இயற்கை விவசாயத்திற்கு திரும்பும் இந்தியா

இந்தியா 80 விழுக்காடு விவசாயத்தை சார்ந்து இருந்த நாடு.  விவசாயம், பயிரிடுதல், இதுவே இந்தியாவின் பிரதான தொழிலாக இருந்தது அன்று. அது இல்லையென்றால் தென்னிந்திய விவசாயத்தின் தனிச்சிறப்பான நெல், கரும்பு மற்றும் உயிர் காக்கும் சஞ்சீவினிகளான வெந்தயம், பிப்பிலி, கடுகு, கிராம்பு போன்ற சுவையூட்டிகளும் வெளி நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருக்குமா? அவையெல்லாம் எற்றமதி செய்யப்பட்டதற்கான ஒரு ஆதாரமாக, இங்கே பிப்பிலி என்று அழைக்கப்பட்ட மிளகு தான் உலகெங்கும் பெப்பெராக பெயர் பெற்றிருக்கிறது, அரிசி தான் ஆங்கிலத்தில் ரைஸ் போன்ற தகவல்கள் இங்கிருக்கும் வளங்களோடு, விவசாயமும் பண்டை மாற்றத்திற்கு ஏதுவாக அமைந்தது என்பதை நாம் உணரலாம். இயற்கை விவசாயம் என்பது பயிர் மற்றும் கால்நடை வளர்ப்பின் ஒரு முறை ஆகும், இது பூச்சிக்கொல்லிகள், உரங்கள், மரபணு மாற்றப்பட்ட உயிரினங்கள், ஆண்டிபயாட்டிக்குகள் மற்றும் வளர்ச்சி ஹார்மோன்களைப் பயன்படுத்துவதைத் தவிற்த்து இயற்கை எச்சங்களைக் கொண்டே நடைமுறைப்படுத்தப்படும் வேளாண் முறையாகும். அத்தகைய இயற்கை விவசாயம் பற்றியதே இந்தக் கட்டுரை.

வேளாண்மை தேன்றிய கதை

இந்தியாவின் தொன்மையான விவசாய முறை என்பது இயற்கை விவசாயம் தான். இயற்கை விவசாயம் என்பது பயிர் மற்றும் கால்நடை வளர்ப்பின் ஒரு முறை ஆகும். இது பூச்சிக்கொல்லிகள், செயற்கை உரங்கள், மரபணு மாற்றப்பட்ட உயிரினங்கள், ஆண்டிபயாடிக்குகள் மற்றும் வளர்ச்சி ஹார்மோன்களைப் பயன்படுத்தி பயிரிடும் முறையைக் காட்டிலும் சிறந்தது. 3000 வருடங்களாகத்தான் இயற்கை விவசாய முறை உலகெங்கும் பயன்பாட்டில் உள்ளது. அதற்கு முன்பெல்லாம் விதைத்து நீர் பாய்ச்சு பின் அறுவடை செய்யும் முறை தான் வழக்கத்தில் இருந்திருக்கிறது. அமெரிக்க பயிர் சார் ஆராய்ச்சி கழகம் ஐரோப்பிய பயிர்களை கொண்டு செய்த ஆராய்ச்சியில்,இயற்கை உரங்களை பயன்படுத்தி விளைவிக்கும் பயிர்களில் ஊட்டச்சத்து அதிகமாக இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். அதன் விளைவாகத்தான் சில விஞ்ஞானிகள் அதனினும் ஊட்டச்சத்து கொண்ட பயிர்களை விளைவிக்கும் நோக்கம் கொண்டு செயற்கை உரங்களையும், பூச்சிக்கொல்லிகளையும் கண்டுபிடித்ததாக கூறுகின்றனர். அமெரிக்காவில் எப்படியோ, 1905 ற்கு பிறகு தான் இந்தியாவில்  பூச்சிக்கொல்லிகள் என்ற ஒன்று விவசாயிகளின் பார்வைக்கு பட்டது.

வேளாண் துறையில் ஆராய்ச்சி தொடங்கிய காலம் எதுவென்று யாராலும் குறிப்பிட முடியாது. ஏனென்றால் சேற்றில் காலை வைத்து நடவு நட்டு, பயிர்களை பாதுகாக்க முயற்சி எடுத்த ஒவ்வொரு விவசாயியும் ஒரு வகையில் ஆராய்ச்சியாளன் தான். ஏனெனில், ஒரு பயிரை காப்பாற்ற தட்ப வெப்ப நிலையில் ஏற்படும் மாற்றத்திற்கு ஏற்ப பயிரைப் பாதுகாக்க அவன் செய்கின்ற செயலிலும் பரிசோதனைகள் இருக்கின்றன.

ஒரு சிறிய உதாரணம். செம்மண்ணில் எள்ளும் நெல்லும் வளமாக விளையும் தான். ஆனால் கடுமையான மழைப் பொழிந்தால் நெற்கதிர்கள் ஒரளவுக்கு தாக்குபிடிக்கும், ஆனால் எள்ளுக்கு அப்படியில்லை. இதனை அனுபவத்தினால் தான் உணர்ந்து தெரிந்து கொள்ள முடியுமே தவிர நான்கு சுவற்றுக்குள் படித்து தெரிந்துகொள்வதனால் அந்த குறிப்புக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துவிடுவோம் ? என்பது ஒரு முக்கியமான கேள்வி.

Women at field (Pic: thebetterindia)

வேளாண் ஆராய்ச்சிகள்

இந்தியாவில் 1905 ஆம் ஆண்டு தான் ”முதல் வேளாண் ஆராய்ச்சி” தில்லியை தலைமை இடமாகக் கொண்டு நிகழ்த்தப்பட்டது. இந்தியா “தேசிய வேளாண் ஆராய்ச்சி மையம்” என்ற ஒரு அரசு சார் விவசாய ஆராய்ச்சி மையத்தை 1905 ல் தொடங்கப்பட்டு நமது நாட்டு விவசாயிகளுக்கு தேவையான பல ஆராய்ச்சிகளை செய்து வருகிறது. 1905ல் இந்த மையம் தொடங்கப்பட்டிருந்தாலும் 1950 களில் தான் வேளாண் சார்ந்த விரிவான ஆராய்ச்சிகள் தொடங்கப்பட்டது. அது படிப்பறிவு இல்லாத பல விவசாயிகளுக்கு உறுதுணையாகவும் இருந்தது.

செயற்கை உரம் பயிருக்கு விளைவிக்கும் தீங்குகள் என்னவென்றால் ஆய்வுக்கூடங்களில் தயாரிக்கப்படும் செயற்கை உரங்கள் பெரும்பாலும் பெட்ரோலியப் பொருட்களைக்கொண்டு தயாரிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் செயற்கை உரங்களின் மூலம் விவசாயிகளுக்கு அதிக மகசூல் தர முற்பட்ட ஆராய்ச்சியில் பயிருக்கு தகுந்த ஊட்டச்சத்தை தரும் உரம் தயாரிக்க முடியாமல் போனது தான், செயற்கை உரம் கொண்டு விவசாயம் புரிவதை தவிற்க வேண்டி இருக்கிறது. சரி இயற்கை உரம் என்றால் என்ன ? இதனை எளிதாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால் மக்கும் குப்பை மக்காத குப்பை என்று இருக்கின்றது அல்லவா. அதில் மக்கும் குப்பை, சிறிது காலம் மக்கிய பிறகு தனது தன்மை மாறி இருக்கும் அது தான் நமது மண்ணிற்கு உரம், பயிருக்கு பலன் தரும் இயற்கை உரம். பல இயற்கை உரங்கள் இருக்கின்றது. மக்கும் குப்பை மட்டும் அல்லாது இறந்த செடி கொடி மரங்கள், இறந்த உயிரினங்கள், காய்கறி மற்றும் பழங்களின் தோல்கள் போன்றவைகளை குழிக்குள் போட்டு விவசாயிகளின் மீது அதிக அக்கறையுடனும் மண் புழுக்கள் கொண்டும் இயற்கை உரங்களை செய்து தரும் தன்னார்வலர்கள் கிராமப்புரங்களில் உள்ளனர்.

மேலும் மரபியல் விஞ்ஞானி       எம். எஸ் சுவாமிநாதன் தனது பெயரிலேயே ஒரு தான்னார்வ ஆராய்ச்சி மையத்தினை 1988 ல் நிறுவி விஞ்ஞானப்பூரவமாக பல ஆராய்ச்சிகளை செய்யத் தொடங்கினார். அன்று முதல் அவர் வழிகாட்டுதலில் இன்றும் வேளாண் சார்ந்த பல ஆராய்ச்சிகளை மிகவும் தீவிரமாக செயல்படுத்தி வருகின்றது அந்த மையம். பல முக்கிய ஆராய்ச்சிகளை செய்து வரும் அந்த மையம் கடற்கரை சார்ந்த விவசாய ஆராய்ச்சி திட்டம், பருவநிலை மாற்றம், பல்லுயிர், உயிரித்தொழில் நுட்பம், எகோடெக்னாலஜி, உணவு பாதுகாப்பு, தகவல் கல்வி மற்றும் தகவல் தொழில் நுட்பம் தொடர்பான ஆராய்ச்சி என்று பல அவசியமான ஆராய்ச்சிகளையும் செய்து வருகிறது. அதில் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் “கடல் நீர் கொண்டு சதுப்பு நிலத்தில் விவசாயம் செய்யும் ஆராய்ச்சியும் ஒன்றாகும். இது கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்ட வினோத ஆராய்ச்சி. இதன் விவரங்களை நேரில் அணுகி விளக்கம் பெற நாம் நமது நாகை மாவட்ட கடலோர விவசாயிகளை அனுகலாம். இந்த வேளாண் ஆராய்ச்சி மையமே இந்தியாவில் விவசாயத்திற்கென்று தொடங்கப்பட்ட முதல் தனியார் ஆராய்ச்சி மையாமாகும். இதன் பல முயற்சிகளையும் ஆராய்ச்சிகளையும் இந்திய அரசு வேளாண் ஆராய்ச்சி மையமே பாராட்டியுள்ளது.

இவர்களது ஆராய்ச்சிகளை இந்திய விவசாயிகள் ஆதரித்தாலும் வரவேற்றிருந்தாலும், வேளாண் துறையில் பல மாற்றங்களை கொண்டு வந்திருந்தாலும் அதன் சிந்தனைகளுக்குள் இருக்கும் சிறு சிறு பிரச்சனைகளையும் துணிச்சலாக எதிர்த்தார் ஒருவர். அவர் தான் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார். அவர் இயற்கை விவசாயத்தை ஆதரித்தவர். இவர் தெரிவெடுத்த இந்த பார்வையால் தான் இந்திய விவசாயிகள் விவசாயத்தில் நாம் தவறவிட்ட பல உன்னதாமான விவசாய முறையின் பலனை உணர்ந்தனர் எனலாம்.

விவசாயிகள் அதனை தவறவிட்டதற்கு ஒரு முக்கிய காரணம் என்னவெனில், முதன் முதலில் செயற்கை உரங்களை இந்தியாவில் பிரபலமடையச் செய்த போது செயற்கை உரங்களின் பயன்பாடு தான் சிறந்த விவசாயத்திற்கான வழி என்று விவசாயிகளின் மனதில் பதியும் வண்ணம் பிரகடனப் படுத்தியதே ஆகும். செயற்கை உரங்களின் சிறப்புகளாக அவர்கள் கூறிய கவர்ச்சியான ஒன்று என்னவென்றால் ”அதிக மகசூல்” என்பது தான்.

Farms (Pic:

இயற்கை விவசாய முறை

பயிரைத் தேர்ந்தெடுத்தல் :முதன் முதலாக பயிரிடுவதற்கான நிலத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். அதன் பின் நிலத்திற்கேற்ற பயிரையும் தேர்ந்தெடுக்க வேண்டும். பருவனிலை மாற்றத்தை குறிப்பாக கருத்தில் கொள்ள வேண்டும். பூச்சிக்கொல்லிகளையும் செயற்கை உரங்களையும் அறவே தவிற்க வேண்டும். தேர்வு செய்த நிலத்தில் எந்த பகுதியில் மட்டும் பயிரிட இருக்கிறோம் என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

மண் வளத்தை சோதித்தல்

நிலத்தில் உள்ள மண்ணின் தரத்தையும், தன்மையையும் குணத்தையும் சரி பார்க்க வேண்டும். அதனை தெளிவாக தெரிந்து, மண்ணின் குணத்தையும் சரியாக தெரிந்து கொள்ள வேண்டும். னாம் தேர்வு செய்த நிலத்தில் அதற்கு முன்பு செயற்கை உரங்கள் பயன்படுத்தியிருந்தனர் என்றால் அது எந்தெந்த செயற்கை உரங்கள் என்று பட்டியல் போட்டு தெரிந்து கொள்ள் வேண்டும். அந்த நிலத்தில் பயிரிடத் தேவையான சாதனங்களை தயார் செய்து கொள்ள வேண்டும்.

தாவர ஆரோக்கியம்

80 முதல் 90 விழுக்காடு சத்துக்கள் மண்ணிலிருந்து தான் கிடைக்கின்றது. அந்த தாவரத்திற்கு தேவையான இயற்கை உரங்களை நேரடியாகவோ அல்லது தண்ணீர் அல்லது உகந்த திரவத்தில் கரைத்து இடுவது. தாவரத்திற்கு தேவையான ஊட்டச்ச்த்தை சரியான அளவில் இடுவது.

பூச்சிகள்

பூச்சிகளின் வாழ்க்கை சுழற்சியை நன்கு கற்றறிந்து தேவையான பூசிகள் எது என்று கண்டறிந்து அதனி தாவரம் இருக்கும் பகுதிக்கு உட்படுத்தி அதனை கண்கானிக்க வேண்டும். அதன் பலனையும் நன்கு ஆய்ந்து கண்கானிக்க வேண்டும்.

இடற்பாடு மற்றும் குறைபாடுகள்

தாவரத்திற்கென்று ஏற்பட்டிருக்கும் குறைபாடுகள் அல்லது தொற்றுகள் இருப்பின் அதனை கண்டறிந்து உடனடியாக நீக்க வேண்டும்.

களைகளை கண்டறிந்து அகற்றுவது தேவையான ஒன்றாகும். இல்லையெனில் தாவரத்திற்கு இடப்படும் உரங்களும் ஊட்டச் சத்துகளும் பயனற்று போகிவிடும். அதில் பாதி பயனை எந்த பலனும் அளிக்காத களைகளுக்கு சென்று, முயற்சி வீனாகும் நிலை ஏற்படும்.

வளர்ந்து வந்த பயிரைப் பயன்பாட்டிற்கு அறுவடை செய்வது. அதனை பாதுகாப்பது. அதற்கு பின் அறுவடை செய்த நிலத்தை அடுத்து பயிரிட ஆயத்த படுத்துவது. பின் மண்ணின் அதே பயிரைப் பயிரிடாமல், சூழலுக்கேற்ற மாற்று பயிரைப் பயிரிடுவது.

Arial View Of Farms (Pic: bhmpics)

இயற்கை விவசாயம் வழக்கொழிந்த அவலம்

உண்மையில் பூச்சிகள் நமது விவசயிகளுக்கு பெரிய சவாலான ஒன்றாகத்தான் இருந்தது. கால மாற்றத்திற்கும் வாழ்வியல் மாற்றத்திற்கும் ஏற்ப பயிர் வளர்ப்பு சார்ந்த புது வகை பிரச்சனைகளும் விவசாயிகளுக்கு தோன்றியது. அந்த சம காலத்தில் தான் பூச்சிக்கொல்லிகளை அறிமுகப்படுத்துகிறார்கள். அது அறிமுகப்படுத்தும் காலத்தில் விவசாயிகளுக்கு, பயிர்களை சுற்றி வட்டமிட்டுக்கொண்டிருக்கும் அந்த பூச்சிகளின் பங்கும் பயிரின் வளர்ச்சிக்கு உகந்தது என்பது தெரியாது. உண்மையில் அந்த புச்சிகள் பயிர்களின் நண்பன். ஆனால் அந்த புரிதல் விவசாயிகளுக்கு இல்லை. இதனை பூச்சிக்கொல்லியை தயாரித்தவர்கள் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டனர் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. உண்மை என்னவென்று ஆராய்ந்து பார்த்தால், பூச்சிக்கொல்லியை பயன்படுத்தி விவசாயம் செய்வதே அமெரிக்கா போன்ற நாடுகள் பல ஆண்டு காலமாக  பின்பற்றி வந்த முறை. ஆதலால், தனது விவசாய முறையை உலகெங்கும் பிரகடனப்படுத்தவே, செயற்கை உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை வியாபாரப்படுத்தினரா அல்லது அவர்கள் வணிகம் சார்ந்த பார்வையில் லாபம் ஈட்டும் நோக்கம் கொண்டு செயல்படுத்தியிருக்கின்றனரா என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

இந்த பூச்சிக்கொல்லிகள் கொஞ்சம் கொஞ்சமாக நமது மண்ணை மலடாக்கிக் கொண்டிருக்கிறது என்பதை அறியாமல் விவசாயிகள் பல ஆண்டுக்காலமாக இதனைப் பயன்படுத்தி வந்தனர். பூச்சிக்கொல்லிகளும், செயற்கை உரங்களும் மண்ணை மலடாக்குவதற்கு அதில் உள்ள அதிக அளவில்லான திரவங்களே காரணம் என்ற ஒரு தோராயமான புரிதல் போதும் இந்த கட்டுரையை மேலும் படிக்க. 21 ஆம் நூற்றாண்டில் இதன் விளைவாக ஏற்பட்ட பல நடைமுறைச் சிக்கல்களும், மேலும் நீர் நிலைகளில் போதிய நீர் இல்லாமையும், போதிய மகசூல் இல்லாமல் கடன் பட்ட விவசாயிகளும் செய்வதறியாது தவித்தனர். இந்த நேரத்தில் விவசாயிகளுக்கு வந்த பற்பல் சிக்கல்கள் தான் முதன் முதலில் அவர்களை சற்று சிந்திக்க வைத்தது. அப்போது கூட சொட்டு நீர் பாசனம் என்பது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது விவசாயிகளுக்கு ஒரு கேள்வியாகவே இருந்தது. நம்மாழ்வாரும் கிட்டத்தட்ட சம காலத்தில் தான் செயற்கை விவசாயத்திற்கு எதிரான தனது போராட்டத்தை தொடங்கினார்.

Farm Houses (Pic: thundermountaintea)

இயற்கை விவசாயமும் அதன் நம்பிக்கையும்

செயற்கை விவசாயத்தையும் பன்னாட்டு நிறுவனத்தின் நோக்கத்தையும் அழிக்க வேண்டும் என்பது அவரது குறிக்கோலாக இருந்ததாகத் தெரியவில்லை. நமது மண்ணின் வளத்தை முற்றிலும் அழித்துவிடக்கூடிய ரசாயனங்களையும், ஆண்டிபயாட்டிக்குகளையும், பயிருக்கு துணை போகாத பூச்சிக்கொல்லிகளையும் தான் அவர் எதிர்த்தார். அதன் பயன்பாட்டை முற்றிலும் தடுக்க தனது கடைசி மூச்சு இருக்கும் வரை போராடினார். இவர் தமிழ் நாட்டில் இருந்து தான் இந்த அறவழிப் போராட்டத்தை நிகழ்த்தினார். ஆனால் இவரது நடவடிக்கைகளை சமூக ஆர்வலர் மற்றும் விவசாயி அண்ணா ஹசாரே பாராட்டிய பிறகு, இவரது பார்வை தமிழகம் தாண்டி இந்தியாவின் வேறு சில பகுதிகளுக்கும் பரவியது. இயற்கை விவசாயத்திற்கென்று ஒரு தன்னார்வ தொண்டு மையம் “வானகம்” என்ற பெயரில் 2009 ஆம் ஆண்டு தொடங்கி மிக துரிதமாக பல இளைஞர்களின் மனதில் விவசாயம் பயிலுவதின் அவசியத்தை விதைத்தார். இன்றும் சில ஐ டி துறையில் பணிபுரியும் சிற்சில பொறியாளர்கள் விவசாயத்தை செய்யும் விருப்பம் கொண்டு, விவசாயம் சார்ந்த பதிவுகளை சமூக வலைத்தளங்களில் பதிவிடுகிறார்கள் என்றால் அதற்கு நம்மாழ்வார் போன்றோர் முக்கிய காரணம். இன்று சொட்டு நீர் பாசனத்தின் அவசியத்தை மட்டுமல்ல ஒற்றை நெல் சாகுபடியும் சாத்தியம் என்ற புரிதலுக்கு பல விவசாயிகள் வந்திருக்கின்றனர்.

Tractor (Pic: ibandhu)

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூட ஒரு ஐ டி தொழிலாளி, தான் பணிபுரியும் துறையில் ஈடுபாடு குறைந்ததால், வேலையை விட்டுவிட்டு ஒரு முழு நேர விவசாயியாக மாறியதாக கூறி, தமிழர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். இன்றும் கோயம்பேடு காய்கறிச் சந்தைக்கு சென்று பார்த்தால், குளிர்சாதனப் பெட்டியில் வைத்து காய்கறிகளை வட மாநிலத்திலிருந்து கொண்டு வரும் வசதி கொண்ட பல லாரிகள் நிற்கும். அதே சமயத்தில் ஊரெங்கும் “ஆர்கானிக் வெஜிடபுள்ஸ் ஷாப்” என்கிற கருத்தியலில் தனியாக பிராண்ட் தொடங்கி தான் லாபம் சம்பாதிக்கும் ஆசையையும் கார்ப்புரேட்டுகளுக்குள் தூண்டி விட்டிருக்கிறது, இயற்கை விவசாயத்தை மக்கள் அங்கீகரித்த பார்வை. இது நிச்சயம் ஒரு நல்ல மாற்றம் தான். விளை நிலங்களை பிளாட் போட்டு விற்கும் வழக்கத்தையும் சட்டம் போட்டு சிறிது காலம் தடுத்து வைக்கத் தான் முடிந்தது சட்டப் போராளிகளால். ஆனால் இளைஞர்கள், குறிப்பாக கிராமத்தில் பிறந்து வாழ்ந்த இளைஞர்கள் தெளிவாக சிந்தித்தால், விவசாயம் காக்கப் படுவது மட்டுமல்ல, விவசாயம் என்றாலே இயற்கை விவசாயம் தாம் என்ற நிலை கொண்டு வர முடியும். இந்த கட்டுரை மூலமாக நான் ஒவ்வொரு விவசாயிக்கும் கேட்டுக்கொள்வது என்னவென்றால், நமது மண்ணுக்கு தீங்கு விளைவிக்கும் மக்காத பிளாஸ்டிக் பைகள், பாலிதீன் பைகள் ஒரு விவசாயியான நான் என் உயிர் மூச்சு இருக்கும் வரை பயன்படுத்தமாட்டேன் என்ற ஒரு உறுதிமொழியை ஒவ்வொரு விவசாயியும் எடுத்துக்கொள்வது, விவசாயத்திற்கு மட்டுமல்ல, இந்த பூமிக்கே நன்மை பயக்கும். விவசாயத்தின் நன்மைக்கு தேவையான வழிகளை நீங்களும் கீழே பகிரலாம்.

Web Title: Organing Farmin In India

Featured Image Credit : foodsafety-hygiene.alliedacademies/youtube

Related Articles