பழமை மாறாத கொல்கத்தா

இந்தியாவில் ஆங்கிலேயர்கள் கம்பனி ஆட்சி தொடங்கிய 1857ல் முதல் முறையாக இந்தியாவிற்குள் நுழைந்தது இன்றைய மேற்கு வங்கமாக இருக்கும் பகுதி வாயிலாகத்தான். அந்த பழங்காலத்தில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கல்கத்தா நகரம்(இன்றைய கோல்கட்டா) இன்றும் அதே பழமையான தோற்றத்தோடே காட்சியளிக்கின்றது. அதனை அரசும் கண்டுகொள்ளாமல் இருக்கிறது என்று எடுத்துக்கொள்ள முடியாது. ஏனெனில், அங்கு வாழும் மனிதர்களில் எத்தனை பேர் கோல்கத்தாவில் வசதி குறைவு என்று பிரச்சனை கிளப்பியிருக்கிறார்கள். வசதி வாய்ப்பு என்பது வேறு பழமையான தோற்றம என்பது வேறு.

சரி இப்ப என்ன தான் சொல்ல வர்றீங்க? ன்னு கேக்குறிங்களா?

இந்தியாவில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் கிரிக்கெட் ஸ்டேடியங்களில் கோல்கத்தாவில் 1864 ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஈடென் கார்டன் கிரிக்கெட் ஸ்டேடியம் தான் மிகத் தொன்மையானது. இதற்கு முன்பே இந்தியாவில் கிரிக்கெட் விளையாட அனைத்து வசதிகளும் கொண்ட ஒரு கிரிக்கெட் ஸ்டேடியத்தை ஜிம்கானா என்ற பெயரில் மும்பையில் கட்டியிருந்தனர். ஆனால் என்னவோ 1933 ஆம் ஆண்டு ஒரே ஒரு ஆட்டம் தான் விளையாடினர். இன்று, வேறு காரணத்திற்காக அந்த ஜிம்கானா விளையாட்டுச் சங்கம் சர்வதேச கவனத்தில் இருக்கும் அநேக விளையாட்டுகளையும் ஒரே இடத்தில் விளையாட ஏதுவாக அதனை மாற்றி அமைத்துள்ளனர்.

அதற்காக கொல்கத்தாவை குறைத்து மதிப்பிட முடியாது. காலபந்து விளையாட்டில் நமது இந்திய அணி 161 ஆவது இடத்தில் இருந்தாலும், உலகிலேயே இரண்டாவது பெரிய கால்பந்து ஸ்டேடியம் இந்தியாவில் அதாவது இந்த கொல்கத்தாவில் தான் இருக்கின்றது.

கிரிக்கெட்டினூடே வளர்ந்த கொல்ஃப் விளையாட்டிற்கான இரண்டாவது தொன்மையான கொல்ஃப் சங்கம் கொல்கத்தாவில் தான் உள்ளது. அதன் பெயர் கூட ‘ராயல் கொல்கத்தா கொல்ஃப் சங்கம்’.

நம்ம மரம் நடுவோம் மழை பெருவோம் என்று வாசகம் பேசிகிட்டு, சின்னஞ்சிறு செடிகளை நட்டு, நட்டு அதனை  நான்கு நாட்களுக்கு பிறகு கண்டுகொள்ளாமலும் போய்விடுகிறோம். நகரமயமாக்கலையும், இடப்பற்றாக்குறையையும் காரணம் காட்டி நாம் பல நேரங்களில் மரங்களை வெட்டுவதில் கூச்சமின்றி செயல்படுகிறோம் என்று தான் சொல்லவேண்டும். ஆனால் உலகிலேயே மிகப்பெரிய மரமான ‘தி கிரேட்டஸ்ட் பான்யன் ட்ரீ’ கொல்கத்தாவில் உள்ள தாவரவியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வருகின்றது.

ஆங்கிலேயர் இந்தியாவை ஆட்சி செய்த காலத்தில் நடக்கும் கதையை கதைக்களமாக கொண்ட திரைப்படங்களில் நம் கவனத்தை ஈர்க்கும், நகரங்களின்  அடையாளமாக தோன்றும் ட்ராம் வண்டி இன்று பல நகரங்களில் வழக்கொழிந்து போனாலும், கொல்கத்தாவில் இன்றும் இயங்கிக்கொண்டிருக்கின்றது ட்ராம் வண்டி. மேற்கு வங்கம் போக்குவரத்து கழகத்தில் கொல்கத்தா ட்ராம்வே ஒரு அங்கம்.

இதெல்லாம் கொல்கத்தாவில் மட்டுமே பாதுகாக்கப்படுவதைக் கண்டு அதிசயித்து தான் இந்த கட்டுரையை வரைந்து கொண்டிருக்கிறேன். ஆனால் மேலே உள்ள வரியை எழுதுகையில் தான் இந்தியா, கொல்கத்தாவை கலாச்சார தலைநகரமாக முன்னிருத்துவது நினைவுக்கு வந்தது. கலாச்சாரத்தை பேனிக் காக்கும் பொருட்டு அந்த நகரத்தில் இருக்கும் பல நடைமுறைகளில் பழங்காலத்து வழக்கத்தை மாற்றாமல் இருந்தனர். இதற்கு ஒரு சிறிய உதாரணம், கொல்கத்தா நகரத்திற்கு வரும் பயணிகள் இரயில் அனைத்துமே இதன் துணை நகரமான ஹௌராவோடு நின்றுவிடும். 2006 ஆம் ஆண்டு முதல் தான் சரக்கு இரயில்கள் மட்டும்  வந்து சென்று கொண்டிருந்த கொல்கத்தா இரயில் நிலையம் வரை வருகின்றது.

ஹூக்லி நதிக்கு குறுக்கே கண்டிலீவர் பாலமாக ஹௌரா பாலத்தை கட்டியுள்ளனர். இவ்வாறு ஒரு கண்டிலீவர் பாலத்தை இங்கு கட்டுவதின் மூலம் கிடைக்கும் பலனை தொலை நோக்கு பார்வையோடு கணக்கிட்டு திட்ட வடிவத்தை கொடுத்தவர் ஜார்ஜ் டர்ன்புல் என்கின்ற இரு இரயில்வே பொறியாளர் தான். இதன் விளைவாக. இந்தியாவில் இருக்கும் ஒரே கண்டிலீவர் பாலம் ஹௌரா பாலம் ஒன்று தான் என்ற பெருமையும் கொல்கத்தாவிற்கு கிடைக்கப் பெற்றது.

இந்தியாவின் அரண்மனைகளின் நகரமாக அழைக்கப்படுவதும் கொல்கத்தா தான். அதற்கான காரணம் இன்றும் அசையாது உயர்ந்து நிற்கும் பழங்கால கட்டிடக்கலை நிபுணர்களின் கை வண்ணத்தில் தோன்றிய கட்டிடங்களும் தான். சில குறு நிலங்களை அரசிகள்(அதாவது பெண்கள் ஆட்சி செய்வது) ஆட்சி புரிந்த வரலாறும் இந்தியாவில் உண்டு. அதில் அதிக அரசிகள் ஆண்ட பூமியும் மேற்கு வங்கமும் அதனை சுற்றியுள்ள பகுதிகளும் தான்.

அது மட்டுமா இந்தியாவின் தொன்மையான கப்பல் துறைமுகமும் கொல்கத்தாவில் தான் உள்ளது. அதெல்லாம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட துறைமுகங்கள் தானே என்று அலட்சியப்படுத்த வேண்டாம். ஏனெனில், இந்தியாவில் ஏற்பட்ட பல நவ நாகரிக வளர்ச்சி 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் முதலே ஏற்பட்டதற்கு ஆங்கிலேயர்களின் வருகையும் ஒரு காரணம் தான். நம்மை அடக்கி ஒடுக்க நினைத்த ஆங்கிலேயர்களால் அவர்களையே அறியாமல் பல நன்மைகள் செய்துவிட்டு தான் சென்றிருக்கின்றனர். குறிப்பாக வசதி வாய்ப்புகளில்.

இந்தியாவின் தொன்மையான வனவியல் பூங்கா கொல்கத்தாவில் தான் உள்ளது. ஆனால் அந்த கொல்கத்த நகரவாசிகள் வனவியல் பூங்காக்களை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை என்ற குற்றச்சட்டாட்டு சமீப காலத்தில் எழுந்தது. இரயில் நிலையங்கள், விளையாட்டு ஸ்டேடியங்கள், ட்ராம்வே போன்ற வசதி வாய்ப்புகள் மட்டுமின்றி, உயிரியல் பூங்காக்கள், கலை மற்றும் கலாச்சார மையங்களின் தொன்மை என்று இந்த நகரத்தின் தோற்றத்திலும், வடிவமைப்பிலும், வழக்கத்திலும் இருக்கும் நடைமுறைகள் நமக்கு உணர்த்துவது நிச்சயம் வழி தவறாத நெறிமுறையைத் தான்.

இதில் வசதி வாய்ப்புகளாக அமைந்தது எல்லாம் ஆங்கிலேயர்கள் இந்தியாவில் ஆட்சி புரிந்த காலத்தில் ஏற்படுத்தப்பட்டது. ஆங்கிலேயர்களால் மட்டுமே இத்தகைய வசதிகளையும் நவீன காலத்தோடு தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளும்  வாய்ப்பும் ஏற்பட்டது என்று கூறிவிட முடியாது.

உதாரணத்திற்கு

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான அருங்காட்சியகங்களில் தனக்கென்றே தனி ரகமாக சைன்ஸ் சிட்டி கொல்கத்தா என்ற தனி ரக அறிவியல் அருங்காட்சியகம், கொல்கத்தாவில் இருக்கும் சிறுவர்களுக்கு மட்டுமல்லாமல் கொல்கத்தாவை சுற்றிப்பார்க்க வரும் சிறுவர்களுக்கும் அறிவு சார்ந்த தகவல்களை தருவதோடு மட்டுமல்லாமல், தீம் பார்க் தருகின்ற உல்லாசத்தை தருகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இது துவக்கப்பட்டது 1997 ஆம் ஆண்டில் என்றாலும் அதனை தனக்குள் வைத்து அடுத்தக்கட்ட வளர்ச்சியையும் ஏற்றுக்கொள்ளும் நகரமாகிறது. தேசிய அறிவியல் அருங்காட்சிய சங்கத்திற்கு  கீழ் இயங்கும் அறிவியல் அருங்காட்சியகங்களில் கோல்கத்தாவில் மட்டும் தான் அதிகமான அருங்கார்சியகங்களை அமைத்திருக்கிறது நம் நாடு. இது கூட இவர்களில் பராமரிப்பு குணத்தினை கருத்தில் கொண்டு தான் அமைக்கப்பட்டிருக்குமோ!

நமது நாட்டின் கலாச்சாரத்தையும், வாழ்வியல் முறையையும் வலுவான கலை மற்றும் ஊடகம் மூலம் உலகுக்கு கொண்டு சென்ற படைப்பாளிகளான ரபீந்திரநாத் தாகூர் மற்றும் சத்யஜித்ரே போன்றோர் பிறந்த ஊரும் கொல்கத்தா தான். இதுவும் இந்த ஊரின் பெருமை தான்.

கொல்கத்தாவின் கலாச்சார பாரம்பரியத்தில் மதம் சார்ந்த பழங்கதைகளும் புனைந்து முக்கிய பங்கு வகிக்கிறது.கோதிக் நகரம், பரோக், ரோமன், ஓரியண்டல் மற்றும் இந்திய-இஸ்லாமிய சித்திரங்கள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்ட கொல்கத்தா நகரத்தின் பிரம்மாண்டமான கட்டிடங்கள், கொல்கத்தாவின் பன்முக நாகரீகத்தின் மையமாகவும் காட்சியளிக்கும். கொல்கத்தா இன்று வரை பல இனக் குடிமக்களின் நிலைப்பாட்டை பகிர்ந்து கொள்கிறது.

இந்தியாவின் மற்ற பெருநகரங்களிலிருந்து இது மாறுபட்ட ஒன்றாக இன்று அவசர வாழ்க்கையை மேற்கொள்ளும் நமக்கு புலப்படும். நாம் இந்தியாவின் தொன்மையையும், கலாச்சாரத்தையும், சரியாக அடுத்த தலைமுறையினருக்கு எடுத்து சொல்ல வேண்டுமென்றால், குழந்தைகளுக்கு நாம் கூற வேண்டியது கொல்கத்தாவின் வாழ்க்கை முறையைத் தான்.

1980 கள் வரை நமது தமிழகத்தில் கை ரிக்‌ஷாக்கள், அதாவது மனிதர்களால் இழுத்துச் செல்லப்படும் ரிக்‌ஷாக்கள் இன்றும் கொல்கத்தா வீதிகளில் இருப்பது, ஒரு விதத்தில் தொன்மையின் மற்றொரு சின்னமாக கொண்டாலும், அது வருந்தத்தக்க செய்தியாகும்.

இதுமட்டுமா இன்றைக்கு சென்னையின் மாநகரப் போக்குவரத்தின் புதிய வரவான மெட்ரோ சேவை கூடிய விரைவில் கோவைக்கும் வர இருக்கிறதென்னவோ தமிழர்களுக்கு இனிப்பான செய்திதான். ஆனால் இந்தியாவில் முதல் மெட்ரோ சேவை எங்கு அமைக்கப்பட்டது தெரியுமா?

கொல்கத்தாவில் தான். அது மட்டுமல்ல கொல்கத்தாவில் மெட்ரோ சேவை அமைக்கப்பட்டு கிட்டத்தட்ட 2 தசாப்த காலத்திற்கு பிறகு தான் இந்தியாவின் தலைநகரமான புதுதில்லியில் 2002 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.

இத்தகைய கொல்கத்தா நகரைப் பற்றி சற்று ஒரு நாள் நண்பர்களோடு உரையாடிய வேளையில் என்னை ஆச்சர்யப்படுத்தியது. அதனையும் கட்டுரையாக்கிவிட்டேன். நோக்கமில்லாமலா இதை ரசிப்பதைப் போல இராயபுரம் போன்ற சென்னையின் பழைய பெருமைகளும் கூடிய விரைவில்.

Web Title: Kolkata City Of Tradition, Tamil Article

Featured Image Credit: gqindia

Related Articles