பண்டைத் தமிழர்களின் வீரத்தாய் மரபு- அன்னையர் தின சிறப்புக் கட்டுரை

இன்று அன்னையர் தினம். அன்னையர் தினம் என்பது குடும்பம் அல்லது தனிநபரின் தாய் மற்றும் தாய்மை, தாய்வழி பிணைப்புகள் மற்றும் சமூகத்தில் தாய்மார்களின் செல்வாக்கு ஆகியவற்றைக் கௌரவிக்கும் ஒரு தினமாக அடையாளம் காணப்படுகிறது.

article

அம்பையின் அழல்!

இந்தியப் பெருநிலத்தில் இரண்டறக் கலந்திருக்கும் பேரிதிகாசமான மகாபாரதம், துணைக்கண்டம் முழுவதிலும் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு நபர்களால் காவியம், பாடல், நடனம், நாடகம், விவாதம், திரைப்படம், தொலைக்காட்சித் தொடர்கள் என பல்வேறு வடிவங்களைப் பெற்று பல தலைமுறைகளை கடந்து வந்துள்ளது.

article

களவியல்: சங்ககால காதல் வாழ்க்கை

தம்மை சுற்றி நடப்பவை அனைத்தையும் கூர்ந்து அவதானித்து, அவற்றில் நிலவும் இயற்கை ஒழுக்கைக் கண்டு தெளிந்து அவற்றில் இருந்து இலக்கணம் வரையும் பண்பினைக் கொண்டிருந்த பழந்தமிழ் சமூகம் நம்முடைய மானுட வாழ்வையும் ஒவ்வொரு கட்டங்களாக வகைப்படுத்தியும், நெறிப்படுத்தியும் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும். தனிநபர் ரீதியிலும், குடும்ப மட்டத்திலும், சமூக அளவிலும் இரு தனியாட்கள் ஒன்றாக இணைந்து ஒரு வாழ்க்கையை முன்னெடுத்தல் என்பது இன்றியமையாத பாகமாகப் பார்க்கப்பட்டது.

article

சங்ககால தமிழர் உணவு மரபுகள் பற்றி அறிந்துகொள்வோம்!

உணவு என்பது மனித குலத்தின் அடிப்படை தேவைகளுள் ஒன்று என்பதைக் கடந்து, ஒரு சமூகத்தின் கலாச்சார, பொருளாதார, அரசியல், வாழ்வியல் மற்றும் புவியியல் அம்சங்களை பறைசாற்றும் ஒரு ஊடகமாக செய்யலாற்றுகிறது.

article

சங்கதி தெரியுமா? – மூன்று ஆதித்தர்கள்

இப்போதைய நாட்களில் நாடு, மொழி, பின்புலம் என எல்லா வரம்புகளையும் கடந்து இளைய சமுதாயம் முழுவதுக்கும் பொழுதுபோக்காகவும், வேட்கையாகவும் மாறியிருக்கும் மார்வெல் திரையுலகு, சமீபத்தில் புதிய குறுந்தொடர் ஒன்றை வெளியிட்டுள்ளது: What If. ‘ஒருஎதிர்பாரா சிறு சொல்லின், செயலின், அசைவின் விளைவால் நாம் அறிந்த அனைத்தும் எவ்வாறு மாற்றம் காணக்கூடும்’ எனும் அடிப்படையின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது இத்தொடர்.

article

சங்கதி தெரியுமா?

தமிழில் இன்றளவும் வெளியாகிக்கொண்டிருக்கும், இனியும் வெளியாகப்போகும் பல வரலாற்று புனைவுகளுக்கு முன்னோடியாக இருப்பது, இருக்கப்போவது கல்கியின் படைப்புச்சமான பொன்னியின் செல்வன். இதற்கு காரணம் தன்னுடைய காலத்தின் வரம்புகளை கடந்து எழுத்தாளர் என்ற வகையில் கல்கி இந்நாவலுக்காக செய்த பெரும் முயற்சியும், காட்டிய அர்பணிப்புமே. ஒட்டுமொத்த பொன்னியின் செல்வன் நாவல் வரிசையிலேயே கல்கி அவர்களின் பெருமுயற்சி மிகச் சிறப்பாக வெளிப்படும் தருணங்களில் குறிப்பிடத்தக்கது லங்கா பார்வமாக அமையும் சுழற் காற்று நூலிலேயே, அந்நூலின் சிறப்புக்கு முக்கிய காரணங்களில் ஒன்று கல்கி கண்டுகொண்ட இலங்கை; மேலும் அங்குதானே நம் கதையின் பெயர் நாயகனான பொன்னியின் செல்வரை முதன்முதலாக சந்திக்கிறோம்.

article

மனிதர்களுக்கும் நாய்களுக்குமான அசாத்தியமயான அன்புறவு

மனிதனுக்கும் நாய்களுக்குமான உறவு லட்சம் வருடங்கள் பழமையானது. ஆனால் இந்த உறவு புத்தகதின் ஆரம்ப அத்தியாயங்கள் எண்ணி மகிழுமாறு அமைந்திருக்கவில்லை. ஹோமோ சேப்பியன்ஸ், நவீன மனிதனின் மூதாதைகள்.

article

டயானாவின் 1995 பிபிசி நேர்காணலின் பின்னணியில் நடந்தது என்ன?

ஊடகங்கள் எனப்படுவது நம்மை சுற்றி நடக்கும் உண்மையை வெளிக்கொண்டு வரும் பணியில் இன்றியமையாத பங்களிப்பை செய்து வருகிறது. நிதர்சனத்தை வெளிக்கொண்டு வரும் பணியினால் தங்கள் இன்னுயிரை நீத்த/நீக்கடிக்கப்பட்ட மதிப்புக்குரிய ஊடகவியலாளர்கள் நம் வரலாறுகளில் ஏராளம் உள்ளனர்.

article

சங்கதி தெரியுமா? பக்கங்களின் மறுபக்கம் – கல்கியின் கதைமாந்தர்கள் – முடிவுரை

இந்த கட்டுரைத் தொடரின் ஆரம்பத்தில் இருந்தே பொன்னியின் செல்வன் நாவலில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஒரு முக்கியமான விடயம் குறித்து அவ்வப்போது கூறிய வண்ணமே உள்ளோம். சோழ சாம்ராஜ்யத்தின் வலிமைக்கும், நீடித்த நிலைத்திருப்புக்குமான முக்கிய காரணங்களுள் ஒன்று விசுவாசமான சிற்றரசர் குடும்பங்கள். இராஜராஜரின் காலம் வரையில் சிற்றரசர்களை சார்ந்தே சோழ நாட்டின் அரசப்படை செயலாற்றி வந்தது. இந்த வரலாற்று நிதர்சனத்தை புது வெள்ளத்தில், சதியாலோசனை கூட்டத்தில் மிக அழகாகவும், அழுத்தமாகவும் கல்கி நிறுவியிருப்பார். இவ்வாறு பொன்னியின் செல்வன் கதைக்களத்தில் மிக முக்கிய பங்கு வகித்த சில சோழ சிற்றரசுகள் குறித்து பார்ப்போம்.

article

சங்கதி தெரியுமா? | பக்கங்களின் மறுபக்கம் – கல்கியின் கதைமாந்தர்கள் – பகுதி :05

இராஜராஜ சோழ தேவருக்கு அரசியல் நோக்கங்கள் கருதி பல அரசிகள் இருந்தனர் என்பதை முன்பே பார்த்தோம், அதில் முக்கியத்துவம் பெறுபவர்கள் மூவர். பட்டத்து அரசி ஒலோக மாதேவியான தந்திசக்தி விடங்கி, ராஜேந்திரசோழரால் பள்ளிப்படை எடுக்கப்பட்ட பஞ்சவன் மாதேவி மற்றும் ராஜேந்திர சோழனின் அன்னை திரிபுவன மாதேவியான வானவன் மாதேவி. இந்த வானவன் மாதேவியின் இளமைப் பருவத்தின் ஊகமாக அமைக்கப்பட்ட கதாபாத்திரமே வானதி.

article

சங்கதி தெரியுமா? | பக்கங்களின் மறுபக்கம் – கல்கியின் கதைமாந்தர்கள் – பகுதி :04

பொன்னியின் செல்வன் கதையோட்டத்தில் வருகின்ற மிக மூத்த சோழ அரச குடும்பத்து உறுப்பினராக கண்டராதித்தரின் விதவை செம்பியன் மாதேவி நமக்கு அறிமுகம் செய்து வைக்கப்படுகிறார். பெரிய பிராட்டியார் என்று அழைக்கப்படும் இவரே சோழ சாம்ராஜ்யத்தின் உண்மையான ஒரே ராஜமாதா. சித்திரை மாதம் கேட்டை நட்சத்திரத்தில், சோழ சிற்றரசான மழபாடியை ஆண்ட மழவரையர் குலத்தில் பிறந்த இவ்வம்மை, கண்டராதித்த சோழரை திருமணம் செய்த பின்னர் செம்பியன் என்ற சோழ அரச பட்டத்தை சூடிக்கொண்டார். அதன் பின்னரே செம்பியன் மாதேவி என அறியப்பட்டார். ஆரம்பகால கல்வெட்டுகளில் மழ பெருமானடிகள் மகளார் என்றே அறியப்பட்டார்.

article

End of Articles

No More Articles to Load