பெண்களே! பொருத்தமானது எதுவோ அதனைத் தேர்ந்தெடுங்கள்!!

இந்த ஆக்கத்தை வழங்கியோர்

பெண்களின் வாழ்க்கை எல்லோரும் நினைப்பதுபோல் இலகுவான ஒன்றல்ல. வேலைக்குச் செல்லாமல் வீட்டில் சும்மாதான் இருக்கிறார்கள் என்று பலர் சொல்லக் கேட்கும் பெண்கள் வீட்டில் நிறைவேற்றும் பணிகளின் பட்டியல் சொல்லிமாளாது. சமைத்தல், துணிதுவைத்தல், பிள்ளைகளை பராமரித்தல், கணவனது கருமங்களில் கண்ணாயிருத்தல், பிள்ளைகளின் கல்வி தொடர்பான அலுவல்கள், பொருள் கொள்வனவு, வீட்டுப் பராமரிப்பு என அவை நீண்டு செல்லும்.

இப்போதெல்லாம் பெரும்பாலான பெண்கள் வேலைக்கும் செல்கிறார்கள். அலுவலக கருமங்களில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு, வீட்டு வேலைகளையும் தலையில் தூக்கிப் போட்டுக்கொள்ளும் பெண்கள் பெரும்பாலும் தன்னைப்பற்றி சிந்திப்பது குறைவு, தன்னைப்பற்றி சிந்திப்பதற்கான நேரம் குறைவு என்றும் சொல்லலாம். இந்நிலையில் தனது உடல், உள, சமூக நலன்குறித்து சரியான முடிவுகளை எடுப்பது பெண்களின் வாழ்க்கையில் ஓர் பெரும் சவால் எனலாம்.

IMAGE COPYRIGHT; MAS BRANDS (PVT) LTD (amanté)

ஒரு சமூகத்தின் ஆணிவேராக கருதப்பட வேண்டிய பெண்கள், தாய், மகள், மனைவி, சகோதரி, தோழி என பல்வேறு அவதாரங்களில் வாழ்க்கையின் முக்கிய பங்காக திகழும் பெண்கள், தாம் அழகாக இருக்கவேண்டும் என்று எப்போதுமே நினைக்கும் பெண்கள், தமது அழகு தனது உடல் உள ஆரோக்கியத்தில் தங்கியிருப்பதன் அடிப்படையை விளங்கிக்கொள்ளல் அவசியம். உளம்சார் நலன்கள் உடலியல் காரணிகளிலும், உடலியல் சார்ந்த நலம் உளவியல் காரணிகளிலும் பின்னிப் பிணைந்திருப்பது நாமறிந்ததே.

தமது உடலியல் காரணிகள் தமது அழகில் எவ்வாறான தாக்கத்தை செலுத்தும் என்பது பற்றி அறிந்திருத்தல் அவசியம் அல்லவா? தனது குடும்பம், உறவுகள், சுற்றம் என அவர்களுக்காகவே வாழ்ந்து செயலில் அழகாக இருக்கும் பெண்கள், இவற்றின் மத்தியில் தனது தோற்ற அழகுக்கும் முக்கியத்துவம் வழங்குதல் அவசியம். அது அவர்களது தன்னம்பிக்கையையும், திடகாத்திரத்தையும் உறுதிசெய்யும் என்பதில் ஐயமில்லை. சுவர் இருந்தால்தானே சித்திரம் வரையலாம்?!

இவ்வளவு பீடிகையும் பெண்கள் பாராமுகமாக இருக்கின்ற அல்லது பெரும்பாலும் கண்டுகொள்ளாத அவர்களது உள்ளாடைகளின் தேர்வு தொடர்பானது. நீங்கள் அணிகின்ற உள்ளாடைகளை உங்களுக்குப் பொருத்தமானதாக தேர்வுசெய்வதன் முக்கியத்துவம் என்ன? உள்ளாடைகளின் அளவுசார் அறிவு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது? உள்ளாடைகளுக்கும் பெண்களின் அழகுக்கும் என்ன தொடர்பு? பெண்களின் ஆரோக்கியத்தில் அவற்றின் பங்கு அவ்வளவு பெரிதா? அறிந்துகொள்வோம் வாருங்கள்.

IMAGE COPYRIGHT; MAS BRANDS (PVT) LTD (amanté)

தவறான உள்ளாடைகளின் தேர்வு பற்றிய செய்திகள் மற்றும் அவற்றின் விளைவுகள் போன்ற உரையாடல்கள், கருத்துக்கள் போன்றவை இன்று சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றமையை அவதானித்திருப்பீர்கள். இன்று தகவல் தொடர்பாடலின் வளர்ச்சி இவ்வாறான விடயங்களை உடனுக்குடன் தருவதில் என்றும் சளைத்ததில்லை. இருந்தாலும் அவ்வாறான தகவல்கள் அனைத்துமே சரியான, உண்மைத்தன்மையுள்ள விடயங்களை எமக்குச் சொல்வதில்லை. எனவே இவ்வாக்கம் மூலம் சில முக்கிய தகவல்களை உங்களது நலன்கருதி பகிர்கிறோம்.

இயற்கைக்கு மாற்றமான முறையில் எமது உடலமைப்பை, அதன் செயற்பாட்டை குலைக்கும் அல்லது இடையூறு விளைவிக்கும் வகையில் நாம் எதனைச் செய்தாலும் அதன்மூலம் வருகின்ற பக்க விளைவுகளை நாம் அனுபவித்தாகவேண்டிய நிலைமை தவிர்க்கமுடியாதது. இது நாம் அணிகின்ற உடைகள், உள்ளாடைகள் அனைத்திற்கும் பொருந்தும். உள்ளாடைகள் இறுக்கமாக, சீரற்றதாக, அளவில் பெரியதாக அல்லது சிறியதாக, உரிய சுகாதாரத்திற்கு குந்தகம் விளைவிக்கும் துணிவகைகளில் செய்யப்பட்டதாக இருக்கும் பட்சத்தில் அவை கொண்டுதரப்போகின்ற விளைவுகள் பெரும்பாலும் எமக்கு ஆரோக்கியமானதாக இருக்க வாய்ப்பில்லை.

IMAGE COPYRIGHT; MAS BRANDS (PVT) LTD (amanté)

உடல், உள இயக்கம் இரண்டிலும் எப்போதும் வேகமாக இருக்கும் பெண்களுக்கு உள்ளாடைகள் என்றைக்கும் ஓர் உந்துசந்தியாக, இலகுவானதாக, இருப்பது அவசியம்தானே? நேரமின்மை, இவ்விடயம் தொடர்பான போதிய அறிவின்மை, தவறான அல்லது பொருத்தமற்ற உள்ளாடைகளை அணிவதால் ஏற்படக்கூடிய குறுங்கால மற்றும் நீண்டகால நோய் நிலைமைகள் குறித்த விழிப்புணர்வு இன்மை போன்ற காரணங்களால் இது தொடர்பாக அதிக விழிப்புணர்வு இன்றி இருக்கும் பெண்கள் பொருத்தமான, பிடித்தமான, உள்ளாடைகளின் அளவுசார் அம்சங்களை தெரிந்துகொள்வது எப்படி? என்று யோசிக்கும் பெண்கள் amante – dare to be இனது Bra size guide இனை அணுகுங்கள். இவ்விணையி உங்களுக்கு ஓர் சிறந்த வழிகாட்டியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை

IMAGE COPYRIGHT; MAS BRANDS (PVT) LTD (amanté)

பெண்ணானவள் ஒரு சிறந்த குடும்பத்தை உருவாக்குவதில் ஆணிவேராய் செயற்படுபவள். அதன்மூலம் சிறந்த சமூகமொன்றை கட்டியெழுப்பும் பொறுப்பும் அவளுக்குள்ளது. ஒரு சமூகத்தை கட்டியெழுப்பும் அடிப்படை அம்சமாக அச்சமூகத்தின் பெண்களே என்றைக்கும் அறியப்படுகின்றனர். அத்தகைய பெண்களை, அவர்களின் நலனை அவர்கள் கருத்திற்கொள்ளும் அதேவளை, அவர்களால் பயன்பெறும் நாமும் அவர்களது நலன் பேணுவதை தலையாய கடமையாக கொள்ளல் அவசியம்.

இக்கட்டுரையை உங்களுக்கு வழங்கியது global.amantelingerie.com

Related Articles