Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

Roar Showtime | “சமூகத்தின் வண்ணங்கள்” என்ற ஒளிப்பட தொகுப்பிற்கு தேர்வான ஒளிப்படங்கள்

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், இச் சமர்ப்பிப்புகளுக்கான அழைப்பினை விடுத்தோம்.

இத் தனிச்சிறப்புடன் வடிவமைக்கப்பட்ட இணையவழி புகைப்படத் திருவிழாவில் நாடு முழுவதிலுமிருந்து ஒளிப்படத்துறையைச் சார்ந்த தொழில்முறை கலைஞர்கள், சாராத கலைஞர்கள் மற்றும் ஒளிப்படக்கலை ஆர்வர்லர்கள் ஆகிய அனைவரும் பங்குபற்றிட வேண்டும் என நாங்கள் விரும்பினோம். உங்களைக் கவர்ந்த உங்களை விக்கயவைத்த உயிரூட்டம் அளித்திடும் எண்ணக்கருக்களை காட்சிகளாக்கி அவற்றை நீங்கள், எங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நாங்கள் கேட்டிருந்தோம்.

“சமூகத்தின் வண்ணங்கள்” என்ற கருப்பொருளின் மூலம், உங்கள் முன் நாங்கள் வைத்த சவால் யாதெனில், குறிப்பிட்டவொரு தனிநபரை, அல்லது குழுவினரை அல்லது சமூகம் ஒன்றை சித்தரிக்கும் வண்ணத்தைத் தேர்ந்தெடுப்பதாகும், இதன் மூலம் அவர்களின் கதைகளை அவர்களுக்கும் அந்நிறத்துக்கும் இடையிலான தொடர்பினை கூறுவதாகும். மேலும் உங்களது ஒளிப்படத்தில் உள்ள கருப்பொருளினை அடையாளப்படுத்துவதில் வண்ணங்கள் முக்கிய பங்கு வகுத்திட வேண்டும் என்பதினை வலியுறுத்தியிருந்தோம்.

எங்களது இப் புகைப்பட திருவிழா சமர்ப்பிப்புக்களுக்கான காலவரையறை  ஜனவரி மாதம் 18ம்  திகதியுடன் முடிவடைந்தன. இறுதியில் எங்களுக்கு 50க்கும் மேற்பட்ட சமர்ப்பிப்புக்கள் கிடைக்கப்பெற்றன. அவற்றிலிருந்த  70க்கும் மேற்பட்ட ஒளிப்படங்களிலிருந்து சிறந்தவற்றை தேர்வு செய்திட வேண்டியிருந்தது.

இச் சமர்ப்பிப்புக்களிலிருந்து சிறந்த படைப்புக்களைத் தேர்வு செய்திட எங்களது  நிறுவனத்தின் சுதேச படைப்பாளிகளைக் (புகைப்பட நிபுணர்கள், எழுத்தாளர்கள் மற்றும் வடிவமைப்பாளர்கள்) கொண்ட தேர்ச்சிபெற்ற தேர்வுக் குழுவொன்று அமைக்கப்பட்டது. 

எமது தேர்வுக்குழுவினரால்  Roar Showtime இன் “சமூகத்தின் வண்ணங்கள்” என்ற கருப்பொருளுக்கு அமைய தேர்வு செய்யப்பட்ட சிறந்த தெரிவுகள் இங்கே….

ஓளிப்படம் எடுத்தவர்: உதித்த சிரந்த ஏக்கநாயகே
Uditha Chirantha Ekanayake (uditha_chirantha)

“පෝට් සිටි, ගෝල්ෆේස් – ගෝල්ෆේස්හි අයිස්ක්‍රීම් වෙළෙඳාම් නියත පුද්ගලයෙක්.පෝට් සිටි පර්‍යන්තය තුල සිදු කෙරුණු මල් වෙඩි සංදර්ශන ඉදිරිපසින් දක්නට ලැබේ.”

மொழிபெயர்ப்பு: “புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கொழும்பு துறைமுக நகரத்தின் (Colombo Port City) திறப்பு விழாவின் போது இடம்பெற்ற வான வேடிக்கைகளின் பின்னணியில்  காலி முகத்திடல் ஐஸ்கிரீம் விற்பனையாளரொருவர்”இவ் ஒளிப்படமானது ஒளி மற்றும் இருள், எதிர்காலம் மற்றும் இறந்த காலம், பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பின்மை ஆகியவற்றுக்கு இடையே இருக்கும் அழகானதொரு சமநிலையை வெளிப்படுத்துகிறது. மேலும் இப்புகைப்படத்தில் இலங்கையின் தற்போதைய நிலைமையானது தனித்துவமாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. வேகமாக வளர்ந்து வரும் இவ்வுலகில் ஐஸ்கிரீம் விற்பனையாளரின் எதிர்காலத்தின் நிச்சயமற்ற தன்மைக்கு எதிராக கொழும்பு துறைமுக நகரத்தின் நம்பிக்கையையும் கனவுகளையும் இருளுக்கு எதிராக வானவேடிக்கைகளின் மூலம் வெளிச்சம் போட்டுக்காட்டும் இவ் ஒளிச்சிதறல்ககளை இப்படத்தில் சிறைபிடித்திருப்பது இப் ஒளிப்பட கலைஞரின்  திறமைக்கு சிறந்தவொரு எடுத்துக்காட்டாகும். மாற்றம் ஒன்றே மாறாதது. அதனை செம்மஞ்சள் நிறத்திலான ஒளிச் சிதறல்களின் மீது அதிகளவில் கவனம் செலுத்தி சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளமையானது இத் தருணத்தின் தனித்தன்மையாகும்.

ஓளிப்படம் எடுத்தவர்: கசுன் வீரசேகர
Kasun Weerasekara (sekara)

සමාජයේ පංති ස්තරායනය මැනෙවින් පිළිබිඹු කරන මෙම ඡායාරුපය වර්ණ සංකලනය හා එතුලින් ගෙන හැර දක්වන අර්ථ නිරූපනය නිර්මානාත්මකය. වර්ණ භාවිතයේදී අඳුරු පසුබිමෙහි කැපී පෙනෙන ලෙස “රතු” වර්ණය යොදා ගැනීම පන්දම් කරුවන්ගේ සමාජීය ඉරණම, ගැටීම හා පැවැත්ම පිලිබඳ පුළුල් අදහසක් ගෙනහැර දක්වයි. මහනුවර යුගයේදී එක කුලයක් ලෙස රජුට සේවය කල මොවුන් බෞද්ධයන්ගේ මුදුන් මල්කඩ වන දළදාවට මහත් භක්තියක් හා ගෞරවයක් දක්වති. පාරම්පරික ලෙස උරුමවන තමාගේ ජීවනෝපාය මෙහිදී “රතු” වර්ණය හා ගින්දර මගින් නිරූපනය වේ. ගින්දර යන සංකේතය තුලින් “දැවීම”, ඔවුන් සමාජයේ සුළු කොට්ඨාසයක් වීමෙන් ඇතිවන නිරන්තර අරගලය දැක්විය හැක. කළු පසුබිමෙහි රතු වර්ණය භාවිතයෙන් මුළු මහත් සමාජ ධුරාවලිය තුල ඔවුන්ගේ පැතිකඩ විදහා දැක්විය හැකිය.”

மொழிபெயர்ப்பு: இப் புகைப்படம் சமூகத்தின் ஏற்ற தாழ்வுகளையும் தர வேறுபாடுகளையும் பிரதிபலிக்கிறது, மேலும் இங்கு வண்ணங்களின் கலவையும் அதன் விளக்கமும் ஆக்கபூர்வமானதாக அமைந்துள்ளன. குறிப்பாக இருண்ட பின்னணியில் பளிச்சிடும் “சிவப்பு” வண்ணத்தை இங்கு பயன்படுத்தியுள்ளமை தீப் பந்தம் ஏந்துபவரின் சமூக விதி, முரண்பாடுகள் மற்றும் உயிர்வாழ்வு பற்றிய ஒரு பரந்த கருத்தை அளிக்கிறது. கண்டி இராச்சிய காலத்தில் நடுத்தர சாதியைச் சேர்ந்தவொரு வகுப்பினர், தீப்பந்தங்கள் ஏந்துபவர்களாக சேவையாற்றினர். மன்னனுக்கும் அரச பரம்பரைக்கும் சேவையாற்றிய இவர்கள், கண்டியில் அமைந்துள்ள புனித தலதா மாளிகை ஆலயத்தின் தீவிர பக்கதர்களாகவும் அவ்விடத்தின்மீது மட்டற்ற மரியாதை மிக்கவர்களாகவும் காணப்பட்டனர். அவர்களின் பாரம்பரியம் மற்றும் மரபு என்பன நெருப்பு மற்றும் சிவப்பு வண்ணம் மூலம் குறிக்கப்படுகின்றன. நெருப்பின் இயல்புகளில் ஒன்றான “எரித்தல்” மூலம் சமூகத்தில் சிறுபான்மைக் குழுவொன்றாக இவர்கள் உயிர்வாழ்வதற்காகாக மேற்கொள்ளும் போராட்டம் எடுத்துக்காட்டப்படுகிறது. மேலும் கறுப்பு வண்ண பின்னணியில் சிவப்பு வண்ணம் என்பது இச் சமூக படிநிலைகளில் அவர்களுக்கான சுயத்தை மேற்கோடிட்டு காட்டுகிறது.

ஓளிப்படம் எடுத்தவர்: சத்தியாமறன் பிரவீன் 
Sathiyamaran Praveen (praveensathiyamaranphotography)

கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள மண்டூர் முருகன் கோவிலில், ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவில் அதிகளவில் காணப்படும் செம்மஞ்சள் நிறத்தில், பிரவீன் சிறப்புக் கவனம் செலுத்தியுள்ளார். இத் திருவிழாவானது இந்துக் கடவுள்களில் ஒன்றானவரும் மற்றும் இந்தியாவில் அமைந்துள்ள கங்கை நதியுடன் நெருங்கிய உறவைக் கொண்டவருமான முருகப்பெருமானின் கோவிலில் இடம்பெறும் முக்கியதொரு திருவிழாவாகும். இங்கு இந்து பக்தர்கள் அணியும் செம்மஞ்சள் நிறமானது இளநீலம் மற்றும் இளம் பச்சை வண்ணத்தில் காணப்படும் வானத்துடன் வேறுபட்டு நின்று அழகாக காட்சியளிக்கிறது.

ஓளிப்படம் எடுத்தவர்: சாலியா ஜெயவீர
Saliya Jayaweera (saliya_j)

ஜெயவீராவின் இவ் ஒளிப்படதில் எங்களை மிகவும் கவர்ந்த விடயம் யாதெனில், இப் படத்தில் அமைதியை மற்றும் நிர்ச்சலனத்தை குறிக்க மங்கிய பழுப்பு மற்றும் தங்க வர்ணங்களை அவர் தேர்ந்தெடுத்திருப்பது அவரது தனித்திறமையைக் காட்டுகிறது. இப் புகைப்படத்தைப் பற்றிய அவரது கருத்து;

“I’ve titled this photo ‘An Evening At The Teashop’, for it was taken at my favourite tea spot while sipping a delicious Nestomalt and munching on a crispy samosa. It is a boutique-styled place on the upper end of Bazaar Street, Kurunegala. I’ve always loved to have my evening tea around 4 PM, when the rays of the setting sun bounce off the giant canary yellow walls of the mosque in front, illuminating the entire tea shop with its other-wordly glow.”

மொழிபெயர்ப்பு: “இந்த புகைப்படத்திற்கு ‘தேநீர்க் கடையில் ஒரு மாலை பொழுது’ என தலைப்பிட்டுள்ளேன், ஏனென்றால் இது எனக்கு மிகவும்  பிடித்த தேநீர்க் கடையில் சுவையானதொரு நெஸ்டோமால்ட் மற்றும் மொறுமொறுப்பான சமோசாவை சுவைக்கும் பொழுது எடுக்கப்பட்டது. இது குருநாகலில் கடைவீதியின் மேல் முனையில் அமைந்துள்ள சிறியதொரு கடையாகும். நான் எப்போதும் மாலை 4 மணியளவில் என் மாலை தேநீரை அருந்த விரும்புவேன், அந்நேரம், சூரியன் அஸ்தமிக்கும் போது அதன் கதிர்கள் இப் பள்ளிவாயிலின் முன்னால் காணப்படும் பளிச்சிடும் பொன்மஞ்சள் நிற பிரம்மாண்டச் சுவர்களில் பட்டுத் தெறித்து, முழு தேநீர் கடையையும் அதன் பொற்கதிர்களால் ஒளிரச் செய்திடும்.”

ஓளிப்படம் எடுத்தவர்: நப்லா நஜீம்
Nafla Najeem (naf_photography_)

நப்லா அவர்களின் இப் புகைப்படத்தில் உள்ள செம்மஞ்சள் வண்ணம் மூலம் இம் மாநகரத்தில் பல கண்களுக்கு புலப்படாத மற்றும் இச் சமூகத்தில் எவரினதும் கருத்திற் கொள்ளப்படாத உன்னதமான மனிதர்களான துப்புரவுத் தொழிலார்களும் அவர்களது இயல்பான வாழ்க்கையும் எடுத்துக்காட்டப்படுகிறது. மேற்கண்ட துப்புரவுத் தொழிலாளர் பற்றி நப்லா அவர்களின் கருத்தும் கண்ணோட்டமும் பின்வருமாறு:

“Her name is Indika. She’s from Kataragama and she is 40 years old. She is the mother of an 18-year -old girl. She is struggling each and every day and yet, she smiles as she has everything in her life. When she was 29, the gas cooker exploded due to a leak while she was cooking breakfast. The incident caused severe burns to her face and she was in treatment for over a year. During that time, her husband left her and their child on their own. Although she may seem to be doing an ordinary job, she inspired me. She survives on her own and takes care of her child. “

மொழிபெயர்ப்பு: இவரது பெயர் இந்திகா. இவருக்கு தற்போது 40 வயதாகிறது. கதிர்காமத்தை வசிப்பிடமாகக் கொண்டவர். இவருக்கு 18 வயதுடைய பெண் பிள்ளை ஒன்று உள்ளது. அன்றாட வாழ்கையில் பல போராட்டங்களுக்கு முகங்கொடுத்தாலும் அவற்றை இளகியதொரு மென் புன்னகையுடைய முகத்துடன் கடந்து சென்றுவிடுவார். ஏனெனில், இவரைப் பொறுத்தமட்டில் இவருக்கு வேண்டிய அனைத்தும் இவரது வாழ்க்கையில் உண்டு என்ற திருப்தியே இவர் சொல்லும் காரணமாகும்.  29 வயதாகும் போது ஏற்பட்ட சமையலறை தீ விபத்தொன்றுக்கு உள்ளானார். இவ் விபத்தினால் அவரது உடலும் முகமும் பலத்த காயங்களுக்கு உள்ளானதால் கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கும் மேலாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக்கொண்டார். இதே சமயம் இவரது கணவர் இவரையும்  குழந்தையையும் புறக்கணித்து கைவிட்டுச் சென்றுவிட்டார். பலரது கண்களுக்கு இவரொரு சாதாரண துப்புரவுத் தொழிலாளியாக தென்பட்டாலும் என்னைப் பொறுத்தமட்டில் இவர் என்னுள் பாரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். ஏனெனில் இவர் சுயமாக உழைத்து அவரது பிள்ளையை பராமரிக்கிறார்”

ஓளிப்படம் எடுத்தவர்: சரஞ்சன் பாக்கியராஜா
Saranjan Pakkiyarajah (@saranjan_srj)

ஆழியின் ஆழ்நிற நீல வண்ணத்தில் காணப்படும் இவ் வலைகளுக்கும் அந்த ஆழிக்குமான உறவையே இந் நீல நிறத்தின் மூலம் சரஞ்சன் எடுத்துக்காட்டுகிறார். நீல நிற ஆழியையும் ஆகாயத்தையும் பின்னணியாகக் கொண்டு பொன்னிற மணலில் காயும் இவ்வலைகளை சரஞ்சன் தனது மூன்றாவது கண் மூலம் மிகவும் நேர்த்தியாக பதிவு செய்துள்ளார். இங்கு இவ்வலைகளில் நடந்து செல்லும் அம் மீனவரைப் பார்க்கையில் அவர் ஏதோ கடல் நீரில் நடந்து  செல்வது போலவே தோன்றுகிறது. சரஞ்சன் பாக்கியராஜா தனது புகைப்படத்தை பற்றி பின்வருமாறு கூறுகிறார்;

“மீனவர்களுக்கும் நீல நிறத்தித்கும் இருக்கும் ஒரு தொடர்பு அளவில்லாதது . தினமும் உழைக்கும் அவர்களின் உழைப்பில் தான் எம்மால் மீனின் சுவையை உணர முடிகிறது.”

ஓளிப்படம் எடுத்தவர்: சுயோதமி யோகநாதன்
Suyothami Yoganathan’s (ysuyothami)

பச்சை நிறத்தின் ஆதிக்கத்தை எடுத்துக்காட்டும் இப் பசுமையான வயல்வெளி அடிவானத்துடன் இணையும் பின்னணியில் அந்த விவசாயியை காட்சிப்படுத்தியிருப்பது சுயோதமியின் அழகுணர்ச்சிக்கு சிறந்ததொரு முன்னுதாரணமாகும். இப் புகைப்படத்தைப் பற்றி சுயோதமியின் வார்த்தைகள்: 

“In lush, tropical Sri Lanka, paddy cultivation took deep root, transforming into the lifeblood of the islanders and setting the pace for a national culture embellished with elaborate rituals centred around the preparation of the fields and the harvesting of the grain. During the phase of this cultivation, lands will look like green carpets, further adding beauty to the Island. Rice is the staple food of the inhabitants of Sri Lanka, and paddy is cultivated as a wetland crop in all the districts.”

மொழிபெயர்ப்பு: “பசுமையான, அயனமண்டல நாடான இலங்கையில், விவசாயமானது இலங்கை மக்களின் வாழ்வில் வேரூன்றி உதிரத்துடன் கலந்துவிட்ட உழைப்பாகும். வயல் நிலங்களை விளைச்சலுக்காக தயார் செய்வதிலும் மற்றும் அறுவடையிலும் பல சடங்கு மற்றும் சம்பிரதாயங்களைக் கலாசாரமாக கொண்டுள்ளது இலங்கையின் சிறப்பாகும். மேலும் விளைச்சல் காலங்களில், வயல் நிலங்கள் பச்சை நிற கம்பளங்கள் போல காட்சியளிப்பது, இலங்கையின் இயற்கை அழகுக்கு மேலும் அழகு சேர்க்கிறது. அரிசி, இலங்கை மக்களின் பிரதான உணவாகும், மேலும் அனைத்து மாவட்டங்களிலும் ஈரநில பயிராக நெல் பயிரிடப்படுகிறது.”

ஓளிப்படம் எடுத்தவர்: கவ்மாலி பிரியதர்ஷா
Kawmali Priyadarsha’s (kawz_p)

பிரகாசமான மஞ்சள் நிறம், யாழ் தீபகற்பத்தின் கரையோரத்தில் உள்ள நைனா தீவில் காணப்படும் கோவிலொன்றுக்கு வெளியே சிறுத்து மகிழும் இக் குழந்தைகளின் அழகைப் சிறப்பாக காட்சிப்படுத்தியுள்ளது. மேலும் சிங்கள மொழியில் நைனா தீவு, “நாகதீப” என குறிப்பிடப்படும். இப் புகைப்படத்தைப் பற்றி கவ்மாலியின் கருத்து பின்வருமாறு;

“What name should we call this place? Nagadeepa or Nainativu? Regardless, it is a place where there is hope and happiness”

மொழிபெயர்ப்பு: இவ்விடத்தை நாம் எப் பெயர் கொண்டு அழைக்க வேண்டும்? நாகதீபமா அல்லது நைனா தீவா? ஆனால் இவையெதையும் பொருட்படுத்தாமல், நம்பிக்கையும் மகிழ்ச்சியும்  இருக்கும் இடம் அது.

ஓளிப்படம் எடுத்தவர்: வாசனா தென்னகோன்
Wasana Tennakoon (waz_tennakoon)

நுகேகொடையில் மாலைப் பொழுதொன்றில் வாகன நெரிசலில் மெதுவாக நகரும் வாகனத்தின் உள்ளே இருந்து இவ் வண்ணமயமான படத்தை வாசனா அவர்களின் மூன்றாவது கண் உள்வாங்கிக் கொண்டது.

My tiny little shop
You find colors
Lot of them
Happy colors
Hanging on the wooden wall
And on the plastic desks
More in the paper boxes
Cheap but cheerful
You will be happy
Let me promise you that…

பொருளடக்கம்: எனது சின்னஞ் சிறிய கடையில், உங்களுக்கு பல வண்ணங்களைக் காணமுடியும். அம் மகிழ்ச்சி தரக்கூடிய வண்ணங்களை நீங்கள் சுவர்களிலும், பிளாஸ்டிக் பெட்டிகளிலும் மற்றும் கடதாசிப் பைகளிலும் காணலாம். இவை மலிவானவை. ஆனால் என்னால் நிச்சயமாக கூறமுடியும்; இவை உங்களுக்கு மகிழ்ச்சியை தரக்கூடியவை.

ஓளிப்படம் எடுத்தவர்: ஆகில் நூரமித்
Aaqill Nooramith (nooramith)

முஸ்லிம் சமூகத்தில் ஏற்படும் மரணம் மற்றும் அடக்கம் ஆகியவற்றை எடுத்துக்காட்ட ஆகில் அவர்கள் இங்கு பச்சை நிறத்தைப் பயன்படுத்தியுள்ளார்.இப்புகைப்படத்தைப் பற்றி ஆகில் அவர்களின் கருத்து:

“It is just another Thursday night, considered a night of worship  in Islamic teachings. Inside the Dawatagaha Jumma Masjid, an old man sits in thoughtful prayer in front of a Ziyaram; the tomb of an Awliya (saint – friend of Allah). Although the existence of a Ziyaram in the heart of cinnamon estate was first discovered in 1802, it is not certain when the saint actually arrived in Sri Lanka. Nonetheless, it is understood that he came to the island on the direction of Holy Prophet, sal Allahu alaihi wa sallam (peace be upon him).A soft glow of light spills from inside the masjid, mixing with street lights and the neon pulse of the kottu shop next door. Conversation from beggars, vendors, devotees and passersby are carried lightly in the wind, in the shadow of the old mosque, plants and creepers climbing its faded exterior.The moment you step into the Ziyaram, a calm washes over you, as if the air itself were different. The tomb is covered in a soft felt, shrouded in green fabric. The scent of attar, perfume, enters your nose as you press your face against it, kissing it, with your hand over your heart, greeting the saint within, As-salamu alaykum Ash Sheik Usman Volliyullah. Despite destructive Wahhabi teachings, spread by countries such as Saudi Arabia which have seeped into this country’s soil, which ban the age-old custom present on the island and throughout the world of praying to the saints, large crowds of devotees of all ages come to ask for assistance with any plight or perhaps simply pray a yaseen or perform zikr in the presence of the saint. Practices flowing through the generations, the branches of a thousand family trees intertwined at the foot of a Ziyaram.”

மொழிபெயர்ப்பு: இது மற்றுமொரு வியாழக்கிழமை இரவு; இஸ்லாமிய போதனைகளில் இது வழிபாட்டுக்குரிய இரவாக கருதப்படுகிறது. தெவட்டகஹ ஜும்மா பள்ளிவாயிலின் உள்ளே, வயதானவரொருவர் ஜியாரமொன்றிற்கு (சமாதி பீடம்) முன்னால் சிந்தனைமிக்க பிராத்தனையில் அமர்ந்திருக்கிறார்; இதுவொரு அவ்லியாவின்(இறைநேசர்) சமாதியாகும். கருவாத் தோட்டத்தின் மையத்தில் ஜியாராமொன்று இருப்பது 1802 ஆம் ஆண்டில் முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்டாலும், இவ் இறைநேசர் உண்மையில் இலங்கைக்கு எப்போது வந்தார் என்பது குறித்து உறுதியாக அறியப்படவில்லை. ஆயினும்கூட, அவர் புனித நபி ஸல் அல்லாஹு அலைஹி வஸல்லம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் இலங்கைக்கு வந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. பள்ளிவாயினுள் ஊடுருவும் ஒளியின் மென்மையான பளபளப்புடன், தெரு விளக்குகள் மற்றும் பக்கத்திலிருக்கும் கொத்து கடையின் நியான் விளக்கின் ஒளியும் இரண்டறக் கலக்கிறது. யாசகர்கள், வியாபாரிகள், பக்தர்கள் மற்றும் வழிப்போக்கர்கள் ஆகியோரின் உரையாடல்களின் கலவையான ஒலியானது காற்றில் தவழ்ந்துவருகிறது. இப் பழமையான பள்ளிவாயிலின் மங்கலான நிழலில், சிறு செடிகளும் மற்றும் கொடிகளும் அதன் வெளிப்புற சுவரில் செழித்து வளர்ந்து படர்ந்துள்ளது. நீங்கள் இக் சமாதி பீடம் நுழைந்த தருணத்தில், மெல்லிய காற்று போன்ற அமைதியானதொரு உணர்வு உங்களை தழுவுவதை உங்களால் உணர முடியும். பச்சை நிறத் துணியால் மூடப்பட்டிருக்கும் அக் சமாதி பீடத்தில் மென்மையானதொரு உணர்வு  சூழ்ந்திருக்கும். அதனுள் நுழைந்தவுடன் அவ் சமாதி பீடத்தின் மீது உங்கள் முகத்தை பதித்து, அதனை முத்தமிட்டு, உங்கள் இதயத்தின் மேல் கையை வைத்து, உள்ளே இருக்கும் துறவியை வாழ்த்தி, அவருக்கு அஸ்-சலாமு அலைகம் ஆஷ் ஷேக் உஸ்மான் வள்ளியுல்லா எனக் கூறும் போது அப் பச்சை துணியில் பூசப்பட்டிருக்கு மெல்லிய அத்தார் வாசனை திரவியத்தின் வாசனையை உங்களால் நுகரமுடியும். நாசகரமான வஹாபி போதனைகள், சவுதி அரேபியா போன்ற நாடுகளில் பரவியுள்ளன, அவை இந்த நாட்டினுள்ளும் நுழைந்துள்ளன. அவை இலங்கை மற்றும் உலகெங்கிலும் பினபற்றப்படும் இறைநேசர்களை வழிபடும் பிரார்த்தனைகளை தடைசெய்யும் நோக்கம் கொண்டுள்ளன. இவ் சமாதி பீடத்தீற்கு அனைத்து வயதினரும் அதிக எண்ணிக்கையில் வருகிறார்கள். எந்தவொரு கஷ்டத்திற்கும் இவர்களிடம் உதவி கேளுங்கள் அல்லது ஒரு யாசீனை ஓதி பிராத்தியுங்கள் அல்லது துறவியின் முன்னிலையில் ஜிக்ர் செய்யுங்கள். தலைமுறை தலைமுறையாக கடைபிடிக்கப்பட்டு வரும் பாரம்பர்ய சம்பிரதாயங்கள், ஆயிரம் கொடிவழி உறவுகள் மற்றும் அவற்றின் பங்களிப்புகள் என்பன இந்த ஜியாராத்தை அடிப்படையாகக் கொண்டு பின்னிப் பிணைந்துள்ளன.

ஒளிப்படம் எடுத்தவர்: சுஹேலா அபேநாயக்க 
Suhela Abeynaike (flutter_my_shutters)

சுஹேலாவினால் இரவு நேரத்தில் எடுக்கப்பட்ட கொழும்பு மாநகரத்தின் இப் புகைப்படமானது, இரவின் ஒளி வண்ணக் கலவைகளின் சங்கமமாகும். இதனை அவர் இன்னும் சிறப்பாக அவரது வார்த்தைகளில் பின்வருமாறு விவரித்துள்ளார்;

“What defines a community? Like the colours of the rainbow, our community is created from the vibrancy of timeless history. We are a mix of colours that redefine the meaning of the word “home”.  Standing on the top of the World Trade Centre, at lightning speed, 499 ft above the ground, these are the colours of our community!”

மொழிபெயர்ப்பு: “ஒரு சமூகத்தை வரையறுப்பது எது? வானவில்லின் வண்ணங்களைப் போலவே, எமது சமூகமும் காலவரையற்ற துடிப்பான வரலாற்றினால் வடிவமைக்கப்பட்டது.  “இல்லம்” என்ற வார்த்தையின் அர்த்தத்தை மறுவரையறை செய்யும் வண்ணங்களின் கலவையே நாம். தரையில் இருந்து 499 அடி உயரத்தில் உலக வர்த்தக மையத்தின் உச்சியில் நின்று போது, இவைதான் நமது சமூகத்தின் வண்ணங்கள் எனக்கண்டேன்!”

ஒளிப்படம் எடுத்தவர்: பி. மதுஷாந்த்
P. Madhushanth (predeev_madhu)

பௌத்த நெறியினை குறிக்க மதுஷாந்த் அவர்கள் செம்மஞ்சள் நிறத்தைப் பயன்படுத்தியுள்ளார், மேலும் இப் புகைப்படத்திற்கு ‘ஞானத்திற்கான தேடல்’ என அவர் தலைப்பிட்டுள்ளார். நீல வானத்தின் அமைதியையும், பசுமைக் காட்சிகளில் குளிர்ச்சியையும்  நேர்த்தியானதொரு கலவையாகக் கண்டோம், ஆகவே இதனால் எங்களது குறிப்புகளில் அவருக்கானதொரு இடத்தை இது பெற்றுக்கொடுத்துள்ளது.

எங்களது முதல் இணையவழி புகைப்படத் திருவிழா சிறப்பாக நடத்துமுடிந்ததில் நாங்கள் பெரு மகிழ்ச்சியடைகிறோம்.  மேலும் எங்களது வாசகர்களாகிய நீங்களும் இதனை இரசித்திருப்பீர்கள் என நம்பிக்கை கொள்கிறோம்.

Roar Showtime இன் இந்த மாதத்திற்கான போட்டித்தேர்வில் பங்குபற்ற மறக்காதீர்கள்!

Related Articles