குப்பைகளை உண்ணும் யானைகள் பற்றி நான் உலகுக்கு கூறிய கதை

இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் சில யானைகள் தமது அன்றாட உணவுகளை தேடி குப்பை மேடுகளுக்கு வருகின்றன. கடந்த சில நாட்களாக உலகின் பார்வையினை இலங்கையின் பக்கம் திருப்பிய மற்றுமொரு சம்பவம் இது! யாழ்ப்பாணத்தை சேர்ந்த புகைப்பட கலைஞரான Tharmapalan Tilaxan னின் கெமராக்களில் இச்செய்தி பதிவு செய்யப்பட்டு உலகம் முழுவதும் கொண்டுசெல்லப்பட்டது. The Royal Society of Biology (UK) எனும் சர்வதேச புகைப்பட போட்டியில் முதல் பரிசு வென்றது மட்டுமின்றி, பல்வேறுபட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச ஊடகங்களிலும் இவரது படங்கள் கதை பேசின. இது திலக்சனின் கதை மட்டுமல்ல, பொலிதீன், பிளாஸ்டிக் போன்ற அபாயகரமான குப்பைகளை உணவாக உண்ணும் ஒலுவில் பள்ளக்காடு யானைகளினதும் கதை!

Related Articles