Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

நாம் எங்கிருந்து வந்தோம்?

இது தெரியாதா? ஆபிரிக்காவுல குரங்கா இருந்து கொஞ்சம் கொஞ்சமா மனிதனா மாறியிருக்கோம்…

அதுக்கும் முன்னால? டைனோசார் இருந்தது.. அதுக்கு முன்னால? தவளை, மீன்கள், ஒரு செல் அமீபா..

அதுக்கும் முன்னால? பூமி, சூரியன் உருவாகியிருகும்…. அதுக்கும் முன்னால….. இப்படி அதுக்கும் முன்னாலன்னு, அதுக்கும் முன்னாலன்னு சொல்லிட்டே போனால், 14 பில்லியன் (ஒரு பில்லியன் என்பது 100 கோடி) வருஷங்களுக்கு முன்னால் எலுமிச்சம் பழம் சைஸ்லயிருக்குற ஒரு பொருள் வெடிச்சது. அதுல இருந்து எலெக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் என்ற 3 உட்பொருட்களை கொண்ட   அணு உருவானது. இந்த அணுக்களின் சேர்க்கைதான் வெவ்வேறு திடப்பொருட்களாக ஆகி உள்ளன. நட்சத்திரம், சூரியன், பூமி, நம்மைச் சுற்றிலும் இருக்கிற டி.வி, செல்போன், மேஜை, நாற்காலி, பேனா, மோட்டார் வாகனங்கள், கம்ப்யூட்டர், நாம்  இப்படி எல்லாமே அணு சேர்க்கையில் உருவானவைதான்.

அதிசயங்கள் நிறைந்த பிரபஞ்சம்…

இந்த பிரபஞ்சம் உருவானது பற்றி முன்று விதமான கோட்பாடுகள் இருக்கு .. பெருவெடிப்பு கோட்பாடு (BIG BANG THEORY), நிலைப்புக் கோட்பாடு (STEADY-STATE THEORY), துடிப்புக் கொள்கை (PULSE THEORY) (esa.int)

பூமியோட மேல் பரப்புல இருந்துக்கிட்டு நாம தினசரி பிரபஞ்ச வெளியில பல ஆயிரம் மைல்துரம் பயணிக்குறோம். அவசர வாழ்க்கையில நாம் வானத்தை கூட நிமிர்ந்து பார்க்குறது இல்ல. நாம வாழுற பூமி, சூரியன், சூரிய குடும்பம், நம்ம சூரியன் இருக்கற ஆகாயகங்கை (நட்சத்திரதொகுப்பு) சூரியன் போன்ற எண்ணிலடங்கா நட்சத்திரங்கள்  மேலும், கோடிக்கணக்கான பால்வெளி மண்டலங்கள்  கருந்துளைகள், குவாஸ்ஸர்கள், வால்நட்சத்திரங்கள், புதுசா உருவாகுற நட்சத்திரங்கள், வெடித்து சிதறுகிற வயதான நட்சத்திரங்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படாத பல அதிசயமான பொருட்கள் நிறைந்ததுதான் இந்த பிரபஞ்சம். அதிசயங்கள் மட்டுமல்ல பல தத்துவங்களும் உருவாக இந்த பிரபஞ்ச வெளிதான் காரணம். கடவுள் இருக்கார்,இல்லைன்னு சொல்ற இரண்டு பிரிவா நாம இருக்கோம், கடவுள  கும்பிடுறது, கும்பிடாதது அவங்க அவங்க விருப்பம். இந்த பிரபஞ்சம் ஏதோ ஒரு மூலப்பொருளில் இருந்துதான் உருவாகியிருக்க வேண்டும் என்று சொல்வது பொருள் முதல்வாதம்.

இல்ல கடவுள் உருவாக்குனதுதான் இந்த பிரபஞ்சம் அப்படின்னு சொல்றது கருத்து முதல்வாதம். ஆத்திகம், நாத்திகம் உட்பட உலகத்தோட பல தத்துவங்களுக்கு இதுதான் அடிப்படை. தத்துவங்களை ஒதுக்கி வச்சிட்டு பிரபஞ்சம் எப்படி உருவாச்சுன்னு பார்க்கலாம்.

பிரபஞ்சம் உருவானது எப்படி?

இந்த பிரபஞ்சம் உருவானது பற்றி முன்று விதமான கோட்பாடுகள் இருக்கு .. பெருவெடிப்பு கோட்பாடு (BIG BANG THEORY), நிலைப்புக் கோட்பாடு (STEADY-STATE THEORY), துடிப்புக் கொள்கை (PULSE THEORY)

நிலைப்புக் கோட்பாடு

இந்தப் பிரபஞ்சம் இப்போது எப்படி இருக்கிறதோ, அப்படியே இதற்கு முன்னரும் இருந்தது; இனிமேலும் இப்படியேதான் இருக்கும். எவ்வித மாற்றத்திற்கும் உட்படாது. இதுவே நிலைப்புக் கோட்பாடு. (softpedia-static.com)

இந்தப் பிரபஞ்சம் இப்போது எப்படி இருக்கிறதோ, அப்படியே இதற்கு முன்னரும் இருந்தது; இனிமேலும் இப்படியேதான் இருக்கும். எவ்வித மாற்றத்திற்கும் உட்படாது. இதுவே நிலைப்புக் கோட்பாடு.

பெருவெடிப்புக் கோட்பாடு.

காலமும் கூட தோன்றாத காலத்தில் அடர்த்தி நிறைந்த ஓர் பொருள் வெடித்ததன் மூலம் ஏற்ப்பட்ட அணுக்கரு பிளவு மற்றும் அணுக்கரு இணைவின் சங்கிலித் தொடர் செயல்முறையின் விளைவாக, அணுக்களும், வாயுக்களும், பின் திடப்பொருட்களும் உருவானதாக சொல்லப்படும் கோட்பாடே, ‘பெருவெடிப்பு’ கோட்பாடாகும். இதன் பின்னரே, சூரியனும், அதைச் சுற்றியுள்ள கோள்களைத் தொடர்ந்து, பின்னர் நாம் தோன்றினோம்

துடிப்புக் கொள்கை

 

விரிவடைந்துகொண்டே செல்லும் பிரபஞ்சம், ஒரு கட்டத்திற்குப் பின் சுருங்கத் தொடங்கும். அது ஒரு எல்லைவரை சுருங்கிய பின் மீண்டும் விரியத் தொடங்கும். (manoramaonline.com)

இதன்படி, விரிவடைந்துகொண்டே செல்லும் பிரபஞ்சம், ஒரு கட்டத்திற்குப் பின் சுருங்கத் தொடங்கும். அது ஒரு எல்லைவரை சுருங்கிய பின் மீண்டும் விரியத் தொடங்கும். இதுவரையில் செய்யப்பட்ட ஆய்வுகளின்படி, பிரபஞ்சம் விரிவடைவதாக அறியப்பட்டதே தவிர, சுருங்குவதற்கான ஆதாரங்கள் இன்னும் கிட்டவில்லை. (ஒருவேளை எதிர்காலத்தில் நிகழ்ந்தாலும் நிகழலாம்!)

இம்மூன்றில் முதலாவதாகக் கூறப்பட்ட, பெருவெடிப்புக் கொள்கை அதிக சாத்தியக் கூறுகளை உள்ளடக்கியதாக உள்ளதனால், அதுவே இப்பிரபஞ்ச தோற்றமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, இதுவரையில் நம்பப்பட்டுவருகிறது.

செர்ன் (CERN) பிரபஞ்ச ஆய்வு மையம்

பெருவெடிப்பு மூலமாகத்தான் இந்தப் பிரபஞ்சம் உருவானது என்று உறுதிபடுத்த ஜரோப்பாவுல ஆய்வு மையம்  ஒண்ணு உருவாக்கியிருக்காங்க.

இந்த ஆய்வுக்காக பிரான்ஸ் சுவிட்சா்லாந்து எல்லையில் பூமிக்கு அடியில் 100 மீட்டா் ஆழத்தில் 27 கி.மீ. நீள வட்ட வடிவிலான சுரங்கப்பாதையை அமைத்தனா். (houseofswitzerland.org)

சுமார் 5.95 பில்லியன் டாலா் செலவில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வுக்காக பிரான்ஸ் சுவிட்சா்லாந்து எல்லையில் பூமிக்கு அடியில் 100 மீட்டா் ஆழத்தில் 27 கி.மீ. நீள வட்ட வடிவிலான சுரங்கப்பாதையை அமைத்தனா். சுரங்கத்தின் 2 இடங்களில் இருந்து புரோட்டான்களை செலுத்தி நேருக்கு நோ் மோதவிட்டு அப்போது உருவாகும் மாற்றங்களை ஆயிரக்கணக்கான கருவிகள் மூலம் ஆய்வு செய்து பிரபஞ்சம் தோன்றிய ரகசியத்தைக் கண்டுபிடிக்க திட்டமிட்டனா். இதற்காக உருவாக்கப்பட்ட ராட்சத ஹட்ரான் கொலைடா் (Large Hadron Colliderl LHC) இயந்திரத்தை வெற்றிகரமாக இயக்கி முதற்கட்ட சோதனையை முடித்தனா்.

பிக்பேங் (பெருவெடிப்பு) சோதனைக்காக உருவாக்கப்பட்ட  இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. குளிரூட்டும் கருவி ஒன்றில் இருந்து ஒரு டன்னிற்கும் மேற்பட்ட திரவ நிலையிலான ஹீலியம் வாயு கசிந்ததால் ஒன்பது நாட்கள் மட்டுமே செயல்பட்ட இயந்திரம் செயல் இழந்தது. சோதனை தோல்வியில் முடிந்தது.

மீண்டும் இச்சோதனையை வெற்றிகரமாக நடத்திட பதினேழு மாதங்கள் விஞ்ஞானிகள் உழைத்து சோதனையை வெற்றிகரமாக நடத்தி முடித்து விட்டனா். கணித அடிப்படையிலும் ஊகமாகவும் சொல்லப்பட்டு வந்த பெரு வெடிப்புக் கொள்கை இச்சோதனை மூலம் இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது.

குளிரூட்டும் கருவி ஒன்றில் இருந்து ஒரு டன்னிற்கும் மேற்பட்ட திரவ நிலையிலான ஹீலியம் வாயு கசிந்ததால் ஒன்பது நாட்கள் மட்டுமே செயல்பட்ட இயந்திரம் செயல் இழந்தது. (apod.nasa.gov)

நாம் உருவாக எடுத்துக்கொண்ட நேரம்…

பிரபஞ்சம் உருவான விதத்தை அதிகபட்சமா 15 நிமிஷத்துல படிச்சு முடிச்சிருப்பீங்க. நமக்கு 50 வருஷம் அப்படிங்கறதே  பெரிய விஷயம், அவருக்கு 95 வயசுன்னு அதியசயமா சொல்லுவோம். ஆனா நாம உருவாக எடுத்துக்கிட்ட காலம் ஏற்கனவே சொன்ன மாதரி 14 பில்லியன்  ஆண்டுகள். பல நூறு கோடி ஆண்டுகள் ஏற்பட்ட மாற்றங்கள் மூலமா நாம உருவாகியிருக்கோம். நாம உருவாக காரணமா இருந்த சில சம்பங்கள் ….

  1. காலம் 00 வாக இருந்த போது பெரும் வெடிப்பு எற்பட்டது. காலம் துவங்கியது.வெப்பம் 10 கோடி டிகிரி இருந்தது.
  2. முதல் வினாடி முதல் 3 லட்சம் ஆண்டுகள் வரை பிரபஞ்சம் குளிர்ச்சியடைய துவங்கியது. புரோட்டான், நியூட்டரான், எலக்ட்ரான் தோன்றி  அவை இணைந்து முதல் அணு உருவானது.
  3. 30லட்சம் முதல் 200 கோடி ஆண்டுகள்வரை  அணுக்கள் ஒன்று சேரந்து வாயுமோகங்களாகி அவை ஈர்ப்புவிசையால் இணைந்து நட்சத்திரங்கள் உருவாகின.
  4. 200 கோடி முதல் 500 கோடி ஆண்டுகள் வரை நட்சத்திரங்கள் பெருகத்துவங்கி நட்சத்திர மண்டலங்கள் (கேலாக்கிசிகள்) உருவாகத்துவங்கின.
  5. 800 முதல் 1000 கோடி ஆண்டுகள் வெடித்து சிதறிய சூப்பர் நோவாக்கள் , அதிலிருந்து  வெளிவந்த காபன், ஆக்ஸிஸன், இரும்பு போன்றவை  ஈர்ப்புவிசையால் சுருங்கத் துவங்கி சூரியன் உள்ளிட்ட கிரகங்கள் உருவாக முதல்கட்டம் துவங்கியது
  6. 1000 கோடி ஆண்டுகளுக்குப்பின் சூரியன் உருவாகி  அதை சுற்றியுள்ள வாயுக்கள், அணுக்கள் குளிர்ந்து சிறுசிறு பாறைகளாக உருவாகின. பின் அவை பெரும் பாறைகளாக மாறி கிரகங்கள் உருவாகத் துவங்கின.
  7. 450 கோடி ஆண்டுகளில் வெப்பம் அதிகமாக இருந்த பூமி உள்ளிட்ட கிரகங்கள்  மேலும் குளிரத்துவங்கின. பூமி அதன்  இருப்பிடத்திற்கு ஏற்ப சிறப்பு தன்மைகளை பெற்றிருந்தது. குளிரத்தொடங்கிய பூமியில் தொடர்ந்து பல ஆண்டுகளாக பெய்த மழையால் கடல் உருவாகியது.
  8. 200 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் கடலில் முதல் செல் உயினம் துவங்கி 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் நாம் உருவானோம்.

நட்சத்திரங்கள் உள்ளிட்ட எல்லா பொருட்களும் உருவான விதம் இந்த பிரபஞ்சத்தில் ஒன்று தான். ஆனால் பூமியில் மனிதர்கள் உருவான விதம் மட்டுமே இதுவரை பிரபஞ்சத்தில் வேறு எங்கும் நிகழாத ஆதிசயம்.

Related Articles