உள்ளகத் தூய சுவாசத்திற்கான 4 வழிமுறைகள்

Brought to you by

வாகனப்புகை மாசு, கட்டிடக் கழிவுப்புகை, எரிப்பொருள் கழிவு மற்றும் 32°C சுட்டெரிக்கும் வெப்பநிலையில் வெளியில் செல்லாது இந்தக் காலப்பகுதியில் வீட்டுக்குள்ளிருப்பதே சிறந்தது. படுக்கையறை மற்றும் பணியிடங்களில் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தக் காற்றுச் சீராக்கியை/குளிரூட்டியைப் (air-conditioner) பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் உணரக்கூடிய காற்றின் சீரானத் தன்மைப் பற்றி சிந்தித்துள்ளீர்களா?

புகைத்தல், அடுப்பு, விறகெரிப்பு, பூச்சிக்கொல்லிகள், விலங்குக்கழிவுகள், கட்டுமானப் பொருட்களென வளிமாசடைவுக்கான IAQ பட்டியல் நீள்கிறது. இந்தப் பட்டியலில் பிரதானமானது, காற்றோட்டத்தை முறையாகத் திட்டமிடாத உள்ளகக் கட்டிடவடிவமைப்பே ஆகும். வெளியேறாத காற்று உபாதையை உண்டாக்குவதோடு அந்தக் காற்றின் மூலம் பற்றீரியா, தெள்ளு, பங்கசுகள் உருவாகும் நிலையும் ஏற்படுகிறது.

இப்போது IAQ எவ்வாறு மாசடைகிறது என்று நாம் உணர்ந்த அதேவேளை, அதை எவ்வழிகளில் சீராக்கலாம் எனவும் பார்க்கவேண்டும்.

முறையான காற்றோட்டம்

நமக்கு எவ்வாறு காற்றோட்டம் அவசியமோ, அதேபோன்று நாம் வாழும் உள்ளக இடைவெளிகளுக்கும் அவசியம். அதிர்ஷ்டவசமாக காற்றோட்டமானது பல அமைப்புகளில், அளவுகளில், பல உள்ளடக்கத்தோடு நாம் பெறக்கூடியதாகவுள்ளது. பட உதவி : Getty Images

சீரான காற்றோட்டத்தின் மூலம் ஈரப்பதனையும், வெப்பத்தையும் சரியானவொரு சுற்றுவட்டத்தில் வெளியேற்றலாம். இது அவசியமான ஒட்சிசன் வழங்குதலை உறுதிசெய்வதுடன் IAQ பாதிப்படைவதையும் தடுக்கிறது.

இயற்கையாகவே காற்று உள்ளிருந்து வெளியேயும், வெளியிலிருந்து உள்ளேயும் வந்துபோவதற்கான வசதிகள் இருக்க வேண்டும். அத்தோடு , வெப்பநிலையைப் பரிமாறிக்கொள்ளும் Heat Exchangers களை உபயோகிப்பதும் சிறந்தது. இவை உயர்வெப்ப இடங்களிலிருந்து குளிரான இடத்திற்கு வெப்பத்தைக் கடத்திச் சமநிலையை உண்டாக்குகின்றன. இலங்கைப் போன்ற வெப்பமண்டல நாட்டிற்கு இவை பெரும்பாலும் ஏற்புடையது. இதன் மூலம் உயர்வான குளிர்த்தன்மையுடைய பிரதேசங்களில் அமைந்தக் கட்டிடங்கள் பயனடையும்.

கட்டிடக்கலையில் கடந்தகாலத்தின் செல்வாக்கு. 

இலங்கையின் பழங்கால வீட்டு ஜன்னல்கள் காற்றோட்டத்திற்கு முக்கியத்துவமளித்தன. இந்த வசதி நவீன கட்டிட வடிவமைப்புகளில் காணக்கிடைக்காத ஒன்று. பட உதவி :  Ministry of Villas

இலங்கையின் காலனித்துவ கட்டிடக்கலைப் பாரம்பரியத்தின் தோற்றத்திலிருந்து நவீன வடிவமைப்பு முறைகளுக்கு கட்டிடக்கலை மாறுவது, உட்புற காற்றின் தரம் மற்றும் காற்றோட்டத்தில் குறிப்பிடத்தக்கத் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

காலனித்துவகால கட்டிடங்கள் பெரும்பாலும் பருமனான சுவர்கள், உயர் கூரைகள் மற்றும் பெரிய ஜன்னல்களைக் கொண்டுள்ளன, அவை இயற்கையாகவே குறுக்கு காற்றோட்டத்தை எளிதாக்குகின்றன மற்றும் உட்புற-வெளிப்புற இடைவெளிகளுக்கிடையே நேரடித்தொடர்புகளை அனுமதிக்கின்றன. இதற்கு நேர்மாறாக, தற்கால கட்டிடக்கலை வடிவமைப்புகள் செலவு மற்றும் இடைவெளி அமைப்பதன் முக்கியத்துவம் ஆகியவற்றுடன் அழகியல் தோற்றத்திற்கு முன்னுரிமை அளிக்கின்றன. இதன் விளைவாக சிறிய ஜன்னல்கள், அடைக்கப்பட்ட இடங்கள் மற்றும் இயற்கையான காற்றோட்டத்திற்கு குறைவான முக்கியத்துவமே உள்ளது.

ஆயினும் இயந்திர காற்றோட்ட அமைப்புகள் மற்றும் காற்று சுத்திகரிப்பு தொழில்நுட்பங்களின் ஒருங்கிணைப்பு போன்ற புதுமைக்கான வாய்ப்புகளை நவீன கட்டிட வடிவமைப்பு நடைமுறைகள் வழங்குகின்றன. நவீன கட்டிடக்கலையை நோக்கிய நகர்வானது காற்றோட்ட முறைகள் மற்றும் காற்றின் தரத்தில் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. இந்த அணுகுமுறை ஆரோக்கியமான, வசதியான உட்புறச்சூழலை உறுதி செய்வதற்கான உத்திகளுடன் காணப்படுகிறது. இந்நகர் நடைமுறையாக்கக்கூடிய வடிவமைப்பை ஒருங்கிணைக்கும் ஒரு சமநிலை ஏற்படுத்தும்.

சுத்தமானதும் உலர்ந்ததுமான உள்ளக அறைகள்

தரைகளை, உட்புறப் பகுதிகளை உலர்வாகவும் சுத்தமாகவும் வைத்திருப்பதன் மூலம் IAQவை சிறப்பாகப் பேணமுடியும். ஈரலிப்பு மற்றும் அசுத்தமானப் பகுதிகளிலேயே பூஞ்சைகள், நச்சுக் காளான்கள் தோன்றுகின்றன. குறிப்பாக சமையலறை, குளியலறைகளில். அத்தோடு ஒழுகும் அல்லது சொட்டும் குழாய்களைத் திருத்திக்கொள்வதன் மூலமும் உலர்வான தன்மையை உட்புற இடங்களில் பேணலாம்.

குறைந்தளவிலான இரசாயனத்தை வெளியியேற்றும் கட்டுமானப் பொருட்களும் பூச்சுகளும்.

ஏதேனும் மீள்கட்டுமான அல்லது கட்டிடப் புனர்நிர்மான அவசியங்கள் உங்களுக்கு ஏற்படும் போது மரப்பாலிலான பூச்சு, மூங்கில்கள், கம்பளி விரிப்புகளை உட்புறங்களுக்கு பயன்படுத்துவதை IAQ மாசடைவதைத் தடுப்பதற்கானவொரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

அவை குறைந்தளவிலான (VOC) ஆவியாகும் தன்மையைக் கொண்டிருப்பதால்  மூக்கு, தொண்டை மற்றும் கண்களுக்கு எரிவு/ஒவ்வாமை ஏற்படுவதும் கட்டுப்படுத்தப்படும்.

சாராம்சம்.

IAQவை பாதுகாப்பதற்கான சிறந்தத் தொழினுட்பத்தை நாம் விரைவில் காணப்போகின்றோம், துல்லியமானதும் விரைவானதுமான IAQஐ கண்டறிதல், மற்றும் வளிமாசடையும் மூலக்கூறுகளை வெளியேற்றும் நனோ தொழினுட்பத்தை நோக்கி நாம் முன்னேறிக் கொண்டிருக்கிறோம். அதாவது இவற்றை உள்வாங்கி நடைமுறையாக்கப்பட்டுள்ள காற்று வடிகால் தொழிநுட்பங்கள் சிறியளவிலான வகையில் IAQ மாசடைவைக் கட்டுப்படுத்துவதைக் காணக்கூடியதாகவுள்ளது.
இலங்கையின் வெளிப்புற வளி மாசடைவை உடனே சீராக்குவது சாத்தியமில்லை. எனினும், இலங்கையின் வெப்பநிலைக் காலத்தில் இவ்வகையான IAQ பாதுக்காப்பு வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம்  அசுத்தக்காற்றினை சுவாசிப்பதனால் வரக்கூடிய நோய்களையாவது தடுக்கலாம்.

Related Articles