Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

தல போல வருமா

ஒருவர் தனது வாழ்க்கையில் சுயமாக தனக்கான அடையாளத்தை ஏற்படுத்தி, அதனை தக்க வைத்து வாழ்வது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. அதனால் தான் சொந்த உழைப்பில் உயர்ந்த மனிதர்களுக்கு சமூகத்தில் கிடைக்கின்ற மரியாதைக்கென்று ஒரு தனி சிறப்பு உண்டு. அதுவும் கலை சார்ந்த துறையில் இருக்கின்ற போட்டி பொறாமைகளுக்கிடையே ஒரு தனி மனிதனாக வளர்ந்து தனக்கென்று ஒரு ரசிகர் கூட்டத்தை ஏற்படுத்தி, அவர்கள் அனைவருக்கும் ஒரு முன் மாதிரியாக ஒழுக்கத்துடனும் நற்பண்போடும் வாழும் மனிதர்கள் மிகக்குறைவு. அந்த வரிசையில்  குறிப்பிடும்படியான ஒரு நடிகர் தான் அஜித். இவர் 1971 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் ஹைத்ராபாத் நகரில் சுப்புரமணியம் என்பவருக்கும் மோகினி என்பவருக்கும் மகனாக பிறந்தார்.

அஜித்தின் கலை பிரவேசம்

அமராவதி திரைப்படம் தான் அஜித்தின் முதல் திரைப்படம் என்று பலர் நினைத்துக்கொண்டிருக்கின்றனர்.ஆனால் அது அவர் கதாநாயகனாக நடித்த முதல் தமிழ் திரைப்படம். ஆனால் நடிகர் அஜித் சினிமாவில் முதலில் அறிமுகமானது சென்பக ராமன் இயக்கத்தில் சுரேஷ் மற்றும் நதியா நடிப்பில் 1990 வெளிவந்த ”என் வீடு என் கணவர்” திரைப்படத்தில் தான். அதற்கு முன்பும் அவர் விளம்பரங்கள் மற்றும் கர்ப்பரேட் படங்களில் நடித்துள்ளார். அவர் மோட்டர் பைக் ரேஸில் முழு ஆர்வத்துடன் இருக்கும்போது தனது பொழுதுபோக்குக்காக தான் நடிப்பை தேர்வு செய்துள்ளார். அதற்கு முன்பு வரை ஒரு அரசு சார்பு வணிக விற்பனை நிலையத்தில் வேலை பார்த்துள்ளார். பின்பு சுயமாக ஈரோட்டில் ஒரு ஆடை உற்பத்தி நிறுவனத்தை நடத்தி வந்தார். 10 ஆவது வரை மட்டுமே படித்து முடித்த அஜித்திற்கு ஆர்வமெல்லாம் மேட்டார் பைக் ரேஸிங்கிலும் மாடலிங்கிலும் மட்டுமே இருந்தது.

ஆனால் ஒரு சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால் அவர் முதன் முதலில் ஒப்பந்தமாகி நடித்தது “பிரேம புஸ்தகம்” என்ற ஒரு தெலுங்கு படத்தில் தான். அந்த படம் வெளியாவதில் தாமதம் ஆன காலகட்டத்திற்குள் அமராவதி தயாராகி வெளியாகிவிட்டது. இன்றைக்கு உச்சத்தில் இருக்கும் நடிகர்களில் அதிக தோல்விப் படத்தில் நடித்தவர் இவர் தான். இதற்கு இவர் தேர்வு செய்த கதைகள் காரணமா? அல்லது இவர் தேர்வு செய்த இயக்குனர்கள் காரணமா? என்பது ஒரு பெரிய விவாதத் தலைப்பு. இருப்பினும் அப்படிப்பட்ட கருப்பு அத்தியாயங்களை கடந்ததால் தான் என்னவோ இவரது பேச்சிலும் செயலிலும் இப்பொழுது ஒரு பக்குவம் இருக்கின்றது. அஜித் முதன் முதலில் பெரியளவில் மக்கள் மனதில் ஒரு திறமையான நடிகராக பதியும் வண்ணம் அமைந்த திரைப்படம் ஆசை. அதன் இயக்குனர் திரு.வஸந்த். அந்த படத்தின் தயாரிப்பு மேற்பார்வையில் இருந்த முக்கியமான ஒருவர் இயக்குனர் திரு.மணிரத்னம். இயக்குனர் ஜாம்பவானுக்கு அன்றே அஜித்தின் முழு ஆற்றல் தெரிந்திருக்கிறது. ”ராஜாவின் பார்வையிலே” என்ற ஒரு படத்தில் மட்டும் தான் நடித்தனர் ’தல’யும் ’தளபதி’ இணைந்து நடித்தனர் என்ற நிலை ஏற்பட்டதற்கு நேருக்கு நேர் படத்தில் நடிகர் தேர்வில் நடைபெற்ற குழப்பமே காரணமாயிற்று. அந்த படத்தின் இயக்குனரும் திரு.வஸந்த், தயாரிப்பாளர் திரு.மணிரத்னம்.

இவர்கள் மட்டுமா, இயக்குனர் சரண், அகத்தியன் போன்ற இயக்குனர்கள இவரது வளர்ச்சிக்கு முக்கியமானவர்கள் ஆவர். இதற்கு இவர்கள் அஜித்தை வைத்து இயக்கிய திரைப்படங்களே காரணம். குறிப்பாக அகத்தியன் இயக்கத்தில் வெளியான ’காதல் கோட்டை’ இந்திய சினிமாவின் காதல் திரைப்படங்களிலேயே ஒரு புதிய கோணத்தில் கதை அமைந்திருந்தது. சிறந்த படம், சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதுகளை அந்த திரைப்படம் பெற்றது குறிப்பிடத்தக்கது. இவரது காலக்கட்டத்தில் திரைக்கு வந்த நடிகர்களில் அஜித் தான் முதன் முதலில் ஹிந்தி திரைப்படத்தில் (அசோகா) அதுவும் வில்லனாக நடித்தார்.அதற்கு நிச்சயம் ஒரு துணிச்சல் வேண்டும். அதன் பின் ஏனோ அவர் ஹிந்தியில் தொடர்ந்து நடிக்கவில்லை. இவரது வளர்ச்சிக்கு சில இயக்குனர்கள் காரணமாக இருந்தது போல எஸ்.ஜே.சூர்யா, ஏ.ஆர்.முருகதாஸ், V.Z.துரை போன்ற தமிழ் சினிமாவின் நம்பிக்கை இயக்குனர்களை அறிமுகப்படுத்தியதும் இவர் தான்.

Ajith Intro (ibtimes/youtube/youtube)

அவரது துணிச்சல்

இவர் துணிச்சலாக பேசும் இயல்பு உடையவர் என்பதால் ஒரு காலக்கட்டத்தில் பல விமர்சனங்களுக்குள்ளானார். அதன் பிறகு தான் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை முற்றிலுமாக குறைத்துக்கொண்டார். சினிமா துறையில் இருக்கின்ற ஒவ்வொரு கலைஞனுக்கும் தனி சுதந்திரம் வேண்டும் என்ற கருத்தை முன் நிறுத்தி, நடிகர்களை கட்டாயப்ப்டுத்தி பொது நிகழ்ச்சிகளுக்கு வரவழைக்கின்ற வழக்கத்தை மாற்ற வேண்டும் என்று அவர் அன்றைய முதல்வர் மு.கருணாநிதி முன் வெளிப்படுத்திய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தாலும், அஜித்தின் அன்றைய பேச்சு தான், தமிழக மக்களுக்கு அவர் மீது ஒரு மதிப்பு வருவதற்கு காரணமாகவே இருந்தது.

கதாநாயகர்களாக நடிப்பவர்கள் தனக்கென ரசிகர் மன்றங்கள் அமைத்துக்கொள்வது வழக்கம். இதன் மூலமாகவும் தனது திரைப்படங்களின் முதல் நாள்  வணிகத்தை தனது தயாரிப்பாளருக்கு சாதகமாக்க சில நடவடிக்கைகள் எடுக்கின்றனர். இதில் உலக நாயகன் திரு கமல்ஹாசன் அவர்கள் தனது ரசிகர் மன்றங்கள் அனைத்தையும் நற்பணி மன்றங்களாக மாற்றி அவரது ரசிகர் மன்ற ரசிகர்கள் அனைவரையும் நற்பணிகள் செய்ய ஊக்குவித்தார் என்பது ஒரு பக்கம் இருக்க. அஜித்தின் பார்வையோ வழக்கத்திலிருந்து சற்று மாறுபட்டு இளைஞர் சமுதாயத்திற்கு நன்மை விளைவித்தது எனலாம். ஆம் தனது ரசிகர் மன்றங்கள் அனைத்தையும் ஒரு அறிக்கையில் கலைத்துவிடுவதாக கூறி, இளைஞர்கள் அனைவரையும் அவரவர் குடும்பத்தை பார்த்துக் கொள்வதில் முழு கவனம் செலுத்துமாறு வலியுறுத்தியுள்ளார். இது நிச்சயம் ஒரு பிரபலம், சமுதாய நல்லிணக்கம் கொண்டு எடுக்கப்ப்டும் ஒரு சிறந்த முடிவாகும். அதுமட்டுமல்லாமல் அவரது ரசிகர்களே இதனை எதிர்பார்க்கவில்லை.

Yennai Arinthal Look (boxofficecollection)

தல தளபதி

தல மற்றும் தளபதி இந்த தலைப்பில் எந்த கலாட்டாவான கலந்துரையாடலாக இருந்தாலும் கூட, ரசிகர்கள் ஆர்பரித்துக்கொண்டு ஈடுபடுவர். அப்படி ஒரு பிம்பத்தை ஊடகங்கள் தான் பல ஆண்டுஅ காலமாக ஏற்படுத்தி இருக்கின்றது என்பது மறுக்கமுடியாத ஒன்று. இந்த ஊடகங்கள் இவர்கள் இருவருக்கும் இருக்கும் மார்க்கெட்டை வைத்து தான் நிகழ்ச்சிகள் செய்து அதன் மூலம் லாபம் ஈட்டுகிறது என்பதை உணர்ந்த பிறகு இருவரும் மிகவும் பக்குவமாக தனது ரசிகர்களை வழி நடத்திவருகின்றனர்.  இளைய தளபதி விஜய் சமீபத்தில் நடித்த மெர்சல் படத்தில் வரும் ஒரு பாடலில் தமிழ் மொழியின் பெருமையை குறிப்பிட்டு பாடியதை தமிழர்கள் அனைவரும் பெருமையாக நினைக்கின்றனர். அஜித்தும் பில்லா திரைப்படத்தில் தமிழர் கடவுளுக்காக பாடல் பாடி நடித்திருக்கிறார். “சேவற் கொடி பறக்குதடா” என்று தொடங்கும் அந்த பாடலில்

”தமிழில் பேசும் தமிழ் குலவிளக்கு

வேற்று மொழியில் அர்ச்சனை எதற்கு”

”ஆதித்தமிழன் ஆண்டவன் ஆனான்

மீதித் தமிழன் அடிமைகள் ஆனான்”

போன்ற வரிகள் தமிழர்களின் இன்றைய நிலையை உணர்த்தும் வண்ணம் அமைந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Thala Talapathy (kollyworld/vijayofficial)

அஜித்திற்கு மட்டுமே வெளிச்சம்

அதிகமாக நேர்காணலில் கூட நம்மால பார்க்க முடியாத ஒரு நடிகர் என்றாலும் பொதுமக்களுக்கு தன் மீது ஏற்பட்டுள்ள நன்மதிப்பு சிதைந்துவிடாத வண்ணம் தனது நடவடிக்கைகளில் மிகவும் கவனமாக இருக்கின்றார். நேர்காணல் மட்டுமல்லாது திரைத்துறையின் கலை நிகழ்ச்சிகள், விருது வழங்கும் விழாக்கள் என எந்த நிகழ்ச்சிகளிலும் அஜித்தை காண முடியாது. அதற்கான காரணம் அவருக்கு மட்டுமே தெரியும். ஆயினும் அவர் சமீப காலங்களில் எந்த வித விமர்சனங்களுக்குள்ளும், சர்ச்சைகளுக்குள்ளும் மாட்டாத் ஒரே நடிகனாக இருப்பது ஒரு தனி சிறப்பு.

இவர் ஒரு திரைப்பிரபலமாக இருந்து கண்ட பல வெற்றிகளும், சருக்கல்களும் ஒரு பக்கம் இருக்க. இவருக்கு இருக்கும் இன்னொரு ஆர்வமான பைக் ரேஸிங்கில் இவர் இப்பொழுதெல்லாம் பங்கேற்றாலே அது செய்தியாகிவிடுகிறது. அந்த அளவிற்கு பைக் ரேஸிங்,ஃபார்முலா ரேஸிங் என பல தேசிய அளவிலான மற்றும் சர்வதேச அளவிலான ரேஸிங்கில் பங்கேற்றுள்ளார். இதைப்போன்ற ரேஸிங்கில் பங்கேற்று பல விபத்துகளை சந்தித்து, பல முறை  நீண்ட ஓய்வு எடுத்து மீண்டும் அதே புத்துணர்ச்சியுடன் திரையில் தோன்றி தனது ரசிகர்களை உற்சாகப்ப்டுத்தியிருக்கிறார். இவருக்கு அதிகாரப்பூர்வமான ரசிகர் மன்றங்கள் இல்லை என்றாலும், சமூக வலைத்தளங்களில் இவரது ரசிகர்கள் இவர் மீது கொண்டிருக்கும் அன்பினைக் காணும் போது இவரது சக நடிகர்கள் பொறாமைக் கொள்ளாமல் இருப்பது கொஞ்சம் கடினம் தான் என்று நாம் உணரும் அளவிற்கு இருக்கும். இதெல்லாம் எப்படி சாத்தியம் என்பது அஜித்திற்கு மட்டுமே வெளிச்சம்.

Racer Ajith (wikipedia)

பண்பாளர் அஜித்

உழைப்பாளர் தினத்தில் பிறந்த இவர் தனது கடின உழைப்பால் இத்தகைய இடத்தை அடைந்துள்ளார் என்பது பாராட்டுதலுக்குரிய விடயம் தான். அவர் இந்த நிலையை அடைந்தது தனது பலத்தை மற்றும் உணர்ந்ததால் மட்டுமல்ல, தனது பலவீனத்தை உணர்ந்த பின் தான் இவரது வளர்ச்சி நிலையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு படத்தின் படப்பிடிப்பிற்காக பழவோற்காட்டில் உள்ள முகத்துவாரம் என்னும் இடத்தில் 10 நாள் படப்பிடிப்பு நடத்த அனுமதி பெற்று நடத்த திட்டமிட்டன்ர். அந்த இடம் கடலும் ஆறும் கலக்கும் இடம் அந்த இடத்தில் ஒரு கிராமம் இருப்பது போல செட் அமைத்து எடுத்தார்கள் மக்கள் நடமாட்டம் இருக்காது என்று நினைத்து அங்கு செட் அமைத்தார்கள் ஆனால் அங்கும் அதிக அளவில் மக்கள் கூடிவிட்டனர் அஜித் அவர்களின் பாதுகாப்பிற்காக ஒரு காவலரை நியமித்திருந்தனர். தினமும் காலையில் அஜித் அவர்களுடன் படகில் வந்து படப்பிடிப்பு நடக்கயிருக்கும்  இடத்தை அடைய சுமார் 20 நிமிங்களாகுமாம் அதுவரை அஜித்துடன் தனியாக படகில் பயணிக்கும் வாய்ப்பு கிடைக்கும் தினமும் அந்த காவலர் அவரை பார்ப்பார். எந்த ஒரு மனிதனாக இருந்தாலும் யாராவது ஒருவரிடம் தங்களுடைய எதிர்ப்பை அல்லது கோவத்தை வெளிக்காட்டுவர் ஆனால் அங்கு இருந்த 10 நாட்களும் ஓரே மாதிரியிருந்ததாக கூறுகையிலேயே நெகிழ்ந்து போனார். அந்த நிகழ்ச்சிக்கு பிறகு நான் அதிகம் அவரை பின்பற்ற தொடங்கியுள்ளாராம்.

Smiling Ajith (kollyworld)

சில கண்ணியமான காவல்துறை அதிகாரிகளுக்கே ஒரு உத்வேகமாக இருந்திருக்கிறார் என்றால் நிச்சயம் தலை வணங்க வேண்டிய மனிதர் தான் அஜித்.சரி அவரது பிறந்த தினமான இன்று அவர் புகழ் பாடுவது மட்டுமே முழு வேலையாக இருப்பதை விட அஜித் ரசிகர்களாகவோ அல்லது அவரை பார்த்து வாழ்வில் முன்னுக்கு வர சில பண்புகளையும், நல்ல பழக்க வழக்கங்களையும் அவரிடமிருந்து கற்றுக்கொண்டு வாழ்வில் நல்ல முறையில் சாதித்த உங்களது நண்பர்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் கௌரவிக்கலாமே.

அனைவருக்கும் மே தின வாழ்த்துக்கள்.

Web Title: Ultimate Star Ajithkumar Birthday

Featured Image Credit: kollyworld 

Related Articles