உலகில் அனைவரும் பாடும் ஒரே பாடல்  Happy birthday to you…

உலகின் எந்த கலாச்சார பண்பாட்டு பின்புலத்தில் இருந்து வந்தாலும் அனைவரும் தங்கள் பிறந்த நாளில் பொதுவாகக் கேட்டிருக்கக் கூடிய ஒரே விடயம் “Happy birthday to you” என ஆரம்பமாகும் அந்த அமரத்துவம் மிக்க பாடல். ஆனால் இந்த பாடல் 2010களின் நடுப்பகுதி வரையில் காப்புரிமை செய்யப்பட்ட பாடல்களாக இருந்தது உங்களுக்குத் தெரியுமா? ஆம், Happy birthday to you பாடலை ஒரு நிறுவனம் உரிமைக் கொண்டாடியது, அந்நிறுவனத்தின் அனுமதியின்றி இப்பாடலைப் பாடினால் அதற்கு பாடிய நபர் பணம் செலுத்த வேண்டிய நிலை இருந்து வந்தது.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வார்னர் சேப்பல் மியூசிக் எனும் நிறுவனம் அமெரிக்காவில் இப்பாடலின் பதிப்புரிமையை கோரியதுடன், அதன் பயன்பாட்டிற்கான உரிமக் கட்டணத்தை வசூலித்தது. 

எனினும் 2015 இல் இப்பதிப்புரிமைக் கோரிக்கை செல்லாது என அறிவிக்கப்பட்டதுடன், வார்னர் சேப்பல் உரிமக் கட்டணமாக $14 மில்லியன் திரும்பச் செலுத்த பணிக்கப்பட்டது. ஐரோப்பிய ஒன்றியத்தில், பதிப்புரிமை பாடலின் உண்மையான ஆசிரியரில் இறுதியானவரான [B]பாட்டி ஹில் வாழ்நாள் முடிந்து (1946) 70 ஆண்டுகள் வரை தொடர்ந்தது  ஜனவரி 1, 2017 அன்று இப்பாடலுக்கான பதிப்புரிமை ஐரோப்பாவில் நெகிக்கப்பட்டது. தற்போது இப்பாடலை உலகில் எங்கும் காப்புரிமை கட்டணம் குறித்த கவலையின்றி பாடி நம் மனதுக்கு நெருக்கமானவர்களின் பிறந்த நாளை கொண்டாடலா.

Related Articles