Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

காந்தக்கண்ணழகி சில்க் ஸ்மிதாவின் சினிமா பயணம்

1980லிருந்து 1990 வரை ‘சில்க் ஸ்மிதா’ தென்னிந்தியாவின் கவர்ச்சிக்கன்னியாக வளம்வந்தார். திரைப்படங்களில் இவரது வேடம் சின்னதாக இருந்தாலும் அதனை காணவே ஒரு ரசிகர் கூட்டம் வரும் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இன்றைய இளைஞர்களும் இவரது ரசிகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மறைவு இன்றும் தமிழ் சினிமாவில் மர்மமாகவே உள்ளது. இன்று பிறந்தநாள் காணும் சில்க் ஸ்மிதா கடந்து வந்த பாதை பற்றி  பார்ப்போம்.

சில்க் ஸ்மிதா திரை துறையில் ஒப்பனைக் கலைஞராக அறிமுகம் ஆகினார். இவரை மறைந்த முன்னால் நடிகர் வினுச்சக்கரவர்த்தி தனது ‘வண்டிச்சக்கரம்’ படத்தில் சில்க் என்கிற காதாபாத்திரம் மூலமாக  தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் செய்தார். பின்காலத்தில் இந்த பெயரே அவருக்கு நிலைத்துவிட்டது. தனது 17 வருட சினிமாவில் தென்னிந்தியாவில் தனக்கென தனி ரசிகர் படையை உருவாக்கினார்.

Silk Smitha (Pic: freepressjournal)

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடா, மலையாளம் மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் 450 படங்கள் நடித்துள்ளார். இவரது இயற்பெயர் விஜயலட்சுமி என்பது நம்மில் பலருக்கும் தெரியாது,  இளையராஜா பாடல்களுக்கு ஓடிய திரைப்படங்கள் தமிழில் நுற்றுக்கணக்கான உள்ளது. அதேபோல் ரஜினி கமல் போன்ற முன்னணி நடிகர்களின் நடிப்புக்கும் ஸ்டைலுக்கும் படங்கள் ஓடினது ஒரு காலம் என்றால், சில்க் ஸ்மிதாவின் திறமையான நடனத்திற்கு படங்கள் ஓடியது என்பதையும் தமிழ் சினிமா மறுக்கமுடியாது.

Smitha Tamil Actress (Pic: freepressjournal)

பிறப்பால் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சில்க் ஸ்மிதா ஆனால் இவரது பூர்விகம் தமிழகத்தின் கரூர் மாவட்டம் ஆகும். ஆந்திர மாநிலத்தில் மிகவும் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் சில்க் ஸ்மிதா.  இவருக்கு 17 வயதில் திருமணம் ஆகியதாக பலராலும் கூறப்படுகிறது ஆனால் இவரது சகோதரர் நாகவர பிரசாத் இதனை பல பேட்டிகளில் மறுத்து வருகிறார். இவரது தந்தை இவர்களை விட்டு பிரிந்துவிட்ட காரணத்தினால் சினிமா துறைக்கு வந்ததாக கோலிவூட் வட்டாரம் தெரிவிக்கின்றன. இவரை தங்களது படத்தில் நடிக்க வைக்க பல தயாரிப்பாளர்கள் தவம் கிடந்தன. காரணம் இவரது நடனம் காரணமாக சூப்பர்ஹிட் படங்கள் பல உள்ளன அதிலும் குறிப்பாக பாயும் புலி, மூன்று முகம்  சகலகலா வல்லவன் போன்ற படங்களை கூறலாம்.

ஆரம்பகாலத்தில் துணை நடிகையாக நடித்துவிட்டு பிறகு நடனத்தில் மட்டும் கவனம் செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. சில்க் ஸ்மிதா என்றால் கவர்ச்சி மட்டுமே என இருந்த குற்றச்சாட்டை உடைத்தார். அலைகள் ஓய்வதில்லை, தாலாட்டு கேட்குதம்மா போன்ற திரைப்படங்கள் மூலமாக தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார். நடிகர் வினுச்சக்கரவர்த்தி தனது பல பேட்டிகளில் சில்க் ஸ்மிதாவை தனது மகள் என கூறியுள்ளார். கோலிவுட் மற்றும் மக்கள் மத்தியில் பல்வேறு கட்டுக்கதைகள் மற்றும் கிசுகிசுக்கள் இருந்தாலும் இவர் பத்தினி பெண் என பல நடிகர்கள் நடிகைகள் பெருமையாக புகழ்ந்துள்ளனர்.

Tamil Cinema Dancer (Pic: teluguone)

தனது 35 வயதில்  காதல் தோல்வி காரணமாக இவர் போதைக்கு ஆளானர், பிறகு தனது சென்னை வீட்டில் 1996 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம்  தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார் என அனைவராலும் நம்பப்படுகிறது. இவரது மரணத்தில் மர்மம் உள்ளதாக இன்று இவரது சகோதரர் கூறி வருகிறார். அவரது காதலராக அவர் கூடவே பணிபுரிந்த தாடிக்காரர் என இன்றுவரை பலரும் கூறிவருகின்றனர். தமிழ் சினிமாவில் இருக்கும் பல மர்மமான மறைவுகளில் உச்சத்தில் இருப்பது சில்க் ஸ்மிதாவின் மரணமே என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

சில்க் ஸ்மிதா வாழ்க்கையை மையமாக கொண்டு உருவான ஹிந்தி திரைப்படம் ‘டர்டி பிக்சர்’ இந்த திரைப்படத்திற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் இந்த திரைப்படம் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆகியது என்பது குறிப்பிடத்தக்கது.

The Dirty Picture (Pic: pinterest)

இன்றும் சில்க் ஸ்மிதாவை காந்தக்கண்ணழகி, கவர்ச்சிக்கன்னி என பல பட்டங்கள் ரசிகர்களால் கொடுக்கப்பட்டுள்ளது. இவரது நடன திறமைக்கு இன்றும் இந்தியா சினிமாவில் எவரும் ஈடு இல்லை என்று சொன்னால் மிகையாகது.

மற்ற துறைகளில் ஒரு பெண் பணிபுரிந்தால் அவள் மதிக்கபடுகிறாள் அவளுக்கான அங்கீகாரம் கிடைகின்றது. அதுவே ஒரு பெண் சினிமாவில் நடிக்கும்போது அவளுக்கான அங்கீகாரம் வேறு கோணத்தில் பார்க்கப்படுகிறது. இதற்கான பதில் மக்களின் எண்ணம் என்பதா அல்லது படைப்பாளியின் தவறு என்பதா என்று தெரியவில்லை. நடிகனுக்கு கிடைக்கும் பெயரும் புகழும் ஏன் நடிகைகளுக்கு மறுக்கப்படுகிறது என்பது இன்றும் கேள்விக்குறியாகவே உள்ளது.

தமிழ் சினிமாவுக்காகவும் தமிழ் சினிமா ரசிகர்களுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட நடிகை சில்க் ஸ்மிதா அவர்களை இச்சமுகம் என்றும் மறக்காது.

இந்த ஆக்கம் உங்களுக்கு பிடித்திருந்தால் அல்லது கூறப்பட்டுள்ள தகவலில் தவறு இருந்தால் கீழே பதிவு செய்யவும் உங்களது கருத்து எங்களது தரத்தை உயர்த்த மிகவும் முக்கியமானதாகும். மீண்டும் ஒரு தகவலுடன் சந்திப்போம்.

Feature Image Credit: Free Press Journal/Stars Fact

Related Articles