மௌனமாகிப்போன வலையோசை விடைபெற்ற இசைக்குயில் – லதா மங்கேஷ்கர் 1929-2022

இசைக்குயில் லதா மங்கேஷ்கர்!   

இசைப்பிரியர்களின் மனதிலும், இந்திய  இசைத்துறையிலும் என்றென்றும் நீங்கா இடம்பிடித்திருக்கும் இசையரசி அவர்!  1980களில் அவர் பாடிய வலையோசை பாடலில் ‘ராகங்கள் தாளங்களோடு ராஜா உன் பேர் சொல்லும் பாரு’ என்று வாலி இசைஞானியை பாராட்டி ஒரு வரி எழுதியிருப்பார். அந்த வரி இசைஞானிக்கு மட்டுமல்லாது  இந்த பாடலை பாடிய SPB, லதா மங்கேஷ்கர்  மட்டுமல்ல ஏன் கவிஞர் வாலிக்கு கூட பொருந்திப்போய்விட்டது. இன்று அவர்கள் எம்மோடு இல்லாவிட்டாலும் இந்த ராகங்களும் தாளங்களும் உள்ள காலம் வரை அவர்கள் பெயரும் குரலும் வரிகளும் இசையாய் இந்த உலகில் ஒலித்துகொண்டேயிருக்கும்……… அவர்கள் பெயரை சொல்லிக்கொண்டேயிருக்கும்…

லதா மங்கேஷ்கர் அவர்களின் நினைவாக Roar தமிழ் வழங்கும் ஒரு குறுகிய கானொளி உங்களுக்காக..

Related Articles