் செய்யக்கூடிய நாடுகளுக்கான சுட்டெண்ணில் இலங்கை உயர்ந்து வருகிறது; 2025 ஆம் ஆண்டளவில் முதல் 25 இடங்களுக்குள் வருவதை இலக்காகக் கொண்டுள்ளது இலங்கை. மேலும் துறைமுக நரகத் திட்டம் நிறைவடையும் தருவாயில், அதிகரித்த அந்நிய நேரடி முதலீடுகள் மற்றும் அதன் எல்லைகளுக்கு அப்பாற்பட்ட புதிய வாய்ப்புகள் ஆகியவற்றால் நாட்டில் நிதித் துறையில் வேலைவாய்ப்பு அதிகரிப்பை எதிர்பார்க்கலாம்..

While finance is not always the first option for most individuals, this is a field with immense potential <Source: Scott Graham via Unsplash>

எனவே, உங்கள் எதிர்கால தொழில் தெரிவில் நிதித்துறை சிறந்த தேர்வாக அமைவதற்கான ஐந்து காரணங்கள் இதோ.

  • மாற்றம் நிலையானது

நிதித்துறை என்பது எப்போதும் வியத்தமடைந்து வருவதும் மற்றும் உலகளவில் தேவையுடைய தொடர் வியத்தகு முன்னேற்றங்களை அனுபவிப்பதுமான துறை ஆகும். பொதுவாக வெளியில் இருந்து நோக்குங்கால் ஒற்றைப்பரப்பாக வெளிப்பட்டாலும், நிதித்துறையானது உண்மையில் மிகவும் பல்வகைமைப்பட்ட ஒரு துறையாகும்.

தொற்றுநோய்க்கு பிந்தைய காலத்தில் உலகம் முழுவதும் விரைவான டிஜிட்டல் மயமாக்கல் நடைபெற்று வருவதால், இந்தத் துறையில் மேலும் கற்றுக்கொள்வதற்கும், மேம்படுத்துவதற்கும், வெற்றி பெறுவதற்கும் உற்சாகமான புதிய பகுதிகளுக்கு வழிவகுக்கவும் தொழில்நுட்பமானது வினையூக்கி வருகிறது. எதிர்காலத்தில் தொழில்நுட்பம் மற்றும் AI உடன் மிகப்பெரிய ஒருங்கிணைப்பை நிதித்துறை எதிர்பார்க்கும் நிலையில், மாற்றத்திற்கான பெரும் சாத்தியம் உள்ளது.

நீங்கள் சுவாரசியமற்ற பணிகளைச் செய்வதில் எளிதாக சலிப்படையக் கூடிய நபராக இருப்பின், நிதித்துறையில் உங்களுக்கென எப்போதும் இடமிருக்கும்.

  • எப்பொழுதும் புதிய வாய்ப்புகள் குறைவிராது

தொழில் வாய்ப்புகள் அடிப்படையில் நிதித்துறை முடிவற்ற சாத்தியங்களை வழங்குகிறது. விரிவாக்கம் என்பது தொழில்துறையுடன் ஆழமாக பின்னிப்பிணைந்த ஒரு அம்சமாகும், மேலும் உலகெங்கிலும் உள்ள நிறுவனங்கள் பல்வேறு வேலைப் பாத்திரங்களில் உள்ள நிதி நிபுணர்களை எப்போதும் வரவேற்க காத்திருக்கின்றன.

இதன் பொருள், நீங்கள் நிதித்துறையில் ஒரு தொழிலைத் தொடரும் போது, வேறு துறைகளில் இருப்பவர்களுக்கு எளிதில் கிடைக்காத வாய்ப்புகள் மற்றும் இடங்களுக்கு உங்களை அழைத்துச் செல்லும்.

ஒரு வலையமைப்பை உருவாக்கவும், தங்கள் எல்லைகளை விரிவுபடுத்தவும், புதிய கலாச்சாரங்களைப் பற்றி அறிந்துகொள்ளவும் அனுபவிக்கவும் விரும்புபவர்களுக்கு, அந்த இலக்கை அடைவதற்கான ஒரு நல்ல நுழைவாயிலாக நிதித்துறை விளங்கும்.

  • நல்ல சவாலுக்கு தயாரா?

நீங்கள் அன்றாடம் புதிய சவால்களை வேண்டுபவராக இருந்தால் நிதித்துரையானது அதற்கு மிகவும் பொருத்தமானதாக அமையும். இத்துறையில் நீங்கள் தோடர்ந்து பயணிக்க வேண்டுமெனில் அர்பணிப்பு, படைப்பாற்றல் உள்ளிட்ட தனித்துவமான திறன்கள் தேவைப்படும்

முழுத் தொழில்துறையும் அதிவேகமான கதியில் அமைக்கப்பட்டுள்ளது, நீங்கள் அந்த தேவைப்பாடை பூர்த்தி செய்யும் பட்சத்தில், உங்கள் வாழ்க்கையின் மிகவும் உற்சாகமான பயணங்களில் ஒன்றை மேற்கொள்ளலாம். இன்று ஒவ்வொரு நிதிப் பணிக்கும் நல்ல சிக்கலைத் தீர்க்கும் திறன் தேவைப்படுகிறது, மேலும் இத்திறன் மிகப்பெரிய, அபாயகரமான தடைகள் முதல் தினசரி நொடி நேர  பணிகள் வரை அனைத்திற்கும் பயன்படுத்தப்படலாம். வேகமான மற்றும் சவாலான விடயங்களில் நீங்கள் ஆர்வமுடையவரெனில், இந்த துறை உங்களுக்கு ஒரு நல்ல தேர்வாக அமையும்.

  • மிகவும் நிலையான துறைகளில் ஒன்று

உலகம் இந்த கோவிட்-க்குப் பிந்தைய ‘புதிய இயல்பு நிலைக்கு’ நுழைவதற்கு முன்பே, நிதி வல்லுநர்கள் இன்றியமையாதவர்களாக மாறிவிட்டார்கள். அவர்கள் இல்லாமல், வணிகங்கள் முக்கிய உத்திகள், முதலீடுகள், பாதீடுகள் மற்றும் பலவற்றைப் பற்றிய நுண்ணறிவை இழந்துவிடும். அவர்களின் உள்ளீடு இல்லாமல், வணிகங்கள் செயல்பாட்டில் வைத்திருப்பதற்கு இன்றியமையாததாக இருக்கும் உகந்த விரிவாக்க வழிகள், தயாரிப்பு மற்றும் சேவை செயல்திறன், பொதுவான வழிகாட்டல் மற்றும் எதிர்கால நோக்கங்களை தீர்மானிப்பது என்பவை மிகவும் கடினமாக மாறிவிடும்.

ஆனால் இந்தத் துறையைப் பற்றிய சிறப்பு என்னவென்றால், நிதி வல்லுநர்களுக்கான தேவை ஒருபோதும் அற்றுப்போகாது, எனவே எந்தவொரு தொழிற்துறையிலும் இது ஒருமித்த தேவையாக இருப்பதால் எப்போதும் எங்காவது இதற்கான தேவை நீடித்த வண்ணமே இருக்கும். கூடுதலாக, நிதித்துறை வேலைகள் மிகவும் இலாபகரமானதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஸ்திரத்தன்மையை நீங்கள் முன்னுரிமைப்படுத்துவீர்கள் என்றால், நிதித்துறை அதற்கேற்ற சிறந்த வாய்ப்பை வழங்கும்.

Finance professionals will never go out of demand, so there is always an opening somewhere as it is a unanimous requirement in any industry <Source: mentatdgt via Pexels>
  1. சுய முன்னேற்றத்திற்கு ஏற்றது

நிதித்துறை என்பது எண்கள், புள்ளிவிவரங்கள், உண்மைகள் மற்றும் கணிப்புகளைக் கையாளும் ஒரு அழுத்தமான மற்றும் தர்க்கரீதியான துறையாகத் தோன்றலாம். அது ஓரளவு உண்மையாக இருக்கும் போதிலும், நிதித்துறை என்பது ஒரு சிறந்த கருவியாகும், இதன் மூலம் உங்களது தனிப்பட்ட திறன்கள், வலையமைப்பு உள்ளிட்ட பலவற்றையும் நீங்கள் மேம்படுத்திக்கொள்ளலாம்.

எடுத்துக்காட்டாக, பங்குதாரர் திருப்தி என்பது தொழில்துறையின் ஒரு பெரும் பகுதியாகும், மேலும் வாடிக்கையாளர் சேவை மாதிரி மற்றும் வணிகங்களின் தகவல்தொடர்புகளை மாற்றுவதில் தொழில்நுட்பம் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தாலும், வாடிக்கையாளர் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வது முன்பை விட மிக முக்கியமானதாக மாறியுள்ளது. அத்தகைய வினைத்திறனான  தகவல்தொடர்புகளை உங்களால் எளிதாகச் செய்ய முடியும் என்பதால், நேர்மறையான அனுபவங்களை உருவாக்குதல் மற்றும் வாடிக்கையாளர்களுடன் நீண்டகால உறவுகளை உருவாக்குவதில் நீங்கள் சிறப்பாகச் செயலாற்ற வேண்டியிருக்கும்.

நிதித்துறையில் வெற்றிபெற, உங்கள் வேலையின் தனிப்பட்ட மற்றும் பொதுமுறை ஆகிய இரண்டையும் எடுத்துக் கொள்ளும் திறன் கொண்ட ஒரு தனி நபராக இருப்பதுடன் உங்களை நீங்களே வளர்ச்சி  நோக்கி உந்தவும் தயாராக இருக்க வேண்டும்.

You do not need an extensive background and decades of study to make it to a good position in the finance sector <Source: Daria Nepriakhina via Unsplash>

How Do You Get Started? நீங்கள் எப்படி தொடங்குகிறீர்கள்?

நீங்கள் நினைப்பதைக் காட்டிலும் நிதித்துறையில் ஒரு தொழிலைத் தொடங்குவது என்பது இலகுவான ஒரு பணியாகும். நிதி உலகில் நுழைவதற்கு முன் செய்ய வேண்டிய மிக முக்கியமான விஷயம், உங்களுக்குத் தேவையான அறிவு மற்றும் திறன்களை வழங்கும் நம்பகமான தகுதி ஒன்றிணைப் பெறுவது.

அறிவியலைப் போலன்றி, நிதித் துறையில் ஒரு நல்ல நிலைக்கு வர உங்களுக்கு விரிவான பின்னணி மற்றும் பல தசாப்த கால படிப்பு போன்றவை தேவையில்லை. உண்மையில்,  நீங்கள் தற்போது எந்தவொரு துறையில் பணிபுரிந்து வந்தாலும் அல்லது அறிவியல் பாடத்தைத் தேர்ந்தெடுத்த மாணவராக இருந்தாலும் கூட, அவற்றைப் பொருட்படுத்தாமல் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் உங்களுக்கான நிதித் தகுதியைப் பெறலாம்.

பரந்த சான்றிதழ்கள் அல்லது ACCA போன்ற நிபுணத்துவங்கள், தங்கள் தொழிலை மேம்படுத்த அல்லது நிதித்துறையில் நுழைய விரும்புவோருக்கு நல்ல துணைத் தகுதிகளாகக் கருதப்படுகின்றன.

தெளிவான முன்னேற்றப் பாதைகள், பலதரப்பட்ட பாத்திரங்கள், ஆரோக்கியமான ஊதியங்கள், நன்மைகள் மற்றும் ஸ்திரத்தன்மையின் உறுதிப்பாடு ஆகியவற்றுடன், நிதித்துறையானது சவாலை எதிர்நோக்குபவர்களுக்கும், பரந்துபட்ட அனுபவங்களுக்கு காத்திருப்பவர்களுக்கும் ஏற்ற தொழிலை உருவாக்கக்கூடிய ஒரு துறையாக அமையும்.

Related Articles