உலகம் முழுதும் புரட்சியை ஏற்படுத்திய இளவரசர் ஹரியின் சுயசரிதை!

பலரால் அதிகம் எதிர்பார்த்திருந்த இந்த புத்தகம், ஹாரியின் வாழ்வையும், அதன் சர்ச்சைக்குரிய நிகழ்வுகளையும், நினைவுகளையும் மையமாக கொண்டு எழுதப்பட்டுள்ளது.

article

தன் கவிதைகளுக்காக பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் ஒடுக்கப்படும் தமிழ் கவிஞர் அஹ்னாஃப் ஜசீம் !

அஹ்னாஃப் ஜசீம் இலங்கையின் வடமாகாணத்தில், மன்னார் மாவட்டத்தின் சிலாவத்துறை எனும் கிராமத்தை சேர்ந்த ஒரு தமிழ் முஸ்லிம் கவிஞர் ஆவர். 2017 ஆம் ஆண்டில், மாணவராக ஜசீம் தனது முதல் புத்தகமான நவரசம் கவிதைத் தொகுப்பை வெளியிட்டார். அவர் தனது படிப்பை முடித்து புத்தளத்தில் உள்ள ஒரு பள்ளியில் தமிழ் இலக்கியம் கற்பிக்கத் தொடங்கினார். ஏறக்குறைய மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, மே 16, 2020 அன்று, அவரது கவிதைகள் மதத் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் (TID) மன்னாரில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார். அப்போது அவர்கள் அவரது தொலைபேசி, மடிக்கணினி மற்றும் அவரது புத்தக அலுமாரிகளை சோதனை செய்த பின், சுமார் ஐம்பது புத்தகங்களையும், நவரசத்தின் பல நூறு பிரதிகளையும் பறிமுதல் செய்தனர். மூன்று நாள் விசாரணைக்குத் தயாராகுமாறு மட்டுமே அவரிடம் கூறியிருந்த நிலையிலேயே.கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.

article

நம் நாட்டு குத்துசண்டைக்காரி – இந்துகா தேவி!

யாழ்ப்பாணம் மாங்குளம் எனும் கிராமத்தை சேர்ந்த 20 வயதான இந்துகாதேவி கணேஷ் ஒரு குத்துச்சண்டை வீராங்கனையாவர். அண்மையில் பாகிஸ்தானில் நடைபெற்ற சவெட் எனும் (பிரெஞ்சு தற்காப்புகலை வடிவம்) குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றதன் மூலம் இலங்கையில் குத்துச்சண்டை போட்டியொன்றில் தங்கபதக்கம் வென்ற முதல் தமிழ் பெண் எனும் பெருமையை அடைந்துள்ளார்.

video

கிரிக்கெட் மட்டை மற்றும் டைப்ரைட்டர் கொண்டு ஓவியம் வரையும் சாகச ஓவியர் உமர்

கிரிக்கெட் மட்டை, டைப்ரைட்டர் போன்ற கருவிகளை பயன்படுத்தி பிரபல கிரிக்கெட் வீரர்களான Kumar Sangakkara, Lasith Malinga மற்றும் Virat kohli யின் புகைப்படங்களை வரையும் சாகச ஓவியர் மொஹமட் உமர் பற்றிய பதிவே இது!!

video

இலங்கைக்கு முதல் ஒலிம்பிக் பதக்கம் வென்ற Duncan White

ஒலிம்பிக் விளையாட்டின் வரலாற்றை நாம் பார்த்தோமேயானால் ஒலிம்பிக் விளையாட்டானது 2300 ஆண்டுகள் பாரம்பரியமிக்க ஒன்றாகும். இதன் தாயகம் புராதன கிரேக்கத்தின் ஒலிம்பியா என்ற பிரதேசத்திலேயே இவ்விளையாட்டுக்கள் ஆரம்பத்தில் விளையாடப்பட்டன. இவ்விளையாட்டின் ஆரம்பத்தில் பல்வேறு நோக்கங்கள் காணப்பட்டாலும், கலை, விளையாட்டின் மூலமாக கடவுளை வழிபடுவதற்கான ஒரு வாய்ப்பாகவே இதை பண்டைய கிரேக்கர்கள் கொண்டாடினர். என்றாலும் பிற்பட்ட காலங்களில் அப்பிரதேசத்தில் யுத்தங்கள் அதிகமாக இடம்பெற்றதால் 390ம் ஆண்டிற்கு பிறகு பண்டைய ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நிறுத்தப்பட்டன.

article

End of Articles

No More Articles to Load