ஒலிம்பிக் மைதானத்தில் அரங்கேறிய மனித நேயம்!

எனக்கு ஒரு கனவுண்டு, என் நான்கு பிள்ளைகளும் நிறத்தால் அன்றி குணத்தால் மதிக்கப்படும் நாட்டில் என்றேனும் ஒருநாள் வாழ்வார்கள் என்று……

அமெரிக்காவில் இரண்டாம் தரக் குடிமக்களாக உழைக்கும் கருப்பின மக்கள் நடத்தப்பட்டதை எதிர்த்து நடந்த போராட்டத்தின்போது மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் வெளிபடுத்திய கனவு வார்த்தைக இது. இன்று வரை நிற வெறிக்கு எதிரான போராட்டம் தொடர்ந்துகொண்டுதான் வருகின்றது. நிறவெறியால் ஒடுக்கபட்ட வீரர்கள் எண்ணிக்கை அதிகம்….

1936ம் ஆண்டு ஜெர்மனியில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 4 தங்கம் வென்ற ஜெசி ஓவன்சை அவரின் நிறத்தின் காரணமாக ஹிட்லர் புறக்கணித்ததாக அமெரிக்கா ஒப்பாரி வைத்தது. ஆனால் சொந்த நாட்டிற்கு சென்ற ஜெசி ஓவன்சை அன்றைய அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட் புறக்கனித்ததை எவரும் இதுவரை பேசியதில்லை. அது மட்டுமா தடகள போட்டிகளில் அவர் பங்கேற்க தடையும் விதித்தது அமெரிக்க தடகள சங்கம். அதன் பின் குதிரைகளோடு ஓட்டப்பந்தயம் நடத்தி தனது அன்றாட வாழ்கையை நடத்தினார் ஓவன்ஸ். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, 4 பதக்கங்களை வைத்து என் வயிறு நிறையாது என்று தனது வறுமை நிடிலையை அவர் விவரித்தார்.

இப்படி அமெரிக்காவில் நிறவெறியால் ஒடுக்கபட்ட ஆப்ரோ அமெரிக்க மக்கள் மால்கம் எக்ஸ், மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் போன்ற தலைவர்களின் தலைமையில் வெகுண்டு எழுந்தனர். அடிமைப்பட்ட வர்கம் தனது விலங்கை உடைத்துக்கொள்ள துடிப்பதை பொறுத்துக்கொள்ளாத அமெரிக்காவின் ஆளும் வர்கம்… 1965ம் ஆண்டு மால்க்கம் எக்ஸையும், 1968ம் ஆண்டு லூதர் கிங் ஜூனியரையும் கொலை செய்தது. தலைவர்களை இழந்த போராடும் வர்கம் ஆத்திரத்தோடு எதிர்த்து நின்றது, அதன் போராட்டம் உச்சநிலையை அடைந்தது…. அதன் ஒரு பகுதியாக அதே ஆண்டு மெக்சிகோ நகரில் நடைபெற்ற 19வது ஒலிம்பிக் போட்டிகளை ஆப்பிரோ அமெரிக்கர்கள் புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுவாக எழுந்தன. எதிர்ப்புகளை தாண்டி கறுப்பின வீரர்களோடு ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டது அமெரிக்க அணி ….

விளையாட்டிலும் எதிரொலித்தது கறுப்பினத்தின் போராட்டம்.

அமெரிக்காவில் கறுப்பினத்தவர்களின் அடிமை வாழ்வை உலகற்கு எடுத்து சொல்லும் விதமாக, பரிசு வழங்கும் விழாவில் ஒரு கையில் கறுப்பு கையுறையையும் மற்றொரு கையில் கறுப்பு காலணியையும் அணிந்து கைகளை உயர்த்தி நிறவெறிக்கு எதிராக தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர் வெற்றி பெற்ற டாம் ஸ்மித்தும், ஜான் கார்லோசும் படம் – blackthen.com

(கலையும் அரசியலும் வேறில்லை என்றால், விளையாட்டும் கலையின் வடிம்தானே அதுவும் அரசியலை கொண்டு சேர்க்கும் வடிவம் தானே என்பதை உலகிற்கு புரிய வைத்த நாள் அக்டோபர் 16,1968.) 1968, அக்டோபர் 16ம் தேதி மெக்சிகோவில் 19ஆவது ஒலிம்பிக் போட்டியின் 200 மீட்டர் ஓட்டப் பந்தயம் நடைபெற்றது. இதில் ஆப்ரோ அமெரிக்கர்களான டாம் ஸ்மித் முதலிடத்தையும் ஜான் கார்லோஸ் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். இரண்டாம் இடத்தை ஆஸ்திரேலியாவை சேர்ந்த பீட்டர் நார்மன் பெற்றிருந்தார். இவர்களுக்கு விருது வழங்கு நேரம் வந்தது. யாரும் எதிர்பார்க்காத நிமிடம், மரங்கள் ஓய்வை விரும்பினாலும் காற்று விடுவதில்லை என்ற மாவோவின் சொற்களுக்கு உயிரூட்டும் விதமாக அமெரிக்காவில் கறுப்பினத்தவர்களின் அடிமை வாழ்வை உலகற்கு எடுத்து சொல்லும் விதமாக, பரிசு வழங்கும் விழாவில் ஒரு கையில் கறுப்பு கையுறையையும் மற்றொரு கையில் கறுப்பு காலணியையும் அணிந்து கைகளை உயர்த்தி நிறவெறிக்கு எதிராக தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர் வெற்றி பெற்ற டாம் ஸ்மித்தும், ஜான் கார்லோசும்…… அதோடு நில்லாமல் அமெரிக்காவின் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது கருப்பு கையுரையை தூக்கிபிடித்தனர். உச்சகட்டமாக ஆப்ரோ அமெரிக்க தொழிலாளர்களின் வறுமையை காட்டும் விதமாக தனது மேல் சட்டையை கழற்றினார் கார்லோஸ்.

இந்த போராட்டத்தை கண்டு கடும் கோபம் கொண்ட அமெரிக்க தடகள அமைப்பு டாம் ஸ்மித் மற்றும் ஜான் கார்லோஸ் அகியோரை அணியிலிருந்து உடனடியாக நீக்கியதுடன் அவர்கள் போட்டிகளில் பங்கேற்க தடையும் விதித்தது. அன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த போது, “நான் வெற்றிபெற்றால் அமெரிக்கன் என்பார்கள், தோற்றுவிட்டால் கறுப்பின அமெரிக்கன் என்பார்கள், அவர்களுக்கு எதிராக எதையாவது செய்தால் நீக்ரோ என்பார்கள். நாங்கள் கறுப்பர்கள்தான், நாங்கள் கறுப்பாய் இருப்பதில் பெருமை கொள்கிறோம். அமெரிக்காவின் கறுப்பினத்தவர்கள் நாங்கள் இன்று செய்ததை புரிந்து கொள்வார்கள்.” என்று தங்களது செயலுக்கு விளக்கம் அளித்தார் டாம் ஸ்மித்.

படம் – ailydsports.com

நிறவெறியால் பாதிக்கபட்ட டாம் ஸ்மித் மற்றம் ஜான் கார்லோஸ் ஆகியோர் விளையாட்டு களத்தை போராட்ட களமாக மாற்றியபோது தனக்கு இதில் சம்பந்தம் இல்லை என்று ஒதிங்கிக் கொள்ளாமல் இரண்டாம் இடம் பிடித்த ஆஸ்திரேலியாவின் பீட்டர் நார்மன், மனித உரிமை ஆணையத்தின் சின்னத்தை அணிந்து போராட்டதித்கு தனது ஆதரவை தெரிவித்தார். ஆஸ்திரேலியாவில் பூர்வகுடி மக்கள் தங்கள் உரிமைகளை கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நேரத்தில் பீட்டர் நார்மன் இதற்கு ஆதரவு தெரிவித்தது, ஆஸ்திரேலிய ஆட்சியாளர்களிடம் மிக பெரிய கலக்கத்தை ஏற்படுத்தியது.

டாம் ஸ்மித்திற்கும், ஜான் கார்லோசிற்கும் அமெரிக்க வழங்கிய உடனடி தண்டனையை விட கொடூரமானது, பீட்டர் நார்மனுக்கு ஆஸ்திரேலியா வழங்கிய தண்டனை. 1972ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்காக 13 முறை தகுதி பெற்றும் அவருக்கு வாய்ப்பு மறுக்கபட்டது. “என் நாடு என்னை நிச்சயம் அங்கீகரிக்கும்” என்று காத்திருந்த பீட்டர் நார்மனுக்கு 2000வது ஆண்டு ஆஸ்திரேலியாவின் சிட்னி ஒலிம்பிக் போட்டியின் போது நம்பிக்கை பொய்த்துப்போனது. ஆஸ்திரேலியாவில் பூர்வகுடிகள் முழுவதுமாக ஒடுக்கபட்டு, சமுத்துவம் வந்துவிட்டதாக பிம்மத்தை உருவாக்கிய பிறகு, 2000 ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் அந்த நாட்டிற்கு பதக்கங்களை வென்ற வீரர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள அழைப்பு கூட விடுக்காமல் நார்மென்னை அவமதித்தது ஆஸ்திரேலியா. 32 ஆண்டுகளுக்கு பிறகும் ஆஸ்திரேலிய அரசால் பீட்டர் நார்மனை மன்னிக்க முடியாமல் போனதற்கு காரணம், ஒடுக்கபட்டவர்களின் உரிமைக்காக கொடுத்த குரலே….

பீட்டர் நோர்மனின் இறுதிச் சடங்கில் டாம் ஸ்மித் மற்றும் ஜான் கார்லோஸ் ஆகியோர் கலந்து கொண்டு சவப்பெட்டியை சுமந்து சென்று, தங்களது போராட்டத்திற்கு கை கொடுத்த தோழருக்கு இறுதி மறியதையை செலுத்தினர். படம் – riotmag.com

இருப்பினும் சிட்னி ஒலிம்பிக் போட்டியில் மனித உரிமை தூதராக அணிவகுத்து செல்ல பீட்டர் நார்மனுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்தது. அந்த ஒலிம்பிக்கில் 200 மீட்டர் போட்டியில் முதலிடம் பிடித்த அமெரிக்காவின் மைகெல் ஜான்சன் பீட்டர் நார்மனை கட்டி அணைத்து “நீங்கள் தான் என் ஹீரோ என புகழ்ந்தார்” . 1968ம் ஆண்டிற்கு பிறகு பெரும் சோகங்களை சந்தித்த பீட்டர், மதுவிற்கு அடிமையாகியதுடன், வாழ்வாதாரத்திற்காக ஒரு சிறிய ஆஸ்திரேலிய கால்பந்து விளையாட்டு அணிக்கு பயிற்சியாளராக பணியாற்றி வந்தார். பீட்டர் நார்மன், டாம் ஸ்மித், ஜான் கார்லோஸ் ஆகியோரின் வீரம் விளைந்த போராட்டத்தை 2004ம் ஆண்டு பீட்டரின் உறவினர் படமாக்கினார். 2006ம் ஆண்டு அக்டோபர் 3ம் தேதி பீட்டர் நார்மன் உயிரிழந்தார். அவரின் இறுதி ஊர்வலத்தில் டாம் ஸ்மித் மற்றும் ஜான் கார்லோஸ் ஆகியோர் கலந்து கொண்டு சவப்பெட்டியை சுமந்து சென்று, தங்களது போராட்டத்திற்கு கை கொடுத்த தோழருக்கு இறுதி மறியதையை செலுத்தினர்.

“பீட்டர் அமெரிக்கர் அல்ல, கருப்பினத்தை சேர்ந்தவரும் அல்ல, எங்கள் போராட்டத்தில் பங்கெடுக்க வேண்டும் என்று தேவையும் அவருக்கு இல்லை,ஆனால் மனித உரிமை சின்னதை அவர் அணிந்தார் என்றால் அதற்கு ஒரே காரணம் அவர் உள்ளதிற்கு உண்மையான மனிதாராய் இருந்தார்” என்று ஜான் கார்லோசும், “பீட்டர் கையை உயர்த்தவில்லை, ஆனால் எங்களின் போராட்டத்திற்கு கைகொடுத்தார்” என்று டாம் ஸ்மித்தும் அவரின் இறுதி ஊர்வலத்தில் பீட்டர் நார்மனுக்கு புகழாரம் சூட்டினர்.

பீட்டர் இறந்து 6 ஆண்டுகளுக்கு பின்னர் அவரின் ஒப்பற்ற போராட்டத்தை போற்றும் வகையில், 2006ம் ஆண்டு ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் நார்மனிடம் மன்னிப்பு கேட்டு தீர்மானம் கொண்டு வந்தது. அந்த தீர்மானத்தில் மன்னிப்பு கோரும் வாசகத்தை நீக்க வேண்டும் என விவாதம் நடைபெற்றது. நீண்ட விவாததிற்கு பிறகு மாற்றங்கள் இல்லாமல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பீட்டர் நார்மனுக்கு பதிலாக சிலையைப் பார்வையிடும் ஒவ்வொருவரும் போராட்டதிற்கு ஆதரவை தெரிவிக்கும் வகையில் பீட்டரின் இடத்தில் நின்று புகைப்படம் எடுத்துகொள்ள ஏதுவாக சிலை அமைக்கப்பட்டது படம் – griotmag.com

இந்த போராட்டத்தை போற்றும் விதமாக 2005ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள சான்ஜோஸ் பல்கலைகழகத்தில் அந்த உணர்வு பூர்வமான காட்சி சிலையாக வடிக்கப்பட்டது. இதில் தனது சிலையை வடிக்க வேண்டாம் என்று பீட்டர் கோரியதை அடுத்து டாம் ஸ்மித் மற்றும் ஜான் கார்லோஸ் ஆகியோரின் சிலை அமைக்கபட்டது. பீட்டர் நார்மனுக்கு பதிலாக சிலையைப் பார்வையிடும் ஒவ்வொருவரும் போராட்டதிற்கு ஆதரவை தெரிவிக்கும் வகையில் பீட்டரின் இடத்தில் நின்று புகைப்படம் எடுத்துகொள்ள ஏதுவாக சிலை அமைக்கப்பட்டது….. தன் வர்க்கத்தை தாழ்த்திக்கொள்பவன் கம்யூனிஸ்ட் என்ற மார்க்சின் மொழியிற்கு ஏற்ப வாழ்ந்த தோழர் பீட்டர் நார்மன் புகழ் ஓங்குக….

வாழ்வு முழுவதும் அங்கீகாரத்தை  தேடிய ஒரு போராளியை சமூகம் வாழ்வின் இறுதி வரை புறக்கணித்தது…..

Related Articles