“ஹாரி பாட்டர் ஆழ்மன ஜாலம்” குறுந்தொடர் (5 அத்தியாயம்)

கருவின் பின்னணியும் காரணகர்த்தாவும்

 • 1990ஆம் ஆண்டு, மான்செஸ்டரில் இருந்து கிங்ஸ் க்ராஸ் ரயில் நிலையத்திற்குச் செல்லும் ஒரு ரயில் தாமதமாகிறது. ரயில் நிலையத்தில் பல பேர் காத்திருக்கின்றனர். சிலர் உறங்குகிறார்கள், இன்னும் சிலர் தமது உணவினை சாப்பிடுகிறார்கள், இன்னும் சிலர் பாடல் கேட்கிறார்கள். அந்தக்கூட்டதில் உலாவந்தவர்களில் வயது இருபதைத் தொட்ட  ஒரு பெண், ஏதோ தீவிரமாக யோசிக்கிறாள். அக்கம் பக்கம் பரபரப்புடன் பார்க்கிறாள். அவளுக்குத் தேவையெல்லாம் ஒரு பேனாவும் காகிதமும். அவளுக்கு ஒரு கதை தோன்றியிருக்கிறது! அப்போது மொபைல் எல்லாம் இல்லை. அதைக் குறித்து வைக்க வேண்டும். யாரிடமும் கேட்பதற்குக் கூச்சப்பட்டு கேட்கவில்லை. அடுத்த நான்கு மணி நேரப் பயணத்தில் கதை குறித்த வெவ்வேறு குறிப்புகளை யோசித்துக் கொண்டே செல்கிறாள். அன்று இரவு எழுதத் தொடங்குகிறாள். ஆனால், ஆரம்பித்த சில நாட்களிலேயே அம்மா இறந்து போகிறாள்; போர்ச்சுகல் நாட்டிற்குச் செல்கிறாள்; ஆசிரியராகிறாள்; திருமணம் செய்து கொள்கிறாள்; விவாகரத்தாகிறது; ஒரு குழந்தையுடன் தனியாக இருக்கிறாள். மூன்றாண்டுகளில் வாழ்க்கை எப்படியெல்லாமோ மாறிவிடுகிறது. மீண்டும் பிரிட்டன் நோக்கி ஒரு பெட்டி நிறைய தன் கதைக்கான குறிப்புகளுடன் பயணிக்கிறாள். வெவ்வேறு இடங்களில் இருக்கும் தட்டச்சு இயந்திரத்தில் தன் நாவலை அடிக்கத் தொடங்குகிறாள்.  1995ஆம் ஆண்டில், அவளது “Harry Potter and the Philosopher’s Stone” முடிக்கப் பெற்று வெவ்வேறு பதிப்பத்திற்கு அனுப்பப் படுகிறது- திரும்ப அனுப்பப்படுகிறது. 1997ஆம் ஆண்டில், ஒரு சிறிய பதிப்பகத்துடன் ஒப்பந்தம் இடப்படுகிறது. அக்காலத்தில் பெண் எழுத்தாளர்கள் வரவேற்பைப் பெறாததால், ஒரு புனைப்பெயரைத் தேர்ந்தெடுக்கச் சொல்கிறார்கள். Joanne Murray ஜே.கே.ரவுலிங் ஆக மாறுகிறாள்!
படம்: time.com

சிறப்புக் குறுந்தொடர் – முதன்முறையாக தமிழில்

 • ஏறத்தாழ 20 ஆண்டுகளைக் கடந்தும் ஒரு மாயாஜால உலகை நமக்குக் கொடுத்து வருகிறார் JKR. ஹாரி பாட்டர் என்பது மாயாஜால கதை என்பதுதான் பொதுவான கருத்து. நூலின் அடிப்படையிலான திரைப்படத்தைப் பார்த்த பலர், நூலை வாசித்திருக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு. படத்தை மட்டும் பார்ப்பவர்களால், மாயாஜாலத்தைத் தாண்டி புரிந்துகொள்ள முடிவதில்லை. ஹாரி பாட்டர் என்பது தனிமனிதன் குறித்த கதை அல்ல; நன்மை-தீமை குறித்து மட்டும் அல்ல; முழுக்க முழுக்க மாயாஜாலக் கதையும் அல்ல. அது நம் கதை, நம் இயல்புகளின் கதை, நம் உணர்வுகளின் கதை. கதையின் ஒவ்வொரு தளத்திலும் ஒவ்வொரு விடயத்தை, வேறொரு பரிமாணத்திலும் பார்க்கலாம். நாம் குழந்தைகளிடம் நேரடியாகச் சொல்ல வேண்டிய விடயங்களை, அவர்கள் மனதில் ஆழமாகப் பதிய வைக்கும் கதை இது. எப்போதெல்லாம் நிஜ வாழ்க்கை பிடிக்கவில்லையோ, அப்போதெல்லாம் ஓடிச் சென்று தஞ்சம் புகுந்து கொள்ள மாறுபட்ட உலகத்தைத் தரும் கதை இது.
 1. ஹாரி பாட்டர் தொகுப்பில் இதுவரை வெளியான திரைப்படங்களையும், நூல்களையும் நன்றாக வாசித்து, அதன் ஆசிரியர் ஜே.கே.ரவுலிங் தனது நேர்க்காணல்களில் தந்த தகவல்களையும், ஹாரி பாட்டர் குறித்த ஆவணப்படங்களில் வெளியான சில பிரத்தியேக தகவல்களையும் கோர்த்து இந்தத் தொடரை எழுதியிருக்கிறார் ஆஸிஃபா.

  இந்த சிறு தொடரில், ஹாரி பாட்டர்-ன் மிக முக்கியமான அம்சங்கள் பேசப்படுகிறது. தமிழில் இதுவரை நிகழாத ஒரு உரையாடலாக இது இருக்கும்.

  அத்தியாயம்- 1 | உள்ளத்தை உருவகப்படுத்தும் உத்தி! –

  அத்தியாயம்- 2 | குழந்தைப் பருவமும் குணாதிசயங்களும்! – 

  அத்தியாயம்- 3 | அப்பாக்களின் ஆதிக்கமும் தாக்கமும்! – 

  அத்தியாயம்- 4 | பெண்களை எப்படிச் செதுக்கினார் ரவுலிங்?

  அத்தியாயம்- 5 | இது வெறும் ஃபேன்டஸி மட்டும் அல்ல!

  படித்ததும் உங்கள் கருத்துகளையும் எமக்கு தெரியப்படுத்துங்கள்.  பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள்.

Roar தமிழ் உடன் உங்கள் பயணம் இனிதாக அமையட்டும்:
Mobile App : Android | iOS
Social Media : Facebook | Instagram | YouTube | Twitter 

Related Articles