உயர்தர பரீட்சையின் பின் எதிர்காலம் என்ன ஆவது ?

உயர்தரப் பரீட்சையை நிறைவு செய்தபின் ஏற்படும் உணர்வானது சுவாரஸ்யமானதும், சுதந்திரமானதுமாகும். நிஜத்தில் 13 வருடகாலமாக மிகப்பெரும் பரீட்சைக்கு தயாராகி, அதனை நிறைவு செய்தபின் ஏற்படும் சுதந்திர உணர்வு வார்த்தைகளினால் விபரிக்க இயலாத ஒன்றாகும்.  அப்படிப்பட்ட மிகப்பெரும் பரீட்சையை முடித்த பின்பு, நமது எதிர்காலம் எதை நோக்கியதாக அமையப்போகிறது? நாம் எதிர்காலத்தில் என்னவாகப்போகிறோம்? எனும் தடுமாற்றம் உருவாவதினை தவிர்க்க முடிவதில்லை.

pixfeeds.com

பாலர் பருவம் தொடங்கி இளமைக்கால வயது வரை பள்ளிக்கூடத்திலேயே அடைபட்டிருந்த மாணவர்கள் தமது உயர்தரப் பரீட்சை முடிந்ததும் தமது பூரண சுதந்திரத்தை அனுபவிக்கத் துடிப்பதில் தவறேதுமில்லை. ஆனால்,அந்த சுதந்திரத்தினை தவறான வழிகளில் பயன்படுத்தி நமது வளமான எதிர்காலத்தை நாமே பாழாக்கிவிடாமல் இருப்பதில் உறுதியாகவிருப்பது அவசியமாகிறது. அப்படியாயின், நமது வாழ்வின் அடுத்த கட்டத்தினை  தீர்மானிப்பது என்கிற சந்தேகம் எல்லோருக்குள்ளும் எழுகிறது. இதற்கான விடையை தேட முன்பு, நம்மை நாம் சற்றே ஆசுவாசப்படுத்தி கொள்ளுவதும், தயார்படுத்தி கொள்ளுவதும் அவசியமாகும்.

உயர்தர பரீடசையின் பின்பு செய்யக்கூடியவை

பரீட்சை முடிந்ததும், சிலர் சுதந்திரமாகவிருக்கவே முதலில் தீர்மானிக்கிறார்கள். எனவே இந்த நேரத்தில், நீங்கள் செய்ய நினைக்கும் விடயங்களை முதலில் சிறியதாக பட்டியல் போட்டுக் கொள்ளுங்கள். பரீட்சை காரணமாக செய்ய முடியாத சில விஷயங்களை செய்ய முயற்சி செய்யுங்கள். இது அடுத்த கட்டத்தை நோக்கி உங்களை தயார் செய்துகொள்ள முதல் ஆசுவாசப்படுத்திக்கொள்ள உதவும். இந்த பட்டியலை தயார்செய்ய பெரிதாக உங்களை குழப்பி கொள்ளாதீர்கள். மிகச்சிறிய அளவில் கீழ் கூறியவாறு ஆரம்பியுங்கள்.

appleaccessoriesreview.com

தவறவிட்ட திரைப்படங்களை பார்வையிடுங்கள்

உயர்தர பரீட்சை காரணமாக, நீங்கள் பார்க்க விரும்பியும், பார்க்கத்  தவறவிட்ட நல்ல திரைப்படங்களையும் தெரிவுசெய்து, அவற்றினை பார்வையிட தொடங்குவதிலிருந்து உங்கள் பட்டியலை ஆரம்பியுங்கள். இவ்வாறு, நீங்கள் தவறவிட்ட சின்ன சின்ன விடயங்களை அனுபவிப்பதிலிருந்து உங்கள் அடுத்த கட்டம் நோக்கிய நகர்வை ஆரம்பியுங்கள்.

பயணங்கள், சுற்றுலாக்களை திட்டமிடுங்கள்.

உயர்தர பரீட்சையின் பின்பு, உங்கள் பாடசாலை நண்பர்களை நீங்கள் சந்திப்பது அரிதாகிவிடும். உங்கள்  வாழ்க்கை திட்டமிடல் காரணமாக, பலரை நீங்கள் சந்திக்க முடியாமலே போகக்கூடும். எனவே, அவர்களுடன் மறக்கமுடியாத பயணத்தை ஒழுங்கு செய்து கொள்ளுங்கள். இது உங்களுக்கு மறக்கமுடியாத அனுபவத்தினை சுமந்து செல்ல உதவியாகவிருக்கும்.

குறுகிய வேலைவாய்ப்பு (Internship) ஒன்றுக்கு செல்லுதல்

உயர்தர பரீட்சை முடிவுக்கு பின்னதாக, உங்கள் வாழ்க்கையை முடிவு செய்யும் இன்னுமொரு கல்வியைத்தொடர முன்னதாக, ஏதேனும் சிறு தொழில் முயற்சிகளில் ஈடுபட முயற்சி செய்யுங்கள். இது உங்களுக்கான தொழில் ஆர்வத்தை அதிகரிக்க உதவுவதுடன், எதிர்காலத்தை நோக்கிய திட்டமிடலுக்கும் உதவும்.

ytimg.com

புதியவற்றினை படியுங்கள் / அறியுங்கள்

நீங்கள் முன்பு கூறியதுபோல, உயர்கல்வியைத் தொடர்ந்து ஒரு வேலையைப் பெற்றுக்கொள்ளுவதற்கு மட்டுமாக சிந்திக்காமல், புதிதாக ஏதேனும் அறிவினை பெற்றுக்கொள்ளுவதற்காகவோ அல்லது புதிதாக ஏதேனும் ஒன்றினை அறிந்துகொள்ளுவதற்கான முயற்சியில் ஈடுபடுங்கள்.

ஆங்கிலம் மற்றும் கணினி தொடர்பான கல்வியறிவுத் திறன்களை மேம்படுத்துவதற்கு இதனைவிட சிறந்த நேரம் அமையாது. உயர்தர கற்கைநெறியின் அழுத்தத்தில் கணணி கல்வி தொடர்பிலும், ஆங்கில கல்வியறிவு தொடர்பிலும் கவனத்தை செலுத்த தவறியவர்களுக்கும், குறித்த அறிவினை மேலதிகமாக மேம்படுத்த விரும்புபவர்களும் இது மிகச்சிறந்த காலமாக அமையும்.

ஆங்கில கல்வியினை கற்றுக்கொள்ள விரும்புபவர்கள் அல்லது ஆங்கில கல்வித்தகமையை மேம்படுத்திக்கொள்ள விரும்புபவர்கள் பிரிட்டிஷ் கவுன்சில் (British Council) எனும் முன்னணி ஆங்கிலமொழி கற்கை  நிறுவனத்தில் இணைந்துகொள்ளுவது பயனுள்ளதாகும். இங்கு, தரமான ஆங்கிலக் கல்வியறிவை பெற்றுக்கொள்ளுவதுடன், புதிய நண்பர்களையும் தேடிப் பெற்றுக்கொள்ள முடியும். பிரிட்டிஷ் கவுன்சில் போன்ற கல்வி நிலையத்தில் நீங்கள் பெற்றுக்கொள்ளும் கல்வித்தகமையும், அனுபவமும் உங்களது அடுத்த கட்ட வாழ்க்கை தரத்துக்கு மிகவும் பயனுள்ளதாகவும், உத்திரவாதம் வழங்குவதாகவும் அமைவதுடன், நீங்கள் செலுத்துகின்ற பணத்துக்கு மேலதிகமான பயனை தருகின்ற கல்வியாகும் அமையும் என்பதில் ஐயமில்லை.

apexbusiness.lk

இவ்வாறு மேலே கூறிய, புதியவற்றை நிச்சயமாக முயற்சி செய்யுங்கள். இதன்மூலமாக, உங்கள் வாழ்க்கைக்கு நிறையவே அனுபவங்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள். பழையதிறமைகளை விட்டுவிட்டு வாழ்க்கையில் மீளெழுந்து வர. இந்த தேடலும், புதிய முயற்சிகளும் உங்கள் ஆளுமை வளர்ச்சிக்கு மிக முக்கியமானதாகவிருக்கும். அது உங்கள் உயர்தர கல்விக்கு பின்னதான எதிர்காலத்தை முடிவு செய்வதில் ஒரு நல்ல முதல் படியாக இருக்கும்.

Related Articles