ஊதியம் பெறாத பராமரிப்பு பணியின் மதிப்பை அங்கீகரிக்க வேண்டிய நேரம் இது

ஒரு மணித்தியாலத்துக்கான குறைந்தபட்ச ஊதியத்தின் அடிப்படையில் மதிப்பிடப்பட்டால், ஊதியம் செலுத்தப்படாத பராமரிப்புப் பணிகளின் ஆண்டொன்றுக்கான உலகளாவிய நிதி மதிப்பு $10.8 டிரில்லியன் ஆகும் என்பதை அறிவீர்களா?

உலகளவில், ஊதியமற்ற பராமரிப்புப் பணிகளில் 75% பெண்களே ஈடுபடுகிறன்றார்கள், இது ஆண்களின் பங்களிப்பை விட நான்கு மடங்கு அதிகம். எனினும் பராமரிப்புப் பணி என்பது உண்மையான தொழில்; இது அங்கீகரிக்கப்படவும், வெகுமதி அளிக்கப்படவும், எல்லாவற்றிற்கும் மேலாக மறுபகிர்வு செய்யப்படவும் தகுதியுடையது, குறிப்பாக பெண்கள் இந்த விகிதாச்சாரமற்ற சுமையைத் தொடர்ந்து சுமக்காமல் இருப்பதை உறுதிசெய்வதற்காக.

Related Articles