வாரமொரு தகவல்

அக்டோபர் 25ம் திகதி (இன்று)  #T20WorldCup2022 போட்டிகளின் Super 12 சுற்றின்  இரண்டாவது போட்டியில்  இலங்கை ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. 2007ம் ஆண்டு முதல் இவ்விரு  அணிகளுக்கிடையில் 25  T20 கிரிக்கெட் போட்டிகள் இடம்பெற்றுள்ளதுடன், அவற்றில் 10 போட்டிகளில்  இலங்கை அணி வெற்றிப்பெற்றுள்ளது. மிகுதி 15 போட்டிகளில் அவுஸ்திரேலிய அணி வெற்றிப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய போட்டி அவுஸ்திரேலியாவின்  Perth நகரில் அமைந்துள்ள  Optimus மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன்,  2010ம் ஆண்டில் இம்மைதானத்தில் இடம்பெற்ற ஒரு  T20 போட்டியில் இரு அணிகளும் ஒன்றையொன்று எதிர்த்து மோதியுள்ளன. அதில் 166 ஓட்டங்களை பெற்றிருந்த அவுஸ்திரேலிய அணியை 16.3 ஓவர்களில் இலங்கை வெற்றி கொண்டமை குறிப்பிடத்தக்கது.

கடந்த வாரம்  நியூசிலாந்து அணியியிடம் எதிர்பாராத விதமாக படுதோல்லியடைந்த அவுஸ்திரேலிய அணிக்கு இன்றைய போட்டி மிக முக்கியமானதாக அமையும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை, அதேவேளை, இலங்கை Super 12 சுற்றின் முதல் போட்டியில் அயர்லாந்தை இலகுவாக வெற்றிக் கொண்டிருந்தாலும் இப்போட்டி இரு அணிகளுக்கும் சவாலானதொன்றாகவே அமையும் என்பது உறுதி!

Related Articles