நவீன விஞ்ஞானத்தையும் தோற்கடிக்கும் பிரமாண்டம் – தஞ்சை பெருவுடையார் ஆலயம்

தஞ்சை பெரிய கோயில் இற்றைக்கு 1000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு இன்றளவும் மிடுக்கான தோற்றத்தில் மிளிர்கின்றது. இதனை பற்றிய பாராட்டு பத்திரங்களாய் ஏலவே கட்டுரைகள், காணொளிகள் என வலைத்தளங்களை நிரப்ப புதிதாய் இந்தக்கட்டுரை ஏன்? 

என்னதான் இந்தக்கோயிலை பற்றி ஏராளமான விடயங்கள் வெளிவந்தாலும் இன்றளவும் அவிழ்க்கப்படாத மர்மமுடிச்சுக்கள் தொடர்கதைதான். வெறுமனே 6 ½  ஆண்டுகளில் (பத்து ஆண்டுகள் எனவும் சொல்லப்படுகிறது) இப்பேற்பட்ட அதிசயத்தை கட்டி முடித்ததில் தொடங்கி 80 டன் எடை கொண்ட கல்லை 216 உயரத்தில் வைத்தது வரை 1000 ஆண்டுகளுக்கு முன் இவையெல்லாம் எவ்வாறு சாத்தியம் என்ற கேள்வி இன்றளவும் அகலாமல் இல்லை. 

தமிழர் அடையாளம்

இந்த ஆலயம் தமிழரின் அடையாளம் என்பதை கல்வெட்டுகள் மாத்திரமன்றி ஆலய அமைப்பே எடுத்துக்கூறும். 

  • ஆலய வாயில் முதல் கருவறை வரையிலான தூரம் 247 அடி, தமிழ் அரிச்சுவடி 247 எழுத்துக்களையுடையது. 
  • கோபுர உயரம் 216 அடி, உயிர்மெய் எழுத்துக்கள் 216. 
  • நந்தியின் உயரம் 18 அடி, மெய் எழுத்துக்கள் 18.
  • மூலவர் (கருவறையில் உள்ள லிங்கம்) உயரம் 12அடி, உயிர் எழுத்துக்கள் 12.

1000 ஆண்டுகளாக எந்த ஒரு அனர்த்தத்திற்கும் ஈடுகொடுத்து இன்றளவும் இந்த ஆலயம் நிலைத்து நிற்பதற்கு காரணம் தலையாட்டி பொம்மைதான். தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையின் பெரியவடிவமே இந்த ஆலயத்தின் கோபுரம். 13 தளங்களை உடைய கோபுரம் உள்ளூர பொள்ளானது. ஆலயம் அமைந்துள்ள பகுதி சுக்கான் பாறைகளால் நிறைந்தது. ஆகவே அங்கு 350 அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டி மணலால் நிரப்பி அதன்மேல் மரக்கால் வடிவில் தளம் அமைத்து கனமான கல்பொருத்தி தரைமட்டத்துக்கு கொணர்ந்திருக்கின்றனர். தரைமட்டம் வரை ஒருசுவராய் எழுந்து பின்னர் இருசுவராக கட்டி கோபுரம் வரை எழுப்பியிருக்கின்றனர். இந்த தொழில்நுட்பத்தால் ஆலயகோபுரம் புவியதிர்வு மற்றும் புவிச்சுழற்சிக்கேற்ப தன்னை தகவமைத்துக்கொள்ளும் வல்லமை பொருந்தியது. தலையாட்டி பொம்மையை எந்தப்பக்கம் அசைத்தாலும் நிமிர்ந்து நிற்கும் தொழில்நுட்பம்.  இப்பொழுதே யாரும் வாயை பிளக்கவேண்டாம்.

ஆலய வாயில், கோபுரம், நந்தி மற்றும் மூலவரின் அமைப்பு

கருவூர் சித்தர்

இவ்வாறான அதீத தொழில்நுட்பங்கள் கருவூரார் என்றழைக்கப்படும் 11ம் கருவூரார் என்ற சித்தரின் வழிகாட்டலால் சாத்தியமானது. இவர் இராஜ ராஜனுக்கும் தந்திர,தாந்திரீக கலைகளை கற்றுக்கொடுத்து இருக்கிறார். கட்டுரையை தொடர முன் சித்தர்களை பற்றிய தெளிவு வேண்டும். இந்து மதம் எனப்படும் சனாதன தர்மத்தை பின்பற்றும் சித்தர்கள் தமிழர்களே. இவர்கள் சாதாரண மக்கள் பார்வைக்கு பித்தர்களாக தெரிந்தாலும் மகா புத்திமான்கள். வெறும் நீரை குறித்த அளவில் வழங்குவதன் மூலம் புற்றுநோயை தீர்க்கும் வல்லமையை அறிந்தவர்கள். தமது குறிப்புகளில் தமிழெழுத்துகளையே பயன்படுத்துவர். அவ்வெழுத்துக்களுக்கு சக்தியிருப்பதை அவர்கள் உணர்ந்திருக்கின்றனர்.

பிரகதீஸ்வர ஆலயத்தில் (தஞ்சை பெரிய கோவில் ) உள்ள கருவூர் தேவர் சிலை
பட உதவி : induism.org

வினோதமான ஆராய்ச்சி முடிவுகள் 

அண்மையில் இந்த முடிச்சுக்களை ஓரளவு அவிழ்க்கும் விதமாக ஓ.ஆர்.டீ.பி(Organization for Research in Delta Physics) என்ற ஆராய்ச்சி நிறுவனத்தின் முடிவுகள் வெளியாகி இருக்கின்றன. கபிலன் என்ற ஆராய்ச்சியாளர் தலைமையில் உலகின் பல ஆய்வு நிறுவனங்களுடன் இணைந்து இவர்கள் மேற்கொண்ட ஆய்வுகள் கற்பனைக்கும் அப்பாற்ப்பட்ட முடிவுகளை அளித்திருக்கின்றன. தஞ்சை ஆலயம் பற்றி மாத்திரமின்றி இராஜ ராஜ சோழன், தமிழரின் விஞ்ஞானம் எத்தகையது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

குறித்த ஆராய்ச்சியின் முடிவுகள் எமக்கு நம்பமறுக்கும் தன்மையை பெரிதும் வெளிப்படுத்தினாலும் தற்கால விஞ்ஞானம் மற்றும் சனாதன தர்மத்தின் கொள்கைகள் தற்கால விஞ்ஞானத்தில் செலுத்தும் செல்வாக்கு என்பன இம்முடிவுகளை ஏற்றுக்கொள்ளவைக்கின்றன. தொடர்ந்து வரும் முடிவுகள்  எடுகோள்களாகவே இருக்கின்றன. ஆய்வுக்குழுவை பொறுத்தவரை ஏன் இருக்கக்கூடாது என்ற பார்வையே.

30 அடி மனிதர்களின் பயன்பாடு

மரபணு மாற்றத்தின் மூலம் அளவில் பெரியவர்களாக 30அடி உயரம் கொண்டவர்களாக மாற்றி கட்டுமான பணியில் சோழன் பயன்படுத்தியதாக முடிவுகள் கூறுகின்றன

இந்த விடயம் ஏதோ ஹோலிவூட் படம் போல் இருந்தாலும் உண்மை என்று இடித்துரைக்கிறார் கபிலன். சாதாரண மனிதர்களை மரபணு மாற்றத்தின் மூலம் அளவில் பெரியவர்களாக 30அடி உயரம் கொண்டவர்களாக மாற்றி கட்டுமான பணியில் சோழன் பயன்படுத்தியதாக அவர் கூறுகிறார். மேற்கூறியதை போல் சித்தர்களின் மருத்துவம் கற்பனைக்கும் அப்பாற்பட்டது. கருவிகள் இல்லை என்பது எமது வாதம். ஆனால் மனம் என்ற கருவி கொண்டு அனைத்தும் சாத்தியமே என்கின்றனர். இது அன்று உழைத்த மக்களை இழிவுபடுத்துவது போன்றிருப்பதாக சமூக வலைத்தளங்களில் குரல்கள் எழுந்தாலும் மரபணு மாற்றம் என்ற மைல்கல்லை அன்றே தமிழர் எட்டியது மறுக்கமுடியாதது.

சப்தம்  மூலம் 80டன்  கல்லை உயர்த்தியது

ராபர்ட் வில்சன் மற்றும் ஆர்னோ பென்சியாஸ்

கோபுரம் மீது இருக்கும் கல்லானது, கோயிலை சுற்றி மண்ணால் மூடி சுமார் 50 கிலோமீட்டர் வரை சாய்தளம் அமைத்து யானைகள் கொண்டு உயர்த்தியதாக ஒரு முன்மொழிவு இருந்தது. ஆனால் அதற்கு வாய்ப்பில்லை என பலர் வாதிட்டு வந்தனர். தற்போது ஆய்வாளர்கள் இது ஒலி மூலம் எழுப்பப்பட்டிருக்கலாம் என்கின்றனர். குறிப்பட்ட மீடிறன் கொண்ட ஒலியை எழுப்புவதன் மூலம் கல்லை உயர்த்த முடியும் என்கின்றனர். திபெத்தை சேர்ந்த லாமாக்கள் இவ்வாறு கற்களை ஒலி கொண்டு நகர்த்தி விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தியிருக்கின்றனர். அவ்வாறு உயர்த்த முடியுமாயின் அவ்விடத்தில் எவ்வளவு ஒலி எழுப்பவேண்டும் கேட்போர் செவிப்பறை என்னாவது போன்ற வினாக்கள் எழும். இதற்கு ஆய்வாளர்களின் பதில் எளிமையானது. “அந்த ஒலி மனித காதுக்கு கேட்க வேண்டிய அவசியம் இல்லை”. காரணம் மனித காது 20Hz-20000Hz ற்கு இடைப்பட்ட மீடிறனை மாத்திரம் கேட்கக்கூடியது. அதற்கு மேலோ கீழோ எம்மால் உணர முடியாது. பெருவெடிப்பின் பின்னர் ஏற்பட்ட ஒலி இன்னமும் ஒலித்துக்கொண்டு இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 1964ல் ராபர்ட் வில்சன் மற்றும் ஆர்னோ பென்சியாஸ் ஆகியோர் அந்த ஒலியை மனித காது கேட்கும் அளவுக்கு மாற்றியமைத்தனர். இந்த ஒலி “ஓம்” என்று பதிவு செய்தனர். இதற்காக 1978ல் பௌதிகவியலுக்கான நோபல் பரிசை பெற்றனர். உண்மையில் அந்த ஒலி அ,உ,ம் என்ற 3ஒலிகளின் சேர்க்கை என்று வேதங்கள் கூறுகின்றன. இந்த ஒலிதான் கல்லை உயர்த்த பயன்பட்டிருக்கும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். 

 “ஓம்” – அ,உ,ம் என்ற 3 ஒலிகளின் சேர்க்கை என்று வேதங்கள் கூறுகின்றன

இராஜ ராஜனின் வேற்றுலக பயணம் 

சொன்ன பொய்யில் பெரிய பொய் என்று பலர் கூறலாம். ஆனால் வாய்ப்பிருக்கிறது என்கின்றனர் ஆய்வாளர்கள். ஆலயத்தில் கருந்துளை போன்ற அமைப்பு இருந்ததாகவும் அதன் மூலம் வேற்று உலகம் சென்று அவர்களின் தொழில்நுட்பங்களை கற்று உணர்ந்திருக்கலாம் என்று அவர்கள் கூறுகின்றனர். ஏற்கனவே வேற்றுக்கிரகவாசிகள் பற்றிய ஆராய்ச்சியில் உலகின் புராதன மொழிகள் 15 தெரிவு செய்யப்பட்டு விண்வெளிக்கு நாசா செய்தி அனுப்பியது. இதில் தமிழ் மொழியும் அடக்கம். இவ்வளவு பெரிய அண்டத்தில் எங்கோ இருக்கும் பூமியில் மாத்திரம் உயிர்கள் வாழ்வது என்பது வாதத்துக்குரியது. ஆனால் டாக்டர் ஸ்ட்ரேன்ஜ் திரைப்படம் போல் ஓரிடத்தில் புகுந்து வேறிடத்தில் வெளிவருவது சாத்தியமா? சாத்தியம் என்கிறது அணுத்துகள் விஞ்ஞானம் (Quantum Physics). ஆஸ்திரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இது பற்றிய ஆய்வில் ஈடுபட்டு வெற்றியும் கண்டிருக்கின்றன. அதாவது ஒரு அணுத்துகளை ஓரிடத்தில் மறையச்செய்து பிறிதோரிடத்தில் தோன்ற வைப்பதே அது. அணுத்துகள் அளவில் அவர்கள் வெற்றி கண்டுள்ளனர். இனிவரும் காலங்களில் பொருட்கள், மனிதர்கள் என்று ஆய்வு நீளும். ஆனால் இந்த தொழில்நுட்பம் பற்றி நாம் ஏற்கனவே வேறு விதமாக அறிந்திருக்கிறோம். நாயன்மார்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனார் பொன்னை ஆற்றிலே போட்டு குளத்திலே எடுத்த கதை நாம் அறிந்தததே. சற்றே சிந்தித்தால் இரண்டுக்கும் உள்ள தொடர்பு புரியும். இதனால் தான் இந்த முறை சாத்தியம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். உண்மையில் இதனை விட பல மர்மங்கள் புதைந்து கிடந்தாலும் அவை வெளியுலகுக்கு தெரியாதவாறு மறைக்கப்பட்டு இருக்கின்றன. 

  கோயிலை சுற்றி மண்ணால் மூடி சுமார் 50 கிலோமீட்டர் வரை சாய்தளம் அமைத்து யானைகள் கொண்டு  கோபுரக்கல்லை உயர்த்தியதாக கூறும் முன்மொழிவினை விளக்கும் வரைபடம்.

வேதங்கள், திருமுறைகள் என அனைத்திலும் பல விடயங்கள் மறைபொருளில் கூறப்பட்டு இருக்கின்றன. நாம் வேற்றுக்கிரகவாசிகள் சாத்தியமா என்கிறோம் அதேவேளை தேவலோகம், நரகம் என்று பேசுகிறோம். இவையிரண்டையும் இணைத்து சிந்திப்பதில்லை என்கின்றனர் அவர்கள். வெறுமனே எடுகோள் வாதமாக உள்ள இந்த கருத்துக்கள் எப்போது ஊர்ஜிதமாகும் என்பது உறுதியில்லை. தற்போதைய நவீன தொழில்நுட்பம் போதாது என்கின்றனர். கோயிலை பற்றிய பல்வேறு ஆய்வுகள் நடப்பதால் இது ஒரு புதிய கோணமாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமன்றி இவையெல்லாம் மேலை நாட்டு ஆய்வின் கருத்தாக இருப்பின் இவ்வளவு எதிர்ப்பு எழுந்திருக்காது என்றும் வருந்துகின்றனர். 

முகப்பு பட உதவி : புகைப்படக் கலைஞர். தினேஷ் புகழேந்தி

Related Articles