சாமியார்களும் சாமானியர்களும்

அண்ணாமலையார் திருத்தலம் இருக்கற ஊரை சொந்த ஊரா கொண்ட ஒரு சாமியார் இமயமலை வரைக்கும் யாத்திரை சென்று காவிரி கரைக்கு வந்தார் (அங்கிருந்து வந்ததாக அவரே சொன்னார்). ஈரோடு காவிரிக்கரை  ஓரமா வருகிற மக்களின் சிறு, சிறு வியாதிகளை காந்த அலைகள் (மாதிரி) சிகிச்சை மூலம் குணப்படுத்தி சில காலம் வாழ்ந்தாராம். அப்ப அவரோட பீஸ் வெறும் அஞ்சு ரூபா தான். அங்கேயே ஒரு கூட்டத்தை உருவாக்கி அங்கிருந்து தான் அவர் வாழ்க்கை உருவானதா சொல்றாங்க. அவருடைய முதல் வெற்றி அல்லது அனைத்து மக்களையும் சென்றைடைய காரணமா இருந்தது கஜானாவை திற… காசு வரட்டும்.. தொடர்தான்.

படம்: twomonkeystravelgroup

இன்னொருவர் பெங்களுர்ல இருந்து தமிழ்நாடு வந்திருக்கார். வந்த புதுசுல அவரால் சரியா தமிழ் பேச முடியல ( இப்பவும் அப்படித்தான்) பிரபலமான பத்திரிகையை அணுகி நான் கட்டுரை சொல்றேன். நீங்கள் எழுதி வெளியிட முடியுமான்னு கேட்டிருக்கிறார் . அப்ப வேறொரு பத்திரிக்கைல கல்லாவைத்  திற… காசு வரட்டும்… தொடரை வெளியிட்டு சக்கை போடு போட்டுட்டு  இருந்தாங்க. அப்ப இணையமும் சமுக வலைத்தளங்கலும் இவ்வளவு பயன்பாட்டில் இல்லை. சரி.. நம்ம பத்திரிக்கை விற்பனையும் அதிகப்படுத்தனும்னு முடிவு செஞ்சாங்க. மத்த சாமியார் அனைவரும் ஆசையை குறைக்க சொல்வதால் இவர் புது வழியை தேர்ந்தெடுத்தார். பூராத்திற்கும் ஆசைப்படுனு தலைப்புல எழுதச்சொன்னார். அங்க தான் அவர் வாழ்க்கை தொடங்கியது.

படம்: pixabay

இன்னைக்கு இவங்களோட சொத்து மதிப்பு பல்லாயிரம் கோடிகள். இவங்கள மட்டும் தனியா சொல்லல. இந்தியால சில நூறு சாமியார்களும், சாமியார் மடங்களும் இயங்கிட்டு இருக்கு. ஒவ்வொரு ஆசிரமத்தின் சொத்து மதிப்பும் முழுசா தெரிஞ்சா சைபர்களை விரல் விட்டு எண்ணியே மயக்கம் ஆயிரும் நமக்கு. உண்மையான சக்தியுள்ள சித்தர்களுக்கு இணையான சாமியார்கள், மக்களுக்காக சேவை செய்து வாழ்ந்து மறைந்தவர்கள் அவர்களையெல்லாம் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாம்.

நிகழ்கால சாமியார்களை மட்டுமே நாம் கணக்கில் எடுத்துக்கொள்வோம். சாமியார்கள் மட்டும் கோடிகளை குவிப்பது எப்படி? சாமியார் ஆகிறதுக்கு என்ன தகுதி இருந்தா மக்கள் ஏத்துக்கறாங்க? அவுங்க எல்லாமே உண்மையிலேயே சாமியார் தானா ?

படம்: pixabay

கவுண்டமணி பேசாம “நீ அரசியல்ல நின்றுனு” சொல்லுவார் சத்யராஜ் கிட்ட. அதுக்கு காந்திமதி “அதுக்கு பெரிய படிப்பெல்லாம் பிடிச்சிருக்கனுமே”னு சொல்லுவாங்க. அதுக்கு கவுண்டமணி “ஐயோ!!! யக்கா, அந்த கருமத்துக்கு படிப்பே தேவை இல்லக்கா. ஊருக்குள்ள நொண்டி நொசக்கான்.. வெந்தது வேகாதது… பொட்டிக்கடைல கடன் சொன்னது… பீடிய கிள்ளி குடிச்சது.. சந்தக்கடைல கருப்பட்டிய திருடிட்டு ஓடினது… மொத்த கும்பலும் அங்க தான் இருக்கு” என்பார்.

சாமியார்கள் எல்லாம் போதனைகள்நடத்தும் போதும், பூஜை பண்ணும்போதும் கடவுளா தெரியறாங்க. ஆனா எதாவது பிரச்சனைகள்’ள மாட்டி அவங்க வரலாறு புவியியல் எல்லாம் வெளியில வரும்போது கவுண்டமணி வசனம் தான் ஞாபகத்திற்கு வருது. ஒரு சராசரி மனுஷனா பிரச்சனைகள் அதிகமாகும்போது கோவிலுக்கு அதிகமா போவோம். அப்பவும் தீரலை’னா எனக்கு தெரிஞ்ச ஜோசியக்காரர் ஒருத்தர் இருக்கறார். அவர் கிட்ட போனா உன்னோட வாழ்க்கையின் மொத்த ரகசியங்களையும் புட்டு புட்டு வச்சிருவார்’னு நம்மோட சுற்று வட்டாரத்தில யாராவது ஒரு நலம் விரும்பி காலை காபிக்கு நம்ம வீட்டுக்கு வந்திருவார். அவர் ஜோசியரிடம் அழைத்துச்  செல்ல ஜோசியர் ஒரு இன்ஸ்டால்மென்ட் தேதி கொடுப்பார். ஒரு ஆறு மாசம் வெட்டியா ஊர சுத்திட்டு இருங்க.. “ஆடி போய் ஆவணி வந்தா டாப்பா வருவீங்கன்னு” சொல்லுவார். நம்பிக்கை’ங்கற அச்சாணில தான் வாழ்க்கைங்கற சக்கரம் சுத்துதுனு ஒரு தத்துவத்தை உதிர்த்திட்டு நாமும் வாழ்க்கையை மெல்ல நகர்த்த ஆரம்பிப்போம். பிரச்சனைகளுக்கு வடிகால் தேடி, அதுக்கு ஒரு தீர்வு, அறுதல், நமது தோல்வி நியாயமானது தான். அந்த கடவுளே நம்மோட இடத்தில இருந்தாலும் அவருக்கும் தோல்விதான் அப்படின்னு யாராவது நமக்கு ஆறுதலான நியாயம் சொல்ல மாட்டாங்களான்னு மனசு’ல மக்களுக்கு ஒரு ஏக்கம் வருது.

படம் : pixabay

சாமியார்கள் எல்லாருமே மதரீதியாக பட்டம் வாங்காத முனைவர்கள் (இந்த முனிவர்கள்). ஒரு சிலர் தனியாகவோ அல்லது கூட்டாகவோ அனைத்து மதத்தில இருக்கற பொதுவான கருத்துக்கள், மக்களை நல்வழி படுத்தற மாதிரி, இது வரைக்கும் மக்கள் தவறா வாழ்க்கை நடத்தறதாகவும், வாழ்கையை சரியான பாதையில வாழனும்னு சொல்றாங்க. ஒரு சராசரி மனுஷனுக்கு எதார்த்த வாழ்க்கைல வருகிற பிரச்சனைக்கு இந்து மதம், புத்த மதம், ஜைன மதம், இஸ்லாம், கிறிஸ்து மதம், தாவோ’னு இதுல ஒண்ணுல கூடவா விடை கிடைக்காது. யோகா, தீட்சை, தியானம், பூஜை எதாவது ஒரு சில அடிப்படை விஷயங்களை தெரிஞ்சா போதும். ஆனா முக்கியமான ஒரு திறமை இருக்கணும். அது பேச்சு திறமை. சாமியார் சொல்ற போதனைகள்’ள சர்ச்சைகள், மாற்று கருத்து எதுவும் இல்லாம முகத்தில ‘ஈ‘ ஆடினால் கூட அசையாம கட்டிப்போடனும் அவரோட போதனைகள்.

உலகப்  பொதுமறைகளாக இருக்கற விஷயங்களை மக்கள் வாழ்க்கையோடு கலந்து தேன் மாதிரி உரை நிகழ்த்துனா போதும், மக்கள் மனசுக்கு ஆறுதல் கிடைச்சதுனா சாமியார் முக்தி அடைஞ்சிட்டார்னு அர்த்தம். “ஒத்த லட்டுக்கு கொட்டோ கொட்டுனு கொட்டுது பார் துட்டு”னு விவேக் சொல்ற மாதிரி அவர் அருளுரை மட்டும் போதும், மக்கள் அளிக்கும்பொருளுக்கு அவரோட அத்தனை பண உரைகளிலும் நிரம்பும்… காசு.. பணம்.. துட்டு.. மணி மணி….

படம்: quora

மக்கள் பக்தி ரீதியான ஒரு இறுதி புள்ளியா ஒரு குறிப்பிட்ட ஜனத்தொகைக்கு ஒரு சாமியாரை தேர்ந்தெடுத்துக்  கொள்கிறார்கள். அவர்களின் வாழ்க்கை முறை, வழிபாட்டு முறை அனைத்தையும் சாமியார் திட்டம் போட்டு அறிக்கை தாக்கல் பண்ணிருவார். இந்தியாவின் வட மாநிலங்கள்ள பொதுவா ஒரு பழக்கம் இருக்கு. பரவலா இந்தியா முழுசும் இருக்கற மடங்கள் கூட ஒவ்வொரு சமூகத்திற்கும் தொடர்பு இருக்கு. வருசத்துல ஒரு பதினைந்து நாள் ஒரு மாசம் அந்தந்த ஆசிரமத்தில் தங்கிப்  புத்துணர்ச்சி பெற்று(!!!!!) திரும்பி அவர்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவார்கள்.

படம்: toyaps

குர்மீத்னு ஒரு சாமியார். உலக சாதனை எல்லாம் பண்ணி கின்னஸ்ல இடம் பிடித்தார்னு சொன்னங்க. நானே அவரோட தோரணையைப்  பார்த்துட்டு பழங்கால மன்னர் வம்சத்தின் மறு பிறவியோ என்னமோனு சந்தேகப்பட்டேன். படை வீரர்கள் புடை சூழ எதிரிகளால் சாமியார் சிறை வைக்கப்பட்டார். ரெண்டு கற்பழிப்பு வழக்குகளோட இறுதித்  தீர்ப்பில்  அவரைக்  குற்றவாளினு அறிவிச்சிருக்கு கோர்ட். அவரோட ஆதரவாளர்கள் ஏற்படுத்தின கலவரத்தில ஒரு முப்பது பேர் பலி, முன்னூறு பேர் படுகாயம், 200 ரயில்களை ரத்து பண்ணிட்டாங்க, இந்தியா ஸ்தம்பித்தது.

படம் : pixabay

இறுதியாகப்  பழமையான அறிஞர் ஒருவர் கூறும்பொழுது குறிப்பிட்ட அளவிற்கு மேல பணம், செல்வாக்கு அனைத்தும் வந்து விட்டால் காமத்தைத்  தவிர வேற என்ன வேட்கை இருக்க முடியும் என்பார். வம்சாவளியாக வந்த பணம் இல்லை. அவர்களது உழைப்பிற்கும், தகுதிக்கும் கனவிலும் நினைத்து பார்க்க முடியாத பணம். அரசியல் செல்வாக்கு தானாக கிடைக்கும். தமக்காக வாழ்க்கையை அர்ப்பணித்து குடும்பத்தை உதறித் தள்ளி அவர் தான் உலகம் என்று அவர் காலடியில் கிடக்கும் ஆண் மற்றும் பெண் பக்தர்கள் என்று வேறு. அனைத்தும் குறுகிற காலத்தில் உருவாவதால் மனதில் சந்தோசத்தோடு சல்லாபமும் குடி கொள்கிறது. அது வெளியில் வரும்பொழுது பிரளயம் ஆகிறது. பக்தாள் வீடு திரும்பி இயல்பு வாழ்க்கை ஆரம்பிப்பார்கள். அடுத்த சாமியார் உதயம் ஆவார்… தொடரும்…..

Related Articles