Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

நடப்பு பொருளாதார சூழ்நிலையில் இலங்கையின் தொழிற்துறை எவ்வாறு தொழிற்படும்?

அனுசரணை CFA

Travis Gomez – Frontier Research (Pvt) Ltd நிறுவனத்தின் உற்பத்தி தலைமையாளர் ROAR நிறுவனத்துடன் இலங்கைத் தொழிற்துறை தொடர்பிலும், அதன் வளர்ச்சி மற்றும் சவால்கள் தொடர்பிலும் கலந்துறையாடிய போது,

இலங்கையின் உள்நாட்டு போர் முடிவுக்கு வந்ததன் பிற்பாடாக அதனது பொருளாதார வளர்ச்சிப் பாதையில் ஒரு சீரான முன்னேற்றம் காணப்பட்டது. குறிப்பாக, 2010 – 2015 வரை இலங்கையின் பொருளாதார வளர்ச்சி விகிதமானது சராசரியாக 6.4% வீதத்தை எட்டியிருந்தது. ஆனாலும், அதற்பின்னாக 2017 வரை இலங்கையும், அதன் வல்லுநர்களும் எதிர்பார்த்த அபிவிருத்திநிலையை எட்டவில்லை என்றே சொல்ல வேண்டும். குறிப்பாக, உயர்வாகவிருந்த பொருளாதார வளர்ச்சி விகிதமானது  2015ம் ஆண்டின் இறுதியில் 4.8% மாக சரிந்ததுடன் 2016ம் ஆண்டு 4.4%மாக சரிந்தது. 2017ன் முதலாம் காலாண்டு முடிவில் இது 3.8%மாக மேலும் குறைவடைந்துள்ளது. இதற்கு மிக முக்கிய காரணியாக , இலங்கையினை 2015ம் ஆண்டு முதல் மிகப் பாரிய அளவில் பாதித்துவரும் வரட்சியினை காரணியாகச் சொல்ல முடியும். வடக்கு , கிழக்கு, வடமேற்கு, வட மத்திய மற்றும் மத்திய மாகாணங்களை மிக பாரிய அளவில் வறட்சி பாதித்ததன் விளைவாக, இலங்கையின் மிகப்பெரிய துறைகளில் ஒன்றாக விவசாயத்துறை பாதிக்கப்பட்டதுடன், அதன் பங்களிப்பும் மிக மோசமடைந்தது. இது மட்டுமல்லாது, குறித்த ஆண்டுக் காலப்பகுதியில் இலங்கையின் பணவீக்கமும் எதிர்பாராதவிதமாக அதிகரித்திருந்தது. இது 4%த்திலிருந்து 2016ம் ஆண்டுக்கு பின்னதாக 6%மாக அதிகரித்துள்ளது அதிகரித்துள்ளது. 2017ம் ஆண்டிலும், மோசமான காலநிலையின் குழப்பமும், பணவீக்க நிலையம் தொடருமானால் பொருளாதார வளர்ச்சி என்கிற பேச்சுக்கே இடமில்லை என பொருளாதார வல்லுனர்கள் கணித்து இருக்கிறார்கள். இதற்க்கு மேலதிகமாக, இலங்கையின் மொத்த தேசிய உற்பத்தியில் பொதுப்படுகடனின் விகித அளவும் அதிகரித்துக்கொண்டே செல்லுகிறது. இது 2016ல் மொத்த தேசிய உற்பத்தியில் 75%மாக இருக்கிறது. ஆனால், 2017ம் ஆண்டில் இலங்கையின் தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்தின் தரவுகளின் பிரகாரம் இலங்கையின் வேலையின்மை நிலையானது 4.4%த்திலிருந்து 4.1%மாக முதலாம் காலாண்டில் குறைவடைந்திருக்கிறது.

மேற்கூறியவற்றின் அடிப்படையில் இலங்கையின் பொருளாதார சூழ்நிலையானது தற்போது ஒருவித கலவையான பெறுபேற்றை கொண்டுள்ளது. இந்த சூழ்நிலையில் இலங்கையிலுள்ள தொழிற்துறைகளும், நிறுவனங்களும் எவ்வாறு செயல்படுகின்றன ? அவற்றின் வளர்ச்சி எவ்வாறு உள்ளது ? அவை சந்திக்கும் சவால்கள் எவை ? என Roar ஊடகம் ஆய்வுக்குட்படுத்தியுள்ளது.

வங்கித் துறை

படம் – zenithangle.com

2017ம் ஆண்டின் ஜூன் மாதம் வரையான ஆய்வுகளின் பிரகாரம், வங்கித்துறையானது 2016ம் ஆண்டுடன் ஒப்பிடுமிடத்தும் மிக மெதுவான சாதகமான வளர்ச்சியையே கொண்டுள்ளது. குறிப்பாக, இலங்கையின் முன்னணி வங்கிகள் சாதகமான வளர்ச்சிநிலை குறியீடுகளையே கொண்டிருக்கின்றன. உடகட்டமைப்பு வசதிகளின் காணப்படும் உறுதியான வளர்ச்சி, கட்டுமானத்துறைக்கான கடன் மற்றும் வீட்டுக்கடன் தொடர்பான கடன்களுக்கான வட்டிவிகிதம் உயர்வாக உள்ளமை, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் வங்கிக் கடனில் அதிகம் சார்ந்திருக்கும் நிலை என்பவை இந்த சாதகநிலைக்கு பிரதான காரணியாக உள்ளது. ஆனாலும், இந்த கடன் வளர்ச்சி விகிதமானது வங்கிகளுக்கு சாதகத்தை வழங்குகின்ற அளவுக்கு, பாதகத்தன்மையையும் வழங்கியிருக்கிறது என்பதனை குறிப்பிட வேண்டும். குறிப்பாக, கடன்நிலையானது வங்கிகளின் இதரபல நடவடிக்கைகளில் பிரதிபலிக்கத் தொடங்கியிருக்கிறது. தொழில்நுட்பத்தின் உதவியுடன், வங்கிக்கிளைகளை விரிவுபடுத்துவதற்கு பதில் வங்கிசேவைகளை மாத்திரம் விரிவுபடுத்தல், வங்கியில் தொழில்புரிவபவர்களை குறைத்து, அவர்களது வேலைகளை தொழில்நுட்ப உதவியுடன் மேற்கொள்ளல் என பல்வேறு வடிவங்களில் பிரதிபலிக்கத் தொடங்கியுள்ளது. அதுமட்டுமல்லாது, வங்கிகளில் பெறும் கடனின் அளவுக்கு சமமாக, மீளசெலுத்தாத கடனின் அளவும் அதிகரித்து செல்வது வங்கிகளுக்கு மிகப்பெரும் நெருக்கடியாக உருமாறியுள்ளது. இது வங்கிக்கடனில் வங்கிகள் கையாளும் முறைகளை மேலும் வினைத்திறன் வாய்ந்ததாக மாற்றவேண்டிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. உதாரணமாக, மிகக்குறுகியகாலத்தில் வாடிக்கையாளர்களின் கடன்தரநிலையை உறுதிசெய்து கடன் வழங்கவேண்டியுள்ளது. எனவே, இந்த கடன்தரநிலையை வினைத்திறன் வாய்ந்த முறையில் குறுகிய காலத்தில் மேற்கொள்ளுவதன் மூலமே மீளசெலுத்தாத கடனின் அளவையும் குறைக்கலாம். இவைதான் வங்கித்துறையில் தற்போது வங்கிகள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவாலாக உள்ளது. இதனை தவிர்த்து பார்க்கும்போது, ஏனைய துறைகளுடன் ஒப்பிடுமிடத்து வங்கித்துறையின் முதலீட்டுக்கான இலாபமே சிறப்பாக உள்ளது.

நிதித்துறை

படம் – goto.com

வங்கித்துறையானது சாதகாமான வளர்ச்சியைக் கொண்டுள்ள நிலையில், அதனுடன் தொடர்புடைய நிதித்துறையானது சற்றே பின்தங்கியநிலையில் உள்ளது. இலங்கையிலுள்ள உரிமம் பெற்ற நிதிநிறுவனங்கள் வாகனத் தொழிற்துறையின் (Automobile Industry)  வட்டி விகிதங்களில் ஏற்படுத்தப்பட்ட கொள்கை மாற்றங்களினால் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. அதுபோல, இறக்குமதி வாகனங்களின் வரி அதிகரிப்பும் இதற்க்கு ஒரு முக்கியகாரணியாக அமைந்துள்ளது. காரணம், உரிமம் பெற்ற நிதி நிறுவனங்களின் மிகப்பெரும் நிதிமூலமாகவிருப்பது வாகனக் கடனாகும். ஆனால், அதிகரிக்கப்பட்ட இறக்குமதி வரிகளின் விளைவாக, வாகனங்களின் கொள்வனவில் வீழ்ச்சி ஏற்பட அது நேரடியாகவே நிதி நிறுவனங்களில் பெறப்படும் கடனின் அளவை குறைத்துள்ளது. அதுமட்டுமல்லாது, இலங்கை மத்திய வங்கியின் உத்தரவுக்கு அமைய உரிமம் பெற்ற நிதி நிறுவனங்கள் அதியுயர்வான முதலீட்டை (Capital) இருப்பில் கொண்டிருக்க வேண்டும் என்கிற சட்டமும் உரிமம் பெற்ற வங்கிகளின் பெறுபேற்றில் தாக்கத்தை செலுத்துவதாக மாறியுள்ளது.

வேகமாக நுகரப்படும் நுகர்வு பொருட்களின் துறை (FMCG Industry)

மத்தியவங்கியின் இறுக்கமான கட்டுப்பாடுகள் காரணமாக அதிகரித்துள்ள வட்டிவீதங்கள், அதிகரித்துள்ள வரி வீதங்கள், நுகர்வோரின் வருமானத்திலும், நுகர்வுக்கான முதலீட்டிலும் ஏற்பட்டுள்ள குறைவு என அனைத்துமே இந்தத் துறையின் பெறுபேற்றை பாதித்துள்ளன. குறிப்பாக, வட்டிவீதங்களில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பானது மக்களின் நுகர்வுக் கொள்கையில் மிகப்பெரும் சரிவை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, இலத்திரனியல் பொருட்கள் சேவைகளின் நுகர்வு இதனால் மிகப் பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அதுபோல, கடன்கள் மற்றும் கடனட்டைகளுக்கு அதிகரித்துள்ள வட்டிவீதங்களாலும் இந்த நுகர்வுத்துறை ஆட்டம் கண்டுள்ளது எனலாம்.

கடனட்டை வழியாக அதிகரித்துள்ள கடன்களை குறைக்கவென மத்திய வங்கி அறிமுகபடுத்தியுள்ள சட்டங்கள் இந்த துறையைப் பாதித்துள்ள போதிலும், அது ஒரு குறுங்கால பாதிப்பாகவே இருக்கும் எனச் சொல்லப்படுகிறது. மக்களது வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றம் மற்றும் அதிகரித்து வரும் பிறப்பு வீதம் என்பன மக்கள் தொகையை அதிகரிப்பதுடன் மக்களது தேவையும் சேர்த்தே அதிகரிக்கிறது. இதனால், நிச்சயம் நீண்டகாலத்தில் வேகமாக நுகரப்படும் நுகர்வு பொருட்களுக்கான கேள்வி அதிகரிக்கும் என்றே எதிர்வு கூறப்படுகிறது.

சுற்றுலாத்துறை

படம் – marvelloussrilankalk.blogspot.com

சுற்றுலாத்துறை எதிர்பார்க்கைகளுக்கு மீறியவகையில் திடமாக வளர்ச்சி அடைந்துகொண்டே செல்லுகிறது எனலாம். இவ்வாண்டு சுற்றுலாத்துறை கணக்கிட்ட 2.2 மில்லியன் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மோசமான காலநிலை மற்றும் சர்வசேத விமானநிலைய திருத்தங்கள் காரணமாக எட்டப்பட முடியாது போகலாம் என்கிற ஐயப்பாட்டை கொண்டுள்ளபோதும், சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு பஞ்சமில்லை எனலாம்.

இலங்கையின் பிரபலாமான பல்வேறு விடுதி குழுமங்கள் தற்போதே தங்களது விடுதிகளை புனரமைப்பு செய்யவும், புதிதாக விரிவுபடுத்தவும், புதிதாக நிர்மாணிக்கவும் திட்டங்களை வகுக்க தொடங்கி விட்டன. இவற்றில் சிலவற்றின் திட்டங்கள் நடைமுறைப்படுத்த ஆரம்பிக்கபட்டு விட்டது என்று கூட சொல்லலாம்.

சுற்றுலாத்துறையின் வளர்ச்சியானது தூங்கிக்கிடந்த உல்லாச விடுதிகளுக்கு வருமானத்தை மட்டுமல்லாது, போட்டித்தன்மையையும் கூடவே வளர்த்துவிட்டிருக்கிறது என்று சொல்லலாம். விடுதிகளில் தங்குபவர்கள் வீதத்தை அதிகபடுத்தல், தேர்ந்த தொழிலாளர்களை கண்டறிதலும், வேலைக்கு அமர்த்தலும் என பல்வேறு காரணிகள் போட்டித்தன்மையுடன் உல்லாசதுறையில் முதலீடு செய்தவர்களுக்கு அழுத்தத்தையும் வழங்கத் தொடங்கியுள்ளது. இவற்றுக்கு மேலாக எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று வருடங்களில் உலகப்புகழ் பெற்ற வர்த்தக நாமம் கொண்ட போட்டியாளர்கள் இலங்கையில் நிர்மாண நிலையிலிருக்கும் தங்களது விடுதிகளை திறக்கவும், புதிய வர்த்தக நாமமங்களை இலங்கைக்கு அறிமுகப்படுத்தவும் தயாராகிக்கொண்டு இருக்கிறார்கள். இது தற்போது சுற்றுலாத்துறையில் இருப்பவர்களுக்கு, மேலதிக போட்டித்தன்மையும், அழுத்தத்தையும் வழங்கப்போகிறது.

ஒட்டுமொத்தமாக சுற்றுலாத்துறையில் வளர்ச்சி என்பதனை பார்த்தாலும், நிறையவே பட்டியலிடப்பட்ட விடுதிகளின் தொழிற்பாட்டு இலாபமானது கடந்தகாலங்களுடன் ஒப்பிடுமிடத்து குறைவடைந்துள்ளது. இதற்க்கு மிகப்பெரிய காரணம், மோசமான காலநிலை மற்றும் சில நாடுகள் பாதுகாப்பு காரணங்களுக்காக இலங்கையை பரிந்துரை செய்யாததன் காரணமாக இரத்துச் செய்யப்பட்ட முன்பதிவுகளே ஆகும்.

ஆனாலும், சுற்றுலாத்துறையின் முறைசாரா விடுதிகளான விருந்தினர் விடுதிகள் (Guesthouse) போன்ற தங்குமிட வசதிகளை காலை உணவுடன் மட்டும் வழங்கும் விடுதிகளின் வளர்ச்சி பட்டியல்படுத்தப்பட்ட விடுதிகளுக்கு சவால்மிக்கதாக வளர்ச்சியடைந்துள்ளது. இதற்க்கு மிகப்பெரிய காரணமாக, சுற்றுலாத்துறை சார் இணையத்தளங்களின் வருகையை சொல்லலாம். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு இந்த முறைசாரா விடுதிகளின் வளர்ச்சியானது 50%மாக கணக்கிடப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தத்தில், இலங்கையின் சுற்றுலாத்துறையானது திடமான வகையில் வளர்ச்சியைக் கொண்டுள்ள நிலையில், முறைசார் பட்டியல்படுத்தப்பட்ட விடுதிகளால் அந்த வளர்ச்சியை முழுமையாக உள்வாங்கிக்கொண்டு அல்லது கைப்பற்றிக்கொண்டு வளர்ச்சியடைய முடியாததாக உள்ளது. இதனால், இந்த பட்டியல்படுத்தப்பட்ட விடுதிகளின் வளர்ச்சியில் குறுங்கால தேக்கநிலையையே உணரக் கூடியதாக இருக்கும்.

CFA கற்கைநெறியானது நிதிசார் கற்கைநெறிகளின் தகுதிநிலையில் Gold-Standard தகுதிக் கற்கைநெறியாக இனம்காணப்பட்டுள்ளது. இந்த கற்கைநெறியின் ஜூன் 2018ம் ஆண்டுக்கான தேர்வுப் பரீட்சைக்கான அனுமதிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மேலதிக விபரங்களுக்கு  Facebook or at +94 77 366 1931 ஆகியவற்றின் மூலமாக தொடர்புகொள்ள முடியும்.

தலைமைப் புகைப்படம் – lamudi.lk

Related Articles