மாற்றத்தை ஏற்படுத்திய பெண் – மோனிஷா பெஹல்

நாகாலாந்தின் ஃபெக் மாவட்டத்தில் பெரிதாக அறியப்படாத ஒரு சிறிய கிராமம், சிசாமி. சுமார் 15 வருடங்கள் முன்பு வரை அந்த கிராமத்தின் முகமே வேறு. பெண்களுக்கான உரிமைகள் நிராகரிக்கப்பட்ட பகுதி என்றே இதை சொல்லலாம். இன்றைய காலகட்டத்தில் கூட வடகிழக்கு இந்தியாவின் கிராம பகுதியில் பெண்களுக்கான பாதுகாப்பு சற்று கேள்விகுறியான ஒன்று தான் என்று சில சமீப கால செய்தி இணையங்கள் உணர்த்தாவிடினும், உண்மை அதுவே. பல பாதிக்கப்பட்ட பெண்கள் இதை வெளியே சொல்லுவதுமில்லை. சுற்றியுள்ளவர்களும் இதனை எதிர்த்து கேள்வி எழுப்புவதுமில்லை. சிசாமியும் ஒரு தசாப்த காலத்திற்கு முன்பு வரை அப்படிப்பட்ட ஒரு பகுதியாக தான் இருந்திருக்கிறது. அதாவது கை தேர்ந்த சட்ட வல்லுனரான மோனிஷா பெஹல் இந்த கிராமத்து பெண்களுக்காக பணியாற்ற தொடங்கும் வரை.

ஒரு பெண்ணாக பல சமூக மாற்றங்களை ஏற்படுத்தி பலருக்கு எடுத்துக்காட்டாக வாழும் முன் மாதிரி பெண்களின் சாதனைக் கதைகளை ”Changemaker campaign” மூலம் மக்களிடம் “UN Women India” ன் துணையுடன் எடுத்துச் செல்வதில்  “MG Motor”-ம் ”The Better India” -வும் பெருமகிழ்ச்சி அடைகின்றது.அந்த வரிசையில் நாம் இங்கு காண இருப்பது மோனிஷா பெஹல் பற்றியும் அவர் செய்த சமூக மாற்றத்தைப் பற்றியும் தான்.

மோனிஷா பெஹல்

1951 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ம் தேதி குவாஹாட்டி தேஜ்பூரில் மோனிஷா பிறந்தார். அவரது தாய் மகளிர் தேஜ்பூர் கமிட்டியில் பணிபுரிந்தார்.

ஆரம்ப கல்விக்குப் பிறகு, அவர் டார்ஜீலிங் லொரோட்டோ பள்ளிக்கு சென்றார். அது உண்டு உறவிடப்பள்ளி என்பதால் பள்ளி விடுதியிலேயே தங்கி படித்தார்.

அவருக்கு கணிதப்பாடம் வராத தகவலை அவரது அப்பாவை அழைத்து பள்ளி நிர்வாகம் கூறுயபின் தான் இவரை வேறு பள்ளிக்கு மாற்றுகிறார் இவரது அப்பா. கணிதப்பாடத்தில் இவர் தேர்ச்சி பெறுவதே கடினம் என்பது தான் இவரது ஆசிரியர்கள் இவரது அப்பாவிடம் கூறிய ஒன்று.

தனது பள்ளி படிப்பை முடித்துவிட்டு தில்லியில் பி.ஏ. படித்தார். புதிதாக தில்லியில் படிக்க வந்த முதல் ஆண்டில், பயிலும் கல்லூரியில் தனக்கு தங்க வாய்ப்பு கிட்டாத நிலையில் தனது அத்தை வீட்டிலிருந்து தான் முதலாம் ஆண்டு படிப்பை நிறைவு செய்திருக்கிறார் மோனிஷா.

தில்லியில் தனது படிப்பினைத் தொடர்ந்தபோது, ​​அவர் வட கிழக்கு கலாச்சாரம், வாழ்க்கை முறை, மதம் போன்ற பல புத்தகங்களைத் தான் படிக்க நேர்ந்ததாகவும் அதன் மூலம் தான் இங்கு வாழும் பெண்களின் நிலையில் இருக்கும் பின்னடைவைப் பற்றிய புரிதலுக்கு தான் வந்ததாகவும் தெரிவிக்கும் மோனிஷா, ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில், சமூகவியல் பாடத்தில் முதுகலை ஆராய்ச்சி துறையில் படித்தவர். அவர் இந்த துறையை தேர்ந்தெடுத்ததற்கான காரணம் அவர் படித்த அந்த புத்தகங்கள். அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்த  வைணவ மதம் சார்ந்த வாழ்க்கை முறை பற்றியும் அதிகம் படித்திருக்கிறார்.

smiling Monisha (Pic: ges2017)

வடகிழக்கு இந்தியாவில் இவரது சமூகப்பணி

அதனாலேயே அஸ்ஸாமுக்கு 1978ல் வந்து கிராமப்புற மக்களுக்கான தனது சமூகப்பணியை ஆற்றத் தொடங்கினார். தனது தாயும் தேஜ்பூர் மகளிர் குழுவில் மிகவும் ஈடுபாட்டோடு சமூகத் தொண்டில் ஈடுபட்டுள்ள காரணத்தினால் தான் எனக்கும் பெண் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக பணியாற்ற வேண்டும் என்று விருப்பம்  ஏற்பட்டதாக கூறுகிறார்.

அஸ்ஸாம், நாகாலாந்து மற்றும் மேஹாலயாவிற்கு ஒருங்கிணைந்த ஒரு கிராம வள மேலாண்மை மையம் போன்றதொரு அமைப்பை, ”Noth East Network” என்ற பெயரில் அமைத்து அங்குள்ள அனைத்து பெண்களின் சம உரிமைக்காகவும், பெண்களின் வாழ்க்கை நிலை மேம்பாட்டுக்காகவும் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.

இவர் கொண்ட சமூகப் பார்வை என்பது ஆணுக்கு நிகரான சம உரிமை பெண்களுக்கு இருக்க வேண்டும், பெண்களுக்கான உரிமையை அந்த பெண்கள் உணர்ந்து தனது உரிமைக்காக குரல் கொடுத்து போராட வேண்டுமென்பது. அது மட்டுமல்லாமல், ஆணுக்க்கும் பெண்ணுக்குமான தினக்கூலி ஒன்றாக இருக்க வேண்டும் என்பதும் தான்.

இவர் இதைப்போன்ற பார்வை கொண்டு பெண் முன்னேற்றத்திற்காகவும், உரிமைக்காகவு போராடி கொண்டு வந்த மாற்றம் தான் இந்த பகுதிகளில் நடந்த முதல் மாற்றம் என்று எடுத்துக்கொள்ள முடியாது என்பதை மோனிஷா அவர்களே ஒற்றுக்கொள்கிறார். இவரது நெருங்கிய தோழியான ரோஷ்மி கோஸ்வாமியுடன் தான் இந்த ‘north east network” அமைப்பை தொடங்கிய மோனிஷா, அதற்கு முன்பும் அந்த பகுதியில் இருக்கும் பெண்கள் குழுக்கள் குழுக்களாக இணைந்து உரிமைக்காக செயல்பட்டதை மதிக்கிறார். அதனாலேயே இவரது சிறந்த செயலை முதன்மையானதாக அவர் வெளிப்படுத்திக்கொள்வதில்லை.

செஸ்மாவில் இவரது மேற்பார்வையில் நடந்து வரும் மகளிர் சுகாதார மையத்தைக் கூட முதன் முதலில் அமைக்கப்பட்ட பெண்களுக்கான முதல் சுகாதார மையமாக அவர் வெளிப்படுத்திக்கவில்லை. குடும்பத்தலைவர்களுக்கு இருந்த போதைப் பழக்கத்திற்கு எதிராக சர்ச்களில் பெண்கள் இணைந்து செயல்பட்டதையும் மேற்கோள் காட்டுகிறார்.

Not Equal Wages (Representative Pic: lostwithpurpose)

சாதனைக் கதைகள்

எது எப்படி இருந்தாலும் இவர் பெண் உரிமைக்காக எடுத்து வைத்த சமூகப்பணிகளுக்கு பின் தான் அந்த நாகாலாந்து, அஸ்ஸாம் பகுதிகளில் இருக்கும் கிராமத்து பெண்கள், தன் உரிமையும் வலிமையும் அறிந்து பலமாக வாழ்கிறார்கள். இன்றைக்கு அவர்களுகாக குரல் கொடுக்க பல சமூக ஆர்வமும், சமூக விழிப்பும் கொண்ட பெண்களே அவர்களோடு இருக்கும் போது அந்த கிராமப்புற பெண்களுக்கு இனி என்ன கவலை. இது மட்டுமா…. பெண்கள் சுயமாக வாழ ஏதுவாக வேளாண் சார்ந்த வகுப்புகளும் எடுத்து, வே ளாண் தொடர்பான வணிக வாய்ப்புகளையும் ஏற்படுத்தி, அங்குள்ள சில பெண்களை வேளாண் துறை சார்ந்துர் சுயமாக செயல்படச் செய்து, சொந்த காலில் நிற்க வைத்திருக்கிறார்.

Confident Monisha (Pic: twitter)

ஒவ்வொரு நாளும் புதிய தளத்தை அமைத்து இந்தியாவின் வருங்காலத்தை நோக்கி நகரும், இந்தியாவின் சாதனைப் பெண்களை ” M G Motor”ம்  “Better India” வும் இணைந்து கொண்டாடுகிறது.

இத்தகைய பிரச்சாரங்களுக்கு ஆதரவாக நீங்கள் முடிந்தவரை நன்கொடை வழங்கலாம். தானம் செய்ய, இந்த இணைப்பைப் பார்க்கவும்:

https://milaap.org/fundraisers/mgchangemakers

மேலும் M G Motor India நிறுவனத்தைப்பற்றி தெரிந்து கொள்ள,

கீழே உள்ள முகப்புத்தக இணைப்பையும், இன்ஸ்டாக்ராம் இணைப்பையும் காணலாம்.

https://www.facebook.com/MGMotorIN/

https://www.instagram.com/mgmotorin/

Web Title: Monisha Behal: A Woman Who Set The Beautiful Image of North-East India

Featured Image Credit: thebetterindia

Related Articles