Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

Colomboscope 2021: மொழியும் வரலாறுகளும்

“உலகின் பல பாகங்களிலும் தீவிர தேசியவாதங்கள் எழுச்சியடையும் காலமாக இது திகழ்கின்றது. எமது அடையாளங்களாக திகழும் எமது வரலாறுகள்  கூட முன்கூட்டியே எழுதப்பட்ட சில சம்பவங்கள் மாத்திரமே’ ColomboScope 2021 இன், பிரதானி அனுஷ்கா ராஜேந்திரன் அவர்கள் என் கூறுகின்றார்கள், ColomboScope 2021 இன்  இவ்வாண்டுக்கான கருப்பொருளாக மொழிஒரு புலம் பெயரி எனும் தலைப்பின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது. இக்கருத்திட்டம் தொடர்பாக விளக்கிய அனுஷ்கா அவர்கள்,  இத்திட்டத்தின் ஆரம்பகட்டத்தில் நாம் யார் எமக்கே உரிய சுதேச குணாதிசயங்கள் என நாம் அழைப்பது எதனை என்பது குறித்து நாம் பரிசீலனை செய்ய வேண்டும். உலகமயமாக்கல் என்ற கருத்து கூட குடியேற்றத்திலிருந்து பிறந்தது என்றும், அது அரசியல் மற்றும் பொருளாதார தடைகள் மற்றும் காலனித்துவம் மற்றும் அது உருவாக்கிய படிநிலைகளால் சிக்கலானது.இடம்பெயர்வு, புலம்பெயர் பரம்பரை மற்றும் மொழி சார்ந்த அரசியல் ஆகியவற்றின் ஆழமாக வேரூன்றிய இலங்கையிலிருந்து நிகழ்வின் கட்டமைப்பைப் பற்றி சிந்திக்க வேண்டிய கட்டாயம் உள்ளது என்றும் அனுஷ்கா  ராஜேந்திரன் சுட்டிக்காட்டுகிறார். 

முவிந்து பினோய்

இம்முறை 7வது முறையாக ColomboScope நிகழ்வு இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வு ஜனவரி மாதம் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தபோதும் , கோவிட்-19 பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் பயணக் கட்டுப்பாடுகளின் விளைவாக உற்சவ தேதிகளை பிற்போட வேண்டியிருந்தது உலகளாவிய பெருந்தொற்றுக்கு மத்தியில் ஒரு உற்சவத்தை கருத்தியல் ரீதியாக கட்டமைப்பதற்கும் ஒருங்கிணைப்பதற்கு குழுவாக ஒன்றினைந்து செயற்ப்படும் பண்பு மிகவும் உதவியது – “இணைப்பிலிருத்தல் பற்றி சிந்திக்கவேண்டியது பயணத்தின் போது மாத்திரமல்ல, மாறாக கலைஞர்கள் மற்றும் உள்ளூர் உரையாசிரியர்கள் மற்றும் ஒத்துழைப்பாளர்களிடையே நீண்டகால உரையாடல் மூலம் ஒன்றிணைந்து செயல்படுவது, அந்த உரையாடல்கள் எவ்வாறு நீண்டகால உறவுகளாக மாறும், என்பவற்றின் போதும் நாம் அவற்றை கற்றுகொள்ளலாம்” என அனுஷ்கா தெரிவித்தார்.

உற்சவ நிரலின்படி புலம்பெயர் இலங்கைக்கலைஞரான ரஜ்னி பெரேரா போன்ற இயக்கம் மற்றும் மொழியின் வரலாறுகள் மற்றும் அனுபவங்களுக்குள் பணிபுரியும் கலைஞர்களை ஒருங்கிணைப்பதுடன் அதன் மூலம் நாட்டில் ‘தொவில்’ (பேயோட்டுதல்) – அதன் நம்பிக்கைக்கு இடையிலான பொருத்தம் மற்றும் கிழக்கு ஆபிரிக்க தோற்றம் – நகர்ப்புற சமூக மற்றும் அரசியல் சூழலுக்கு இடையிலான பொருத்தத்தை போன்ற தலைப்புகளை ஆராயவுள்ளோம். உள்நாட்டுப் போரின்போது இடம்பெயர்வு மற்றும் துன்புறுத்தல்களைக் கையாண்ட வினோஜா தர்மலிங்கம், காலனித்துவ வெளிநாட்டு குடியேறியவர்கள் உணவு கலாச்சாரங்களில் ஏற்படுத்தும் தாக்கம் மற்றும் உள்ளூர் நுகர்வு மாற்றங்கள் குறித்தும் கலந்துரையாடவுள்ளார்

பாலாஷ் பாட்டார்ஷா

சிட்டகாங்கில் உள்ள அவரது வீட்டின் குறிப்பிட்ட சூழலை பங்களாதேஷ் கலைஞர் பாலாஷ் பாட்டார்ஷா படமாக்குகிறார், மேலும் ஒரு எல்லைப் பிராந்தியமாக அதன் புவியியல் இருப்பிடம், இப்பகுதியில் பேசப்படும் பேச்சுவழக்கில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதையும் ஸ்பெயினைச் சேர்ந்த தற்கால கலைஞர், கல்வியாளர் மற்றும் ஆராய்ச்சியாளர் டோரா கார்சியா, இலங்கை நாடக பயிற்சியாளர்களுடன் இனைந்து உற்சவத்தின் போது கொழும்பில் உள்ள Hearing Voice Cafe என்ற தனது நீண்டகால திட்டத்தின் மூலம் உரையாடல்கள், கேட்பது, அதிர்ச்சியின் அனுபவங்கள், மற்றும் செவிமடுத்தலுக்கான ஒரு நிலையத்தினை உருவாக்க திட்டமிட்டுள்ளனர் ஒனடறினைந்து செயற்படுதல் னபதினை மைய கருத்தாக மையமாகக் கொண்டுஇ கலைஞர்கள் நிகழ்ச்சிக் கட்டமைப்பை பல கோணங்களில் மற்றும் பல்வேறு விளக்க வடிவங்களிலிருந்து அணுகுவார்கள்.

ரஞ்சனி பெரேரா

 நிகழ்ச்சியின் கருப்பொருளைப் பற்றி கூறிய ராஜேந்திரன், இந்நிகழ்வானது பல்வேறு துறைகள் மற்றும் தொடர்புடைய துறைகளில் ஆராய்ச்சியை ஒன்றிணைக்கும் வாய்ப்பாக நான் கருதுகிறேன் மேலும் “இந்த விழாவில் மற்றவர்களைக் கேட்பதுஇ கலையின் ஒரு பகுதியாக கவிதை எழுதுவது மற்றும் மொழிபெயர்ப்பது மற்றும் அவர்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது போன்ற பல திட்டங்களும் அடங்கும். “Reading in Tongues” என்பது  காலனித்துவ காலத்தால் ஈர்க்கப்பட்ட ஒரு நூலகம் அல்ல. ஆனால் ஒரு வாசிப்பு அறையாகும்.  ‘கலைஞர்கள் செயல்திறன், இசை மற்றும் உரையாடல் ஊடாக தங்கள் படைப்புகளை முன்வைக்கக்கூடிய ஒரு இடத்தைப் பற்றி நாங்கள் நினைக்கிறோம் என அனுஷ்கா மேலும் கூறினார்

Colomboscope இந்த குழுவானது Held Apart, Together (‘ஒன்றாக இருங்கள்’) என்ற ஆன்லைன் திட்டத்தையும் ஆரம்பித்து நடத்திவருகின்றது “தவிர, கலைஞர்களுடன் கலந்துரையாடி அவர்களின் செயல்முறைகளைப் பிரதிபலிப்பதன் மூலம் ஒன்றாகப் படிப்பதற்கும் சிந்திப்பதற்கும் முதன்மையான செயல்களைத் தக்கவைத்துக்கொள்வதற்கான நட்பின் ஒரு அடையாளமாக இந்த குழு இருந்தது, மேலும் எமது உறுப்பினர்களுக்கு அவர்களின் நடைமுறைகள கடந்த காலங்களில் நாம் என்ன செய்து கொண்டிருந்தோம் என்பதை உணர வைத்த  ஆண்டாக கடந்த ஆண்டு திகழ்ந்தது என” என ராஜேந்திரன் விளக்குகிறார்.

 “பெருந்தொற்றின் காலவரிசை மற்றும் அரட்டை அரங்கங்களை மையமாகக் கொண்ட ஊடக ஒளிபரப்புகளின் மத்தியில் கலாச்சார உழைப்பை மெய்நிகர் பரிமாற்றங்களாக மாற்றுவதை நாங்கள் உணர்ந்தோம், வளர்ந்து வரும் யோசனைகளைப் பகிர்ந்து கொள்ள மற்றொரு வழி தேவை, காணொளி பகிரல்கள், ஒலிக்காட்சிகள் மற்றும் கலைஞர் உரையாடல்களைப் பயன்படுத்தி பல ஆண்டுகளாக நாங்கள் ஈடுபாடு கொண்ட கலைஞர்களிடமிருந்தும், பரந்த கலாச்சார சமூகத்தினரிடமிருந்தும் போராட்டங்கள் மற்றும் பதில்களை பெறலாம்.” என  Colomboscopeஇன் கலை இயக்குனர் நடாஷா ஜின்வாலா தெரிவித்தார்.

சிசிலியா விகியுனியா

“மொழி ஒரு புலம்பெயரி” நிகழ்ச்சிதிட்டமானது பன்முகத்தன்மையான விடயங்களில் கவனம் செலுத்துகிறது – பகிரப்பட்ட வரலாறுகள், வகுப்புவாத அனுபவங்கள், அதன் மிக நெருக்கமான மற்றும் தொலைநோக்கு வடிவங்களில் குடியேற்றத்தின் உலகளாவிய மற்றும் தனித்துவமான அனுபவங்கள் மற்றும் தொடர்ச்சியான இயக்கமானது மனித அனுபவத்தின் ஒரு தனித்துவமான மாறிலியாக இருப்பதை அங்கீகரித்தல். இந்த சூழலில், குடும்பங்கள், சமூகங்கள் மற்றும் தலைமுறைகளுக்கு இடையில், எல்லைகள் மற்றும் தடைகளைத் தாண்டி, மற்றும் அனைத்து வடிவங்களிலும் – பேசப்படும் மற்றும் பேசப்படாத, உத்தியோகபூர்வ கணக்குகள் மற்றும் தனிப்பட்ட நினைவுகள், இழந்த பேச்சுவழக்குகளிலும் தாய்மொழிகளிலும் மொழி ஒரு மெல்லிய நூலாக மாறுகிறது. எந்த அனுபவமும் ஒருமையில் அல்ல – பல்வேறு விவரிப்புகள் மற்றும் சந்திப்புகள் தவிர்க்க முடியாமல் ஒருவருக்கொருவர் தகவல் மற்றும் தாக்கத்தை ஏற்படுத்துவதால் எல்லைகள் மங்கிப்போகின்றன” போன்ற தலைப்புகளை இந்நிகழ்ச்சிதிட்டத்தின் மூலம் ஆராயப்படவுள்ளது.

Colomboscope 2021: மொழி ஒரு புலம்பெயரி நிகழ்ச்சிதிட்டமானது ஆகஸ்ட் 12 முதல் 22 வரை நடைப்பெறவுள்ளது பாலாஷ் பட்டாச்சார்ஜி, முவிந்து பினாய், ஷைலேஷ் பி.ஆர், டோரா கார்சியா, அஜீஸ் ஹசாரா, விஜிதரன் மரியாதேவதாஸ், பினார் அரென்சி, ரூபனீதன் பக்கியராஜா, ரஜ்னி பெரேரா, ஹனுஷா சோமசுந்தேரம், வினோஜா பெல்சில் ஆகிய 15 கலைஞர்கள் இந்நிகழ்வில் கலந்துகொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது

Related Articles