Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

மேற்குத் தொடர்ச்சி மலையையேனும் விட்டுவைப்போம்!

இந்திய தீபகற்பத்தில் மேற்கு கடற்கரைக்கு இணையாக சுமார் 180,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவுடன் சங்கிலித் தொடர் போல, வானளாவிய மலைகள், சுழலும் நதிகள், பரந்த புல்வெளிகள், அடர்ந்த காடுகள், கொட்டும் அருவிகள் என தெகிட்டாத அழகுடையது மேற்கு தொடர்ச்சி மலை. பல்லுயிர் வாழும் இடமான இந்த மலையை உலக ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் (UNESCO)  உலகின் பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக அறிவித்துள்ளது. இமயமலையை விட பழமையானது இந்த மேற்கு தொடர்ச்சி மலை. இங்குள்ள 39 இடங்களான தேசிய பூங்காக்கள், வனவிலங்கு சரணாலயங்கள், மற்றும் அடர்ந்த வனப்பகுதிகளை பல்லுயிர் பெருக்கம் (Biodiversity Hotspot) உள்ள இடங்களாக யுனெஸ்கோ கண்டறிந்துள்ளது.

maps.google.com

புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை, யானை, கடமான், நீலகிரி வரையாடு, சிங்கவால் குரங்கு, கருமந்தி, முதலை, காந்தகீறி, முள் எலி என சரணாலயங்களில் எண்ணற்ற மிருகங்களை காணலாம்.

சுமார் 5000 வகையான பூக்கும் தாவரங்கள், 139 வகையான பாலூட்டிகள், 508 வகையான பறவை இனங்கள், 176 ஈரூடக வாழிகள், 325 அரிய வகை தாவரங்கள், பறவைகள், ஊர்வன மற்றும் மீன் இனங்கள் போன்றவை இங்கு உள்ளன. சுமார் 1600 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த மலை குஜராத் மாநிலத்தில் துவங்கி மராட்டியம், கோவா, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களின் வழியாக கன்னியாகுமரியில் முடிவடைகிறது. மேலும் தென்னிந்தியாவின் ஜீவாதாரமாக விளங்கும் கோதாவரி, கிருஷ்ணா, காவேரி, வைகை, குந்தியா போன்ற நதிகளின் பிறப்பிடமாகவும் இது உள்ளது.

இந்த உலகத்தில் வாழும் அனைத்து உயிரினங்களும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்று தொன்றுதொட்டு மதங்களும், நவீன அறிவியலும் நமக்கு தொடர்ந்து உணர்த்துகின்றன. வண்ணத்துப்பூச்சி கோட்பாட்டின் படி “பிரேசில் நாட்டில் பறந்து கொண்டிருக்கும் ஒரு வண்ணத்துப் பூச்சியின் சிறகின் படபடப்பினால் ஏற்படும் சலசலப்பிற்கும், அமெரிக்காவில் ஏற்படும் சூறாவளிக்கும் தொடர்பு உண்டு” என அறிவியலாளர்கள் கூறுவர். இதையே பகவத்கீதையில் கிருஷ்ணர் “ஒரு சரத்தில் முத்துக்கள் கோர்த்தால் ஒரு அழகான சங்கிலி உருவாவது போல அனைத்து ஆத்மாக்கள் (மனிதர்கள், மரங்கள், மிருகங்கள், பறவைகள், உயிரினங்கள்) ஒன்றுகொன்று தொடர்புடையவை. ஒன்றின் தாக்கம் மற்றொன்றிற்கு உண்டு” என்றார். அது இந்த மலை மூலம் மீண்டும் நிரூபணமாகிறது. ஜப்பான் நாட்டின் சீதோஷண நிலை, வளிமண்டலம் மற்றும் வருடாந்த பருவமழைக்கு மேற்கு தொடர்ச்சி மலை பெரும்பங்கு வகிக்கிறது. இதை ஆய்ந்தறிந்த ஜப்பான் பல ஆண்டுகளாக இந்த மலையை பாதுகாக்க பல திட்டங்கள் கொணர்ந்து நிதியுதவி வழங்கி வருகிறது. “ஜப்பான் பெருங்காடுகள் வளர்ப்பு திட்டம்” மூலம் லட்சக்கணக்கான மரக்கன்றுககளை மலை முழுவதும் வழங்கி வருகிறது ஜப்பான்.

படம் : swethamushroom.files.wordpress.com

இந்தியாவின் முகப்பெரிய செங்குத்தான சரிவு, பாதுகாப்பு அரண்களில் ஒன்றான இந்த மலையினை மூன்று வரம்புகள் ஆனைமலை, ஏலகிரி, மற்றும் சாகியத்ரி மலை வரம்பு போன்றவை ஆகும்.

இங்குள்ள மூன்று மிக உயரமான சிகரங்கள்

  • ஆனை முடி (உயரம் 2695 மீட்டர்)
  • முல்லையாநகரி (உயரம் 195௦ மீட்டர்)
  • தொட்டபெட்டா (உயரம் 2637 மீட்டர்)

மேற்கு தொடர்ச்சி மலையில் நிலப்பரப்பு, மிருகங்கங்கள் மற்றும் மனிதர்களிடையே சிக்கலான ஒரு வாழ்க்கை முறை நூற்றாண்டுகளாக நிலவி வருகிறது. மக்கள் தொகை பன்மடங்கு பெருகியதால் காடுகளையும், காடுகளில் உள்ள வளங்களையும் பயன்படுத்துவதில் கடும் போட்டி நிலவுகிறது. இதன் காரணமாக உயிரினங்களின் பல முக்கிய வாழ்விடங்களை அழிக்கத்துவங்கி விட்டனர் மனிதர்கள். பல்லாயிரம் வருடங்களாக நீடித்த அந்த மென்மையான சுற்றுச்சூழல் அவற்றுக்கு இப்பொழுது பயம் கலந்த ஒரு வாழ்வாக மாறியுள்ளது.

இதற்கான நிதி அமைப்புகளை கட்டமைத்து பல்லுயிர்க்கான பாதுகாப்பு மற்றும் பாதுகாக்கப்பட்ட இடங்களை சுற்றியுள்ள வாழ்வாதார அமைப்புகளை மேம்படுத்துதல் மற்றும் சுற்றியுள்ள சமுகத்தின் பங்கேற்பை செயல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. சூழலியல் இணைப்பு வலுவூட்டப்பட்டுள்ளது. இங்குள்ள மக்களின் வாழ்வுரிமைக்கு அங்கீகாரம் வழங்கி நிலையான விவசாயத்திற்கான முயற்சிகள் ஊக்குவிக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலையான வளர்ச்சிக்கான ஆராய்ச்சி, அதற்கான கொள்கைகளின் பகுப்பாய்வு மற்றும் கல்வி போன்றவை வழங்கப்படுகின்றன.

படம் : fernspages.files.wordpress.com

 

இது சார்ந்த அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர் ஒருவர் கூறுகையில் “பாதுகாப்பு என்பது ஒரு சிக்கலான பிரச்சனை. சுற்றுச்சூழல் பரிமாணத்தில் மட்டும் அல்ல, அரசியல், சமூகம், பொருளாதாரம் அனைத்திலும் உள்ளது. பலதுறை அணுகுமுறை இருந்தால் மட்டுமே அது சாத்தியம்” என்றார்.

காடுகள் உரிமை சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இங்குள்ள பழங்குடியினர்களுக்கு வனங்களில் உற்பத்தியாகும் பொருள்களை நிலையான சேகரிப்பது மட்டுமல்லாது பல்லுயிர் பாதுகாவலர்களாக இருப்பது பற்றிய விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்படுகிறது. கேரளாவின் காடர் பழங்குடியினர், “மலபார் சாம்பல் இருவாச்சி” பறவை இனங்களின் கூடுகளை கண்காணிக்க உதவுகின்றனர். கர்நாடகாவில் லாண்டனா எனப்படும் இயற்கை தாவரவகை அதிகளவில் உள்ளது. வேலையின்மை அதிகரித்துள்ள இங்குள்ள பழங்குடியினர்களுக்கு லாண்டனா தாவரத்தை பயன்படுத்தி கைவினை பொருட்கள் செய்வது பற்றி கற்றுத்தரப்படுகிறது. சுற்றுச்சூழலின் மிக அவசியமான தேவையான துப்புரவுக்கு இயற்கை தந்த வரம் கழுகுகள். காலப்போக்கில் அவைகளின் எண்ணிக்கை மிக குறைவானது.

படம் : eagles.org

அனைத்து வகையான உயிரினங்கள், தாவரங்கள், பறவைகள் பற்றிய தகவல்களும், அதை பாதுகாப்பதற்கான வழிமுறைகளும் உலகளாவிய தகவல் பரிமாற்றம் இருந்தால் மட்டுமே சாத்தியப்படும் என்பதை உணர்ந்து இந்திய உயிர்ப்பல்வகைமை என்ற ஒன்றை உருவாக்கியுள்ளனர். இதில் எண்ணற்ற தகவல்கள் அடங்கியுள்ளன.

மேற்குத் தொடர்ச்சி மலையை பாதுகாக்க உலக நாடுகள் முன்வந்தாலும் இந்திய ஆட்சியாளர்கள், அதிகாரிகள் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே அவை முழுமையடையும். அவர்கள் கூடுதல் கவனம் செலுத்தினால் நீண்ட நெடுங்காலம் நம் பாரம்பரிய சின்னம் கொண்டாடப்படும்!

Related Articles