Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website. The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

Dialog Sense 2: ஸ்மார்ட் போன்களை மலிவானதாக்குதல்

Dialog Sense 2 ஆனது சந்தையில் குறைந்த விலையை இலக்ககாக் கொண்ட ஒரு ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசியாகும். பொதுவாக ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகள் குறைந்த விலையில் வருவதில்லை. ஆனால், Sense 2 ஆனது உயர்தரமான ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளின் சில செயற்பாடுகளை, குறைந்த விலையில் கொண்டுவருகின்ற ஒரு முயற்சியாகும்.

Dialog Sense 2 – பின்புறத் தோற்றம்

Sense 2 ஆனது விசேடமாக தொலைத்தொடர்பாடல் ஜாம்பவான்களுக்காககவும், அதன் காட்சிகளுக்காகவும் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த கையடக்கத் தொலைபேசியின் பின்பகுதியில் டயலொக் இலட்சினை துருவப்பட்டுள்ளது. இந்த கையடக்கத் தொலைபேசியின் பின்பகுதியை திறந்தால், லிதியமினாலான கழற்றக்கூடிய பற்றரியும் உண்டு. அதிலும் டயலொக் இலட்சினை பொறிக்கப்பட்டுள்ளது.

Sense 2 இன் சட்டகமானது பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, செம்மைப்படுத்தப்பட்ட உலோகப் பூச்சைக் கொண்டிருக்கின்றது. இவை, இந்த கையடக்கத் தொலைபேசிக்கு சிறந்த தோற்றத்தை வழங்குகின்றது. இது உறுதியானதாகவும், கையிலிருக்கும்போது கையில் பொருந்துவதாகவும் இருக்கின்றது. அத்தோடு, 4 அங்குல திரையையும் இது கொண்டிருக்கின்றமையால், சட்டைப் பையில் இலகுவாக வைத்துக் கொள்ளவும் முடியும்.

விசேட அம்சங்கள்

Sense 2 ஆனது 1.3GHz Quad core processor ஐ கொண்டிருக்கின்றது. அத்தோடு, 512 MB RAM இல் இயங்குகின்றது. மேலும், 4GB உள்ளக களஞ்சியத்தையும் கொண்டிருக்கின்றது. ஆனால், இந்த உள்ளக களஞ்சியத்தை MicroSD ஊடாக 32GB வரை மேம்படுத்தலாம். இந்த கையடக்கத் தொலைபேசியானது Android 6.0 இல் இயங்குவதால், உங்களுக்கு அபிமானத்துக்குரியதை நீங்கள் பயன்படுத்தலாம். அத்தோடு, செயலி (App) மற்றும் OS களை பயன்படுத்துவது இலகுவானதாகும்.

Dialog Sense 2 – முன்புறத் தோற்றம்

இந்த கையடக்கத் தொலைபேசியின் திரையானது 4 அங்குல அளவுடைய, தொடுதிரை ஆகும். இது 480 x 800px வலுக்களை கொண்டிருக்கின்றது. இதன் லிதியத்தினால் ஆன பற்றரியானது 2050mAh  சக்தியைக் கொண்டிருக்கின்றது. ஆனால், திரை சிறியதாக இருக்கின்றமையால், சக்தி செலவாகும் அளவு குறைவாகவே உள்ளது. எனவே, ஒரு தடவை சார்ஜ் செய்தால், போதுமானளவு பயன்படுத்தலாம்.

பின்பகுதியில் உள்ள கமராவானது 2MP இனைக் கொண்டிருக்கின்றது. அத்தோடு ஃப்ளேஷும் காணப்படுகின்றது. நீங்கள் அவசரமாக ஒரு காட்சியை படம்பிடிக்க வேண்டுமாயின். இதன் மூலம் போதிய படங்களை எடுக்கலாம். ஒருவேளை, அவசரமாக ஒரு வீடியோ அழைப்பை எடுக்க வேண்டுமாயின், முன்பகுதியிலுள்ள VGA கமராவை பயன்படுத்தலாம்.

Sense 2 ஆனது 3G HAPA+  வலையமைப்பில் அனைத்து தரநிலை தொடர்பாடல் நெறிமுறைகளையும் கொண்டிருக்கின்றது. அத்தோடு, 802.11 b/g/n Wi-Fi மற்றும் bluetooth ஐயும் கொண்டிருக்கின்றது.

முடிவு

Sense 2 ஆனது கையிலிருக்கும்போது உறுதியானதாக இருக்கும். அத்தோடு, அதன் நேர்த்தியான அளவு, கொண்டு செல்வதற்கு இலகுவானதாகும். இந்த கையடக்கத் தொலைபேசி சிறந்த வசதிகளைக் கொண்டிருக்கின்றபோதும், அதன் குறைந்த விலைதான் அதனை மிகவும் கவர்ச்சிகரமானதாக ஆக்குகின்றது. எனவே, குறைந்த விலையில், அவசரமாக ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளை வாங்குவதற்கு விரும்புகின்றவர்களுக்கு, இது சாலப்பொருந்தும்.

இந்த கையடக்கத் தொலைபேசியின் விலை 6,990 ரூபா ஆகும். இதற்கு ஒரு வருட உத்தரவாதமும் வழங்கப்படுகின்றது. இதனை நாடு முழுவதிலுமுள்ள டயலொக் வாடிக்கையாளர் சேவை நிலையங்களில் வாங்கலாம்.

Related Articles