தல அஜீத்தின் டாப் 10 தோல்வி படங்கள்

“ஈரடி திருக்குறள் நன்மைகளை சொல்லும் ‘தல’ என்ற இரு எழுத்து அந்த திருக்குறளையே சொல்லும்”

இந்த திருக்குறளை எழுதியது வள்ளுவர் அல்ல தல அஜீத்தின் ஓர் தீவிர ரசிகன். எந்தவொரு விளம்பரமோ அல்லது எந்தவொரு பேட்டியுமின்றி எந்தவொரு பொது நிகழ்சிகளிலும் கலந்துக்கொள்ளாமல் இப்படி எதுவுமே செய்யாமல் இவர் தனக்கென  உருவாக்கியுள்ள ரசிகர் பட்டாளம் உண்மையாவே அனைவரையும் வியக்க வைக்கின்றது.

தல அஜித்தின் ரசிகர்களை பொறுத்தவரை அஜித் ஓர் மாஸ் ஹீரோ, அழகான ஹீரோ, ஆக்ஷன் ஹீரோ, சிறந்த கார் ரேசர், ஹாலிவுட் படங்களில் நடிக்கக்கூடிய  ஒரே தமிழ் நடிகர் என பல புகழ் பாடுவார்கள். இவை அனைத்தும் ஒரு பக்கம் இருந்தாலும். சினிமாவை பொறுத்தவரை வசூல் என்று ஒன்று இருந்தால் மட்டுமே அந்த நடிகர் மதிக்கப்படுவர். அதுபோல  இன்று நாம் பார்க்க இருப்பது நடிகர் அஜித் அவர்களின் வெற்றி பயணத்துடன் அவர் சந்தித்த தோல்வி படங்கள் பற்றியும் பார்க்க இருக்கிறோம்,

தல அஜித்தின் முதல் தோல்வி திரைப்படமாக அமைந்த திரைப்படம்  ‘மைனர் மாப்பிளை’ 1996 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படத்தில் அஜித்அவர்கள் நடிகர் ரஞ்சித்துடன் இணைந்து நடித்திருப்பார். காமெடி மற்றும் காதல் கலந்த இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு திருப்திகரமான படமாக அமையவில்லை என்று தான் சொல்லவேண்டும்.

 

Ajith Flop Movie (Pic: Filmibeat)

ஆசை மற்றும் காதல் கோட்டை போன்ற மெகா ஹிட் திரைப்படங்களை கொடுத்த அஜித் அவர்களுக்கு, 1997 ஆம் ஆண்டு வெளிவந்த ‘நேசம்’ திரைப்படம் சரியான திரைக்கதை அமையாததால் மக்களிடம் தோல்வியை தழுவியது .

Ajith FLop Movie (Pic: Filmibeat)

‘அமர்க்களம்’, ‘தீனா’ மற்றும் ‘சிட்டிசன்’ போன்ற திரைப்படங்களின் மூலமாக தமிழ் சினிமாவில் அக்ஷன் ஹீரோவாக வளம் வந்தார். அந்த நேரத்தில் வெளிவந்த ‘அசோகா’, ‘ரெட்’ மற்றும் ‘ராஜா’ போன்ற திரைப்படங்கள் தயாரிப்பாளர்களை தவிக்க விட்டது.

Ajith-Flop-Movies (PIc: Filmibeat)

அஜித் முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்த திரைப்படம் ‘வரலாறு‘ இந்த திரைப்படம் மக்களிடையே பரவலாக பேசப்பட்டாலும் வசூல் ரீதியாக இப்படம் தோல்வியை தழுவியது. தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் எந்தவொரு நடிகரும் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க தயங்குவார்கள் ஆனால் அஜித் இதனை பொருட்படுத்தாமல் நடித்தார் இதற்காகவே இவரை பாராட்டலாம்.

Ajith Flop Movies (Pic: Topsy)

தல அஜித் இரட்டை வேடத்தில் நடித்து வெளிவந்த ‘வில்லன்’ திரைப்படம் மாபெரும் வசூலை தந்தது ஆனால் அஜித் அதனை தொடர்ந்து நடித்த ஆஞ்சநேயா, ஜனா மற்றும் ஜி   அஜித்தின் ஒட்டுமொத்த மார்கெட்டையும் சரித்தது. இதற்கிடையில் அவர் நடித்த மற்றொரு இரட்டை வேடத் திரைப்படமான அட்டகாசம் மெகா ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது.

Jana Ajith Flop Movie (Pic: Tamilglitz)

இளைய தளபதி விஜயை வைத்து இரண்டு சூப்பர்ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் பேரரசு இவரது இயக்கத்தில் அஜித் எப்போது நடிப்பார் என்ற ஆவல் அனைத்து தல ரசிகர்களுக்கும் இருந்தது அந்த சமயத்தில் வெளிவந்த திரைப்படம் ‘திருப்பதி’ ஆனால் அஜித் அவர்களுக்கு இத்திரைப்படம் கைகொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Ajith Flop Movies( Pic: Chitramala)

சூப்பர் ஸ்டார் நடித்த மெகா ஹிட் திரைப்படமான பில்லா படத்தின் ரீமேக்கில் அஜித் நடித்து தமிழ் சினிமாவில் புதிய டிரெண்டினை உருவாக்கினார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.  ஆனாலும் அதன்பின் வெளிவந்த  ஏகன் மற்றும் அசல் பிளாப் படமாக அமைந்தது. அதிலும் குறிப்பாக அஜித் நடித்த இரட்டை வேடத் திரைப்படங்களில் தோல்வியடைந்த முதல் திரைப்படம் அசல் என்பது குறிப்பிடத்தக்கது.

Asal Ajith Flop Movie (Pic: Tamilglitz)

2007 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையில் மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் வெளிவந்த திரைப்படம் ஆழ்வார். வித்தியாசமான திரைக்கதையில் உருவாகியிருந்த இந்த திரைப்படம் மக்களிடம் சென்றடையவில்லை என்பதுதான் உண்மை. ஆனால் பாடல்கள் அனைத்தும் வெற்றி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது

AJith Flop Movies (Pic: Tamilglitz)

பாலிவுட்டில் ஷாருக் கான் அவர்கள் நடித்து வெள்ளி விழா கொண்டாடிய திரைப்படம் ‘மே ஹூ நா’ இந்த திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் அஜித் அவர்கள் ‘ஏகன்’ படத்தில் நடித்தார். ஆனால் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ற சரியான கதை அம்சம் இல்லாத காரணத்தினால் பாக்ஸ் ஆஃபிஸில் இந்த திரைப்படம் படுதோல்வி அடைந்தது

Aegan-Ajith-Flop-Movie (Pic: AjithFans)

2011 ஆம் ஆண்டு வெளிவந்த மங்காத்தா திரைப்படம் வசூல் மழையைப் பொழிந்தது அதனை தொடர்ந்து அதனை தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு  அஜித் நடித்து வெளிவந்த பில்லா 2 திரைப்படம் படுதோல்வி அடைந்தது

Billa 2 Ajith Flop Movie (Pic: Tamilglitz)

இதெல்லாம் விடுங்க தல-தளபதி சேர்ந்து நடித்த ராஜாவின் பார்வையிலே திரைப்படமே தோல்வி படம் என்பது இன்றைய தல-தளபதி ரசிகர்களுக்கு தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது ஆனால் இன்று தமிழ் சினிமா இருக்கும் உச்சத்தில் ஒருவேளை இவர்கள் இருவரும் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடித்தால் அதனின் வசூல் எந்த இமாலய இலக்கை தொடும் என்பது எவராலும் கணிக்கமுடியாது.

அஜித் நடித்த 58 திரைப்படங்கள் நடித்துள்ளார் ஆனால் இதில் 60% சதவிகித திரைப்படங்கள் தோல்வி படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வளவு தோல்வி படங்களையும் கொடுத்து இன்று தமிழக மக்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார் என்றால் இதற்கு காரணம் அவரது தன்னம்பிக்கை என்றால் மிகையாகாது

எப்படியும் நான் கூறிய தகவல் சிலருக்கு கசப்பாக இருக்கும் ஆனால் இது உண்மை என தமிழ் சினிமாவுக்கே தெரியும் என்பதால் தைரியமாக எழுதியுள்ளேன் எங்களது தகவலில் தவறோ அல்லது எந்த திரைப்படத்தின் தகவல் தவறாக கூறப்பட்டிருந்தலோ அல்லது திரைப்படங்கள் விட்டு போயிருந்தாலும் எங்களுக்கு கமென்ட் செய்து தெரிவிக்கவும் மீண்டும் ஒரு சுவாரஸ்யமான தகவலுடன் உங்களை சந்திக்கிறேன்

Featured image credit: filmibeat.com

 

Related Articles