மரபணு மாற்றப்பட்ட மரங்கள்

உலகெங்கும் வாழும் சாமானியர்களுக்கு கூட தெரிந்த தகவல் தான், புவி வெப்பமயமாக்கல், ஓசோனில் ஓட்டை, நிலையான தட்ப வெப்ப நிலை இல்லாமை, இவையனைத்திற்குமான காரணம் ஒன்றே ஒன்று தான். நமது வாழ்க்கைமுறையும், நவீன மயமாக்கலினாலும், அதை  நாம் ஏற்றுக்கொண்டு இயைந்து வாழத்துவங்கியதால் வந்த விளைவுகளால் தான். இந்த நவீனமயமாக்கலில் மரங்களையும் ஆய்வுக்கூடங்களில் செயற்கை முறையில் உருவாக்கும் முறை என்ற ஒன்று சமீபத்தில் பிரபலமாகி வருகின்றது.

ஆய்வு செய்வதற்கென்று ஒரு வரைமுறை இல்லையா? என்று கேள்வி எழாமலில்லை. ஆனால் அந்த ஆராய்ச்சியின் பலனையும், விளைவையும் நாம் தெரிந்துகொள்ளலாமே!

அறிமுகம்

உலகமே காடுகளையும், காடுகளின் வளங்களையும் பாதுகாப்பதில் அலட்சியமாக இருக்கும் இந்த காலத்தில், பல சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மரங்களை காப்பது, மரம் வளர்ப்பது என்று விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். அதே சமயம் ஆய்வுக்கூடத்திற்குள்ளேயே தனது முழு காலத்தையும் கழிக்கும் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள், இயற்கைக்கு இசைவாக தாங்கள் கண்டுபிடித்ததாக கூறும் ஒன்று தான் மரபணு மாற்றப்பட்ட மரம்.

பொதுவாக எந்த ஒரு கண்டுபிடிப்பையும் உடனடியாக, ஆணிவேர் வரை ஆராயத் தொடங்கும்  நம் ஊரில் இருக்கும் கூகுள் அறிஞர்கள் கூட எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எதிர்ப்பு தெரிவிக்காதபடியான கண்டுபிடிப்பு போல தான் பெயர் குறிக்கின்றது. மரபணு மாற்றப்பட்ட மரங்களின் தயாரிப்பை, ஒரு குறிப்பிட்ட மரம் உருவாவதற்கு தேவைப்படும் தட்பவெப்பத்தையும், மரபு சார் சூழலையும், செயற்கை மரபணு மூலமாக காண்ணாடி பேழையிலோ, உகந்த தளத்திலோ ஏற்படுத்தி, பல நாட்கள் கண்காணிப்பில் உருவக்கப்படுவது தான் மரபணு மாற்றப்பட்ட மரம்.

மரபணு மாற்றப்பட்ட மரம் என்பது மட்டுமல்ல, மரபணு ஆய்வில், மரபணு ஆராய்ச்சி மூலம் அநேக உயிரினங்களை உருவாக்குகின்றனர். இந்த மரபணு மாற்றப்பட்ட மரங்களை உருவாக்கும் யோசனை அமரிக்கர்களுக்கு 2010ல் உதித்தது. முதலில் இந்த ஆராய்ச்சியில் ஈடுபடுத்தியது சோளம் மற்றும் சோயா வகையான செடிகளைக் கொண்டு தான். அதாவது செயற்கையாக சோளச் செடியையும், சோயாவையும் உருவாக்க முற்பட்டனர் சில தனியார் ஆராய்ச்சி கூடங்கள். அதில் வெற்றி கண்டனரா என்பது பற்றி சரியான அறிக்கைகளை அவர்கள் வெளியிடவில்லை.

Treating Trees (Pic: dailymail)

இதன் பயனாக கருதப்படுவது

இதன் பயன்களைப் பற்றி அறிஞர்கள் கூறுகையில், முதலில் வணிகர்களுக்கும், காடும் காடு சார்ந்த பகுதிகளில் தொழில் முனைவோருக்கும், நுகர்வோருக்கும் பயனளிப்பதாக கூறி அறிமுகப்படுத்தினர். உண்மையான பயன்களாக அமைந்தது, மரங்களின் எதிர்ப்பு சக்தி நிலையாக இருக்கும், இயற்கையான மரங்களில் அதீத வளர்ச்சியின் ஒரு பகுதியாக சில நேரங்களில் தென்படும் ”லிக்னின்” வளர்ச்சி கட்டுக்குள் இருக்கும், எந்த சூழலிலும் இந்த மரபணு மரத்தின் வளர்ச்சி தேங்கிவிடாது. அதுமட்டுமில்லாமல், சராசரி மரங்கள் வளருவதை விட மிகக்குறுகிய காலத்தில் மிகுந்த வளர்ச்சியைப் பெற்று, தான் இயல்பாக அளிக்கும் பலனை அளிக்கும் என்பது கூடுதல் சிறப்பு.

இன்று இவ்வகையில் வளர்க்கப்படும் மரங்கள், காகிதங்கள் தயாரிக்க மட்டுமே பயன்படுத்தப்படுகின்றனர்.சரியான இடைவெளியில், மரங்கள் வளரும் என்பதால்,மிகச் சிறிய இடத்தில் நிறைய மரங்களை வளர்க்க முடிகிறது. இதுவும்,அந்த மரத்தினால் கிடைக்கும் பலன்கள் கனிசமான அளவில் கிடைக்கின்றது.இந்த மரங்களை பயன்படுத்தி காகிதங்கள் தயாரிக்கப்படும் தொழிற்சாலைகள் ஏற்படுத்தும் சுற்றுப்புற மாசு, வரையறைக்குள் இருக்கும்.

நிச்சயமாக நகரமயமாக்கல் அதிகமாகி கொண்டிருக்கும் தருணத்தில், பாதிப்புகள் சிறு சிறு அளவில் ஏற்படுத்தும் என்றபோதிலும், ஒரு நல்ல கண்டுபிடிப்பு என்றே சொல்லலாம். ஏனெனெல், இந்த மரபணு மாற்றப்பட்ட மரங்களும், இயற்கை மரங்கள் தரும் பலன்களில் முக்கால்வாசி கொடுக்கிறது. அந்த குறிப்பிற்கான சான்று தான் காகிதம்.

இன்றைய தேதியில் இந்த செயற்கை முறையில் ஒரு தனியார் நிறுவனம் யூகலிப்டஸுக்கென்றே ஒரு தனி காடை ஏற்படுத்தி, மருத்துவத்திற்கு பயன்படும் வகையில் அதனைக் கொண்டு வணிகம் செய்து வருகின்றது. இந்த யூகலிப்டஸ் காட்டில் இந்த செயற்கையான மரபணு முறையில் உருவாக்கப்பட்ட யூகலிப்டஸ் மரங்கள் தான் அதிக மரக்கூழ்கள் அளிக்கும் தளமாகும். இதனை அந்த நிறுவனம் பெருமையாக கூறிக்கொள்கிறது.

‘ஃப்யூச்சுராஜீன்’ என்பவர் கிட்டத்தட்ட 11 வருடங்கள் யூகலிப்டஸ் மரங்களுக்கான இந்த ஆராய்ச்சியை 100 ஹெக்டேர் நிலத்தை, இஸ்ரேல்,  சீனா மற்றும் பிரேசிலின் சௌ பாலோ என்ற இடத்திலும் வாங்கி, வித விதமான தட்பவெப்பத்தில் சோதித்து, அதில் ஆய்வுகள் செய்து, அதனால் ஏற்படும் பலன்களை உணர்ந்து, வணிகத்தில் இறங்கியுள்ளார்.  அரபிடாப்ஸிஸ் என்னும் ஒரு சிறிய பூக்களை கொண்டுள்ள செடிகளின் மரபனுக்களை ஆய்வுக்கூடங்களில் சேகரித்து, இயற்கையாக செடிகள் வளர்வதற்கு மாறாக மரபணு முறையில் செயற்கையாக செடிகளை வளர்த்து வண்கம் செய்ய முற்பட்டது. இதற்காக பல அரபிடாப்ஸில் விதைகளை சேமித்து பெரிய அளவிலான வணிகத்திற்கு அடித்தளம் போட்டது அந்த நிறுவனம். இதே நிறுவனம். ஒரு ஆண்டிற்கு 5 மீட்டர் வளரும், அந்த மரபணு யூகலிப்டஸ் மரங்கள் என்கின்றது. இது இயல்பான யூகலிப்டஸ் மரங்களின் வளர்ச்சியிலிருந்து 20 முதல் 30 சதவிதிதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

New Kind Plantation (Pic: mintpressnews)

பாதிப்புகள் அல்லது தீமைகள்

நான் தேடியவரை, இயற்கை மரங்களால் எப்போதும் நமது சுற்றுச்சூழலில் ஒரு சுழற்சி ஏற்படுகிறது. அதாவது, எகோ சைக்கிள் என்று சொல்லப்படுகிற சுற்றுச்சூழலில் ஏற்படும் புணர்தல். இந்த சுழற்சி மரபணு மாற்றப்பட்ட மரங்களால் இயல்பாக நடக்கும் என்று கருதிவிட முடியாது. ஏனெனில், இந்த அறிவியல் முறையில் அமெரிக்காவில் காடுகளை பாதுகாத்து வரும் ஒரு இணையமே, இது சுற்றுச்சுழலில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று முகப்பில் பெரிய எழுத்துக்களில் பகிர்ந்துள்ளது. இதிலேயே அதனால் மிக மெல்லமாக நடைபெற இருக்கும் ஆபத்துகளைப் பற்றிய புரிதல், தெளிவாக புரிந்தால் தான், இந்த அறிவியல் முறை ஆதரிக்க்கூடிய ஒன்றா என்பதை நாம் தீர்மாணிக்க முடியும்.

சர்ச்சைகள்

அறிவியல் ரீதியான சர்ச்சைகள் சில உள்ளன. மரபணு மாற்றப்பட்ட செடிகளில் மூலமாக கிடைக்கும் பயிர்கள் உட்கொள்வதால் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை என்று ஒரு ஆய்வு முடிவு தெரிவிப்பதாக சில இணையங்கள் குறிப்பிடுகின்றன. ஆனால், அந்த ஒரு ஆய்வின் முடிவு ஒரு தட்பவெப்ப நிலையில் இருக்கு பயிற்களை மட்டும் வைத்து அளிக்கப்பட்ட முடிவு என்றும் அனைத்து தட்ப வெப்பத்திலும், இதனை சோதித்துப் பார்த்து கூறுவதே ஒரு தெளிவான ஆய்வு முடிவாக இருக்கும் என்கின்றனர் சில அறிஞர்கள். இதில் இன்னொரு கோணத்தில் அணுக வேண்டியுள்ளது. கடந்த 8 ஆண்டில் இந்த மரபணு மாற்றப்பட்ட உயிரினங்களின் ஆராய்ச்சி எந்த விதத்திலும் அடுத்த கட்டத்தை எட்டவில்லை. காரணம் இதன் விளைவுகள் எவ்வாறானாதாக இருக்கும் என்கின்ற குழப்பம் இருக்கிறது. அதுவும், எல்லா வளர்ந்த நாடுகளிலும் இந்த மரங்களும், அதனால் கிடைக்கப்படும் பயிற்களைக் கொண்டும் வணிகம் நடைபெறவில்லை. இதனால் வரும் ஆபத்துகளை உணர்ந்த அறிஞர்கள்,  அதனை அமல்படுத்த தயங்குகிறார்களா? இல்லை, இதில் முதலீடு செய்ய பண முதலைகள் விரும்புவதில்லையா? தெளிவான ஆய்வு முடிவுகள் தான் பதில் கூற முடியும்.

Watering Trees (Pic: lifehacker)

இந்தியாவில் மரபணு சார்ந்த ஆய்வுகள் அமெரிக்க நாட்டில் நடக்கும் அளவிற்கு நடப்பதில்லை. காரணம் இங்கிருக்கும் சூழல் தான். இங்கு இந்தியாவில் இருக்கும் சூழலே, இயல்பான காத்து, அடுத்த தலைமுறைக்கு மரங்களை எடுத்து செல்வதில் இருக்கும் போராட்டங்கள் தான். ஃபாரஸ்ட் ஆஃபிசர்கள் பலர் இருந்தும், அரசின் செயல்பாட்டிற்கும், அந்த காடுகளை ஒட்டி வாழும், பழங்குடியினருக்குமே இப்போது தான் ஒரு புரிதல் ஏற்படுகிறது. இன்னும் மரபணு மாற்றப்பட்ட மரங்களைக் கொண்டு காடுகளை ஏற்படுத்துவதை திட்டமிட்டு, இங்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கென்றே இருக்கும் கூட்டங்களிலிருந்து தப்பித்து அதனை இந்திய மண்ணில் அதனை சோதித்து பார்ப்பது என்பது அதிக காலம் தேவைப்படும் ஒரு யோசனையாகும். இருப்பினும். இந்த கண்டுபிடிப்பினால் ஏற்படும், நன்மைகளையும், தீமைகளையும் மேலும் பல ஆய்வுகளின் முடிவுகளைக் கொண்டு தான், ஏற்பதா? எதிர்பதா என்பதை முடிவெடுக்க முடியும். ஆயினும் தேவையில்லாத கண்டுபிடிப்புகளுக்கு கவர்ச்சிகரமான விளம்பரங்கள் செய்து வணிகம் செய்யும் நிறுவனங்களுக்கு மத்தியில், பயனுள்ள கண்டுபிடிப்புகளுக்கு தனது நேரத்தையும், நிதியையும் செலவழித்த மனிதர்களை பாராட்டலாம்.

Web Title: Genetically Modified Trees, Tamil Article

Featured Image Credit: discovermagazine

Related Articles