அடால்ப் ஹிட்லர் ஒரு சர்வாதிகாரியானதன் பின்னணி

உலகையே நடுநடுங்க வைத்த ஒரு சர்வாதிகாரி என்றாலே நம் நினைவில் வந்து நிற்கும் பெயர் ஹிட்லர். இரண்டாம் உலக போரின் கதாநாயகனாகவும் வில்லனாகவும் அனைவருக்கும் காட்சி அளித்தவன். நாஜி கட்சியின் நிறுவனர்,  இவன் தான் இரண்டாம் உலகப் போரைத் தொடங்கி ஹோலோகாஸ்டின் இனப்படுகொலைகளை கட்டவிழ்த்துவிட்டவன். யுத்தம் முடிவடைந்த நாட்களில் அவனைக் கொன்ற போதிலும், அவனது வரலாற்று மரபு இருபதொண்ணம் நூற்றாண்டிலும் தொடர்கிறது. இரண்டாம் உலக போர் முடிவதற்கு இவன் காரணமாக இருந்த கதாநாயகன் என்று குறிப்பிட்டாலும் இரண்டாம் உலக போரில் 5 கோடி பேருக்கு மேல் சாவதற்கு முக்கிய காரணமாக இருந்தே ஒரே வில்லன் ஹிட்லர் தான். உலக நாடுகளை வென்று ஜெர்மனியின் காலில் கிடக்க வேண்டும் என எண்ணியவர் உலகப்போருக்கு காரணமானவர் ஹிட்லர் தான். எந்த கொடுமையான செயலைச் செய்தவனை குறிப்பிடும் போதும் ஹிட்லர் மாதிரி என்று பரவலாகக் கூறப்படுவதைக் கேட்டிருக்கலாம். எல்லோருக்குமே ஹிட்லர் ஏறத்தாழ ஒரு கோடி யூதர்களைக் கொன்றது தெரிந்திருக்கும். சரித்திரத்தின் பக்கங்களில் சிகப்புப் பக்கங்களாய் என்றும் பயமுறுத்தும் செயல்.இதற்கு ஹிட்லர் காரணம் என்பது உண்மை தான்.

படம்: wikihow

அடால்ப் இட்லர் காஸ்தாப் ஜூம் பொம்மர் என்னுமிடத்தில் 20 ஏப்ரல், 1889 இல் தாய் (அலய்ஸ இட்லரின் மூன்றாவது மனைவி) கிளாரா போல்ஸ் (1860–1907), தந்தை ஆலாய்ஸ் ஹிட்லருக்கும் (1837–1903) ஆறு குழந்தைகளில் நான்காவது குழந்தையாக பிறந்தார். இவருடன் பிறந்த நால்வர் சிறு வயதிலேயே இறந்துவிட்டனர். எஞ்சியவர்கள் அடால்ப் ஹிட்லரும் அவரின் கடைசி தங்கை பவுலா ஹிட்லர் மட்டும்தான்.

ஹிட்லரின் அப்பா தகாத உறவில் பிறந்ததால் தன்னுடைய தாய் பெயரை பெயருக்குப் பின்னால் சேர்த்துக் கொண்டார். ஹிட்லரின் அப்பாவுக்கு அடக்குமுறை குணம் கொஞ்சம் அதிகம். அதுவே சிறுவன் ஹிட்லர் மனத்தில் ஆழமாகப் பதிந்தது. சிறு வயதிலேயே அடால்ப் ஹிட்லரின் தந்தை, வீட்டில் உள்ள அனைவரையும் அடக்கி ஆளும் தன்மை உடையவராக இருந்தார். வீட்டில் பல கடுமையான விதிமுறைகள்,  தன் பிள்ளைகள் இதைதான் செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் என்று அடால்ப்பின் வீடே ஒரு சிறிய ராணுவம் போல இருந்தது. தன் தந்தை எவ்வாறு தன்னையும் தன் தாயையும் அடித்துத் துன்புறுத்தினார் என்பதை தன்னுடைய மெயின் கேம்ப் என்ற சுய சரிதை புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். தந்தையின் கொடுமையால் தன் தாய் துன்புறுவதைக் கண்டு அவர் மேல் அளவுகடந்த பாசம் கொண்டார் என்று தெரிகின்றது. அதே சமயம் அவர் தந்தைமேல் அளவு கடந்த வெறுப்பையும் கொண்டார் என்றும் கூறப்படுகிறது.

பொருளாதாரச் சூழ்நிலை காரணமாக இவர் குடும்பம் அடிக்கடி இடம் பெயர்ந்தது என்றும் தெரிகின்றது. முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல் அடால்ப்பின் வாழ்விலும், அவரது தந்தையின் அடக்குமுறை பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த அடக்குமுறையின் வெளிப்பாடே பிற்காலத்தில் ஹிட்லரை சர்வாதிகாரியாக மாற்றியது. அடுத்ததாக ஹிட்லர் தனது இளமைகாலத்தைக் கழித்த வியென்னா நகரம் யூதர்களுக்கு எதிரான சிந்தனையைத் தூண்ட வழி வகுத்தது. அனைவரும் கூறும் குற்றச்சாட்டு ஹிட்லர் யூதர்களுக்கு எதிரானவர் என்பதே.

படம்: imatin

தான் மிகவும் விரும்பி சேரத் துடித்த கலைக் கல்லூரியில் இரு முறை அவருக்கு இடம் மறுக்கப்பட்டது. தாயின் மரணம், பொருளாதார சீர்குலைவு போன்றவை ஹிட்லரை வெறுப்பின் விளிம்பிற்குத் தள்ளியது. இந்த இன்னல்களுக்குக் காரணம் தேடி அலைந்த ஹிட்லரை,  அன்றைய வியென்னா யூதர்கள் பக்கம் திருப்பியது. தன் பூர்வீகக் குடிகள் மட்டுமே அனுபவிக்க உரிமையுள்ள நிலத்தைக், குடியேறிய மக்கள் பறிப்பதா என்று கேள்வி எழுந்தது. ஒரு கல்லூரியில் இடம் கிடைத்திருந்தால் ஹிட்லரை பிகாசோ மாதிரி ஒரு ஓவியராகத் தான் உலகம் அறிந்து இருக்கும். ஆனால் அவரின் சில வெறுப்புகள் அவரை ஒரு சர்வாதிகாரியாக உலகம் பார்க்கும் படி செய்துள்ளது.

அடால்ப் என்ற பெயர் பழங்காலத்து ஜெர்மானியரிடமிருந்து வந்தது. அடால்ப் என்பது உயர் குணமுள்ள ஒநாய் என்பதைக் குறிக்கும் சொல். இதையறிந்த ஹிட்லர் தனக்குத்தானே ஒநாய் என்ற பெயரை தனக்கு புனைப்பெயராக வைத்துக்கொண்டார். அவருக்கு நெருங்கியவர்கள் அவரை அப்படித்தான் அழைப்பார்கள். 1920 களில் அவரை அப்படித்தான் அழைத்தனர். அவர் நெருங்கிய உறவினர்கள் அவரை அடி என அழைத்தனர். ஹிட்லர் என்பதற்கு மேய்ப்பாளர் என்ற பொருள்  காப்பாளர் என்றும் பொருள்படும்.

ஹிட்லருடைய தந்தைவழி சொத்துக்களின் கடைசி பங்கு கிடைத்தவுடன் ஜெர்மனியின் பாரம்பரிய நகரமான முனிக் நகருக்கு குடிபெயர்ந்தார். அவர் குடிபெயர மற்றுமொரு காரணம் இருந்தது. ஹிட்லர் இராணுவத்தில் சேர விருப்பம் இல்லாமல் அங்கு சென்றார் ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை அவரை இராணுவத்தில் சேர வைத்தது.

படம்: all-that-is-interesting

ஹிட்லர் கடைசி வரை திருமணம் செய்துகொள்ளவில்லை. ஆனால் அவருக்காக உயிர் விட துணிந்து உயிரையும் விட்ட  எவா பிரான் என்ற  காதலி  இருந்தாள். ஹிட்லரின் ஆதரவாளர்கள் கண்மூடித்தனமாக ஹிட்லரை அவதார புருஷராக நம்பினார்கள், ஹிட்லர் பற்றிய உண்மைகளை, விமர்சனங்களை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த உண்மை மிகவும் வியக்க வைக்க கூடிய ஒன்று ஐந்து முறை மகாத்மா காந்தி நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டார். ஆனால் ஒருமுறை கூட நோபல் பரிசை வென்றதில்லை. அதே சமயம் ஹிட்லர் நோபல் பரிசை வென்றுள்ளார். அகிம்சை என்று போராடியவரை விட சர்வாதிகாரியாக நின்ற ஒருவருக்கு நோபல் பரிசு கிடைத்துள்ளது. மிகவும் தைரியமான மற்றும் வீரமான மனிதரான ஹிட்லர் பூனை பயம் கொண்ட நோயான அலுரோஃபோபியாவால் பாதிக்கப்பட்டவர்.

பிப் 27, 1933 அன்று இரவு, ஹிட்லர் ஜெர்மன் அதிபராக பதவி ஏற்று நான்கு வாரங்களுக்கு பிறகு, ஜெர்மன் பாராளுமன்றத்தில் உள்ள ஒரு கட்டடத்தில் தீ விபத்து ஏற்படுகின்றது. மாரினுஸ் என்ற மன நலம் குன்றிய, ஒரு கம்யூனிஸ்ட் கைது செய்யப்பட்டு, குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப்பட்ட்டு கொல்லப்படுகின்றார். இது ஒரு கம்யூனிச சதி என்று கூறி, ஹிட்லர் , அப்போதுள்ள 86 வயதுடைய ஜெர்மானிய அதிபர் பவுல் வான் ஹிந்தேன்புர்கிடம் ரீக்ஸ்டேக் சட்டத்தை அனுமதி அளிக்கச் சொல்கின்றார். இந்த சட்டத்தின் படி, ஹேபியஸ் கார்பஸ், கருத்துரிமை, ஊடக சுதந்திரம், மக்கள் ஒன்று கூடும் சுதந்திரம் அனைத்தும் தடுக்கப்படுகின்றது.

படம்: medium

அரசு, மக்களின் கடிதங்களையும், தொலைபேசியையும் ஒட்டுக்கேட்க அனுமதி அளிக்கப்படுகின்றது. பின்னர் Enabling Act of 1933, எந்த ஒரு சட்டத்தையும், பார்லிமென்ட் அனுமதி இல்லாமல் அமுல் படுத்த, அவர் சொன்னது போல், “பொது/அரசியல் வாழ்க்கையில் தூய்மையை ஏற்படுத்த”, ஹிட்லருக்கு முழு அனுமதி அளிக்கப்படுகின்றது. இதற்குப் பின் தேசிய சோசலிச கோட்பாடை எதிர்க்கும் எந்த ஒரு மனிதனையும் கைது செய்யவும், நாடு கடத்தவும் மேலும் கொல்லபடுவதையும் வழக்கமாக்கி வந்தனர். யூதர்களைப் பொருத்தவரை, ஹிட்லரும் நாஜிகளும் அவர்களை எலி போன்ற மிருகங்களாக கருதினர். அவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டு, தொழில்கள் அபகரிக்கப்பட்டு, இறுதியில் சில முகாம்களில் அடைக்கப்பட்டு அழித்தொழிக்கப்பட்டனர்.

இவ்வளவு பயங்கரவாதமும் ஏன் ஜெர்மனியில் நடந்தது என்றால், அங்குள்ள மக்கள் அதை அனுமதித்ததால் தான். ஹிட்லரும், நாஜிகளும் மக்களின் அமைதியை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு தான் இவ்வளவு பெரிய பயங்கரவாதத்தை நடத்தினர். இவை எல்லாம். “வலிமை மிக்க தேசம்” என்ற பெயரில் நடந்ததால் மக்கள் கண்டுகொள்ளவில்லை.

Web Title: Facts to know about hitler

Featured Image Credit: interalexen.rightpedia pinterest

Related Articles