கடலில் தரையிறங்கிய விமானம் “ஹுட்சன்”

ஜனவரி 15ஆம் தேதி 2009 ஆம் ஆண்டு ,O1549  என்ற அமெரிக்கவிமானம் நியூயார்க்கின் ‘’லஹார்டியா ‘’ விமானநிலையத்தில் இருந்து நார்த் கரோலினா செல்ல 150 பயணிகளுடனும் 5விமான ஊழியர்களுடனும் மதியம் 3 மணிக்கு தயாரானது. கிட்டத்தட்ட 20000 மணிநேரம் விமானம் ஓட்டிய அனுபவம் உள்ள ‘’சல்லி ‘’என்ற சல்லன்பெர்க்கர்தான் முதன்மை விமானி. அப்பொழுதுதான் தன் பயிற்சிகளை  முடித்து புதிய விமானியாக பொறுப்பேற்ற ‘’செப் ஸ்கில்ஸ் ‘’ உதவி விமானி. இருவருக்கும் அடுத்து நிகழப்போகும் விபரீதம் தெரியாமல் விமானத்தை ‘’டேக்ஆப்’’ செய்தனர்…

சரியாய் 3.27 மணிக்கு 3000 அடிக்கு மேல் கனடாவின் எல்லைப்பகுதியில் 250mph என்ற வேகத்தில் பறந்துகொண்டிருத்த விமானம் மாடார் என்ற சத்தத்துடன்  தீப்பிடித்து எரியத் தொடங்கியது! விமானி கவனித்தபோது இரண்டு இன்ஜினும் முழுவதும் செயல் இழந்துவிட்டது.. இவையெல்லாம் சில நிமிடங்களில் நிகழ, சூழ்நிலை புரிந்த சல்லி விமானத்தை முழுமையாய் தன் கட்டுபாட்டிற்கு கொண்டுவருகிறார். விமானத்தை திருப்பி அருகில் இருக்கும் விமான நிலையம் நோக்கி செலுத்தி உடனடியாக விமானக் கட்டுபாட்டு அறைக்கு அழைக்கிறார்.

சல்லி : ஹெல்லோ இது அக்டஸ் O1549 எங்க ரெண்டு இன்ஜினும் செயல் இழந்துருச்சு நாங்க பக்கத்துல இருக்க ‘’லாகுவர்டியா ‘’ விமான நிலையத்தை நோக்கி வந்துட்டு இருக்கோம். அங்க இரண்டு ரன்வே கிளியர் பண்ணி வைங்க…

நிலைய அதிகாரி பேட்ரிக்ஸ்சன் : அக்டஸ் O1549, இப்போ ‘’லாகுவர்டியா’’ பீக் டிராபிக் நேரம் கொஞ்சம் இருங்க நான்  உங்களுக்கு சொல்லுறேன் .. (திரும்பி வந்து அவர் சொன்னது தான் கதையின் மொத்த போக்கையும் மாத்த போது)

பேட்ரிக்ஸ்சன் : இப்போ இங்க உங்களுக்கு ரன்வே ஒதுக்க முடியாது, வேணும்னா நியூஜெர்சி இல்லைனா டேட்டர்போரோ விமான நிலையத்துல ரன்வே உடனே ஒதுக்க முடியும் சொல்லுங்க ரெண்டுல எங்க ரன்வே கிளியர் பண்ண? (அந்த ரெண்டு விமான நிலையத்துக்கு இன்னும் பல மையில் தூரம் போகணும்)

சல்லி :அதுவர என்னால என்னுடைய பயணிகள் உயிரை ஆபத்துள்ள வச்சுருக்க முடியாது நான் ஹட்சன் போறேன் ..

பேட்ரிக்ஸ்சன் : ஹெல்லோ எனக்கு புரியலை எந்த விமான நிலையம் சொன்னிக ?…… (அது விமான நிலையம் இல்லை அது கடல்!)

சல்லி, ஹட்சன் நோக்கி சென்றார் அதுவும் அவருக்கு எளிதாக இல்லை. அங்க ‘’வாஷிங்டன் பிரிட்ஜ்’’ நடுவில் நின்றது!. செயல் இழந்த இரண்டு இன்ஜின்களை வைத்து அதையும் சமாளித்து வந்தார் சல்லி.. பயணிகளுக்கு சூழ்நிலை விளக்கபட்டது. அனைவருக்கும் லைப் ஜாக்கெட் கொடுக்கப்பட்டது ஒரே குரல் மட்டும் மீண்டும் மீண்டும் கேட்டது, அது …  கேட்டியா பிடுச்சுக்கோங்க, நல்லா  மூச்ச இழுத்துவிடுங்க , 150mph  வேகத்தில் கடலில் மோதியது அக்டஸ் O1549. விமானத்தில் இருந்த அத்தனை அவரச வாயிலின் வழியாகவும் பயணிகள் இறக்கப்பட்டனர் .அதில் ஒரு மற்றுதிறனாளியும் இருந்தார்.

படம் – nydailynews.com

2 டிகிரி குளிரில் அத்தனை பயணிகளும் இறக்கிவிடப்பட்டனர். மூழ்கிக்கொண்டிருந்த விமானத்தில் ஒன்றுக்கு இரண்டு முறை பயணிகள் இல்லை என்பதை உறுதி செய்த சல்லி இறுதியாய் நீந்தி வெளியே வந்தார் அக்டஸ் O1549 முழுவதுமாய் மூழ்கிக்கொண்டிருந்தது. சரியாய் நான்கே நிமிடத்தில் மீட்புக் கப்பல் அந்த இடத்தை அடைந்தது (அது அமேரிக்கா அப்படித்தான் வேகமாய் இருப்பார்கள்) 73 நபர்களுக்கு சின்ன காயங்களுக்கும் சில பேருக்கு குளிர் காய்சலும் மட்டும் வந்தது. ஆனால் அத்தோடு முடியவில்லை பிரச்சனை. முடிய இது சினிமாவும் இல்லையே ஹீரோ மக்களை காபற்றியதும் விருது கொடுத்தது படத்தை முடிக்க.

ஹீரோவாக சல்லியை தூக்கி வைத்து கொண்டாட மக்கள் நினைத்தாலும் நிறுவனம் சல்லியை குற்றம் சாட்டியது. இது அவருடைய தவறு மட்டுமே, சொல்லிய இடத்தை விட்டு அவர் இஷ்டத்துக்கு விமானத்தை நீரில் இறக்கி விமானத்தை அழித்துவிட்டார் என்று.. (அட பாவிங்களா அப்பா 155 பேரோட உயிரு ) இரண்டு இன்ஜின்களும் இயங்கவில்லை என்றாலும் அந்த விமானத்தை அவர்கள் ஒதுக்கிய விமானநிலையம் வரை ஓட்டி வந்திருக்க முடியும் என்று கூறியது. அது மட்டும் இல்லாமல் இரண்டு விமானங்களை வைத்து நிகழ்த்தியும் காட்டியது, மக்களும் சல்லியை தவறாக புரிய ஆரம்பித்தனர், அவரின் கர்ரியர் கேள்விக்குறியானது.

சல்லி தன் வாதத்தை முன் வைத்தார், இப்போது நிகழ்த்திக் காட்டிய மாதிரி ஓட்டம் என்பது அந்த விமான ஓட்டிக்கு முன் கூட்டியே தெரிந்து நடந்தது. அவர் பலமுறை அதற்காக பயிற்சி எடுத்திருக்கலாம் 155பேர் உயிரை காப்பாற்ற சில நொடி யோசனை செய்ய மட்டுமே நேரம் இருக்கையில் இதை அவர்களால் செய்ய முடியாது என்றார். அதையும் நீதி மன்றம் செய்து பார்த்தது. ஒரு விமான ஓட்டி ஒரு கட்டிடத்தில் விமானத்தை இடித்து சேதம் செய்தார், மற்றொன்று விமான நிலையம் செல்லவே இல்லை. நீதிமன்றம் சல்லியை  குற்றம் அற்றவர் என்றது. அந்த ஊரின் ஹீரோ ஆனார் சல்லி .

இந்த 208 நிமிடமும் சினிமாவை மிஞ்சும் திகிலாக இருந்தது. விடுவார்களா ஹாலிவுட்காரர்கள்? 2016ஆம் ஆண்டு சல்லி என்ற பெயரில் ஆஸ்கார் நாயகன் “டோம் ஹோன்ஸ்‘’யை வைத்து படம் எடுத்து ‘’கல்லா கட்டினார்கள் “. 180 ஹவர்ஸ் படத்தில் பாறைகளின் நடுவில் வலது கை மாட்டிக்கொள்ளும், தப்பிக்க வழி இல்லாத நாயகன் தன்னிடம் இருக்கும் மொண்ணை கத்தியை வைத்து கையை வெட்டிகொள்வார் அவரின் நரம்புகள் அறுபடும் வலியை ரகுமான் இசையால் நமக்கு கடத்துவார். அதுபோல இங்கும் உதவி கிடைக்காத விமானியாகவும், ஆக்ஜிசன் பத்தாத பயணியாகவும் உணரும் தருணமும் கிடைக்க வைத்திருப்பார் இயக்குனர்.

‘’டேக்ஆப்’’ உம் லேன்டிங்கும் எப்போதும் அபாயமான ஒன்று என விமானியாக இருக்கும் நண்பர் அடிக்கடி சொல்வார். பலரின் உயிர்களை ஆகாயத்தில் வைத்து பாதுகாக்கும் அவர்களின் மீதான மரியாதை இந்த சம்பவம் படித்ததும் இன்னும் அதிகமானது. அப்போது என் நண்பன் ஒரு செய்தியை காட்டி என்னை கேலியாய் பார்த்து சிரித்தான் அது.. ‘’சண்டை போட்டு பிரிந்து சென்ற மனைவியை சேர்த்து வைக்க சொல்லி விமானத்தை கடத்திய விமானி…”

Related Articles