Dialog Big Talk – குறைந்த கட்டணத்தில் நீண்ட உரையாடல்

எமது நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்குச் செல்லும்போது, ஒரு வட்டத்திலிருந்து வெளியே செல்லும் பிரச்சினையை நாம் அனைவரும் எதிர்கொள்கிறோம். நீங்கள் விடுமுறையில் அல்லது வியாபார பயணங்களுக்காக வெளிநாடுகளுக்குச் செல்கையில், நீங்கள் பாதுகாப்பாக இருப்பதாக உங்கள் அன்புக்குரியோருக்கு அறிவிப்பது அல்லது ஒரு ஒன்றுகூடலை ஏற்பாடு செய்யுமாறு உங்கள் வியாபார பங்காளர்களுக்கு அறிவிப்பது என்பது மிகவும் முக்கியமானதாகும்.

ஒரு புதிய நாட்டுக்குச் செல்வதென்பது, விமான நிலையத்தில் மேலதிகமாக நேரத்தை செலவிடுவதாகவும், அல்லது ஒரு தொலைபேசி வலையமைப்பில் இணைந்துகொள்வதற்கான கடைகளில் ஏறி இறங்குவதாகவுமே உள்ளது. ஒரு தொலைபேசி இணைப்பை பெறுவதற்காக உங்களது கடவுச்சீட்டு தகவல்களை வழங்க வேண்டி ஏற்படுகின்றது. இங்கு, நீங்கள் எந்த அறிமுகமும் இல்லாத ஒரு வியாபாரியிடம் உங்களது பெரும்பாலான தகவல்களை வழங்க வேண்டி ஏற்படுகின்றது.

இந்த முற்கொடுப்பனவு இணைப்புக்கள் பெரும்பாலும் விலை அதிகமானதாகவும், இலங்கையர்களின் தேவைகளை பூர்த்தி செய்யாதவையாகவுமே இருக்கின்றன. பெரும்பாலான நேரங்களில், இலங்கையர்கள் தேவை ஏற்படுகின்றபோது தொலைபேசி அழைப்பு அல்லது குறுந்தகவல் மூலம் வீட்டுடனோ அல்லது அலுவலகத்துடனோ நம்பகமான வழிகளின் ஊடாக தொடர்பை ஏற்படுத்த வேண்டியிருக்கின்றனர். சில நாடுகளில் இணைய அணுகலுக்கான செலவும் அதிகமாகவே உள்ளது. நீங்கள் உங்களது தங்கும் செலவுகளை விட அதிகமாக இணைய அணுகலுக்கு செலவிட வேண்டி ஏற்படலாம்.

அளவுகடந்த ரோமிங் கட்டணம் குறித்த அச்சமின்றி உங்கள் அன்புக்குரியோருடன் பேசுங்கள்.

இந்த நிலையைக் கருத்திற்கொண்ட டயலொக, Big Talk என்ற சேவையை அறிமுகப்படுத்துகின்றது. சமீபத்தில் இந்தியா, மலேசியா, சிங்கபூர், எமிரேட்ஸ், சவூதி அரேபியா, தாய்லாந்து, இந்தோனேசியா, பங்களாதேஷ், நேபாள் மற்றும் காம்போடியா போன்ற பிரபலமான ஆசிய, மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளோர் அதிர்ஷ்டசாலிகளாவர். இந்த Big Talk ஆனது கையடக்கத் தொலைபேசி வலையமைப்புக்களை மாற்றும் தொந்தரவை இல்லாமலாக்கின்றது. இந்த Big Talk ஆனது தினமும் இலங்கைக்கு 50 நிமிட வெளிச்செல்லும் அழைப்புக்களை வழங்குகின்றது. எனவே, கட்டணம் முடிந்துவிடுமோ என்ற அச்சமில்லாமல், உங்கள் பங்காளர், நண்பர், குடும்பத்தினருடன் பேசலாம். இந்த சேiவை இன்னும் பல நாடுகளுக்கு விரிவுபடுத்துவதற்கு டயலொக் திட்டமிட்டுள்ளது. எனவே, நீங்கள் விரும்பும் எந்த இடத்துக்கும் செல்லலாம. புதியதொரு சிம் அட்டையை தேடுவது குறித்து கவலையடையவும் தேவையில்லை.

நம்மில் பெரும்பாலானோர் சர்வதேச ரோமிங்கில் இருக்கும்போது, அழைப்புக்களுக்கு பதிலளிப்பதில்லை. அத்தோடு, அதிகளவு கட்டணம் அறவிடப்டுமோ என்ற அச்சத்தில் அவசர அவசரமாக பேசிவிட்டு அழைப்பை துண்டிக்கும்போது, நம் அன்புக்குரியோரும் பதட்டமடைந்து போவர். ஆனால், Big Talk மூலம், தினமும் எங்கிருந்தும் 50 நிமிட உள் வரும் அழைப்புக்களுக்கு பதிலளிக்கலாம். எனவே, உங்களது குடும்ப அங்கத்தவர்களோ, உங்களது முதலாளியோ உங்களுக்கு அழைப்பு எடுக்கையில், அதிகளவு செலவாகிவிடுமோ என்று நீங்கள் அஞ்சத் தேவையில்லை. நீங்கள் எந்தவொரு கவலையுமின்றி, அவர்களுடன் நீண்ட நேரம் பேசலாம். உள்முகசிந்தனைகொண்ட நபர்களுக்கு, எல்லையற்ற குறுந்தகவல் SMS களை Big Talk வழங்குகின்றது. எனவே, உங்கள் நண்பர்கள், குடும்பம், சகபாடிகளுக்கு உங்கள் செயற்பாடுகளை குறுந்தகவல் மூலம் அறிவித்துக்கொண்டே இருக்கலாம்.

நீங்கள் தொடர்பில் இருக்கிறீர்களா? இல்லையா? என்ற மன அழுத்தமின்றி, சுதந்திரமாகப் பயணியுங்கள்.

இந்த வசதியைப் பெற்றுக்கொள்வதற்கு உங்கள் தொலைபேசியில் #103*1# ஐ அழையுங்கள். முற்கொடுப்பனவு, பிற்கொடுப்பனவு என்ற வித்தியாசமில்லாமல் அனைத்து டயலொக் வாடிக்கையாளர்களுக்கும் இந்த வசதி கிடைக்கின்றது.

5 அமெரிக்க டொலர்களுக்கு, பின்வரும் சேவைகளை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்:

  • எல்லையற்ற SMS
  • நாட்டுக்குள் எல்லையற்ற அழைப்புக்கள்
  • இலங்கைக்கு 50 நிமிட வெளிச்செல்லும் அழைப்புக்கள்
  • உலகில் எங்கிருந்தும் 50 நிமிட உள்வரும் அழைப்புக்கள்

இனிமேல், நீங்கள் விடுமுறையில் இருக்கும்போது, உங்கள் தொலைபேசி இணைப்பின் கடன் எல்லை குறித்து பதட்டமடையாமல் இருக்கலாம். அத்தேடு, ஏனைய நாடுகளில் உங்கள் தனிப்பட்ட தகவல்களை நீங்கள் அறியாதோருக்கு வழங்கி, ஒரு புதிய கையடக்கத் தொலைபேசி இணைப்பைப் பெறுவதில் உள்ள அசௌகரியங்களையும் அதிர்ச்சியான ஓட்டைகளில் சிக்கிக்கொள்வதையும் தவிர்த்துக்கொள்ளலாம். Dialog Big Talk ஆனது, நீங்கள் இணைப்பில் இருக்கிறீர்கள் என்பதை அறிந்துகொண்டே, சௌகரியமாகப் பயணிக்கும் வாய்ப்பைத் தருகின்றது.

படங்கள்  – Pixabay.com

Related Articles