இலங்கை வந்த சேகுவாராவும் உதவிய டிங்கி மாத்தையாவும்

சே என்றால்… அது வீரம், இளமை, ஒரு திமிர், ஒரு ரெளத்திரம், நட்பு, காதல், துரோகம் என்று அனைத்தும் கொண்டதொரு தலைவன் ஆவான். அப்படியான மாபெரும் தலைவன் இலங்கைக்கு வந்திருக்கிறான் என்றால் அது நமக்கு பெருமைகொள்ள வேண்டிய விடயம்தான்.

சொல்லப்போனால், இலங்கையிலுள்ள ஏராளமான முச்சக்கரவண்டிகளில் ஸ்டிக்கர் வடிவிலும், பலரது கைகளில் பச்சைகளாகவும் வரையப்பட்டிருக்கும் இவரை நங்கு அறிந்துதான் ஆராதிக்கின்றனரா எனும் கேள்வியையும் எழுப்புகிறது.

ஆம் நாம் இங்கு பேசப்போவது சேவின் இலங்கை வருகைப் பற்றி…

மாபெரும் நிலப்பரப்பின் மனசாட்சி, புரட்சியின் தோழன், பிடல் கஸ்ட்ரோவின் உயிர் நண்பன் சேகுவாரா… இந்த இரட்டைப் பெயர்தான் நாடு இனம் மதம் பெரியவர் சிறியவர் நல்லவர் கெட்டவர் என்ற எவ்வித பாகுபாடும் இல்லாமல் அனைவராலும் ஆராதிக்கப்படுகின்ற ஒரு பெயர். கியூபா தொடங்கி பல லத்தீன் அமெரிக்க நாடுகளின் எதிர்காலத்திற்காக போராடி தன் உயிரை விட்ட சே, நமது எதிர்காலத்திற்காக என்று ஒரு மரத்தையும் நட்டிவிட்டுப் போயிருக்கிறார். அது சேகுவேராவின் நினைவுடன் வேர்விட்டு வளர்ந்து நிற்கிறது மாமரமாக.

சேகுவாராவின் இலங்கை விஜயமும் அவர் யால காட்டு பங்களாவில் தங்கியிருந்த சமயத்தில் மரம் நடும் காட்சியும். பட உதவி: ft.lk/

1959 ஆண்டு கியூபாவிலிருந்து இலங்கைக்கு விசேட விமானம் ஒன்று வந்திறங்கியது. அதில்தான் சேகுவாரா வந்திறங்கினார். கியூபாவில் புரட்சிப் போர் முடிந்து பிடல் கஸ்ட்ரோ நாட்டின் தலைவனானப் பிறகு நாட்டின் வளர்ச்சிக்காகப் போராடினார். இளைஞர் விவகாரத்தைதயும் விவசாயத்துறைையயும் சே கையிலெடுத்தார், அதன் ஒரு அங்கமாகத்தான் இலங்கை வந்தார்.

1959ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ஆம் திகதி இலங்கை வந்திறங்கிய சே,  அங்கிருந்து ஹொரனையிலுள்ள யால றப்பர் தோட்டத்திற்கு சென்றார், றப்பர் தோட்டத்தற்கு சென்ற சேகுவாராவை வரேவற்றவர் அந்த யால காட்டு பங்களாவின் பொறுப்பாளர் டிங்கிரி மாத்தையா.

சேகுவாரா வருவதற்கு முதல்நாள் இரவு டிங்கிரி மாத்தையாவுக்கு ஒரு தகவல் வந்துள்ளது, அது அவருடைய முதலாளியிடமிருந்து வந்த தகவல். நாளை முக்கியமான சிலர் வருகிறார்கள், அவர்களுக்கு தேவையான அனைத்தையும் செய்து வையுங்கள், காலை உணவையும் தயார்ப்படுத்திக் கொடுங்கள் என்று உத்தரவு வந்தது.

இலங்கையில் சேகுவாராவின் தங்குமிடத்தில் உதவி புரிந்த டிங்கி மாத்தையா, சேகுவேராவின் நினைவுதினத்தில் கலந்துகொள்ளும் காட்சி.

டிங்கிரி மாத்தையாவுக்கு வயது 80 இருக்கும், தனது 15ஆவது வயதில் அந்த யால காட்டு பங்களாவிற்கு வந்திருக்கிறார், கிட்டத்தட்ட 60 வருடங்கள் அங்கேதான் அவருடைய வாழ்க்கை கழிந்திருக்கிறது.

இந்த றப்பர் தோட்டமானது 1500 ஏக்கர் வரை இருக்குமாம், இதன் உரிமையாளர் ஜே.சி.டி. பீரிஸ். இந்த றப்பர் தோட்டத்திற்குள் இருப்பதுதான் யால காட்டு பங்களா. இதில்தான் சேகுவாரா தங்கவைக்கப்பட்டிருக்கிறார். இதில் நீச்சல் தடாகம் அத்தோடு சிறிய குளம் ஒன்று என்று விடுமுறையைக் கழிக்க வசதியாக பல ஏற்பாடுகள் இந்த பங்களாவிற்குள் இருந்திருக்கிறது.

முன்னாள் பிரதமர்களான டட்லி சேனாநாயக்க, சிறிமாவோ பண்டாரநாயக்க மற்றும் ஜே.ஆர்.ஜெயவர்தன ஆகியோரும் இந்த றப்பர் தோட்டத்திற்கு விஜயம் செய்துள்ளனர்.

ஆனாலும் இந்த றப்பர் தோட்டத்திற்கு சேகுவாரா வந்து சென்றபின்னர்தான் உலகம் இந்த இடத்தை அறிந்துகொண்டது, 

யால காட்டு றப்பர் தோட்டத்திற்கு சேகுவாரா மற்றும் அவருடைய பட்டாளத்துடன் வந்திறங்கியபோது இவர்கள் யார் யார் என டிங்கிரி மாத்தையாவுக்கு தெரிந்திருக்கவில்லையாம். ஆனால் இராணுவ உடையுடன் இருந்தவர் கையில் சுருட்டையும் (சிகா) வைத்திருந்த அழகில் தெரிந்திருக்க வேண்டும் இது சாதாரண ஒரு மனிதன் அல்ல என்று.

அந்த றப்பர் தோட்டத்தில் சிறிதுநேரம் நடந்து சென்று சுற்றிப் பார்த்த சேகுவாரா அங்கிருந்து புறப்படுவதற்கு முன்னர் காலை உணவை அருந்த அந்த யால காட்டு பங்களாவுக்கு சென்றுள்ளார்.

இலங்கை கியூபா உறவின் 50 ஆண்டுகால நினைவாக வெளியிடப்பட்ட தபால் தலையில் சேகுவேராவினால் நடப்பட்ட மஹோகனி மரம்.

அங்கு அவருக்கு வாழைப்பழமும் பனிஸ்ஸும் பறிமாறப்பட்டதாகத் தகவல், அதன்பிறகு தனக்கு உதவியாக நின்று அனைத்தையும் கவனித்துக்கொண்ட டிங்கிரி மாத்தையாவுக்கு தான் பாவிக்கும் சிகா சுருண்டு பெட்டி ஒன்றை பரிசாக வழங்கிவிட்டு சென்றிருக்கிறார் சே.

அதன்பிறகு அந்த றப்பர் தோட்டத்திற்குள் சேகுவாரா ஒரு மஹோகனி மரத்தை நட்டிருக்கிறார், சேவின் கையாலேயே நடப்பட்ட அந்த மஹோகினி மரம் இன்றும் அந்த பிரம்மாண்டத்தையும் உறுதியையும் பறைச்சாட்டுவதாக நிமிர்ந்து நிற்கிறது.

சேகுவாரா இங்கு வந்தது றப்பர் குறித்து ஆராயவும் விவாசயம் குறித்த தரவுகளைப் பெற்றுக்கொள்ளவும்தான். அதற்கு இலங்கையை சேகுவாரா தேர்ந்தெடுத்திருக்கிறார் என்றால் எந்த அளவிற்கு அப்போது நாம் விவசாயத்தில் உயர்ந்த இடத்தில் இருந்திருக்க வேண்டும்!

சேகுவாராவை பெருமைப்படுத்தும் விதமாக இலங்கையில், ஆர்ஜன்டீன நாட்டின் சுதந்திர தினம் அவர் நட்டிய மரத்திற்கு கீழே கொண்டாடப்பட்டிருக்கின்றைமயும் குறிப்பிடத்தக்கது.

Related Articles