Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

நேர்மறையான மற்றும் வலுவான இலங்கைக்காக ஒன்றிணைவோம்

எறும்புக்கூட்டத்திற்கு.. மற்றவர்களுக்கான உணவை எவ்வாறு சேகரிப்பது, எவ்வாறு வரிசையாக செல்வது என்பவற்றை கற்றுக் கொடுத்தவர் யார்?

தேனீக்களுக்கு.. வெகு தூரம் சென்று தனது ஏனைய துணைகளுக்கும் தேவையான தேனை கொண்டுவர கற்றுக் கொடுத்தவர் யார்?

காகமொன்றிற்கு உணவு கிடைத்தவுடன் “கா கா” என கரைந்து தனது நண்பர்களையும் அழைக்கக் கற்றுக் கொடுத்தவர் யார்?

இவற்றிற்கெல்லாம் பதில், இயற்கை! நாமும் இயற்கையுடன் இணைந்த ஒரு குழுவினர் மாத்திரமே. எனவே, அந்த குணங்களை இன்னும் சிறப்பாகப் பெற்றுக்கொள்ள நேர்மறையான மனநிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

எதிர்மறையான சந்தர்ப்பங்களில் பார்வையை மாற்றுவோம்.

A மற்றும் B ஆகிய கட்டங்கள் ஒரே நிறத்தில் உள்ளன அல்லவா? எனினும் இது ஒரு காட்சி மாயை! (wikipedia.org)

சிக்கல்களை எதிர்கொள்ளும்போது, ​​பொதுவாக நாம் சிந்திக்க பழகியுள்ள நிலைப்பாட்டில் இருந்தே நோக்குகிறோம். பெரும்பாலும்,  எமது மூத்தோர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் சிந்திக்கும் விதத்திலேயே நீண்ட காலமாக நாமும் சிந்திக்கின்றோம். இது பல தவறான புரிதல்களுக்கு வழிவகுக்கும். ஏனென்றால், நாம் அதை ஒரு பக்கத்திலிருந்து பார்க்கும்போது, ​​அது ஒரு குறுகிய எண்ணம் கொண்ட தவறான நிலைப்பாட்டை எம்முள் தோற்றுவிக்கும்.

உதாரணமாக, அரை குவளை நிரம்பியுள்ள தண்ணீரைப் பார்த்து ஒரு விதத்தில் “இதில் பாதி காலியாக உள்ளது!” என எதிர்மறையாக சிந்திக்கலாம். அந்நபர் தண்ணீரின் பயன்பாட்டைக் காண முடியாமல் போகலாம் மற்றும் ஒரு குறுகிய பார்வையால் மன உளைச்சலுக்கு ஆளாகக்கூடும். இல்லையெனில், அதை நிரப்பிய நபர் “முழுமையாக நிரப்பப்படவில்லை” என்பதற்காக வெறுக்கப்படுகிறார். ஆனால் பாலைவனத்தில் தண்ணீரை வெகுநாட்களாக காணாத ஒருவர் இந்த தண்ணீரை எவ்வாறு பார்க்க முடியும்?

நாம் சொந்த வாழ்க்கையிலும் மற்றவர்களை இந்த கண்ணாடி குவளையிலுள்ள நீரைப்போலவே பார்க்கின்றோம். ஒருவர் இப்படிப்பட்டவர் தான் என நாம் யாருக்காவது முத்திரை குத்தலாம். ஆனால் ஒன்றாக இணையும்போது நாம் தண்ணீரைப் போல இருக்க முடியும். நீரானது எளிதில் எரியும் வாயுவான H2 மற்றும் தகன ஊக்கியான O2 ஆகியவற்றால் ஆனது. ஆனால் இந்த இரண்டும் ஒன்று சேரும்போது ஒரு பாரிய தீயினை அடக்க முடியும்!

நேர்மறையான சூழலை கட்டியெழுப்புவோம்.

எமது சிந்தனைகள்எம்மைச் சுற்றியுள்ள சூழலினால் உருவாகுவதே ஆகும். (indiatimes.com)

ஏற்கனவே குறிப்பிட்டபடி, நம் எண்ணங்கள்… நாம் சிந்திக்கும் விதங்கள்…. நம்மைச் சுற்றியுள்ளவர்களால் மிகவும் பாதிக்கப்படுகிறது. எமது பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் அத்துடன் தற்போதைய காலத்தில், Facebook பக்கங்கள், Facebook இல் நாங்கள் முகம் பார்த்திராத நண்பர்கள், குழுக்கள் போன்ற விடயங்கள் மற்றும் நாங்கள் பார்க்கப் பழகும் Youtube காணொளிகள் ஆகியனவும் பாதிக்கின்றன.

நாம் விரும்புவதை நமக்கு அதிகளவில் காண்பிப்பதற்காகவே இணையம் தற்போது வடிவமைக்கப்பட்டுள்ளது. Fashion பற்றி Facebook பக்கங்களில் தேடினால், Facebook உங்களுக்கு அதிகமான ஆடை தொடர்பிலான பக்கங்கள், அவற்றை வாங்குவதற்கான விளம்பரங்கள், விரும்புவதன் மூலமாக மேலும் அது போன்ற பக்கங்களை காண்பிக்கும். Youtube இல் “…. வீடியோக்களுடன்” எனக்குறிப்பிட்டவற்றில் இரண்டு அல்லது மூன்று காணொளிகளை நீங்கள் பார்க்கும் தருணத்திலிருந்து, Recommended For you பிரிவில் அது போன்ற காணொளிகளையே காட்டுகிறது. எனவே நாம் பல்வகைப்படுத்தலில் இருந்து வெளியேறி ஒரேமாதிரியான மனநிலையை உருவாக்க முனைகிறோம். நண்பர்கள் மற்றும் உறவினர்களாலும் இதுவே நடக்கின்றது.

ஆகவே, அவர்கள் யார், அவர்கள் என்ன நினைக்கிறார்கள், உண்மையில் அவர்கள் நினைப்பது சரியானதா என்று சுயாதீனமாக சிந்திப்பதில் நீங்கள் வலுவாக இருந்தால், ஒருவர் ஒரு விடயத்தை கூறியவுடன் நீங்கள் அதை விரைவாக ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள்.

இன்னொருவரின் வாழ்க்கைக்கு வரப்பிரசாதமாக அமைவோம்.

உதவி செய்யுங்கள்; செவிமடுங்கள்; மனநிலையை நிலைநிறுத்துங்கள். (defencehealth.com.au)

‘நாம் செய்த நன்மைகள் எம்மை துரத்துகின்றது’ என்று கூறினாலும், எப்போதும் தீமை துரத்துகின்றது எனக்கூற முடியாது. நாம் ஒரு நன்மையை செய்யும்போது, ​​எந்தவித எதிர்பார்ப்புமின்றி நம்முடைய மனநிறைவுக்காகவும் கருணைக்காகவும் எங்களால் முடிந்ததைச் செய்ய வேண்டும். உண்மையில் “அமயாவின் முதலுதவி” போல.

உதவி செய்யுங்கள். ஒருவருக்கு உதவி தேவை என்று நீங்கள் நினைக்கும் போதெல்லாம் அவ்வாறு செய்யுங்கள். பேருந்தில் யாராவது அசௌகரியமாக இருந்தால் (இறங்கும்போது மீண்டும் இருக்கையை வழங்குவார் என்று எதிர்பார்க்காது), அவர்களை அமர விடுங்கள். சாலையில் ஒரு நண்பரைக் கண்டால், நீங்கள் செல்லும் வாகனத்தில் கூட்டிச்செல்லுங்கள். தேவைப்படுபவருக்கு கற்பியுங்கள் அல்லது ஒரு YouTube காணொளியை தேட ஒருவருக்கு உதவி செய்யுங்கள்.

செவிமடுங்கள். பெரும்பாலானவர்கள் அவர்கள் பேசுவதைக் கேட்பதை விரும்புவார்கள். நீங்கள் கவனமாகக் கேட்டால், அவர்களுக்கு மனநிம்மதி கிடைப்பதுடன் அந்த அனுபவத்திலிருந்து நிறைய கற்றுக்கொள்ள முடியும்.

மனநிலையை நிலைநிறுத்துங்கள். எம்மை போலவே, அனைவரும் நாள் முழுவதும் வெவ்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். எனவே அதையெல்லாம் மறக்கச் செய்ய ஒரு சிறிய புன்னகை போதுமானதாக இருக்கும். உங்கள் நண்பர் அல்லது அலுவலகத்தில் யாராவது குழப்பமாக இருக்கிறார்கள் என்றால், அனைவரும் இணைந்து ஒரு திரைப்படத்தைப் பார்க்கவோ அல்லது இரவு உணவிற்கோ வெளியே செல்லுங்கள். மனிதர்களுக்கு உதவி செய்ய இருப்பது மனிதநேயம் மட்டுமே ஆகும்.

விமர்சனத்தை நன்றாக ஏற்றுக்கொள்ள கற்றுக்கொள்வோம்.

வருத்தமடையாது புன்னகையுடன் ஏற்றுக்கொள்ளுங்கள்.

நாம் தினமும் பல்வேறு விமர்சனங்களைப் பெறுகிறோம். அம்மா, அப்பா, நண்பர்கள், அலுவலகத் தோழர்கள், நீங்கள் தெருவில் சந்திக்கும் நபர்கள் அல்லது Facebook இல் அந்நியர்கள் ஆகியோரால் காயமடையலாம். ஆனால் நாம் அவற்றிற்கு எதிர்மறையாக நடந்து கொண்டால், அது எரியும் நெருப்பில் சோடியத்தை இட்டது போல ஆகும்.

யாராவது உங்களுக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தினால், இந்த 4 படிமுறைகளைப் பின்பற்றவும்.
1) உடனே பதிலளிக்க வேண்டாம். மனம் அமைதியாகும் வரை காத்திருங்கள்.

2) கூறப்பட்ட விடயம் வேறு கோணத்தில் பாருங்கள். இது கவலையாகத் தோன்றினாலும், அதிலிருந்து கற்றுக்கொள்ளவும் நமது பிழை ஏதேனும் இருப்பின் அதை சரிசெய்யவும் இது உதவும்.

3) அவர்கள் அவ்வாறு செய்தது எங்கள் தவறு அல்ல. அன்றைய மன அழுத்தங்கள், அவர்களுடைய வீட்டின் பிரச்சினைகள் கூட நம் ஊடாக விலகக்கூடும். அதனை எண்ணி கவலைப்பட வேண்டாம். அவர்கள் மீது பரிவு கொள்ளுங்கள்.

4) கருத்துத் தெரிவிக்கவும் அல்லது கைவிடவும். ஒவ்வொரு விமர்சனத்திற்கும் நீங்கள் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை. சந்தர்ப்பம் கிடைக்கும்போது அதற்கு சரியான பதிலளிக்கவும்; இல்லையெனில் புறக்கணித்து விடுங்கள்.

நாளை உற்சாகமாக ஆரம்பித்து கவனமாக கழிப்போம்.

உற்சாகம் இல்லாத இடத்தில் இரசணை இல்லை

ஓட்டப்பந்தயத்தில் வீரர்கள் தொடக்கத்தை சிறப்பாக எடுத்தால் மாத்திரமே பந்தயத்தில் முன்னிலை வகிக்க முடியும். எங்கள் நாளும் இதனைப்போன்றதே. நாங்கள் காலையில் எழுந்து அரைத்தூக்கத்துடன் குளியலறைக்குள் நுழைந்தால், அந்த நாள் முழுவதும் அவ்வாறே இருக்கும். அதற்கு பதிலாக, “கடவுளின் பெயரால் உதித்த தினத்தை வாழ்த்தி” என்ற விடாமுயற்சியுடன் நீங்கள் நாளைத் தொடங்கினால், அது உங்கள் முழு வாழ்க்கைக்கும் பலனை உருவாக்கும்.

நாளுக்கு நாள், வெறுப்பு, சோகம் போன்ற எதிர்மறை எண்ணங்கள் நம் மனதில் ஏற்படுகின்றன, இதற்கு காரணம் நாம் அந்த பொழுதில் வாழவில்லை என்பதாகும். நாம் பெரும்பாலும் இறந்த காலத்திலேயே இருக்கின்றோம் அல்லது எதிர்காலத்தில் இருக்கிறோம். அவ்வாறும் இல்லையெனில் Facebook இல் உள்ளோம். நாங்கள் Facebook இல் கீழே செல்லும்போது, ​​ஒரு இடுகைக்கு சிரிக்கிறோம், மற்றொரு இடுகைக்கு சோகப்படுகிறோம், மற்றொன்றிற்கு வெறுப்படைகிறோம். இத்தகைய வேகத்தில் நம் உணர்ச்சிகள் மாறும்போது, ​​அது மற்ற நேரங்களையும் பாதிக்கும். இதனால்தான் தொலைபேசி இயக்க முறைமைகள் இப்போது பயனர்களை தொலைபேசியில் இருந்து விலகி இருக்க ஒரு நாளை / வாரத்தை ஒதுக்கி வைக்க ஊக்குவிக்கின்றன.

“ஒன்னா இருக்க கத்துக்கனும் இந்த உண்மையை சொன்னால் ஒத்துக்கனும்”, என்ற பாடல் நமக்கு நினைவூட்டுவது ஒன்றிணைந்து நாம் இருந்தால் ஒரு நாடாக நீண்ட தூரம் பயணிக்க முடியும். ஈஸ்டர் தின சோகத்திற்குப் பிறகு நமது நாட்டின் சமூக மற்றும் பொருளாதார சரிவை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான ஒரு திட்டமாக Positive Sri Lanka வானது, Spa Ceylon, Ministry of Crab, Vision Care, Elephant House, Unilever, Munchee, Sri Lankan Airlines, Hemas மற்றும் Kandy City Centre போன்ற பல அமைப்புகளின் பங்களிப்புடன் செயல்படுகிறது. இதற்காக Roar ஆகிய நாங்களும் ஒன்றிணைகிறோம். ஒரு வளமான இலங்கைக்கான நீங்களும் வாருங்கள், ஒன்றிணையுங்கள்!

Related Articles