Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website. The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

இந்தியாவின் முதல் பெண் ஏவுகணை விஞ்ஞானி

நம்மை பொறுத்தவரை நல்லதாகவே இருந்தாலும், உலகில் சாதித்தாலும், அது சினிமா பிரபலங்களாக இருந்தால் அதிகம் பேசுவோம், நாளிதழ்களிலும் அது பெரிய செய்தியாக வெளிவரும். இப்போதும் கூட மாற்றப்படவில்லை, எப்போதும் மாற்ற முடியாத ஒன்றாக உள்ளது. அந்த வகையில் நாம் சினிமா பிரபலங்களை காட்டிலும் பாராட்ட வேண்டிய பெண்மணிகள் ஏராளம் உள்ள நாடு நம் நாடு. விண்வெளிக்கு பயணம் செய்த இந்தியாவின் முதல் பெண்மணி என்ற பெருமைக்குரிய கல்பனா சாவ்லா, பல பெண்களுக்கு ஒரு முன் மாதிரியாகத் திகழ்கிறார் என்றால் அது மிகையாகாது. ஒரு சாதாரணப் பள்ளியில் படித்து, பலர் வியக்கத்தக்க வகையில் தனது கனவுகளை ஒரு விண்வெளி பொறியாளராக வாழ்ந்துக் காட்டினார் கல்பனா சாவ்லா. 41 வது வயதில் உலக மக்கள் நட்சத்திரமாகிப் போன ஒரு இந்தியப் பெண்.

அதுபோல இன்னொரு பெண்மணி இந்திய ஏவுகணையின் பெண்மணி மற்றும் அக்னிபுத்ரி என்று அழைக்கப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் அறிவியல் ஆராய்ச்சியாளர் டெஸ்சி தாமஸ் தான் அது. ஆண்கள் மட்டுமே தலைமை தாங்கும் ஏவுகணை திட்டத்தை பெண்களும் சாதித்து காட்ட முடியும் என்ற அடையாளத்தை உருவாக்க உறுதியாக பணியாற்றியுள்ளார். 1988 ஆம் ஆண்டு டி.ஆர்.டி.ஓவில் இணைந்து, அவர் இந்தியாவின் ஏவுகணை மேம்பாட்டுத் திட்டத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளார்.  குறிப்பாக அவர் உருவாக்கிய நீண்ட தூர அணுசக்தி திறன் கொண்ட ஏவுகணை அக்னி-v முக்கியமான ஒன்று.

missile woman (Pic: betterindia)

இவர் கேரளாவில் உள்ள அழகான மாவட்டமான ஆலப்புழாவில் பிறந்தார். இவரின் தந்தை ஒரு ஐ.எப்.எஸ். அதிகாரி இவரின் தாயார் இல்லத்தரசி. தும்பா ராக்கெட் மையத்தின் அருகேதான் அவருடைய வீடு. சிறிய வயதில் இந்த தளத்தில் இருந்து ராக்கெட்டை செலுத்தும் போதெல்லாம் பார்ப்பார். அப்போதே அவர் இளம் மனதில் ராக்கெட் பற்றிய யோசனை வேரூன்றியது. திருச்சூரில் பி.டெக் படித்த பிறகு, டிஆர்டிஓ.வில் 1985 இல் விஞ்ஞானியாக சேர்ந்தார். அங்கு பணியாற்றி கொண்டே ஏவுகணை தொழில்நுட்பம் பாடத்தில் எம்.டெக் படித்துள்ளார். பின்னர், அவருடைய வாழ்க்கை ராக்கெட் போல் ஏற்றம் ஏற்பட இதுதான் உதவியது. இந்த படிப்புக்கு பின், ஏவுகணை தொழில்நுட்ப பிரிவுக்கு மாறினார். அவரது தாயார் அவரின் விருப்பதிற்கேற்ப அவரை கவனமாக வளர்த்தார். பள்ளி நாட்களில் டெஸ்ஸியின் திட நிலை இயற்பியலில் ஆர்வம் வடிவமைக்கப்பட்டது. திருச்சூர் கல்லூரியில் இருந்து தனது பொறியியல் படிப்பை முடித்துவிட்டு, டெஸ்ஸி அவர் எப்போதும் கனவு கண்டதை தேர்ந்தெடுத்தார். ஏவுகணை தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். அவரது 20 வது வயதில் புனே இன்ஸ்டிடியூட் ஆப் அர்மமென்ட் டெக்னாலஜியில் சேர்ந்தார். ஏவுகணை தொழில்நுட்பத்தின் முதுகலை பட்டப்படிப்பை அங்கே படித்தார். தனது எதிர்கால கணவர் சரோஜ் குமார் படேலை மும்பை கடற்படை தளத்தில் தான் சந்தித்தார். அக்னி ஏவுகணை திட்டத்தில் 1988ல் திட்ட இயக்குனராக பணியமர்ந்தார். தனது முன்னுதாரணமாக கருதும் Dr.A.P.J.அப்துல்கலாம் அவர்களுக்கு கீழ் பணிபுரிந்தார். 2012ல் ஓடிஸா வீலர் தீவிலிருந்து அக்னி-v ஏவுகணை வெற்றிகரமாக துவங்கியது. ஒடிசா மாநிலத்திற்கு கிழக்கில் வங்கக் கடல் பகுதியில் 10 கி.மீ. தொலைவிலும், சந்திபூருக்கு தெற்கே 70 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ள தாமரா அருகே உள்ள வீலர் தீவில் ஒருங்கிணைந்த சோதனை தளத்திலிருந்து 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 19ம் தேதி காலை 8.04 மணிக்கு கண்டம் விட்டு கண்டம் தாண்டி 5000 கி.மீ. தொலைவில் சென்று தாக்கும் அக்னி-v அணு ஏவுகணை சோதனை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. அக்னி-v ஏவுகணை திட்டத்தின் தலைவர் டெஸ்சி தாமஸ் (பெண் விஞ்ஞானி) ஆவார்.இது காற்று மண்டலத்தை மீண்டும் நுழைவதற்கு 3,000 டிகிரி செல்சியஸின் மிகப்பெரிய வேகத்தையும் வெப்பநிலையையும் தாண்டி சர்வதேச அணுசக்தி ஏவுகணைக்கு உதவியது. இதன் வெற்றி மிக சுலபமாக கிடைத்து விடவில்லை. ஓவ்வொரு கட்டத்திலும் ஏற்படும் தோல்விகளையும் ஏமாற்றங்களையும் டெஸ்சி வரவேற்றார். அந்த தோல்விகள் மறுபரிசீலனை செய்ய கிடைத்த வாய்ப்பாக எண்ணினார். உதாரணமாக, ஜூலை 2006 இல், ஒரு ஏவுகணை வரையறுக்கப்பட்ட அளவுருக்கள் சந்திக்கத் தவறிவிட்டது மற்றும் குழுவினர் நிறைய விமர்சனங்களை சந்திக்க வேண்டியிருந்தது. ஆனால் டெஸ்சி அதை நினைத்து கவலை கொள்ளாமல் அவரது வேலை நேரத்தை நீட்டித்து 12-16 மணி நேரம் தன் ஆராய்ச்சிக்காக செலவிட்டார். வார இறுதியில் கூட ஓய்வு இல்லாமல் உழைத்தார். பத்து மாதங்களில் அந்த தவறுகளை சரி செய்தார். ஆனால் அந்த வெற்றியை விட புதிய தவறுகள் தோல்விக்கு வழிவகுத்தது.  டெஸ்சி ஒரு இல்லத்தரசி மற்றும் ஒரு பாதுகாப்பான விஞ்ஞானி போன்றவை அவருக்கு கயிற்றில் நடப்பது போன்ற தருணமாக அமைந்தது. அவரது மகன் தேஜஸ்க்கு உடல் நிலை சரியில்லாத போதுகூட தனது வேலை முக்கியம் என்று  ஏவுகணை செலுத்தும் திட்டத்திற்காக பல தியாகங்கள் செய்ய தயங்கியதில்லை. 2008 இல் டெஸ்சி தாமஸ்க்கு ஒளி சேர்க்கும் விதமாக,  இந்திய பெண் விஞ்ஞானி சங்கம் டெஸ்ஸி தாமஸ் பெண் விஞ்ஞானிகளுக்கு முன்மாதிரியாகவும், அவர்களின் கால்களை வெற்றிகரமாக இரு உலகங்களிலும் வெற்றிகரமாக நடத்துவதற்கு ஒரு உத்வேகமாகவும் இருப்பதாக நாங்கள் கருதுகிறோம் என்று தெரிவித்தது.

Agni IV-missile DRDO (Pic: betterindia)

பல பேட்டிகளில்  அவர் தன் பெற்றோர், மாமனார் மாமியார் கணவன் மற்றும் மகன் ஆகியோரின் ஆதரவாலும் ஊக்கத்தாலும் தான் என்னால் சாதிக்க முடிந்தது என்று கூறியுள்ளார். ஆம், அவரது மகன் தேஜாஸ் இந்தியாவின் முதல் உள்நாட்டு லைட் காம்பாட் ஏர்கிராப்ட்டில் (மேலும் டிஆர்டிஒவால் உருவாக்கப்பட்டது) தனது பெயரை பகிர்ந்து கொண்டு உள்ளான். உண்மையில், அவரது தாயார் மற்றும் தந்தையின் பெயர்கள் அதன் பிறழ்கிளவியாக்கத்தின்!

இன்று, டெஸ்சி இந்தியாவின் ஏவுகணை பிரபலங்களில் ஒருவர். ஐந்து வெவ்வேறு பல்கலைக் கழகங்களில் இருந்து டாக்டர் ஆஃப் சயின்ஸ் (ஹானோரிஸ் கவுசா) பெறுபவர், இந்த புத்திசாலி பெண்மணி பல்வேறு தொழில் நிறுவனங்களில் ஒருவர் – இந்திய தேசிய அகாடமி ஆஃப் இன்ஜினியரிங் (INAE), இன்ஸ்டிடுட் ஆப் இன்ஜினியர்ஸ்-இந்தியா (IEI), டாட்டா நிர்வாக சேவை (TAS) ) ஆகியவை அதில் அடங்கும். இவர் பல விருதுகளை வாங்கி சாதித்துள்ளார். 2008 மற்றும் 2012 க்கான டி.ஆர்.டி.ஓ. செயல்திறன் சிறப்பு விருது, 2009 இல் இந்தியா டுடே மகளிர் விருது, 2012 ல் பொது நிர்வாகத்தில் சிறப்பு நிர்வாகத்திற்கான லால் பகதூர் சாஸ்திரி தேசிய விருது, சி.என்.என் உட்பட பல கௌரவ விருதுகளையும் பெற்றார். 2012-ம் ஆண்டு ஐபிஎன் இந்திய மாணவர் சங்கம், விருதுநகர் விருது வழங்கும் விழாவில் 2016 ம் ஆண்டுக்கான அறிவியல் மற்றும் பொறியியல்(wise) விஞ்ஞானி விருது பெற்றார்.

Agni-V Project diector (Pic : hunwww.net)

டெஸ்சி ஒரு பேட்டியில் இராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில் நான் சேர்ந்தபோது மொத்தம் 4 அல்லது 5 பெண் விஞ்ஞானிகள் இருந்தனர். இப்போது, ​​250 விஞ்ஞானிகள் குழுவுடன் 20 முதல் 30 பெண் விஞ்ஞானிகள் உள்ளது பெருமையாக உள்ளது. இது நல்ல வளர்ச்சி. மேலும், இராணுவத்திற்கு போர் விமானங்கள், பீரங்கிகள், ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுத தயாரிப்பு திட்டங்களில் 200 பெண் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர் என்பதை அறியும் போது இதயம் பூரிக்கிறது” என்று டெஸ்ஸி பெருமையுடன் கூறியுள்ளார். தற்போது 45 வயதான டெஸ்சி தாமஸ், ஓய்வு என்றால் என்ன என்று கேட்பவர். அந்த அளவிற்கு ஓய்வு இல்லாமல் உழைப்பதில் சலிக்காதவர். இதுகுறித்து அவர் கூறியபோது, சிந்தனைகளுக்கு ஓய்வு என்பது கிடையாது. அதேபோல்தான் விஞ்ஞானிகளுக்கும் ஓய்வு கிடையாது. அவர்கள் கடைசி வரை ஏதோ ஒன்றை செய்துகொண்டே இருப்பார்கள் என்று கூறினார்.

Related Articles