Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

தமிழ் நாடு அரசியலின் முக்கிய திருப்பு முனைகள்

சமீபகாலத்தில் தமிழக அரசியல் விறுவிறுப்பாகவும், வினோதமாகவும் மற்றும் மர்மமாகவும் உள்ளது. இது இன்றைய இளைஞர்களுக்கு புதிதாக இருக்கலாம், ஆனால் நாம் தமிழக அரசியலில் பின்னோக்கி சென்றால் இதே போன்ற மர்ம்மங்கள் முன்பும் இருந்ததை நாம் அறியலாம்.  அப்படி தமிழக அரசியலில் நடந்த முக்கிய நிகழ்வுகள் மற்றும் முக்கிய திருப்பங்கள் பற்றி அறிந்துக்கொள்வோம்.

முதலில் நாம் பார்ப்ப இருப்பது தமிழக அரசியல் ஆரம்பித்த இடம் என்று சொல்லப்படும் தந்தை பெரியார் மற்றும் ராஜகோபாலச்சாரி இவர்களது பிரிவுதான் தமிழக அரசியலின் அடித்தளம் என நம்பப்படுகிறது. இவர்கள் இருவரும் காங்கிரஸ் கட்சியுடன் பல வருடங்களாக இணைந்து இருந்தன மேலும் இருவரும் நல்ல நண்பர்களும் ஆவர். ஆனால் இவர்கள் பிரிவதற்கு முக்கிய காரணம் இருவரது கருத்துகளும்தான் ஏனென்றால் இருவரது கருத்துமே வெவ்வேறு ஆகா இருப்பதினால் சர்ச்சைகள் கிளம்பின. பிறகு இருவருமே தனி கட்சிகளை தொடங்கு கின்றனர். ராஜகோபால்ச்சாரி சுதந்திர என ஓர் கட்சியினை தொடங்குகிறார் மறுபக்கம் பெரியார் திராவிட கழகத்தை தொடங்குகிறார். 1937 ஆம் ஆண்டு ராஜகோபாலச்சாரி மெட்ராஸ் பிரெசிடென்சியிளை ஏற்கும்போது தான் இந்த பிரிவினை ஏற்பட்டதாக மக்களால் நம்பப்படுகிறது.

Periyar With Rajagopalachari (Pic: forwardpress)

அடுத்த திருப்புமுனை என்று கூறினால் அது பெரியாரை விட்டு அறிஞர் அண்ணா பிரிந்தது. அறிஞர் அண்ணாதுரை பெரியாரை தனது தலைவனாக ஏற்றுக்கொண்டார் ஆனால் சிலபல கருத்துவேறுபாடுகளால் 1948ஆம் ஆண்டு கட்சி கூட்டத்தில் இருந்து  அண்ணாதுரை வெளியேறுகிறார். பெரியாரை அண்ணாதுரை பிரிவதற்கான முக்கிய காரணம் பெரியார் தமது முக்கிய கொள்கையாக வைத்திருந்த தனித்தமிழ் நாடு என்பதுதான், இந்த கொள்கையை அறிஞர் அண்ணா ஏற்க மறுத்தார் இப்படி ஒன்று தமிழகத்துக்கு தேவைப்படாது என்பது அண்ணாவின் குரலாக இருந்தது.   இந்த சம்பவத்திற்கு பிறகுதான் அண்ணா அவர்கள் திராவிட முன்னேற்ற கட்சியை தொடங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Anna With Periyar (Pic: indiancine.ma)

திராவிட கட்சி தமிழகத்தில் முதன் முதலில் ஆட்சியமைத்தது அண்ணாவின் முன்னிலையில் தான் நடந்தது. ஆனால் நாம் இப்போது பார்க்க இருப்பது அண்ணாவின் மறைவு எப்படி தமிழக அரசியலை மாற்றியது என்பதைப்பற்றிதான். 1968ஆம் ஆண்டு புற்றுநோய் காரணமாக உயிரிழந்தனர். அண்ணாவின் சொற்பொழிவுக்கு எவராலும் இடுகட்டமுடியது அந்தளவுக்கு பேச்சு திறமை உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது இறுதி ஊர்வலத்தில்  கோடிகணக்கான மக்கள் கலந்துகொண்டது  என்பது இன்றுவரை கின்னஸ் சாதனையாக உள்ளது. மேலும் மெரினாவில் புதைக்கப்பட்ட முதல் அரசியல் தலைவர் அண்ணா என்பது குறிப்பிடத்தக்கது. அண்ணாவின் சிஷ்யனாக அறியப்பட்ட கலைஞர் கருணாநிதி அண்ணாவின் மரணத்திற்கு பிறகு கட்சி பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார். இது தமிழக அரசியலின் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.

1.5 Crore People Came To C. N. Annadurai’s Funeral (Pic: ezhilisaiarasu)

அடுத்த திருப்புமுனை எம்ஜிஆர் மற்றும் கலைஞர் கருணாநிதியின் பிரிவு. அண்ணா உயிரோடு இருக்கும்வரை இவர்களது நட்பு மிகவும் பேசப்பட்டது. உயிருக்கு உயிராக இருந்த இவர்களது நட்பு அண்ணா மறைவுக்குப் பின் கலைஞர் அவர்கள் பொறுப்பேற்று கட்சியை நடத்தி வந்தார். 1972 ஆம் ஆண்டு நடந்த கட்சி கூட்டத்தில் எம்ஜிஆர் அவர்கள் திராவிட கழக ஆட்சியில் பல்வேறு ஊழல் நடப்பதாக அனைவரது முன்பும் ஒரு குற்றசாட்டை வைக்கின்றார். இதன்காரணமாக இவர்களுக்குள் கருத்துவேறுபாடு ஏற்படுகிறது. இதற்கு பிறகு எம்ஜிஆர் அவர்கள் திராவிட கழகத்தை விட்டு வெளியே வந்து அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை தொடங்குகிறார். 1977 எம்ஜிஆர் அவர்கள் தேர்தலில் வென்று ஆட்சியில் அமர்கிறார். அதன்பிறகு அவர் உயிரோடு இருந்தவரை அவரை யாராலும் நெருங்கக்கூட முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Mgr With Kalaingar Karunanidhi (Pic: mytamillinks)

எம்ஜிஆர் அவர்களின் மறைவு தமிழக அரசியலின் மற்றொரு திருப்பு முனையாகும். எம்ஜிஆர் அவர்கள் 1984 ஆம் ஆண்டு முதல்வராக இருந்தபோதே அவருக்கு சிறுநீரகத்தில் பிரச்சனை ஏற்படுகிறது. ஆனாலும் இவர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்த நேரத்திலும் இவர் தேர்தலில் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 1987 ஆம் ஆண்டு எம்ஜிஆர் அவர்கள் மறைந்தார் அதற்கு பிறகு அவரது மனைவி ஜானகி முதல்வராக பதவி ஏற்றார். ஆனால் கட்சியை அடுத்து யார் நடத்துவது என்ற போட்டியில் கட்சிக்குள் குளறுபடி ஏற்படுகிறது. அதுவரை அஇஅதிமுக கொள்கை பரப்பு செயலாளராக இருந்த செல்வி ஜெயலலிதா கட்சியினை கைப்பற்ற விரும்பினார். அதற்காக அவர் பல்வேறு அவமானங்களை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பிறகு ஜெயலலிதா அவர்களின் அரசியல் தொடர்கிறது.

Mgr Funeral (Pic: twitter)

1990 ஆம் ஆண்டுவரை தலைவர் வாழ்க என்று இருந்த தமிழகத்தில் முதல் முறையாக தலைவி வாழ்க என்கிற கோஷங்கள் எழுந்தன. ஜெயலலிதா அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடனே பெண்ணின் பெருமை பற்றிய பல்வேறு சொற்பொழிவுகள் கொடுத்தார். தமிழத்தின் இரும்பு  பெண்மணி என்று அனைவராலும் அறியப்பட்டார். தனது பேச்சால் அப்போது பிரதமராக இருந்த இந்திராகாந்தி அவர்களை கவர்ந்தார். ஜெயலலிதாவுக்கு நாடாளுமன்றத்தில் 185வது இருக்கை அளிக்கப்பட்டது. இந்த இருக்கையில் இதற்கு முன்பு அறிஞர் அண்ணா அவர்கள் அமர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

jayalalitha With indira gandhi (Pic: telugupopular)

தமிழக அரசியலில் அடுத்த திருப்புமுனையாக இருந்தது செல்வி ஜெயலலிதா அவர்கள் கைதுசெய்யப்பட்டது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக திமுக ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் மீது வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் ஜெயலலிதா அவர்கள் கைது செய்யப்பட்டார். அதே நேரத்தில் அவரது வளர்ப்பு மகன் என அறியப்படும் சுதாகரனின் திருமணம் இன்றுவரை  உலக சாதனையாக உள்ளது. அதிகமான விருந்தினர்கள் மற்றும் அதிகளவில் மக்கள் பங்குபெற்று உணவு அருந்திய திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.

jayalalita-arrest (pic: huffingtonpost)

அடுத்த திருப்புமுனை எது என்றால் கலைஞர் அவர்களின் கைது. 2001 ஆம் ஆண்டு நள்ளிரவில் கலைஞர் அவர்கள் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டது அன்றைய ஆண்டின் மாபெரும் செய்தியாகவும் சர்ச்சையாகவும் இருந்தது. ஆனால் கலைஞர் அவர்கள் சிறைக்குள் செல்லாமல் சிறைக்கு வெளியே அமர்ந்திருந்த புகைப்படம் அப்போது மிகவும் வைரலானது. இந்த சமயத்தில் ஒரு அரசியல் தலைவரை வலுகட்டாயமாக கைது செய்ய வைத்தாக ஜெயலலிதா மீது மக்கள் அதிருப்தி அடைந்தனர்.

kalaingar-Arrest (Pic: Youtube)

செப்டம்பர் மாதம் 2014 ஆம் ஆண்டு மீண்டும் சொத்துகுவிப்பு வழக்கில் செல்வி ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டார். இந்த தருணத்தில் அடுத்த தேர்தலில் தமிழகத்தில் அவர் மீண்டும் ஆட்சிக்கு வரமுடியாது என அனைவராலும் கணிக்கப் பட்டது. ஆனால் அடுத்த மாதமே சிறையில் இருந்து விடுதலையானார் . ஆனால் 2016 ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் ஜெயலலிதா அவர்களின் வெற்றி அனைவரது கணிப்பையும் தவரக்கியது. ஆனால் உடல்நலக்குறைவு காரணத்தினால்  2016   டிசம்பர் 5 ஆம் தேதி இறந்துவிடுகிறார். இத்துடன் ஜெயலலிதாவின் சகாப்தம் நிறைவடைந்தது.

Jayalalithaa Funeral (Pic: mirchi9)

2017ஆம் ஆண்டு  ஜனவரி மாதம் நடந்த மாபெரும் ஜல்லிக்கட்டு போராட்டம் தமிழக அரசியலின் மிகப்பெரிய திருப்புமுனையாக இருந்தது. காரணம் இதனைவைத்து பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களது அரசியலை செய்தனர். ஆனால் இறுதியில் இதனை கலவரமாக மாற்றியது யார் என்பது இன்றுவரை கேள்விக்குறியாகவே உள்ளது. இதைத்தவிர தமிழக அரசியலில் நிகழ்கால திருப்புமுனை பல உள்ளன அனைத்தும் மர்ம்மங்கள் நிறைந்ததாக உள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றாகும்.

தமிழகத்தில்  நடந்த இத்துணை நிகழ்வுகளும் இரவில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த ஆக்கம் உங்களுக்கு பிடித்திருந்தால் அல்லது சொல்லப்பட்ட கருத்தில் எதாவது தவறு இருந்தால் கீழே உங்களது கருத்தை பதிவு செய்யவும்.

Feature Image Credit : techfactslive.com

Related Articles