ஆட்டுப்பட்டித்தெரு ஒல்லாந்து சீர்திருத்த சபை அல்லது வுல்ஃப்வெண்டால் தேவாலயம் (Wolvendaal Church) இலங்கையின் கொழும்பு மாநகரில் உள்ளது. இது ஒல்லாந்தர் காலத்தில் அமைக்கப்பட்ட ஒரு தேவாலயமாகும். ஆரம்ப காலங்களில் அந்த இடங்களில் கூட்டமாக உலவிய நரிகளை ஓநாய்கள் என ஐரோப்பியர்கள் தவறாகப் புரிந்து கொண்டதன் காரணமாகவே அந்தப் பகுதி வுல்ஃப்வெண்டால் - Wolvendaal (Wolf’s Dale or Wolf's Valley) என அழைக்கப்பட்டிருக்கின்றது.
பதினெட்டாம் நூற்றாண்டில், அப்போதைய இலங்கை கவர்னர் குஸ்தாஃப் (Gustaaf Willem van Imhoff), டச் கிழக்கிந்திய கம்பெனியிடம் கொழும்பு கோட்டைக்குள் இருந்த தேவாலயத்தை இடித்து விட்டு புதிய ஆலயத்தை அதே இடத்தில் கட்ட அனுமதிக்கக் கோரினார். ஆனால் அனுமதி கிடைக்கவில்லை. 1743ல் கவர்னராகப் பொறுப்பேற்ற ஜூலியஸ் வேலண்டைன் இந்தத் தடையை நீக்கக் கோரி, அதில் வெற்றி பெற்றதுடன், புதிய தேவாலயத்தை நகரின் சுவர்களுக்கு அப்பால் இருந்த சதுப்பு நிலத்தில் எழுப்பத் தீர்மானித்தார். 1949ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்ட வுஃப்வெண்டால் தேவாலத்தைக் கட்டி முடிக்க எட்டு ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. 6 மார்ச் 1757 ல் பொதுமக்கள் வழிபாட்டுக்காக திறக்கப்பட்டுள்ளது.
Gustaaf Willem van Imhoff
படஉதவி: wikipedia.org
கடினமான இரும்பு உலோகக் கலவையால் ஆன பாறைக் கற்களையும் சுண்ணாம்பு பூச்சும் கொண்டு கிரேக்க க்ராஸ் (Greek cross) எனப்படும் சம அளவு கொண்ட கால்களால் இத்தேவாலயம் கட்டப்பட்டுள்ளது. நடுவே இருக்கும் உயர்ந்த கூரையின் குமிழ் மாடம் செங்கற்களாலும் கூரை ஓடுகளாலும் எழுப்பப்பட்டுள்ளது.
படஉதவிexploresrilanka.lk
படஉதவி :tuckdb.org
படஉதவி : exploresrilanka.lk
படஉதவி : thuppahi.wordpress.com
படஉதவி : twitter.com
படஉதவி : travellerspoint.com
படஉதவி : travellerspoint.com
ஒல்லாந்தர் காலத்து கல்வெட்டுகள்.
படஉதவி : travellerspoint.com
படஉதவி : wordpress.com
படஉதவி : wordpress.com
படஉதவி : wordpress.com
படஉதவி : exploresrilanka.lk
இலங்கையின் பழமைவாய்ந்த தேவாலயங்களில் ஒன்றாக இத்தேவாலயமும் இருப்பதோடு இன்றளவும் நடைமுறையில் இருந்து வரும் ஆலயம் என்பது இதன் சிறப்பாகும்.
முகப்பு படஉதவி : thatswhatshehad.com
வீடியோ உதவி : YouTube