வாழ்க்கையில் வெற்றி – உங்கள் தொழிலிடத்தில்

வாழ்க்கை, வெற்றி இந்த இரண்டு விடயங்களுமே அதிகமாகப் பேசப்படும் இரு விடயங்கள்..

எனினும் ஆச்சரியமான விடயம் என்னவென்றால், வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலுமே இந்த இரண்டு சொற்களினதும் அர்த்தமும், அவை நோக்கப்படும் விதமும் மாறுபடுவது எமது வாழ்க்கையின் சுவாரஸ்யங்களில் ஒன்று.

பாடசாலைக்காலம் முடிந்து இளமையின் மத்திய காலத்தில் பயணிப்போரைக் கவனியுங்கள்..

வெவ்வேறு இடங்களில் தொழில் செய்யும் பலரோடு அவர்கள் செய்யும் தொழில்கள் பற்றி சும்மா கொஞ்சம் பேசிப்பாருங்களேன்..

“ஏன்டா இந்த வேலைக்கு வந்தோம், எப்படா இதில் இருந்து விலகுவோம், அலுத்துப்போச்சு” என்று சொல்லிப் புலம்புகிறவர்களைத் தான் அதிகமாகக் காணக்கூடியதாக இருக்கும்.

“எனக்கு நான் செய்கிற வேலை மிகவும் பிடிச்சிருக்கு” என்று திருப்தியாகவும் மகிழ்ச்சியாகவும் சொல்பவர்கள் சிலபேரைத் தான் நாம் காண்கிறோம்.

எங்களுக்குப் பிடித்த விஷயங்களையே தொழிலாகச் செய்யும் அதிர்ஷ்டம் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. அப்படி வாய்த்துவிட்டால் தொழில் செய்யும் கஷ்டமே இருக்கப்போவதில்லையே..

ஒரு பொழுதுபோக்கையே தொழிலாக செய்துகொண்டு ரசனையோடு வாழ்க்கை பயணிப்பது இனிமையான அனுபவம்.

ஒவ்வொருவரிடமும் வெற்றியின் ரகசியம் என்னவென்று உண்மையான காரணத்தை அறிந்துகொள்ளப் பாருங்கள்..

படம் - expertbeacon.com

படம் – expertbeacon.com

செய்யும் தொழில் மனத்துக்குப் பிடித்ததாக இருப்பதையே முதன்மையான காரணமாக அனேகர் சொல்வதை அவதானிப்பீர்கள்.

தொழிலைப் பிடித்ததாக மாற்றிக்கொள்ளவும், அதை வெற்றிகரமாக செய்துகாட்டவும் எங்கே எல்லோராலும் முடிகிறது என்று அங்கலாய்ப்போர் அதிகம்..

பிடித்தது கிடைக்காவிடில், கிடைப்பதை பிடிக்கிற மாதிரி மாற்றிக்கொள்ளவேண்டும் என்ற வாழ்க்கைத் தத்துவத்தை இங்கே தொழிலுக்கு என்று நாம் பிரதியிட்டுக்கொள்வது முக்கியமாகிறது.

எம்மைச் சுற்றியுள்ள புறச் சூழலை எமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதன் மூலம் தொழிலையும் வாழ்க்கையையும் மகிழ்ச்சியாக மாற்றிக்கொள்ளலாம் என்று மனோவியலாளர்கள் கூறுகின்றனர்.

இதற்கு முக்கியமான 6 வழிகள் இருக்கின்றன .

#1. உங்கள் தொழில் தருனர்/முதலாளி/ மேலதிகாரியின் எதிர்பார்ப்பு/விருப்பத்துக்கு ஏற்றதாக உங்களது தொழில் அமைந்திருக்கிறதா என்று பாருங்கள்.

இல்லாவிட்டால்  அதற்கேற்ப மாற்றிக்கொண்டு வேலை செய்யவேண்டும்.

படம் - collegepond.com

படம் – collegepond.com

#2. நீங்கள் வேலை செய்யும் இடத்தில்/ அலுவலகத்தில் உங்கள் சக ஊழியர்கள், மேலதிகாரிகள், ஏன் உங்களுக்கு கீழே பணியாற்றும் நபர்கள் ஆகியோருடன் நீங்கள் சகஜமாக பழகுகிறீர்களா? உங்கள் உறவுகள், நட்பு சுமுகமாக இருக்கிறதா என்று பாருங்கள்.

இல்லாவிட்டால் அதை சீர்ப்படுத்த முயற்சி செய்யுங்கள்.

அலுவலகத்தில் நல்ல உறவு நிலை நிம்மதியான வேலை நேரத்தைத் தரும்.

படம் - workitdaily.com

படம் – workitdaily.com

#3. உங்கள் அலுவலகத்தில் உங்கள் மீதான  நம்பிக்கை ஏற்படவேண்டும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் நிச்சயம் நிறுவனத்துக்கு நன்மை பயக்கும் என்ற உறுதியான எண்ணம் எல்லோருக்கும் வரவேண்டும்.

படம் - cdn-images-1.medium.com

படம் – cdn-images-1.medium.com

#4. உங்கள் உடல் ஆரோக்கியமானதாகவும், மனம் சோர்வடையாமலும்  இருத்தல் முக்கியமானது. இவ்விரண்டில் ஒன்றின் சோர்வு கூட, உங்களது வேலையின் ஈடுபாட்டை பாதிக்கும். இவற்றுடன் உங்கள் புறத்தோற்றத்தையும் நீங்கள் கவனித்துக்கொள்ளவேண்டும். புறத்தோற்றத்தின் அழகு, கம்பீரம், நேர்த்தி என்பனவும் உங்கள் முன்னேற்றத்தின் முக்கியமான கூறுகள் ஆகின்றன.

படம் - blog.gocpabc.ca

படம் – blog.gocpabc.ca

#5. நீங்கள் எந்த நிறுவனத்தில் தொழில் செய்தாலும் உங்கள் நிர்வாகத்தின் செயற்பாடுகள் பற்றி பூரண அறிவும் அது செயல்படும் விதம் பற்றியும் தெரிந்து வைத்திருப்பது அவசியம்.

படம் - americandiscovery.com

படம் – americandiscovery.com

#6. உங்கள் அலுவலகத்தின் தற்போதைய நிலை, அது இப்போது எடுத்து ள்ள முடிவுகள், தற்போதைய நிலைமைக்கேற்ப மாற்றியமைக்கப்பட்டுள்ள  மற்றும் நீண்டகாலக் குறிக்கோள் என்பவை பற்றியும் அறிந்திருத்தல் அவசியம்.

பலரும் உயர் முகாமைத்துவத்தில் உள்ளவர்கள் மட்டும் இவற்றை அறிந்து வைத்திருந்தால் போதும் என்று நினைப்பது தவறு.

அனைத்து மட்டத்தில் உள்ளவர்க்கும் இது அத்தியாவசியமாகிறது.

படம் - clickworks.ie

படம் – clickworks.ie

இந்த ஆறும் உங்களுக்கு கைவரப்பட்டால் அலுவலக சூழலில் உங்களை அசைத்துக்கொள்ள முடியாது.

உங்களுடைய அலுவலகச் சூழலை உங்கள் கட்டுக்குள்ளே வைத்துக்கொள்வதன் மூலம் வெற்றியைக் கைவசப்படுத்திடுவதும் சிரமமில்லாமல் ஆகிவிடும்.

Related Articles