Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website. The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

இது சுந்தர் பிச்சையின் சாம்ராஜ்ஜியம்

எப்போதும் கடினமான பாதைகளையே தேர்ந்தெடுங்கள். அந்த பாதையில் தான் போட்டிகள் அதிகம் இருக்காது, அதன் இறுதியில் கிடைக்கும் வெற்றி உங்களை உச்சத்தில் நிறுத்தும்’

-சுந்தர் பிச்சை-

2015ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10ம் திகதி கூகுள் நிறுவனத்தின் CEO வாக அறிமுகம் செய்யப்பட்டார் சுந்தர் பிச்சை. அதற்கு முன்னர் வரை அதிகம் கேட்டிராத பெயர்! பிரபலமில்லாத நபர்! சுந்தர் பிச்சை? யார் இவர்? தொழிநுட்ப உலகை கட்டியாழும் கூகுள் நிறுவனத்தின் CEO ஒரு இந்தியரா? எனும் பல்வேறு விதமான  கேள்விகளை உலகம் பரபரப்போடு கேட்டு கொண்டிருந்தது. கூகுள் தளங்கள் அதிர்ந்து போகுமளவிற்கு சுந்தர் பிச்சை யார் என்பதை குறித்து கூகுளிடமே தேடுதல் வேட்டை நடத்தினார்கள் தொழிநுட்ப அபிமானிகள். சுந்தர் பிச்சை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை இக்கட்டுரையின் மூலம் பார்க்கலாம்.

திரு. சுந்தர் பிச்சை – Google மற்றும் Alphabet நிறுவனங்களின் CEO

உலக மக்கள் ஒரு நாளைக்கு இரு தடவையேனும் கூகுள் நிறுவனத்தின் தயாரிப்புகளை பயன்படுத்த வேண்டும். அத்துடன் அனைவராலும் விரும்பக் கூடிய ஒரு தொழில்நுட்பத்தினை உருவாக்க வேண்டும் அந்த தொழில்நுட்பம் அனைவரது வாழ்க்கையிலும் ஒரு தாக்கத்தினை ஏற்படுத்த  வேண்டும் என்பதே என்பது கூகுள் நிறுவனத்தின் CEO லாரி பேஜ் (Larry Page)  இன் நோக்கமாகும். G என்ற எழுத்தை பார்க்கும் போது கூகுள் எனும் நினைவு மக்களின் மனதிற்கு வரவேண்டும், அது மட்டுமின்றி ஆங்கில அகராதியில் எந்த எழுத்தை நினைத்தாலும் அதற்கு கூகுள் நிறுவனத்தின் தயாரிப்புகளே மக்களின் நினைவிற்கு வரவேண்டும் எனும் எண்ணத்துடனேயே Alphabet எனும் தயாரிப்பினை லாரி பேஜ் (Larry Page)  மற்றும் சேர்கே ப்ரினும் (Sergey Brin) இனைந்து உருவாக்கினார்கள். இது கூகுள் உட்பட, கூகுளுக்குச் சொந்தமாகவிருந்த நிறுவனங்களை நேரடியாகச் சொந்தமாக்கிக் கொண்ட ஒரு பொறுப்பு நிறுவனமும் கூட்டுக்குழுமமும் ஆகும். Alphabet நிறுவனத்தின் மீது கூடுதல் கவனம் செலுத்தி அதனை வளர்க்க வேண்டும் எனும் ஆவல் கொண்ட லாரி பேஜ்  மற்றும் சேர்கே ப்ரின்  தாங்கள் உருவாக்கிய தங்கள் செல்லப்பிள்ளளையாகிய கூகுள் நிறுவனத்தின் பொறுப்பினை அதீத திறமையும், தமது நம்பிக்கைக்கும் பாத்திரமான ஒருவரை தேடினார்கள். நீண்ட பல ஆலோசனைககுக்கு பின்னர், கூகுள் நிறுவனத்தில் அப்பொழுது கடமையாற்றி வந்த இந்தியரான சுந்தர் பிச்சையை அவர்கள் தெரிவு செய்தார்கள்.

Google  மற்றும் Alphabet  நிறுவனங்களின் நிறுவுனர்களான சேர்கே ப்ரின் (Sergey Brin) மற்றும்  லாரி பேஜ் (Larry Page)  (L-R) (இடமிருந்து வலம்)

பாரத நாட்டின் தென் மாவட்டமான மதுரையில் 1972ம் ஆண்டு ஜூலை மாதம் 12ம்  திகதி ரகுநாத பிச்சை மற்றும் லட்சுமி தம்பதிகளுக்கு மூத்த மகனாக பிறந்தார். இவருக்கு ஒரு இளைய சகோதரரும் உண்டு. இவரது பெற்றோர் இவருக்கிட்ட பெயர் பிச்சை சுந்தரராஜன். மாதம்  ரூ 3000 சம்பளத்திற்கு தந்தை பிரித்தானிய குழும நிறுவனமான General Electric எனும் இலத்திரனியல் நிறுவனத்தில் இலத்திரனியல் பொறியிலாளராக தொழில் புரிந்து வந்தார். சுந்தர் பிறக்கும் முன்னர் வரை அவரது தாய் சுருக்கெழுத்தாளர்  (Stenographer) ஆக பணி புரிந்து வந்தார். சென்னை அசோக் நகரிலுள்ள இரு அறைகளை கொண்ட ஒரு சிறிய மாடிவீட்டு தொகுதியிலேயே அவர் வாழ்ந்து வந்தார். தமது உயர்நிலை பள்ளி படிப்பை அசோக் நகரிலுள்ள ஜவஹர் வித்தியாலயா சிபிஎஸ்சி மற்றும் ஐ.ஐ.டி வளாகத்திலுள்ள வனவானி மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியிலும் கற்றார். கிரிகெட் மற்றும் கால்பந்தாட்டம் மீது அதீத ஆர்வம்  கொண்டிருந்த இவர் பள்ளி காலத்தில் அவரது கிரிகெட் அணிக்கு தலைவராக இருந்தார்.

பெற்றோருடன் சுந்தர் பிச்சை – புகைப்பட உதவி – deccanchronicle.com

நடுத்தர குடும்ப பின்னனியில் வளர்ந்த சுந்தருக்கு ஓய்வு நேரங்களில் பார்ப்பதற்கான ஒரு தொலைக்காட்சி கூட வீட்டில் இருக்கவில்லை. மேலும்; மிகுந்த கூச்சசுபாவமுடையவராக காணப்பட்ட இவர் புத்தகம் படிப்பதிலேயே அதிக நேரம் செலவிட்டார். அதனால் இவருக்கு அதிக நண்பர்கள் இருக்கவில்லை. தந்தை இலத்திரனியல் பொறியியலாளராக தொழில் புரிந்து வந்ததால் அவரிடம் இலத்திரனியல் குறித்து அடிக்கடி கலந்துரையாடுவார் சுந்தர், அதனால் தொழில்நுட்பம் தொடர்பான ஆர்வம் அவரை தொற்றிக்கொண்டது. பள்ளி படிப்பை முடித்ததும் ஐ.ஐ.டி காரக்பூரில் உலோகப் பொறியியல் பிரிவில் படித்து 1993ம் ஆண்டு  வெள்ளிபதக்கத்துடன் பட்டம் பெற்றார். கூகுள் நிறுவனத்தின் நிறுவுனர்களாக  லாரி பேஜ் மற்றும் சேர்கே ப்ரின் ஆகிய இருவரும் கல்வி கற்ற அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளறிவியல் பிரிவில் முதுகலை படிக்க புலமைபரிசிலொன்றை பெற்றுகொண்டார். அதன் பின்னர் Wharton School of the University of Pennsylvania எனும் கல்லாரியில் MBA மேலாண்மைப் பட்டமும் பெற்றார். தனது  PhD ஆய்வினை செய்வதற்கான வாய்ப்பு கிடைத்த போதும் போதிய நிதி வசதி இல்லாத காரணத்தினால்  அதனை அவரால்  தொடர முடியாமல் போனது. 

அக்கால கட்டத்தில் நிரந்தரமான ஒரு வேலையே அவருக்கு தேவைப்பட்டது.   McKinsey & Company எனும் நிறுவனத்தில் தயாரிப்பு மேலாளர் மற்றும் நிர்வாக ஆலோசகலராக அவருக்கு தமது தொழிலை ஆரம்பித்தார உலோக பொறியியல் துறையில் கல்வி கற்று தொழில் புரிந்து வந்தாலும் சுந்தர் பிச்சையின் உள்ளமோ தொழிநுட்ப துறையிலேயே நாட்டம் கொண்டிருந்தது அக்காலத்திலேயே அமெரிக்காவின் சிலிக்கன் வெலி பகுதியில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆக்கிரமிக்க ஆரம்பித்திருந்தன. சிலிக்கான் வெலி பகுதியில் தொழில் புரிந்து வந்த தனது உறவினர் ஒருவர் மூலம் அத்துறை குறித்து மேலதிகமாக கேட்டறிந்து கொண்ட நிலையில் தொழில்நுட்பம் தொடர்பான பல ஊடகங்கள் மூலமும் கற்றும் தமது தொழிநுட்ப அறிவை வளர்த்துகொண்டார். எப்படியாவது சிலிக்கான வெலி பகுதியல் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை செய்ய வேண்டும் என்பதே சுந்தர் பிச்சையின் ஆசையாக இருந்தது. அதன் விளைவாகவே 2004ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 01ம் திகதி கூகுள் நிறுவனத்தில் இணைந்து கொண்டார். இதில் விசேட அம்சம் என்னவெனில்  அன்றுதான் கூகுள் தனது மின்னஞ்சல் தளமான Gmail இனை அறிமுகம் செய்திருந்தது. 

2017ம் ஆண்டு வெளியான  சஞ்சிகையின் அட்டைப்படத்திலிருந்து – புகைப்படஉதவி: www.forbes.com/

அதீத வளர்ச்சியை நோக்கி கூகுள் பயணம் செய்து கொண்டிருந்த காலமிது, கூகுள் நிறுவனத்தின் அடுத்தகட்ட முன்னேற்றத்திற்கான புதிய தொழில்நுட்பங்களை புகுத்துவதற்கான முயற்சியில் கூகுள் நிறுவனத்தின் ஸ்தாபகர்கள் முயற்சித்து கொண்டிருந்தனர். கூகுள் தேடல் தொழில்நுட்பம் பயன்பாட்டிற்கு வந்த காலத்தில் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் Internet Explorer மற்றும் Mozilla Firefox ஆகியன தேடல் உலவிகளாக பயன்பாட்டில் இருந்தன. இந்த தேடல் தளங்களில் Google toolbar இனை உருவாக்கும் பொறுப்பு சுந்தர் பிச்சையிடம் வழங்கப்பட்டது. Google toolbar இன் அதீத வளர்ச்சி காரணமாக மைக்ரோ சொப்ட் நிறுவனம் அதன் இணைய தேடல் தளமான Bing இனை Internet Explorer இல் நிரந்தரமாக இணைத்தது. இது சுந்தர் பிச்சையினை சிந்திக்க செய்தது. கூகுளுக்கென்ற தனி Browser ஒன்று தேவை என்பதினை அவர் ஆரம்பம் முதல் வலியுறுத்தி வந்தாலும் ஆரம்ப காலத்தில் அவரது ஆலோசனை ஏற்றுகொள்ளப்படவில்லை எனினும் சுந்தர் பிச்சையின் தொடர் முயற்சியின் காரணமாக லாரி பேஜ் மற்றும் சேர்கே ப்ரின்  இருவரும் அதற்கு அனுமதியளித்தார்கள். 

சுந்தர் பிச்சையின் கடின உழைப்பின் பயனாக Google Chrome 2008ம் ஆண்டு  செப்டெம்பர் 2ம் திகதி அறிமுகம் செய்யப்பட்டது. Google Chrome இன் வேகமான செயற்பாடு மற்றும் இலகுவான பயன்பாட்டு முறை என்பன வாடிக்கையாளர்களுக்கு பிடித்து போக அசுர வளர்ச்சி கண்டது Google Chrome.  இதன்  பின்னரே Google தயாரிப்புகளின் பிரதி தலைவராக சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டார். இது முதல் அவர் வெற்றியின் படிக்கட்டுகளில் உற்சாகமாய் ஏற ஆரம்பித்தார் சுந்தர் பிச்சை. ஸ்மார்ட் தொலைபேசிகளுக்கான iOS, அன்ட்ரோய்ட் தொழில்நுட்பத்தை உலகம் முழுவதும் குறைந்த விலையிலான தொலைபேசிகளின் மூலம் கொண்டு சென்றது, Google தயாரிப்புகளான, Google search, Google Maps, Google Plus, Google Commerce, ஆகிய தயாரிப்புகளின் தலைவராக நியமிக்கப்பட்டமை, Google இன் முக்கிய பொறுப்புக்களை எடுக்கும் கூட்டங்களின் அங்கத்தவராகியமை என பலவற்றை அடுக்கிகொண்டே போகலாம். 

பள்ளியில் படிக்கும் காலத்தில் தாம் அருகில் இருக்கும் பெண்பிள்ளைகளை கூட திரும்பி பார்க்காத கூச்ச சுபாவமுடையவர் சுந்தர் பிச்சை. ஆனால் ஐ.ஐ.டி காரக்பூர் கல்லூரியில்  படித்த தனது சக தோழியான அஞ்சலியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் சுந்தர் பிச்சை. தற்போது இத்தம்பதியினருக்கு காவ்யா மற்றும் கிரன் எனும் இருபிள்ளைகள் இருக்கின்றார்கள்.

சுந்தர் பிச்சை மற்றும் அவரது மனைவி அஞ்சலி பிச்சை -புகைப்பட விபரம் Google.com

சுந்தர் பிச்சையிடமிருந்த தொலைநோக்கு பார்வை மற்றும் விடா முயற்சி என்பனவே இன்று அவரை கூகுள் நிறுவனத்திற்கு மட்டுமல்ல, அதன் தலைமை நிறுவனமான Alphabet  இற்கும் CEO வாக உயர்த்தி வைத்துள்ளது. அது மட்டுமின்றி டுவிட்டர் மற்றும் மைக்ரோசொஃப்ட் போன்ற பிரபல தொழில்நுட்ப நிறுவனங்களிடமிருந்து அவருக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் உயர்பதவிகளுக்கான வாய்ப்புகள் கிட்டினாலும் அதனை நிராகரித்தர் சுந்தர், இதன் மூலம் Google நிறுவுனர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமானார். இந்த நம்பிக்கையே இன்று  உலகிலேயே அதிக சம்பளம் பெறும் நபராகவும் அனைவராலும் மதிக்கப்படும், விரும்பப்படும் ஒரு CEO வாகவும் அவரை உயர்த்திவைத்துள்ளது.

Related Articles