புத்திசாலித்தனமான முறையில் உங்கள் பணத்தை முதலீடு செய்வதற்கான நான்கு வழிமுறைகள்.

நீங்கள் வெறுமனே உங்கள் பணத்தை வங்கியில் வைப்பிலிட்டு வைத்திருந்தால், பணம் சம்பாதிப்பதற்கான வழிமுறைகளை நீங்கள் இழக்க நேரிடும்.

பணத்தை முதலீடு செய்வதானது ஒரு கடினமான பணியாக அமையலாம். ஆனால் அதனை சிக்கலாக கருத வேண்டிய அவசியமில்லை. சிறந்த முதலீடானாது உஙகள் பணம் உங்களுக்காக கடினமாக உழைக்க உதவும்.

அந்தவகையில், உங்களால் செய்யக்கூடிய சிறந்த முதலீடுகள் குறித்து முதலில் விளங்கிக் கொள்வோம்.

அதை எளிதில் அணுகக் கூடிய நான்கு அடிப்படை வழிமுறைகள் காணப்படுகின்றன.

நிலையான வைப்பு

நிலையான வைப்பானது, நிலையான வருமானம் ஈட்டித் தரும் ஒரு முதலீடு ஆகும். குறிப்பிட்ட காலத்திற்கு குறிப்பிட்ட அளவு பணம் முதலீடு செய்யப்படுகிறது. இதில் உங்கள் முதலீட்டிற்கான வட்டியானது முதலீடு செய்யப்பட்ட பணத்தையும், முதலீட்டு காலத்தையும் அடிப்படையாகக் கொண்டதாகும். ஆரம்ப முதலீட்டுடன், நிலையான வைப்பின் மூலம் வட்டியை நீங்கள் மறுமுதலீடு செய்யலாம்.  இதன் மூலம் வட்டி கூடுவதுடன், வட்டி விகிதத்தை பொறுத்து முதலீடும் அதிகரிக்கும்.

பங்குகள்

நீங்கள் பங்குகளில் முதலீடு செய்யும் போது, நீங்கள் நிறுவனமொன்றின் பங்குதாரர் ஆகக்கூடும். குறித்த நிறுவனம் லாபம் ஈட்டும் பட்சத்தில், லாபம் ஈவுத் தொகையாகப் பகிரப்படும். இதேவேளை, நிறுவனத்தின் பங்கு மதிப்பு அதிகரிக்கும் போது உங்கள் பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் நீங்கள் கூடுதல் வருவாய் ஈட்டலாம். பங்கு கொள்வனவின் மூலம், நிலையான வைப்பின் மூலம் நீங்கள் பெறும் வருமானத்தைவிட அதிகமாக ஈட்டலாம் என்ற போதிலும், இதில் ஆபத்து அதிகமாகும். ஏனெனில், நிறுவனத்தின்; பங்கு மதிப்பு நிலையாக இருக்காது. ஒருவேளை கூடலாம் அல்லது குறையலாம். ஆனால், தகுதியான முதலீட்டு தொழில்முறையாளர்களின் முறையான ஆலோசனையின் மூலம் இந்த முதலீட்டில் உள்ள ஆபத்தை இலகுவாகக் கையாளலாம்.

வீடு- மனை முதலீடு

வீடு- மனைகளின் மீதான முதலீடானது ஒரு பழமை வாய்ந்த முதலீட்டு முறையாகும். ஒரு முதலீட்டாளராக, நீங்கள் சொத்துக்கள் அல்லது நிலங்களை வாங்கலாம். அவற்றை வாடகைக்கு விடுவதன் மூலமோ அல்லது சொத்துக்களின் மூலதன மதிப்பு அதிகரிக்கும் போது அவற்றை விற்பனை செய்வதன் மூலமோ நீங்கள் வருவாய் ஈட்டலாம்.

இந்த முதலீடுகளுக்கு சில ஆராய்ச்சிகள் அவசியம் ஆகும் என்பதுடன், அவற்றின் செற்திறன்(is this you mentioning resale value or it should be செயற்திறன்) கண்காணிக்கப்படுதல் வேண்டும். ஆனால் இவற்றை செய்வதற்கு உங்களுக்கு காலமும் பிற விடயங்களும் தடையாக இருப்பின், உங்கள் சார்பாக நிபுணர்களை இந்த முதலீட்டை மேற்கொள்ள பயன்படுத்திக் கொள்ளலாம்.

யுனிட் ட்ரஸ்ட்

உங்களுடையதும், பிறருடையதுமான பல முதலீட்டாளர்களின் பணத்தை கொண்ட நிதி, யுனிட் ட்ரஸ்ட் ஆகும். யுனிட் ட்ரஸ்ட் ஆனது, முதலீட்டு நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் ஆகியோரால் நிர்வகிக்கப்படும். அந்தவகையில், ஒரு முதலீட்டாளராக, பங்குகள் போன்ற முன்தொகுக்கப்பட்ட முதலீடுகளிலோ, நிலையான வருமானம் ஈட்டித்தரும் முதலீடுகளிலோ அல்லது இரண்டிலும் முதலீடு செய்வதா என்பதை நீங்கள் தீர்மானிக்கலாம்.

ஸ்மார்ட்டான முறையில் சிறந்த முதலீட்டை தெரிவுசெய்வதன் மூலம் நீங்கள் உங்கள் பணத்தை மேலும் அதிகரித்துக் கொண்டே செல்லலாம். முதலீடுகளை மேற்கொள்வதில் உங்களளுக்கு ஏதேனும் சிக்கல்கள் அல்லது சந்தேகங்கள் இருப்பின் ஒரு தகுதி உடைய முதலீட்டு நிபுணருடன் தொடர்பில் இருங்கள்.

தென்கிழக்கு ஆசிய பகுதிகளில் கல்விக்கான முதலீடுகளை உயர்த்துவதை கருத்தில் கொண்டு எடுக்கும் முயற்சியாக இந்த கட்டுரையை உங்களுக்கு வழங்குவோர் “CFA ஸ்ரீலங்கா”, இணைந்து வழங்குவோர் CFA இந்தியா, CFA பாகிஸ்தான் மற்றும் CFA வங்கதேசம்: https://www.facebook.com/UnderstandInvesting

Related Articles