Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

பி. சரவணமுத்து எனும் பாக்கியசோதி சரவணமுத்து

இலங்கையின் வரலாற்றில் அதன் வளர்ச்சிக்கும், பெருமைக்கும் பாடுபட்ட தமிழ் சாதனையாளர்களுள் பலரை நாம் அறிந்திருப்பது குறைவு. கொழும்பிலுள்ள கிரிக்கட் மைதானமான பி. சரவணமுத்து விளையாட்டு அரங்கம் சர்வதேச புகழ் பெற்ற கிரிக்கட் விளையாட்டரங்கமாகும். இந்தப் பெயருக்கு பின்னால் இருக்கும் மாபெரும் சாதனையாளரின் கதையை கொஞ்சம் தெரிந்துகொள்வோம்.

பாக்கியசோதி சரவணமுத்து

1892 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26 ஆம் திகதி பிறந்தார். பாக்கியசோதி சரவணமுத்து அவர்களின் தந்தை,கொழும்பில் வைத்தியராக பணிபுரிந்த வேதாரணியம் சரவணமுத்து ஆவார். இவரின் தாயார் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையை பிறப்பிடமாகக் கொண்டவர் . பாக்கியசோதியின் உடன்பிறந்தவர்கள் ஐவர் . அரச அதிகாரியாக சமூக நல பணியாளராக சிறந்து விளங்கிய பாக்கியசோதி சரவணமுத்து அவர்கள் தனது 57வது வயதில் 1950ஆம் ஆண்டு மே மாதம் 28ஆம் திகதி இறையடி சேர்ந்தார். 

ஆரம்பக் கல்வி

புனித தாமஸ் கல்லூரியும் அங்கு வழங்கப்பட்டு வந்த விக்டோரியா தங்கப்பதக்கமும்

கல்கிசை புனித தாமஸ் கல்லூரியில் தனது கல்வியை ஆரம்பித்த இவர் கல்வியில் மட்டுமல்லாது விளையாட்டுகளிலும் சிறந்து விளங்கியுள்ளார். பாடசாலை விளையாட்டு கழகத்தில் ஒரு சாதாரண உறுப்பினராக சேர்ந்து, கிரிக்கெட் மற்றும் உதைபந்தாட்டத்திலும்  தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். கல்லூரியில் அனைவராலும் அடையாளம் காணக்கூடிய ஒரு சிறந்த மாணவனாக தன்னை நிலைநாட்டிய இவருக்கு விக்டோரியா தங்க பதக்கம் வழங்கப்பட்டது அப்போதைய அதிசிறந்த சாதனையாகும்.

இளங்கலை பட்டம்

இங்கிலாந்திலுள்ள லண்டன் பல்கலைக்கழகம்

புனித தாமஸ் கல்லூரியில் தனது கல்வியை முடித்த சரவணமுத்து இங்கிலாந்து லண்டன் பல்கலைக்கழத்தில் சேர்ந்தார். அங்கு கலைப் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றார். 

ஆசிரியராக முதல் பணி

சரவணமுத்து முதன் முதலில் ஆசிரியராக பணியாற்றிய கொழும்பு ரோயல் கல்லூரி

லண்டன் பல்கலைக்கழத்தில் பட்டம் பெற்று இலங்கை வந்தடைந்த பாக்கியசோதி முதன் முதலில் கொழும்பு ரோயல் கல்லூரியில் சிறிது காலம் ஆசிரியராக பணிபுரிந்துள்ளார். 

கல்வியை இடைநிறுத்தினார் சரவணமுத்து..

இங்கிலாந்தில் உள்ள பிட்ஸ்வில்லியம் கல்லூரி

இந்தியாவில் பிரித்தானியர் ஆட்சி நிலவிய காலத்தில் இந்தியாவை மேலாண்மை செய்ய பிரித்தானிய காலனித்துவ அரசால் ஏற்படுத்தப்பட்ட இந்திய குடிமை பணியில் பணிபுரிய வேண்டும் என்ற எண்ணம் பாக்கியசோதிக்கு தோன்றியது.  1915 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள பிட்ஸ்வில்லியம் கல்லூரியில் சேர்ந்து படிக்கத்தொடங்கினார். ஆனால் குடும்ப சூழ்நிலையின் காரணமாக படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு இலங்கைக்கு திரும்பினார்.

திருமண வாழ்க்கை

படிப்பை இடைநிறுத்திவிட்டு இலங்கை திரும்பிய பாக்கியசோதிக்கு வீட்டில் திருமண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. புத்தளத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவரின் மகள் சிபில் தங்கம் என்பவரை திருமணம் புரிந்தார். இவர்களுக்கு பாஸ்கி, சந்திரி என இரண்டு ஆண்குழந்தைகளும், சகுந்தலா என்ற ஒரு பெண் குழந்தையும் பிறந்தனர். 

1919 இல் ஆரம்பமானது இவரின் இலங்கைக்கான பணி 

இலங்கை குடியுரிமை சேவைக்கான பயிற்சி பெற்றுக்கொண்டிருந்த சரவணமுத்து அதே நேரம் கொழும்பிலுள்ள அரச அலுவல்களுக்கான கச்சேரியிலும் பணியாற்றினார். அதனை தொடர்ந்து பல்வேறு அரச அலுவலகங்களில் பணிபுரிந்த இவருக்கு குடியுரிமை செயலாளராக பதவி உயர்வு கிடைத்தது. 1926 இல் முல்லைத்தீவிலும் பின்னர் அம்பாந்தோட்டையிலும் மாவட்டச் செயலாளராகப் பணியாற்றினார். இதனையடுத்து பதுளை, களுத்துறை, கேகாலை, குருணாகலை ஆகிய இடங்களில் நீதித்துறை அலுவலராகப் பணியாற்றினார். 

சரவணமுத்து அரச அதிகாரியாக பணியாற்றிய பதுளை, முல்லைத்தீவு, குருணாகலை, கொழும்பு மற்றும் களுத்துறை மாவட்டங்கள்

தான் இணைந்துகொண்ட ஒவ்வொரு பணியிலும் சிறந்து விளங்கிய இவர் விவசாயத்துறை அமைச்சில் பணியாற்றிய பின்னர் 1946 இல்  தேயிலை, இறப்பர் கட்டுப்பாட்டு ஆணையாளராக நியமிக்கப்பட்டார். அப்போதைய காலகட்டத்தில் நாட்டிலேயே மிக அதிக வேதனம் (சம்பளம்) பெற்ற அரச அதிகாரி சரவணமுத்து பாக்கியசோதி ஆவர். 

பிரித்தானியாவினால் குடியுரிமை சேவைக்காக சரவணைமுத்துவிற்கு பரிந்துரைக்கப்பட்ட சென் மைக்கேல் மற்றும் சென் ஜோர்ஜ் விருது

இவரது சேவையை பாராட்டும் வகையில் இவருக்கு பிரித்தானிய அரசின் சென் மைக்கேல் மற்றும் சென் ஜோர்ஜ் விருது, 1946ம்  ஆண்டு புத்தாண்டின் போது அறிவிக்கப்பட்டாலும் அந்த விருதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை என்ற ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால் அதற்கான உறுதியான சான்றுகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. 

அரசியலில் களமிறங்கிய சரவணமுத்து..

1946 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்ற இவர் அரசியலில் நுழைந்தார். 1947ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கையின் முதலாவது நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டுள்ளார். கொழும்பு தெற்கில் போட்டியிட்ட இவர் 640 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளார். தோல்வியை உதறிவிட்டு  1948ஆம் ஆண்டு மீண்டும் போட்டியிட்டார். மீண்டும் அவருக்கு தோல்வியே கிடைத்தது.  

அரசியலை விட்டு மீண்டும் சேவையை ஆரம்பித்த சரவணமுத்து

தமிழ் யூனியன் கழகத்தில் இணைந்த இவர் அதன் வளர்ச்சிக்காக பெரும் பங்காற்றியுள்ளார். இவரது சேவையின் நிமித்தம் 1948ஆம் ஆண்டு கழகத்தின் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. கழகத்தின் தலைவராக இருந்தபோது கழகத்திற்காக விளையாட்டு அரங்கம் ஒன்றை உருவாக்கிய இவரது சாதனை இன்றும் நினைவுகூறப்படுகின்றது.

தமிழ் யூனியன் கழகத்தின் பழைய மற்றும் புதிய இலச்சினை

இலங்கை கிரிக்கெட் கழகத்தின் தலைவராகவும் சில காலம் பணிபுரிந்தார். இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் முதல் தலைவர் என்ற பெருமைக்குரியவர் சரவணமுத்து பாக்கியசோதி ஆவர்.

பாக்கியசோதி சரவணமுத்து விளையாட்டு அரங்கம் 

பாக்கியசோதி சரவணமுத்து அரங்கம்
1982ஆம் ஆண்டு இலங்கையின் இங்கிலாந்திற்கு எதிரான முதல் ஒரு நாள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இங்குதான் நடைபெற்றுள்ளது.

கொழும்பு ஓவல் என அழைக்கப்பட்ட இவரால் உருவாக்கப்பட்ட கிரிக்கட், தடகள மைதானத்திற்கு சரவணமுத்து அவர்களின்  நினைவாக 1977 ஆம் ஆண்டு P. சரவணமுத்து அரங்கம் எனப் பெயர் மாற்றப்பட்டது. 

Related Articles