நமது அன்றாட பயன்பாட்டிற்கு; ஆச்சரியமூட்டும் சில கண்டுபிடிப்புகள்

நாளொரு தொழிநுட்பம் பொழுதொரு கண்டுபிடிப்பு என நவீன நூற்றாண்டில் நாம் பயணித்துக்கொண்டிருக்கிறோம். தொலைக்காட்சி, தொலைபேசி, கணனி, ஸ்மார்ட் கடிகாரங்கள் மற்றும் இன்னும் குறிப்பிட்ட சில தொழிநுட்ப சாதனங்கங்களின் சிறியதொரு வட்டத்திற்க்குள் வாழ்ந்துகொண்டிருக்கும் நம்மில் பெரும்பாலானோர், அந்த வட்டத்தை மீறிய தொழிநுட்பங்களை பயன்படுத்துவதும், அறிந்துவைத்திருப்பதும் அரிது என்றேச் சொல்லலாம். அப்படி நாம் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய ஆச்சரியமூட்டும் சில கண்டுபிடிப்புகளின் சுவாரஸ்யமான தகவல்களைத் தெரிந்துகொள்ளுங்கள். 

Privacy Screen Protector

Privacy Screen Protector
படஉதவி – panzerglass.com

மொபைல் போஃன், ஒவ்வொரு மனிதனின் தொழிநுட்ப உறுப்பாக மாறிப்போயுள்ளதொரு சாதனம். படுக்கை முதல் பாத்ரூம் வரை இதனை பயன்படுத்தத்தவறிய இடமேயில்லை எனலாம். அந்த அளவுக்கு மொபைல் போஃனினை பயன்படுத்துகின்றோம். அப்படி பயணத்தின் பொழுதோ அல்லது வேறு பொது இடங்களிலோ நமது மொபைல் போஃன் திரையை எவரும் பார்க்கமுடியாத வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது தான் இந்த Privacy Screen Protector. இதனை நமது மொபைல் போஃன் தோடுதிரையினை வலது மற்றும் இடது புறங்களில் இருந்து எவராயினும் பார்க்க நேர்ந்தால் தோடுதிரையானது கருப்பு நிறத்தில் தெரியும்படி வடிவமைத்துள்ளார்கள். இந்த Privacy Screen Protector ஆனது சில மொபைல் போஃன் கடைகளில் கிடைக்கபெறுவதுடன், தற்போது வருகின்ற புதிய மொடல் மொபைல் போஃன்களில் இந்தமுறையானது பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடவேண்டியதாகும். இதன்விலை மொபைகளின் மொடல்கள் பொறுத்து மாறுபடுகின்றது.

Le Slide Display

Le Slide Display பொருத்தப்பட்ட மடிக்கணனி
படஉதவி – aptelinfotech.com

கணனிகளின் பரப்பளவைக்குறைத்து நாம் எந்நேரமும் இலகுவில் எடுத்துசெல்லும்படி உருவாக்கப்பட்ட மடிக்கணணிகள்,தொழிநுட்ப வரலாற்றில் முக்கியமானதொரு பெரும்படைப்பாகும். வேலைத்தளங்கள், பாடசாலைகள், வீடுகள், அலுவலகங்கள் என அனைத்து இடங்களிலும் அது பெரும்பங்கு வகிக்கிறது. சில நேரங்களில் இந்த மடிக்கணணிகளில் கூட நம்மை பூர்த்தியாக்கபடாத பற்றாக்குறைகள் இருக்கத்தான் செய்கிறது. அதில் பிரதான ஒன்று அதன் திரை. இலகுவான செயற்பாடுகளுக்கு மடிக்கணணிகளைப் பயன்படுத்தினாலும் பல்வேறு தொகுப்பாக்கம் சார்ந்த வேலைகளுக்கு, இதன் சிறிய திரை காரணமாக இவற்றை பயன்படுத்த கடினமாகதான் இருக்கிறது. உதாரணம், படத்தொகுப்பாக்கம், Graphic design, photoshop works போன்ற செயற்பாடுகளில் மடிக்கணணிகள் சிறிய திரை காரணமாக பெரும்பாலும் தவிர்க்கப்படுகிறது. அதனை பூர்த்தி செய்யும் நோக்கில் கண்டுபிடிக்கப்பட்டது தான் இந்த Le Slide Display. இதனை மடிக்கணணியின் பிரதான திரையில் பொருத்திவிட்டு வலது, இடது என இருபுறமும் Slide செய்து பயன்படுத்த முடியும். இதன் மொத்தநிறை 1.3 kg என்பதால் எடுத்துச்செல்ல இலகுவானது. 2 பென்சிகளின் அடுக்கின் அளவுக்கு தடிமன் கொண்டது. 

Sray Speaker

Sray Speaker
படஉதவி – yankodesign.com
மற்றைய Speaker களிலும் Sray Speaker யிலும் ஒலியானது வெளியாகும் மாதிரிமுறை.
படஉதவி – yankodesign.com

பொதுவாகவே நாம் எல்லாரும் நாளொன்றுக்கு ஒரு பாடலாவது கேட்காமல் அந்நாளை நிறைவுசெய்வதில்லை. அந்த அளவுக்கு பாடல்கள் நம்மோடு ஒன்றிப்போயுள்ளது. அப்பாடல்களை கேட்பதென்பது ஒவ்வொருவரின் மனநிலை பொறுத்து மாறுபடுகின்றது. சிலர் அதிக சத்தத்திலும், இன்னும் சில மெல்லிய சத்தத்திலும் பாடல்களை கேட்பார்கள். இன்று பொதுவாகவே இவரை எடுத்தாலும் Hands free,Headset, earpods என எதையாவது காதில் மாட்டிக்கொண்டு தான் பயணப்படுகிறோம் – வாழ்க்கிறோம். இவைகளில் சில தரமற்ற தயாரிப்பிகளினால் ஏற்படும் பல விளைவுகளையும் நாம் அன்றாடம் கேள்விப்படுகிறோம். அப்படி நம் காதோடு பின்னிப் பிணைந்த சாதனங்களில் இருந்து சற்று விடுபட்டுக்கொள்ள இந்த Sray Speaker பொருத்தமானது எனலாம். ஏற்கனவே speaker box, bluetooth speaker கள் போன்றவை இருந்தாலும் இவை பெரியதொரு பரப்பாக இருப்பினும் குறிப்பிட்ட நபருக்கு மட்டும் சத்தத்தை வழங்கக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பம்சமாகும். இது உலகிலேயே மிகச்சிறிய திசைசார் ஒலிக்கருவி ”World’s Smallest Directional Speaker” என பெயர் பெற்றுள்ளது. 

larq self cleaning water bottle

Larq self cleaning போத்தல்
படஉதவி – sightunseen.com
Larq self cleaning போத்தலின் அமைப்பு முறை
படஉதவி – pinterest

இதுவரை பார்த்ததில் இந்த larq self cleaning தண்ணீர் போத்தலானது சற்று மாறுபட்டதொரு கண்டுபிடிப்பு எனலாம். இந்த போத்தலில் தண்ணீரை நிரப்பியவுடன் மூடியிலுள்ள laser பொத்தானை அழுத்தும் பொழுது நீரானது தானாகவே சுத்தம் செய்யப்பட்டு குடிப்பதற்கு ஏற்றதாக மாறிவிடுகின்றது. இதனுள் பொறுத்தப்பட்டுள்ள உயர்தர laser light ஆனது நீரிலுள்ள அழுக்குகள் மற்றும் பற்றீரியாக்களை சுத்தம் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் பயன்படும் வகையில் உவாக்கப்பட்ட இது ஆஸ்திரேலியா, அமேரிக்கா போன்ற நாடுகளில் பெரிய வரவேற்பைப் பெற்று வருகின்றது. தற்போது பிளாஸ்டிக்கினை அநேகமான நாடுகள் கட்டுப்படுத்தி வந்தாலும் முழுமையாக இல்லாதொழித்து விடவில்லை. அப்படி பிளாஸ்டிக்கினை கட்டுப்படுத்தும் நோக்கிலும் இதனை உருவாக்கியுள்ளதாகச் சொல்கினறனர். amazon, ebuy ஆகிய இணையதள சந்தைகளில் இந்த larq self cleaning போத்தலினை  பெற்றுக்கொள்ளலாம். 

Related Articles