மாற்றத்தை ஏற்படுத்திய பெண் – இராணி பாங்க்

கட்சிரோளி மாவட்டம், மஹாராஷ்டிர மாநிலத்தின் கிழக்கு பகுதியில் உள்ள ஒரு சிறிய மாவட்டம். இந்தியாவில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் மாவட்டங்களில் ஒன்றாகும். இங்கு மக்களின் வாழ்க்கைமுறை, அவர்களது கிராமத்திற்குளேயே இருப்பதால் அவர்களுடைய வாழ்க்கைமுறையில் எளிதாக எந்த மாற்றத்தையும் கொண்டு வருதல் இயலாது. டாக்டர். இராணி பாங்க், இந்த பழங்குடி மக்களின் பிரச்சனைகளை அறிந்தவுடன் இந்த மாவட்டத்தில் உள்ள கிராமங்களுக்கு வந்து உண்மை நிலையை அறிய முற்படும்வரை, பொதுமக்களுக்கும், வெளி உலகத்திற்கும் தெரிந்ததெல்லாம் இந்த கிராமங்கள் என்றாலே வறண்ட பகுதி, நக்சல்களின் பகுதி, பழங்குடியினர் வாழும் பகுதி என்பது தான். ஆனால் ராணி கண்டறிந்த பிரச்சனைகள் வேறு, குழந்தை மரணங்கள், பெண்களின் ஆரோக்கிய குறைபாடு மற்றும் முக்கியமாக இங்கு வெகுவாக பரவும் தொற்று காய்ச்சல்கள்.

ஒரு பெண்ணாக பல சமூக மாற்றங்களை ஏற்படுத்தி பலருக்கு எடுத்துக்காட்டாக வாழும் முன் மாதிரி பெண்களின் சாதனைக் கதைகளை ”Changemaker campaign” மூலம் மக்களிடம் “UN Women India” ன் துணையுடன் எடுத்துச் செல்வதில்  “MG Motor”-ம் ”The Better India” -வும் பெருமகிழ்ச்சி அடைகின்றது.அந்த வரிசையில் நாம் இங்கு காண இருப்பது மோனிஷா பெஹல் பற்றியும் அவர் செய்த சமூக மாற்றத்தைப் பற்றியும் தான்.

விழிப்புணர்வு

இங்கு வாழும் மக்களுக்கு மலேரியா காய்ச்சல் அதிகம் பரவுவதாக தெரிந்தது. அந்த கிராமத்து மக்களின் பிரச்சனைகளை அவர்கள் சரியாக புரிந்துகொண்டார்களா? என்பதை அறிந்து கொண்டு, பிறகு அதனை தெளிவாக அவர்களுக்கு புரியவைக்க எடுத்த முயற்சியில் தொடங்குகிறது ராணி பாங்கின் வெற்றி.

இந்த கட்சிரோளி மாவட்டத்தில் உள்ள கிராமத்து பழங்குடியினருக்கு, அவர்களது பிரச்சனையை புரிய வைப்பது, சற்று கடினமான ஒன்று தான். ஏனெனில், ஒரு கைம்பெண், தனது இரண்டு வயது குழந்தை மரண வலியில் மூச்சு திணறி துடித்துக்கொண்டிருந்த போது டாக்டர் பாங்கிடம், கொண்டு வந்து, தன் குழந்தையை காப்பாற்றுமாறு  கூற, அருகில் உள்ள பெரிய மருத்துவமனைக்கு கொண்டு சென்றால் தான் காப்பாற்ற முடியும் என்ற மருத்துவரின் வலியுறுத்தலை ஏற்காமல், குழந்தையை கிராமத்தை விட்டு எங்கும் கொண்டு செல்ல விடவில்லை. அதனால் தான் அந்த குழந்தையை டாக்டர் பாங்கினால் காப்பாற்ற முடியவில்லை. இந்த ஒரு சம்பவம் மட்டுமல்ல, இதைப்போன்று, நூற்றுக்கணக்கான குழந்தை மரணங்களும், மருத்துவகுக்கு ஒத்துழைக்காத நேயாளிகளால் ஏற்பட்ட மரணங்களும், ராணி பாங்கை, சற்று சிந்திக்க வைத்தது.

இந்த கிராம மக்களிடம் நெருங்கி பழகி புரிந்து கொண்டதில், பிரச்சனையின் வீரியத்தை ஒட்டி ஆழ்ந்து சிந்தித்ததிலும், இராணி பாங்க் உணர்ந்தது ஒன்றை மட்டும் தான். இந்த கிராமத்து பழங்குடி மக்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்குவதற்கு முன்பு முக்கியமாக அளிக்க வேண்டியது, நவீன மருத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வைத் தான். சுத்தமாகவும், சுகாதாரமாகவும் மருத்துவ சிகிச்சைகள் செய்வதின் அவசியத்தை அந்த மக்களின் மனதில் ஆழமாக பதியவைக்க முற்பட்டார்.

Dr. Abhay and Rani Bang  (Pic: wikipedia)

கிராமத்தில் மருத்துவ பரிசோதனை

முதலில், அந்த கிராமத்தில் மலேரியா பாதிக்கப்பட்ட நேயாளிகளின் இரத்த பரிசோதனைக்காக எடுக்கப்பட்ட இரத்த மாதிரியில் இருக்கும் மலேரியா கிருமியை மைக்ரோஸ்கோப் உதவியுடன் அதே நோயாளியிடமும், அந்த நோயாளியின் உறவினர்களிடமும் காட்டினர். அதன் பின் தான் அவர்களுக்கு மலேரியா காய்ச்சல், கிருமியினால் பரவும் ஒரு நோய் என்பது புரிந்தது. பின் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை எடுத்துக்கொள்ள ஒப்புக்கொண்ட மக்கள். கிராமத்தின் எல்லா நேயாளிகளும் மருத்துவமனைக்கு வருவது சாத்தியமில்லை என்றனர்.

குறிப்பாக பெண்கள் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சையை பெற்றுக்கொள்வதை அவர்கள் ஏற்கவில்லை. தீவிரமடைந்த தொற்று நோயாளிகளை, பின் தங்கிய கிராமங்களின் தோற்றமான அசுத்தமான அந்த சுற்றுப்புறத்திலிருந்து கொண்டு வந்து சுத்தமான சுற்றுப்புற அமைப்புள்ள இடத்தில் வைத்து சிகிச்சை அளிக்கும்போது தான், சிகிச்சைக்கான முழு பலனளிக்கும் என்பதை தெளிவாக புரிய வைத்தும், பெண்களுக்கு இருக்கும் சில கட்டுப்பாடுகளால் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து வருவதில் எற்பட்ட தடையை துடைத்தெறிய, அதே கிராமங்களின் இளைஞர்களை கருவியாக பயன்படுத்தினார் திருமதி. இராணி பாங்க்.

Medical Check Up (Pic: thebetterindia)

மா தந்தேத்தரி சேவக்

இளைஞர்களில் ஆண், பெண் என இரு பாலாரையும் அழைத்து விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தி, அவர்கள் குடும்பத்தினர் அனைவரிடமும் நிலைமையையும், சிகிச்சை முறையில் தேவையான சுகாதாரத்தையும், தேவைப்படும் தொடர் கண்காணிப்பின் அவசியத்தை புரியவைத்து அநேக நோயாளிகளை மருத்துவமனைக்கு வரவழைக்க முடியாததால். ஒரு முடிவெடுத்தார் “SEARCH” என்கிற தன்னார்வ தொண்டு  நிறுவனத்தையும் முன் நின்று நடத்தும் டாக்டர். இராணி பாங்க், அந்த கிராமத்திலேயே அந்த கிராம பழங்குடியினரின் விருப்பத்திற்கேற்ப, பிரத்யேக மருத்துவமனையை கட்டினார்.

காலம் காலமாக கை வைத்தியத்தை செய்து வந்த கிராமத்து மூதாட்டிகளுக்கும் அவர்கள் செய்யும் கை வைத்தியத்தில் மேலும் கவனமாக இருக்க வேண்டிய குறிப்புகளை கூறி, அந்த சுகாதார வழிகளை அவர்களின் பழக்கத்திற்கு உட்படுத்தி…. அதனால் குழந்தை மரணங்களை தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளார். அதன் விளைவாக இந்த கிராமத்தில் நிகழ்ந்து வந்த குழந்தை மரணத்தின் விகிதம் வெகுவாக குறைந்துள்ளது. பெண்களின் ஆரோக்கிய குறைபாடுகளுக்கும், இவர் மருத்துவ சிகிச்சை கொடுக்கத் தொடங்கியதிலிருந்து, இங்கு வாழும் மக்களின் ஆரோக்கியத்தில் மாற்றம் ஏற்பட்டதெல்லாம் ஒரு புறம் இருந்தாலும். மேலும் ஒரு பெரிய சவால் இந்த கிராமத்து மக்களின் வாழ்க்கை முறையிலிருந்து டாக்டர். இராணிக்கு காத்துக்கொண்டிருந்தது.

Effect Of encouraging Youth (Pic: lareviewofbooks)

மது ஒழிப்பு

அது தான் அந்த கிராமத்து மக்களிடமிருந்த மதுப்பழக்கம். அதனை ஒழிக்க நேரடியாக எந்த திட்டமும் இவர் தீட்டாவிடினும். கிராம மக்கள் அளித்த ஊக்குதலில் அருகில் உள்ள சிறு நகரங்களில் இருக்கும் பட்டதாரிகளில் சில தன்னார்வலர்களைத் திரட்டி “ மது ஒழிப்பு அமைப்பு “ என்று ஒன்றை தொடங்கி, செயல்பட்டனர். 1987, 88 களில் தொடங்கிய இந்த தன்னார்வ அமைப்பு மூலம், கிட்டத்தட்ட ஐந்தே ஆண்டுகளில், மதுவை, முற்றிலுமாக ஒழித்துவிட்டனர்.

Rani Bang Testing Women (Pic: idronline)

இந்தியாவிலேயே அரசால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து மதுக்கடைகளையும் மூடிய முதல் மாவட்டம் கட்சிரோளி தான். அத்தகைய சாதனையை புரிந்ததை பெருமையாக சொல்லிக்கொள்ளும் டாக்டர். இராணி பாங்கின் அர்பணிப்பை வியந்து பாராட்டுவதை விட வேறன்ன செய்வது.

ஒவ்வொரு நாளும் புதிய தளத்தை அமைத்து இந்தியாவின் வருங்காலத்தை நோக்கி நகரும், இந்தியாவின் சாதனைப் பெண்களை ” M G Motor”ம்  “Better India” வும் இணைந்து கொண்டாடுகிறது.

இத்தகைய பிரச்சாரங்களுக்கு ஆதரவாக நீங்கள் முடிந்தவரை நன்கொடை வழங்கலாம். தானம் செய்ய, இந்த இணைப்பைப் பார்க்கவும்:

https://milaap.org/fundraisers/mgchangemakers

மேலும் M G Motor India நிறுவனத்தைப்பற்றி தெரிந்து கொள்ள,

கீழே உள்ள முகப்புத்தக இணைப்பையும், இன்ஸ்டாக்ராம் இணைப்பையும் காணலாம்.

https://www.facebook.com/MGMotorIN/

https://www.instagram.com/mgmotorin/

Web Title: The Changemaker Rani Bang

Featured Image Credit: thebetterindia

Related Articles