Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

ஜெயலலிதாவைப் பற்றிய அறியாத தகவல்கள்

தென்னிந்தியாவில், கர்நாடக மாநிலத்தில் உள்ள மாண்டியா மாவட்டம் பண்டவபுரா தாலுக்காவுக்கு உட்பட்ட மேலுகோட்டே என்ற இடத்தில் 1948 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி ஜெயலலிதா பிறந்தார். இவரது பிள்ளைப்பருவம் தனது அம்மாவின் அரவணைப்பில் தான் கழிந்தது, காரணம் தனது இரண்டாவது வயதிலேயே தனது தந்தையை இழந்துவிட்டார். குழந்தைப்பருவத்தில் தன் தாயுடன் பெங்கலூரில் வளர்ந்த ஜெயலலிதாவின் இயற்பெயர் கோமலவள்ளி.

கோமலவள்ளி ஜெயலலிதா ஆன விவரம்

அந்த இரும்பு மனிதியின் இயற்பெயர் கோமலவள்ளி. கோமலவள்ளி க்கு ஜெயலலிதா என்று பெயரிட்டதே கோமலவள்ளியின் பள்ளி பதிவேட்டிற்காகத்தான். ஆனால் அந்த ஜெயலலிதா என்கின்ற பெயரே ஜெயலலிதா சிறு வயதில் வாழ்ந்த இரண்டு இல்லங்களின் பெயரைக்கொண்டு தான் பெயரிடப்பட்டது. ஜெயா விலாஸ் மற்றும் லலிதா விலாஸ். அவர் வாழ்ந்த ஜெயா விலாஸ் இருந்த இடம் இன்றும் அவரது  குடும்பத்தாருக்கு உடையாதகவே உள்ளது.  மாறாக லலிதா விலாஸ் இடம் விற்கப்பட்டு அந்த  இடத்தில் இப்போது ஒரு விளையாட்டு மையம் உள்ளதாக தகவல். ஜெயலலிதாவின் அத்தைக்கு திருமணம் ஆன பின் தனது அத்தை பத்மவள்ளியுடன் மெட்ராஸ்க்கு வந்து தனது அத்தையின் அரவணைப்பில் பள்ளி படிப்பை படித்து முடித்தார் ஜெயலலிதா.

Lakshmipuram Sports club (Pic: deccanchronicle.com)

வழக்கறிஞர் கனவு

ஜெயலலிதா கல்வியில் சிறந்து விளங்கியிருக்க வேண்டியவர். சிறு வயது முதலே பாரதி கண்ட புதுமைப் பெண்ணாய் துணிச்சலோடு வாழ்ந்து வந்தார் ஜெயலலிதா. உங்களுக்கு தெரியுமா, தான் நடிகையாக வேண்டுமென்றும், அரசியல் தலைவர் ஆக வேண்டும் என்றும் ஜெயலலிதா ஒரு போதும் எண்ணியதில்லை. சர்ச் பார்க் காண்வெண்ட் பள்ளியில் படிக்கும் போது, படிப்பில் சிறந்து விளங்கிய ஜெயலலிதாவின் கனவே ஒரு வழக்கறிஞர் ஆக வேண்டும் என்பது தான். ஜெயலலிதாவின் 15 ஆவது வயதில் ஸ்டெல்லா மேரிஸில் படித்துக்கொண்டிருக்கும் போது அவரது தாயின் வற்புறுத்தலில் சினிமாவில் நடித்தார் ஜெயலலிதா.

1957 ஆம் ஆண்டு சசிரேக்கா பரினயத்தின் செவி வழி கதைகளை மையமாகக் கொண்டு வெளிவந்த மாயாபஜாரில் ஜெயலலிதா முதன் முதலில் வத்சலாவின் தோழியாக நடித்தார். ஜெயலலிதா முதன் முதலில் கதா நாயகி கதாப்பாத்திரம் ஏற்று நடித்தது ஒரு கன்னடத் திரைப்படம் “சின்னடா கொம்பே”, “தங்க பொம்மை” என்பதே அதன் தமிழாக்கம். வேடிக்கையான தகவல் என்னவென்றால் ஜெயலலிதா நடித்த முதல் திரைப்படத்திற்கு ”சென்ஸார் போர்ட்” ‘A’ சான்றிதழ் தான் வழங்கியதாம். அந்த காலத்தில் தான் நடித்த முதல் படத்தையே தன்னால் பார்க்க முடியாத நிலை தான் ஜெயலலிதாவுக்கு. ஜெயலலிதாவிற்கு அம்மு என்கிற செல்ல பெயரும் உண்டு. ஆனால் தனது நன்நெறியும் நிர்வாகத் திறனும் கொண்டு அனைவராலும் அம்மா என்று அழைக்கப்பட்டார்.

ஜெயலலிதாவிற்கு பிடித்த நிறமே பச்சை தான். ஆனால் தனது கட்சியின் சின்னம் இரட்டை இலையை குறிக்கும் வகையில் அவர் அதிகமாக பச்சை நிறத்தில் ஆடை அணிவதாக பலர் கருதுகின்றனர். ஜெயலலிதாவிற்கு செல்லப் பிராணிகள் வளர்ப்பதென்றால் கொள்ளை பிரியம். அவர் ஜூலி என்ற செல்ல நாய் ஒன்றை வளர்த்து வந்தார். 1998 ல் ஜூலியின் மறைவுக்கு பிறகு அவர் பிராணிகள் வளர்ப்பதை நிறுத்திவிட்டார்.

Sketch of Jayalalitha (Pic: pinterest.co.uk)

ஜெயலலிதாவின் தனித்திறமைகள்

ஜெயலலிதா கல்வியில் மட்டுமல்ல இதர தனித் திறமைகளிலும் சிறந்து விளங்கினார். அம்மு, கர்நாடக சங்கீதம், பியானோ,பரத நாட்டியம், மோகினியாட்டம், மனிப்பூரி நடனம் மற்றும் கதக் ஆகியவற்றை முறையே பயின்றவர். இதில் கர்நாடக இசையிலும் மோகினியாட்டத்திலும் வல்லமை பெற்ற கலைஞர் ஆவார்.

ஜெயலலிதா நடித்த முதல் தமிழ் திரைப்படம் இயக்குனர் C.V.ஸ்ரீதர் இயக்கிய“வெண்ணிற ஆடை”. இதில் கதாநாயகனாக நடித்தது எம் ஜி ராமச்சந்திரன் இல்லை என்றாலும், ஜெயலலிதா தமிழில் எம்.ஜி.ராமச்சந்திரனுடனே ஜோடி சேர்ந்து அதிக திரைப்படங்கள் நடித்தார். அரசியலுக்கு வந்த பிறகு என்று இல்லை சினிமாவில் நடித்துக்கொண்டிருக்கும் காலம் தொட்டே ஜெயலலிதா மீது ஆசை கொண்ட ஆண்மகன்கள் நிறைய உண்டு.

ஜெயலலிதா திருமணம் செய்து கொள்ளவில்லை என்றாலும் தெலுங்கு நடிகர் ஷோபன் பாபுவோடு சில காலம் ஒன்றாக வாழ்ந்ததாக கூறப்படுகிறது. இதனை ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் குடும்பத்தாரும் ஊடகங்கள் வாயிலாக ஒற்றுக்கொண்டுள்ளனர். இத்தனைக்கும் ஜெயலலிதா, ஷோபன் பாபுவோடு இணைந்து நடித்தது ஒரே ஒரு திரைப்படம் தான். ஜெயலலிதா எம்.ஜி.ராமச்சந்திரம் மீது மிகுந்த மரியதை கொண்டவராக இருந்தார். அதுவே எம்.ஜி.ஆரின் மனதில் அம்முவை அரசியலில் ஈடுபடச் செய்யலாம் என்று உதித்ததற்கு காரணமாக இருந்திருக்கும் போல. ஆம் அனைத்து இந்திய திராவிட முன்னேற்ற கழகத்தை தோற்றுவித்தவரும், அக்கட்சியின் தலைமை பொறுப்பில் இருந்தவருமான எம்.ஜி.ஆர் தான் ஜெயலலிதாவை வற்புறுத்தி அரசியலில் ஈடுபடச் செய்தார். முதலில் ஜெயலலிதாவிற்கு அரசியலில் பெரிதாக ஈடுபாடு இல்லை என்றாலும் அவரது வாழ்க்கை சூழ்நிலையும் எம்.ஜி.ஆரின் வற்புறுத்தலும் அரசியலில் முழுமையாக ஈடுபடச் செய்தது.

ஜெயலலிதாவுக்கு மேற்கத்திய கலாச்சாரத்திற்குட்பட்ட “பதப்படுத்தப்பட்ட உணவுகள்” தான் மிகவும் பிடிக்குமாம். 1965 முதல் 1980 வரை உள்ள காலகட்டம் ஜெயலலிதா, நடிகை ஜெயலலிதாவாக உச்சத்தில் இருந்த காலகட்டம். அதிலும் ஜெயலலிதா எம்.ஜி.ஆருடன் இணைந்து நடித்த அனைத்து திரைப்படங்களும் வெற்றி படங்களே. ஜெயலலிதா தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என கிட்டத்தட்ட 140 திரைப்படங்களில் நடித்துள்ளார். அதில் 85 தமிழ் படங்களும் இரண்டு இந்தி படங்களும் அடங்கும். இசாட் என்கின்ற ஹிந்தி படம் மட்டுமல்லாது மன் மௌஜி என்ற ஹிந்தி திரைப்படத்திலும் கிருஷ்ணர் வேடத்தில் ஒரு மூன்று நிமிடப் பாடல் காட்சியில் நடனமாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

In izzat with Dharmendra (Pic: financialexpress.com)

கின்னஸ் சாதனை

ஜெயலலிதாவின் பெயர் கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற்றிருக்கிறது. அவர் தனது வளர்ப்பு மகன் V.N.சுதாகரனின் திருமணத்திற்காக செய்த பிரம்மாண்ட திருமண ஏற்பாடுகளே, கின்னஸ் புத்தகத்தில் அவர் பெயரை இடம்பெற செய்தது மட்டுமல்லாமல் வருமான வரித்துறையினரை சற்றே சிந்திக்க வைத்தும்விட்டது. பிறகென்ன 1,50,000 அழைப்பாளர்கள், 50 ஏக்கர் நிலப்பரப்பில் பந்தல், சைவம், அசைவம் என இரு உணவு வகைகள் என ஏற்பாடுகள் அதுவரை இந்தியாவே கண்டிராத ஒரு பிரம்மாண்ட திருமணமாக அது அமைந்தது. அந்த திருமணத்திற்கான செலவு ரூ.10 கோடி இருக்கும் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள். அதன் விளைவாக ஜெயலலிதாவின் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையில் பிடிபட்ட கணக்கில் வராத பணமும், விலை உயர்ந்த பொருட்களின் விவரமும் தமிழக மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. அதன் விவரம் பின் வருமாறு 750 ஜோடி காலணிகள், 10,000 புடவைகள், 800 கிலோ வெள்ளி, 28 கிலோ தங்கம், 44 குளிரூட்டிகள், 91 கைகடிகாரங்கள் மற்றும் போயஸ் தோட்டத்தில் கட்டப்பட்டிருக்கும் பிரம்மாண்ட வீடு இன்னும் பல. இவ்வளவு உடைமைகள் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் தான் இருந்தது என்கிற செய்தியை பெரும் சர்ச்சையாக்கியது எதிர்கட்சியைச் சார்ந்த தொலைக்காட்சி ஒன்று.

Jayalalitha with Sasikala (Pic: indicivil.blogspot.in)

முதல்வர் ஜெயலலிதாவின் முதல் சம்பளம்

ஆனால் இத்தகைய சர்ச்சைக்கு உட்பட்ட ஜெயலலிதா, முதல்வராக பதவியேற்றபின் தனது முதல் மாத சம்பள காசோலையை வாங்க மறுத்தார். எனக்கு போதமான பணத்தை நான் சம்பாதித்து வைத்துள்ளேன், எனக்கு வெறும் 1 ரூபாயை சம்பளமாக கொடுங்கள் போதும் என்றும் கூறி,  அனைத்து அரசியல்வாதிகளையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.

Bold and Beautiful Jaya (Pic: dailyo.in)

ஆளுமையும் இறுதி நாட்களும்

என்னதான் எதிர்கட்சி செயல்தலைவராக இருந்தாலும் மு.க. ஸ்டாலின் ஜெயலலிதாவை இறுதிவரை ஜெயலலிதா அம்மையார் என்றே அழைத்தார். இது ஜெயலலிதாவின் கண்ணியத்தையும் மு.க.ஸ்டாலினின் பண்பையும் உணர்த்துகிறது. ஜெயலலிதா மீது இருந்த சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பில் ஜெயலலிதாவின் பதவி போனதிலிருந்து திரு.O.பன்னீர்செல்வம் தான் தமிழகத்தின் முதல்வராக இருந்து வந்தார். அந்த நாள் முதல் பெங்கலூரு பரப்பன அக்ரஹார சிறையிலிருந்து விடுதலை ஆன நாள் வரை, தமிழகத்தின் நிர்வாகத்தில் ஏற்பட்ட ஒவ்வொரு குழப்பமான தருணங்களிலும், இந்நேரம் செல்வி ஜெயலலிதா மட்டும் முதல்வர் பொறுப்பில் இருந்திருந்தால் இத்தகைய தடுமாற்றங்களை ஏற்பட விட்டிருக்க மாட்டார் என்று பாமரர்கள் முதற்கொண்டு கூறி வந்தனர். அதுவே ஜெயலலிதாவின் சிறந்த நிர்வாக திறனுக்கு கிடைத்த உன்னதமான அங்கீகாரம்.

செல்வி ஜெயலலிதா உடல் நிலை கோளாரின் கரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலே ஒரு பெரிய மர்மம் இருக்கிறது. செல்வி.ஜெயலலிதாவிற்கும் அவரது நெருக்கமானவர்களுக்கும் மிகவும் நெருங்கிய போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை சகல மருத்துவ வசதிகளுடன் இருக்கையில், அப்போலோ மருத்துவமனையில் அனுமதித்ததிலேயே, ஜெயலலிதாவுடன் இருப்பவர்களின் சதி புலப்படுகிறது. ஜெயலலிதாவுக்கு சுவாசக்குழாய் சம்மந்தமான கோளாரு என்று மேலோட்டமாகத்தான் முதலில் சொல்லப்பட்டது. இதில் அனைத்திலுமே மர்மம் நிரைந்திருக்கிறது. ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று  கூறத்துவங்கிய காலத்தில் எல்லாம் அமைதியாக இருந்துவிட்டு பல மாதங்கள் கழித்து, ஜெயலலிதா அம்மையாரின் மரணம் மற்றும் அவருக்கு அளித்த மருத்துவ சிகிச்சை தொடர்பான எல்லா கேள்விகளுக்கும் பதில் அளிக்கத் தயார் என்று அப்போலோ மருத்துவமனையின் நிறுவனர். இதுவும் சந்தேகத்தை அதிகரித்தது என்பதில் ஐயமில்லை.

ஜெயலலிதாவிடன், அவரது எதிர்கட்சி தலைவரிடம் பிடித்த விடயம் கூறுமாறு கேட்கும்போது முனைவர் கருணாநிதியின் தமிழ் தான் தனக்கு மிகவும் பிடித்தது என்று கூறினாராம். பிபிசி தொலைக்காட்சிக்காக ஜெயலலிதா கொடுத்த நேர்காணலில் கரன் தப்பரின் சில கேள்விகள் தன்னை கோபமடையச் செய்து தான் நாகரிகமாகவே நடந்துக்கொண்டார். தனது கோபத்தை பேட்டியின் முடிவிலே கரன் தப்பரின் மனம் மட்டும் புண்படும் வண்ணம் பேசி எழுந்து சென்றார்.  தனது தாயின் மரணத்தின்போது எப்படி இடிந்துப்போனாரோ அவ்வாறே எம்.ஜி.ஆர் அவர்களின் மரணத்தின் போதும் இடிந்து போனார் ஜெயலலிதா. அது எம்.ஜி.ஆர் மீது அவர் வைத்திருந்த மரிதையே ஆகும். எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பிறகு தனி ஆளாய் இருந்து அ.தி.மு.க கட்சியை வளர்த்தார் ஜெயலலிதா. அது மட்டுமல்லாது எம்.ஜி.ஆர் மறைவைத் தொடர்ந்து வந்த தேர்தலில் 27 இடங்களில் கட்சியை வெற்றியடையச் செய்தார்.  ஜெயலலிதாவின் சிறப்பில் மற்றுமொன்று, ஜெயலலிதா மறைவுக்குபின் பல அரசியல் நாடகங்களுக்குப் பிறகும் இரண்டு முதல்வர்கள் மாறி அதன் பின்பும் இன்று வரை தமிழக அரசு நிர்வாகம் ஒரு நிலை இல்லாத வண்ணமே செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது என்பதற்கு கடந்த வருட செய்தித்தாள்களில் பல ஆதாரங்கள் இருக்கின்றன.

Bending Ministers (Pic: thequint.com)

ஜெயலலிதாவின் ஆக்கப்பூர்வமான திட்டங்கள் எவை என்பது பற்றி ஆலோசிக்கையில் பெரிதாக சொல்வதற்கு ஒன்றுமில்லை என்றாலும் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களில் அவர் தன்னிகரான ஒருவர் தான் என்பது அவரது மறைவுக்குப்பின் பெரும்பாலான தமிழக மக்கள் உணர்ந்திருகின்றனர். அவரது அசாத்திய துணிச்சலும், ஆளுமைத்திறனுமே இத்தகைய மதிப்பிற்குரியவராக அவர் பார்க்கப்ப்டுவதற்கு காரணம்.

Web Title: Unknown Facts of Jayalalitha, Tamil article

Featured Image Credit: jayalalithachildhood.blogspot.in/thestorypedia.com

Related Articles