முதல் நாளிலிருந்தே உங்கள் பிள்ளையின் மூளையை விருத்தி செய்தல்

மூளையானது, மனித உடலின் இன்றியமையாத பாகம் என்பதில் ஐயமில்லை. நாம் உயிர்வாழ தேவையான எண்ணற்ற செயல்களை இது ஆற்றுகிறது; எமது ஞாபகங்களை சேமிப்பதுடன் எமது திறன்கள், புலன்கள், உணர்வுகள் மற்றும் துலங்கல்கள் ஆகியவற்றுக்கான விசைகளையும் சேமிக்கிறது. 

வோஷிங்டன் பல்கலைக்கழகத்தின் ஏழு மாத குழந்தைகள் மீது மேற்கொண்ட ஆய்வு எமக்கு குழந்தைகள் மூளையில் என்ன நடைபெறுகிறது என்பது பற்றி ஒரு சுவாரஸ்யமான உள்நோக்கை அளித்தது. குழந்தைகள் பேச ஆரம்பிக்க முன்பதாகவே, அவர்களின் மூளை பேச்சின் பௌதிக அம்சங்களை தானாகவே கையாளுமளவுக்கு இசைவாக்கமடைந்துவிடும். அதாவது, குழந்தையின் மூளையானது ‘தொகுப்பின் மூலம் பகுப்பாய்வு’ என்பதன் மூலம் குழந்தைகள் மீண்டும் பேசுவதற்கான சத்தத்தை கிரகிக்கவும் வாய்வழி அசைவுகளை கணிக்கவும் அடித்தளம் அமைக்கிறது. 

மனித மூளையானது காலகாலமாக மனித இனத்தை கவர்ந்து வருகிறது, அத்துடன் இன்றளவில் அதன் முழு பலத்தையும் புலப்படா செயற்பாடுகளையும் பற்றி நாம் நுனிப்புல்தான் மேய்ந்திருக்கின்றோம். ஆனபோதிலும் இதன் அசாதாரணமான ஒத்துழைப்பின் பொருட்டு இதன் மிகவும் பாதிக்கப்படக்கூடிய கட்டத்தில், இதன் மொத்த சக்தியையும் வெளிப்படுத்தும் போது மிகுந்த பராமரிப்பு தேவைப்படுகிறது. இந்த கட்டம் ஒரு குழந்தையின் முதல் மூன்று வருடங்களையும் உள்ளடக்குகிறது. இந்த முதல் மூன்று வருடங்களிலும், மூளையானது சுமார் 85% அளவுக்கு விருத்தியடைகிறது. இது மூளை வளர்ச்சியின் மிக முக்கியமான கட்டமாகும். இந்த காலகட்டத்தில் ஆரோக்கிய முன்னேற்ற வளையியானது மேலும் வலுவடையும் அல்லது சிதையும். ஆகையால் பராமரிப்பில் கவனம் என்பது இங்கு அத்தியாவசியமாகிறது.

குழந்தையின் மூளையானது பிறந்தவுடனே முழுவுருப்பெற்றிராது. அது வளர்ச்சியடைய காலம் தேவை, அத்துடன் குழந்தைக்கு சிறந்த அறிவாற்றலும் சமூக உணர்ச்சி திறன்களும் தேவைப்படுகிறது.

இளைய மனம் (The Young Mind)

குழந்தையின் மூளையானது பிறந்தவுடனே முழுவுருப்பெற்றிராது. அது வளர்ச்சியடைய காலம் தேவை, அத்துடன் குழந்தைக்கு சிறந்த அறிவாற்றலும் சமூக உணர்ச்சி திறன்களும் தேவைப்படுகிறது.

குழந்தையின் மூளை மிகவும் அடிப்படையிலிருந்து கட்டமைக்கப்படும். கீழ்மட்ட சுற்றுக்கள், அடித்தளத்தை கட்டமைக்கும், உயிர் வாழ்தலுக்கான அடிப்படை செயல்பாடுகளுக்கு இவை பொறுப்பாகும், அதேபோல் மேல்மட்ட சுற்றுக்கள், இவை பிற்பாடு கட்டமைக்கப்படும், இவை மிகவும் சிக்கலானதும் மனித இனத்துக்குரிய அறிவாற்றல் மிக்க செயல்பாடுகளை ஆற்றும். 

குழந்தையானது பிறக்கும்போது உயிர் வாழத்தேவையான மூளைக்கலங்களுடன் (நியூரான்கள்) பிறக்கிறது, பிள்ளையின் மூளை பிறக்கும் தருவாயில் 100பில்லியன் நியூரான்களை கொண்டிருக்கும். பின் இணைப்புக்கள் இந்த நியூரான்களை ஒருங்கிணைக்கும், இவை தான் நாம் உயிர் வாழ்வதற்கான திறன்களை எமக்கு வழங்கும். 

சிநாப்டோஜெனேசிஸ் (நியூரான் ஒருங்கிணைவாக்கம்)  என்பது ஒருவரின் வாழ்நாள் முழுவதும் இடம்பெறும் ஒரு செயன்முறை, ஆனால் இது குழந்தை பிறந்தவுடன் அதிகப்படியாக நிகழும் (துடிப்பான சிநாப்டோஜெனேசிஸ்). குழந்தை நல மருத்துவ ஆலோசகர் கலாநிதி. குமுதினி குரே அவர்களின் கருத்துப்படி ஒருவரின் வாழ்நாளில் முதல் மூன்று வருடங்கள் மிகமுக்கியமானது, காரணம் அவரது மூளையானது துடிப்பான நியூரான் ஒருங்கிணைவாக்கத்தில் ஆரம்பத்திலேயே ஈடுபடும், அதாவது குழந்தையின் மூளையில் இருக்கும் பெருவாரியான நியூரான்கள் தமக்கிடையே இணைப்பில் ஈடுபடும். தொடரும் ஆண்டுகளில் இவை தெரியப்பட்டு இணைதல் கத்தரிப்பு (synaptic pruning) என்ற செயன்முறை இடம்பெறும். இணைப்புகள் நியூரான்களிடையிலான இரசாயன மற்றும் மின்னியல் தொடர்பாடல்களை எளிதாக்குவதுடன் பயனற்ற அல்லது குறைபயனுடைய இணைப்புகளை குறித்த செயன்முறையின்போது துண்டித்துவிடும், ஆகையால் தான் மூளையை தொடர்ந்து துடிப்பாக வைத்திருப்பது அவசியம், ஏனெனில் தேவையான இணைப்புகள் மீதமிருக்க ஏனையவை அழிக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்வதற்காகும்.

புறக்கணிப்பு, உடலியல் மற்றும் உளவியல் துஷ்பிரயோகம், குடும்ப பிரச்சினைகள் மற்றும் தனிமைப்படுத்தல் இவையாவும் குழந்தைக்கு நச்சு மனஅழுத்தத்தை ஏற்படுத்தும்

கவனிக்க வேண்டிய எதிர்மறை காரணிகள் (Negative Factors To Look Out For) 

பிறப்பிலிருந்து ஐந்து வயது வரை குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சியை உறுதி செய்வதே முதன்மை பராமரிப்பாளரின் தலையாய கடமையாகும். சரியான ஊட்டச்சத்தின்மை மற்றும் சுகாதாரமற்ற பரஸ்பர தொடர்புகளுடனான மன தூண்டுதலில் ஏற்படும் குறைபாடு, அறிவாற்றல் மற்றும் சமூக உணர்வு திறன்களின் குன்றுதலுக்கு வழிகோலும்.

நச்சு மன அழுத்தம் என்பது பெரும்பாலும் கவனிக்கப்படாத சுகாதாரமற்ற மூளை வளர்ச்சிக்கான மிகவும் ஆபத்தான ஊக்கியாகும். புறக்கணிப்பு, உடலியல் மற்றும் உளவியல் துஷ்பிரயோகம், குடும்ப பிரச்சினைகள் மற்றும் தனிமைப்படுத்தல் இவையாவும் குழந்தைக்கு நச்சு மனஅழுத்தத்தை ஏற்படுத்தும். இந்த மன அழுத்தம் நீண்டகால ரீதியில் மூளையின் அறிவாற்றல் செயன்முறைகளை பாதிக்கவாய்ப்பிருப்பதோடு உடலியல் ரீதியில் பாதகமான விளைவுகளுக்கும் காரணமாக இருக்கும். 

சிறுவர்கள் மீதான வன்முறையை தடுத்தல் அமைப்பின் 2017ம் ஆண்டு உலகளாவிய அறிக்கைப்படி, இலங்கை சிறார்களில் 19.4% ஆனோர் வீடுகளில் சிறுவருக்கான புத்தகங்கள் இல்லை என்ற தகவல் அறியக்கிடைத்தது. இது வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும், காரணம் வாசிப்பு மன தூண்டுதலின் ஆரம்பப்படிகளில் ஒன்று. 

1-14 வரையான 73.4% ஆன சிறார்கள் தமது பெற்றோர்களால் உடல் ரீதியான தண்டனைக்குள்ளாவதாக இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது, இது நச்சு மன அழுத்தத்தினை தூண்டிவிடுவதுடன், குழந்தையின் சுகாதார மற்றும் அறிவு மேம்பாடு, குழந்தையின் நடத்தை மற்றும் கற்கும் திறன் ஆகியவற்றை பாதிக்கும். 

ஒரு ஊடாடும் சுகாதாரமான வீட்டுச்சூழல் குழந்தைக்கு சமூகத்திறன்கள் மற்றும் உணர்ச்சி ஸ்திரத்தன்மை ஆகியவற்றை வழங்கும்

சுகாதாரமான மூளை வளர்ச்சியை உறுதிப்படுத்துவது எப்படி?(How to ensure healthy brain development) 

வேலைக்கு செல்லும் பெற்றோருக்கு பெரும்பாலான வேளைகளில் பெற்றோர்-குழந்தை உறவைப்பேணுவதில் குறை இருக்கும், ஆகவே வழங்கவேண்டிய 100% நேரத்தையும் வழங்க முடியாது. இதற்கு பலவாறான மாற்று உபாயங்களுண்டு, இவற்றை உறுதியாக கடைப்பிடிப்பதன் மூலம் குழந்தையின் சுகாதாரமான வளர்ச்சிக்கு பங்களிப்பதோடு, வீட்டிலேயே போதுமான மனத்தூண்டுதலையும் வழங்க இயலும். 

ஒவ்வொரு நாளும் சிறிது நேரமாவது குழந்தைகளுடன் பெற்றோர் செலவிட வேண்டும், அவர்களோடு இணைந்து வாசித்தல், பாடுதல், வீட்டு வேளைகளில் அவர்களை பெற்றோருடன் பங்கெடுக்க வைத்தல் ஆகிய செயல்பாடுகளை கடைபிடிக்குமாறு கலாநிதி.குரே பரிந்துரைக்கிறார். 

குழந்தைகளுடன் விளையாடுதல் மற்றும் சுகாதாரமான ஊடாடல்கள் மூலம் பெற்றோர்களால் குழந்தைக்கு வயதுவந்த வாழ்வுக்கான பாதையை காட்டக்கூடியதுடன் பெற்றோர்-குழந்தை உறவானது மேலும் வலுப்படும். இவற்றை செய்யத்தவறும் பட்சத்தில் திறன் மேம்பாட்டில் முடக்கம், மோசமான சுய மரியாதை மேலும் பல பிரச்சினைகள் அவர்களது முதிற்பருவத்திலும் தொடரும் என கலாநிதி.குரே எச்சரிக்கிறார். ஒரு ஊடாடும் சுகாதாரமான வீட்டுச்சூழல் குழந்தைக்கு சமூகத்திறன்கள் மற்றும் உணர்ச்சி ஸ்திரத்தன்மை ஆகியவற்றை வழங்கும்.

குழந்தை வளரும்போது அதனை சமூகத்துக்கேற்ப தயார்செய்வது துணை பராமரிப்பாளரின் கடமையாகும். பெற்றோர் இட்ட அடித்தளத்தை கட்டியெழுப்ப ஆசிரியர்கள் மற்றும் குழந்தை நல காப்பாளர்கள் உதவுவர். என்னதான் வீட்டில் குழந்தைகளின் கற்றல் ஆரம்பமானாலும் தரமான கல்வி மற்றும் தூண்டல் நடவடிக்கைகளை வீட்டுக்கு வெளியில் தொடர்வது ஆரோக்கியமானது. 

உடற்பயிற்சி குழந்தையின் மூளையை ஆரோக்கியமாகவும் துடிப்பாகவும் வைத்திருக்க உதவும்,  ஆகையால் தான் கல்விசாரா செயற்பாடுகள் குழந்தையின் வாழ்வில் இன்றியமையாதவையாகின்றன. ஏனெனில், இவை உடல் மற்றும் உளம் சார் செயற்பாடுகளை ஊக்குவிக்கின்றன. ஆரம்ப வயதிலேயே வழங்கப்படும் சரியான கல்வி குழந்தையின் மொழிசார் மற்றும் அறிவுசார் தேர்ச்சியை வளர்க்க உதவும், இவை பிற்காலத்தில் வாழ்வில் வெற்றிக்கனியை சுவைக்க அத்தியாவசியமானவை. சிறார்கள் தான் எங்கள் வருங்கால மோதிரங்கள் என ஒரு ஆங்கிலபழமொழி கூறுவது உண்மையே. அவர்களின் அறிவாற்றல் எதிர்காலத்தில் தோன்றும் சிக்கல்களை விலக்கல், வேகமாக மாறிவரும் உலகிற்கேற்ப ஒத்திசைதல், இந்த  உலகை சிறப்பான இடமாக மாற்றுதல் முதலியவற்றை செவ்வனே செய்யும் ஆற்றல் படைத்தது. அவர்கள் எதிர்கால தலைவர்களாக வேண்டுமெனில், அவர்களுக்கு அடிப்படையிலேயே சிறந்த ஊட்டச்சத்து, அறிவுசார் தூண்டல் மற்றும் அனைத்து அன்பும் அரவணைப்பும் அவர்களது குடும்பத்தாரால் வழங்கப்படவேண்டும். இது அவர்களை ஆரோக்கியமாக வளர வழிவகுக்கும். 


குழந்தைகளுக்கு சிறப்பான ஆரம்பத்தை வழங்கும் பெற்றோருக்காக யுனிசெப் (UNICEF) அமைப்பானது www.betterparenting.lk என்ற வலைத்தளத்தை நிறுவியுள்ளது. குழந்தை பராமரிப்பு, சிறார் முன்னேற்றம், உணவு மற்றும் ஊட்டச்சத்து, அத்துடன் ஆரோக்கியம் ஆகிய நான்கு பகுதிகளில் விரிவான தகவல்கள் கட்டுரைகள், காணொளிகள் மற்றும் அனிமேஷன் முதலியவற்றின் கலவையாக சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் துறை சார் நிபுணர்களால் வழங்கப்படுகிறது.  

Related Articles