நாளைய தலைவர்களுக்கான தார்மீக பொருளாதாரம்

வழங்குவது CFA

 

அபிவிருத்தி அடைந்த நாடான ஐக்கிய அமெரிக்க நாடுகளில் மிகவும் பிரபலமான கற்கைநெறிகளில் ஒன்றான “பட்டய நிதியாண்மை ஆய்வு” (Chartered Finance Analyst – CFA) கற்கை நெறியானது தற்போது இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளிலும் பிரபலமடையத் தொடங்கியிருக்கிறது.

இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளிலும் CFA கற்கை நெறியானது பிரபலமடைவது தொடர்பில், CFA கற்கைநெறியின் இலங்கைக்கான விளம்பர தூதர் Rahul Hundlani அவர்கள் கருத்து தெரிவிக்கையில், இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் CFA கற்கைநெறியானது நிதியியல் தொடர்பான கற்கைநெறிகளில் மிக உயர்வான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அத்துடன், நிதியியல் தொடர்பில் ஆலோசனை வழங்குபவர்களும் சந்தையில் அரிதாகவே இருக்கிறார்கள். இதன் விளைவாகவே, CFA கற்கைநெறி மீதான ஆர்வமும், கேள்வியும் அதிகரித்துள்ளதாகக் கூறுகிறார்.

படம் – CFA

பெரும்பாலும் இலங்கை போன்ற நாடொன்றில் தனிநபர் ஒருவருக்கு அதீதமான நிதிசார் ஆலோசனைகளை வழங்குபவர்களில் முதன்மையானவர்கள் பங்குத் தரகர்கள் ஆவார்கள். ஆனால், அவர்கள் வெறுமனே ஆலோசனைகள் வழங்குபவர்களே தவிர, உங்களுடைய முதலீட்டு அளவையோ, முதலீட்டு தீர்மானங்களையோ மேற்கொள்ளுபவர்களோ / தீர்மானிப்பவர்களோ அல்ல. அதற்க்கு மேலதிகமான திறன்கள் அவசியமாகிறது. இது இலங்கை போன்ற நாடொன்றுக்கு புதிய திறன்களாக இருப்பதுடன், இந்த திறன் இடைவெளியையே CFA கற்கை நெறியும் வழங்க எதிர்பார்க்கிறது.

போருக்கு பின்னதாக இலங்கையின் பொருளாதார வளர்ச்சி என்பது உறுதியாகவும், அதிகமாகவும் இருக்கிறது. ஆனால், இந்தநிலை இன்னமும் இலங்கையின் நிதிசார் செயல்பாடுகளில் பிரதிபலிப்பதாக இல்லை என்றே கருதவேண்டி இருக்கிறது. இதற்க்கு உதாரணமாக, இலங்கையில் இன்னமும் தனிநபர் சமபங்கு (Private Equity Industry) தொழில்துறையானது வளர்ச்சியடைவில்லை என்பதனைக் காட்டலாம். அதுமட்டுமல்லாது, இலங்கையில் காணப்படும் சீரற்ற வணிகக்கொள்கைகள் , ஸ்திறமற்ற அரசியல் நிலைமைகள் என்பனவும் துணிகர முதலீட்டுக்கான (venture capitalism) வாய்ப்புக்களை இன்னமும் பூரணமாக உருவாக்காத நிலையினையே கொண்டிருக்கிறது.

மேற்கூறிய நிலையில், இலங்கையில் மிகமெதுவான மாற்றமே அரசியல் ரீதியாகவும், நிதியியல்ரீதியாகவும் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த காலகட்டத்தில்தான் இலங்கையின் எதிர்கால பொருளாதாரத்துக்கு இளமையான, அறிவுபடைத்த பொருளியல்சார் திறமையாளர்களை உருவாக்கவேண்டியது அவசியமாகிறது. Rahul Hundlani கருத்துரை பிரகாரம், இலங்கையில் உருவாக்கப்படும் CFA கற்கை தேர்ச்சியாளர்கள் மேற்கூறிய இலக்கை அடைவதை நோக்காக கொண்டு உருவாக்கப்படுகிறார்கள் என்பதுடன், அடுத்த தலைமுறையினர் முடிவுகளை தகுதியாகவும், நெறிமுறைகள் சார்ந்ததாகவும் (Ethical) எடுப்பதனை உறுதி செய்வதாகவும் குறிப்பிடட்டு உள்ளார்.

படம் – CFA

தற்போதைய நிலையில் நிதிசார் முடிவுகள் நெறிமுறைகளுக்கு (Ethics) சார்ந்ததாக எடுக்கப்படுகின்றதா ? இல்லையா ? என்பது தொடர்பில் அதீத கேள்விகள் எழுப்பப்படுகின்றது. இது நிச்சயமாக ஆரோக்கியமான விவாதத்துக்கு வழிவகுப்பதுடன், எதிர்கால தலைவர்கள் பொறுப்புடன் நெறிமுறைசார் நிதித் தீர்மானங்களை எடுக்கவும் உந்துதலாக அமையும். இதனையே, CFA கற்கை நெறியூடாக அடிப்படையில் கற்கையாளர்களுக்கு கற்பிக்கப்படுவதாகவும் Rahul Hundlani தெரிவிக்கிறார்.

CFA கற்கை நெறியானது தனியே கல்வியறிவை மாத்திரம் வழங்காது, குறித்த கற்கைநெறியில் தேர்ச்சி பெற்றவர்கள் வருடம்தோறும் அங்கத்துவத்துக்காக மறுப்பு படிவத்தில் (Annual Disclaimer Form) கையொப்பமிடும் பொழுது, தாம் பணிபுரியும் அல்லது செய்யும் தொழிலை சட்டத்துக்கு உட்பட்டதாகவும், நெறிமுறை சார்ந்ததாகவும் செய்வதனை உறுதிசெய்ய வலியுறுத்துகிறது. அதுமட்டுமல்லாது, CFA அதனது தேர்ச்சியாளர்கள் எவரேனும் அதனது நெறிமுறைகளுக்கு புறம்பாக செய்லபடுவதனை கட்டுபடுத்தவும், அது தொடர்பில் CFA நிறுவனத்துக்கு அறிவிக்கவும் இணையவழி வாய்ப்புக்களை அனைவருக்கும் ஏற்படுத்தி தந்துள்ளது. இதன்மூலமாக, மேற்கொள்ளப்படும் முறைப்பாடுகள் உலகளாவிய CFA நிறுவனத்தின் பொறுப்பாளர்களால் முழுமையாக விசாரணைக்குட்படுத்தப்பட்டு, அவை நிருபிக்கப்படும்போது கடுமையான நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றது.

CFA மேலும் நெறிமுறைகள் தொடர்பில் கவனம் செலுத்துவதற்காக தொழில்நுட்பம்சார் புதியவிடயங்களையும் பயன்படுத்துகிறது. குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (Artificial Intelligence) , மேம்படுத்தப்பட்ட நிதியியல் தொழில்நுட்பம் ஆகியவற்றை கற்கை நெறிகளுக்குள் உள்ளடக்குவதுடன், உலகளாவிய இணைய வர்த்தக பரிமாற்றங்களுக்கும்  பயன்படுத்துகிறது. இது நிதியியல்சார் துல்லியத்தன்மையை பேணுவதுடன், நெறிமுறைசார் வர்த்தகப் பற்றிமாற்றங்களையும் உறுதி செய்ய உதவியாகவுள்ளது. CFA சான்றிதழை பெற்றவர்கள் மற்றும் CFA கற்கைநெறிகளுக்கு பதிவுசெய்து கொள்ளுபவர்கள் என அனைவருமே CFAயின் அதீத நலன்களை அனுபவிக்க முடியும் என கூறப்படுகிறது. குறிப்பாக, CFA இலங்கை நிறுவனமானது தனது தேர்ச்சியாளர்களுக்கும், கற்கை நெறியாளர்களுக்கும் மாதாந்த கலந்துரையாடல் நிகழ்வை ஏற்பாடு செய்கிறது. இதில் விஷேட அதீதிகள் கலந்துகொண்டு, தற்போது நடைமுறையிலுள்ள நிதியியல் சார் முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதுடன், அதுசார் அறிவுரைகளையும் வழங்குவார்கள். இது கற்கையாளர்களின் கற்கைநெறிக்கும், தேர்ச்சியாளர்களின் பணிக்கும் மிகப்பெரும் உதவியாக அமைகிறது. அதுமட்டுமல்லாது, CFA கற்கைநெறிகளை கற்கும் 1-3 நிலையில் உள்ள கற்கை நெறியாளர்களுக்கென  “கற்கையாளர்கள் சபை” (Candidate Council) உருவாக்கப்பட்டுள்ளது. இதனூடாக, பரீட்சைகளுக்கு தயார் ஆவதற்கான தேவையான வளங்கள் பரிமாற்றம் செய்யப்படுவதுடன், மாதிரி பரிட்சைகளும் நடாத்தப்படுகிறது.

படம் – CFA

CFA இலங்கை ஸ்தாபனமானது வருடம்தோறும் பல்கலைக்கழக மாணவர்களிடையே ஆய்வுச் சவால் (Research Challenge) போட்டிகளை நடாத்துகிறது. இதில் மாணவர்கள் குழுவாக பங்கேற்று பொது நிறுவனங்களின் (Public Companies) பரிமாற்றங்கள் தொடர்பில் அறிக்கைகளைச் சமர்ப்பிப்பார்கள். இதிலிருந்து வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, உலகளாவிய ரீதியில் CFA ஸ்தாபனத்தினால் நடாத்தப்படும் ஆய்வுச் சவால் போட்டிகளில் பங்குகொள்ள வாய்ப்பளிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாது, CFA ஸ்தாபனமானது நிறுவனங்களிடையே மிகசிறந்த ஆய்வு அறிக்கைகளை அறிக்கையிடும் நிறுவனம் மற்றும் சிறந்த முதலீட்டு தொடர்புகளை கொண்ட நிறுவன அணி ஆகியவற்றை ஊக்குவிக்கவும், கவுரவிப்பதற்குமென வருடம்தோறும் முதலீட்டு சந்தை விருதுகளை (Capital Market Awards) நடாத்துகிறது.

CFA கற்கை நெறியானது அதிகபட்சமாக மூன்று வருடங்களை அடிப்படையாகக் கொண்ட சுயகற்கை (Self Study) கற்கை நெறியாகும். இது சுமார் 300 வேலை மணித்தியாலங்களையும் தன்னகத்தே உள்ளடக்கி உள்ளது. சில சமயங்களில் மிகத் திறமையான மாணவர்கள் கற்கைநெறி தொடர்பில் மேலதிக அனுபவத்தையும், அறிவையும் பெற்றுக்கொள்ள பகுதிநேர தொழிலாளர்களாக கடமை புரிபவர்களாக இருக்கிறார்கள். இவ்வாறாக, வேலை செய்துகொண்ட கற்கைநெறியை பின்தொடர்பவர்கள் குறைந்தது பரீட்சைக்கு அண்மைய வாரங்களிலாவது வேலைக்கு விடுமுறை எடுத்துக்கொண்டு முழுமையாக கற்கைநெறியில் கவனத்தை செலுத்துவதன்மூலம் தேர்ச்சி விகிதத்தை அதிகபடுத்திக் கொள்ள முடியுமேன Rahul Hundlani பரிந்துரை செய்கிறார்.

இலங்கையில் CFA கற்கைநெறியை கற்றுக்கொடுக்க உத்தியோகபூர்வ அதிகாரம் பெற்ற ஒரே கற்கை நிறுவனமாக Mercury Institute உள்ளது. இந்த நிறுவனம் CFA கற்கைநெறியின் 1-3 வரையான நிலைகளுக்கும் கற்கை வசதியினை வழங்குகிறது. CFA கற்கைநெறியின் பரீட்சைகளானது ஒவ்வொரு வருடமும் ஆனி மாதத்தில் இடம்பெறுவதுடன், முதலாம் நிலை பரீட்சைகள் மாத்திரம் மார்கழி மாதத்திலும் இடம்பெறுகிறது.

CFA கற்கைநெறியில் தேர்ச்சியை பெற்றுக்கொள்ள எந்தவகையான குறுக்குவழிகளும் இல்லையென்றே சொல்லவேண்டும். கற்கைநெறியிலேயே, CFA மிக கடினமானதும், சவாலானதுமான கற்கைநெறி என குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் தேர்ச்சி பெறுவதன் மூலமாக, விஷேட குறிப்பிடத்தக்க திறன்களை பெற்றுக்கொள்ள முடிவதுடன் பூகோளமயமாக்கப்பட்ட பொருளாதாரம்சார் உலகிலும் பங்கெடுத்துக்கொள்ள ஏதுவாக அமையும்.

மேலதிக விபரங்களுக்கு : Facebook – CFA SriLanka

பட்டய நிதியாண்மை ஆய்வு (CFA) கற்கை நெறியானது gold-standard தரப்படுத்தப்பட்ட உலகளாவிய நிதியாண்மைக் கல்வித் தகைமை ஆகும். 2018 ஜூன் மாத  பரீட்சைகளுக்கான   விண்ணப்பங்கள் இப்போது மேற்கொள்ளப்படுகின்றன. CFA Srilanka வின் Facebook பக்கத்திநூடு அல்லது +94 77 366 1931 என்ற தொலைபேசி இலக்கத்தினூடு தொடர்பு கொள்ளுங்கள்.

Featured Image : europol.europa.eu

Related Articles