Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website. The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

இலங்கையும், வணிக நடைமுறை ஒப்பந்தசேவையும் (BPO)

இலங்கையில் பிறந்த ஒவ்வருவருக்கும், உலகம் முழுவதும் வியாபித்துள்ள பல்தேசிய நிறுவனங்களான Google , Microsoft , Aviva , Samsung, Sony போன்ற பல நிறுவனங்களில் பணிபுரிய வேண்டும் என்பது ஒரு இலட்சியக்கனவாக இருக்கும். அத்தகைய கனவுடனேயே கடுமையாக உழைப்பவர்களையும் நம் வாழ்வில் கடந்து வந்திருப்போம்.

ஆனால், இன்றையபொழுதில் இலங்கையில் பணிபுரியும் பலர் தமக்கு தெரியாமலே அவ்வாறான பல்தேசியக்கம்பனிகளுக்கு ஒரு பெயர் குறிப்பிடாத ஊழியராக தொழில் புரிந்துகொண்டு இருப்பார்கள்/இருக்கிறார்கள் என்கிற உண்மையைச் சொன்னால் உங்களால் நம்ப முடியுமா?

இலங்கை தொழிற்துறையினை அண்மைக்காலத்தில் ஆக்கிரமித்துள்ள மிகப்பெரிய சேவை சார்ந்த துறையான “வணிக நடைமுறை ஒப்பந்த சேவை” (BPO) மூலமாக இந்த நடைமுறை சாத்தியமாகி இருக்கிறது.

BPO (வணிக நடைமுறை ஒப்பந்தசேவை) என்றால் என்ன ?

குறித்த நிறுவனத்தின் செயற்பாடுகளை எந்தவொரு நலனுக்ககாவும் (முக்கியமாக கிரயக் கட்டுபாடு) மூன்றாம்தரப்பினரிடம் ஒப்பந்த அடிப்படையில் ஒப்படைத்து குறித்த செயற்பாடுகளை நிறைவேற்றிக் கொள்ளும் முறைமையாகும்.

உதாரணமாக, அமெரிக்காவில் இயங்குகின்ற Google நிறுவனத்தின் முதன்மைச் செயற்பாடுகள் தொழில்நுட்பம் சார்ந்தவையாக இருக்கும். ஆனால், அவர்களது கணக்கீடு சார்ந்த அனைத்து தொழிற்பாடுகளும் இரண்டாம்பட்சமாகவும், தவிர்க்க முடியாததாகவும் இருக்கும். எனவே, அனைத்து கணக்கியல் செயற்பாடுகளையும் திறன் மலிந்த இலங்கை, இந்தியா போன்ற மூன்றாம்தர நாடுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்குவதன் மூலம், அமெரிக்க கணக்காளருக்கு வழங்கும் சம்பளம், உட்கட்டமைப்பு செலவினம் உட்பட பல செலவினங்களை ஒப்பீட்டளவில் சேமித்துக்கொள்ளமுடியும். இதன்பிரகாரம், இலங்கையிலுள்ள தேர்ந்த கணக்காய்வாளர் ஒருவர் மூலமாக Google நிறுவனம் தனது கணக்கியல் தேவைகளை ஒப்பீட்டளவில் குறைந்த செலவில் நிறைவேற்றிக் கொள்ளும்.

இலங்கையில் உள்ள BPO வகைகள்

  1. Offshore BPO – இலங்கையின் எல்லைக்கு அப்பால் உள்ள நாடு ஒன்றிலிருந்து ஒப்பந்த அடிப்படையில் சேவையை பெற்றுக்கொள்ளும் நிறுவனங்கள்.
  2. Onshore BPO – இலங்கையின் எல்லைக்குள்ளேயே வேலையை இலகுபடுத்தும் பொருட்டு, ஒப்பந்த அடிப்படையில் சேவையை பெற்றுக்கொள்ளும் நிறுவனங்கள்.
  3. Captive BPO – இலங்கை எல்லைக்கு அப்பால் உள்ள நிறுவனம் தனது சேவைகளை மற்றுமொரு நிறுவனத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்குவதற்கு பதிலாக, தானே இலங்கையில் ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து அதனை செய்துகொள்ளும் நிறுவனம்.
  4. Non-Captive BPO – இலங்கை எல்லைக்கு அப்பால் உள்ள நிறுவனம் தனது சேவைகளை மற்றுமொரு நிறுவனத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்குவதற்கு பதிலாக, தானே இலங்கையில் நிறுவனத்தை ஆரம்பித்து அதனை செய்துகொள்வதுடன், ஏனைய நிறுவனங்களின் செயல்பாடுகளையும் ஒப்பந்த அடிப்படையில் நிறைவேற்றி கொடுக்கும் நிறுவனம்.

இலங்கை BPO சேவைக்கு உகந்ததாக அமைய காரணம் என்ன ?

1. மலிவான திறன்மிக்க ஊழியர்கள் (Skill labours in low cost)

அமெரிக்க, ஜரோப்பிய மற்றும் ஆஸ்திரேலிய நாடுகள் வணிக நடைமுறை ஒப்பந்தசேவைக்கு இலங்கையை 71% வீதம் தெரிவு செய்வதற்கான பிரதானமான காரணம் மலிந்த ஊழியப்படையே (Labour Force at low cost) ஆகும். குறிப்பாக, ஏனைய BPO சேவை வழங்கல் நாடுகளுடன் ஒப்பிடுமிடத்து இலங்கையானது படித்த இளைஞர்களை தனது ஊழியப்படையில் கொண்டுள்ளதுடன், அவர்களில் பெரும்பாலானவர்கள் இளவயதினர்களாக உள்ளனர்.

BPO சேவையைப் பொறுத்தவரையில், நிறுவனங்கள் ஊழியர்களை தெரிவுசெய்யும்போது, ஆங்கிலப் புலமைக்கு முக்கியத்துவம் வழங்குகின்றன. அதனோடுசேர்ந்தே துறைசார்ந்த புலமைக்கும் முக்கியத்துவம் அளிக்கின்றன. பெரும்பாலும், இங்கிருந்து வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களின் வாடிக்கையாளருடன் தொடர்பைப்பேணவேண்டியிருப்பதால், மொழிப்புலமைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. எனவேதான், உயர்தரகல்வியுடன் தொழில்புரிபவர்களாக பெரும்பாலானவர்கள் BPO தொழிற்துறையில் உள்ளார்கள்.

2. மலிவான உட்கட்டமைப்பு வசதிகள் (Lower Infrastructure)

ஏனைய வளர்ச்சி அடைந்த நாடுகளில் தொழில் நிறுவனங்கள் தமக்கான இடம், இணையம் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளுக்கு செலவிடுவதிலும் பார்க்க, இலங்கையில் மிகக்குறைந்த அளவான தொகையினையே உட்கட்டமைப்பு வசதிகளுக்கு செலவிடுகின்றனர். இது வெளிநாட்டு நிறுவனத்தின் நிர்வாக செலவினை பெருமளவில் குறைப்பதுடன், இலாபத்தையும் அதிகரிக்கிறது.

குறிப்பாக, Fiber Optic, ADSL, 4G ஆகிய இணைய வசதிகளை 40% வரை குறைந்த செலவில் இலங்கையில் பெற்றுக்கொள்ளக் கூடியதாக அமைகிறது. மேலும், இத்தகைய தொலைபேசி சேவையில் உள்ள நம்பகதன்மை அல்லது அதன் தொடர்ச்சியாக பயன்படுத்தக்கூடியதன்மை இணைய சேவைகளில் குறைவாக உள்ளது என்பதே பல்வேறு BPO சேவை வழங்கல் நிறுவனங்களின் கருத்தாக உள்ளது. அதிகரித்த இணைய பாவனையும் இதற்க்கு ஒரு காரணமாக அமைகிறது.

3. அரச சலுகைகள் (Government incentives)

இலங்கை போன்ற நாடுகளில் உயர்வான நிலையில் உள்ள வேலையின்மை பிரச்சனைக்கு தீர்வு தரக்கூடிய தொழிற்துறைகளில் முதன்மையானது BPO தொழிற்துறையாகும். இதனால், அரசாங்கமும் இத்தகைய தொழிற்துறை நிறுவனங்களின் படையெடுப்புக்கு பல்வேறு சலுகைசார்ந்த வழியாக உதவிகளை செய்கிறது. குறிப்பாக, குறித்த சில வருடங்களுக்கு முற்றிலுமாக வரிசலுகையினை வழங்குதல், உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தல், நிறுவன ஆரம்பித்தல் செயல்பாடுகளில் தளர்வு நிலையினை கடைப்பிடித்தல் என்பன மூலமாக போட்டிமிகுந்த BPO தொழிற்துறையில் இலங்கைக்கு முதன்மை இடத்தை வழங்க முயற்சி செய்கிறது.

இவை அனைத்துமே, மிக முக்கியமான காரணங்களாக இலங்கையில்BPO சேவையினை வளர்ச்சியடைய செய்திருக்கின்றன.

இலங்கையில் BPO சேவையினை கொண்டுள்ள துறைகள்(Sectors)

BPO தொழிற்துறையின் ஆரம்பகாலத்தில், அவை வெறுமனே அழைப்பு மையங்களாக (Call Centers) தொழிற்படுகின்றன என்கிற குற்றசாட்டும், அங்கு பணிபுரிகின்றவர்கள் தொடர்பிலும் ஒரு ஏளனமாக சிந்தை வெளிப்பாடு அனைவரிடத்திலும் இருந்தது. ஆனாலும், காலமாற்றத்தின் விளைவாக இன்றைய நிலையில் BPO இல்லாத துறைகளே (Sectors) இல்லை என்று சொல்லலாம். இலங்கையில் உள்ள BPO நிறுவனங்கள் துறைவாரியாக கீழ்வரும் படம் சுட்டிகாட்டுகிறது.

வளர்ச்சியடையும் BPO தொழிற்துறை சார்ந்த பிரச்சனைகள்

இன்றைய நிலையில் இலங்கை வணிக நடைமுறை ஒப்பந்தசேவையின் மையமாக (BPO HUB) இருக்கவேண்டும் என இலங்கை அரசும் எதிர்பார்க்கிறது. அத்தகைய நிலையில், வளர்ச்சியடைந்த, வளர்ச்சியடையும் எந்தவொரு தொழிற்துறையுமே எதிர்கொள்ள வேண்டியே வேறுபட்ட சவால்களை இந்த தொழிற்துறையும் எதிர்கொள்ளுகிறது.

முக்கியமாக, BPO தொழில் நிறுவனங்கள் ஆங்கில புலமைகொண்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கிறது. ஆயினும், தொழில் தருனர்களின் பார்வையில், தேர்ச்சிபெற்ற ஆங்கிலப்புலமை கொண்ட ஊழியப்படையை கொழும்பை தவிர்த்து ஏனையபகுதிகளில் பெற்றுக்கொள்ளுவதில் சிரமத்தை எதிர்கொள்வதாக தெரிவிக்கிறார்கள். இன்றையநிலையில், கொழும்பை தவிர்த்து இத்தகைய BPO நிறுவனங்களை வேறு மாவட்டங்களுக்கு நகர்த்துவதில், தேர்ச்சிபெற்ற ஊழியப்படையை பெறுவதில் உள்ள சிக்கலும் தனித்து இத்தகைய நிறுவனங்களை கொழும்பபிலேயே மட்டுபடுத்தி உள்ளது. ஆனாலும், இன்றைய நிலையில் சில தொழில்நுட்பம்சார் BPO நிறுவனங்கள் யாழ்ப்பாணம் நோக்கியும், கணக்கியல்சார் BPO நிறுவனங்கள் காலி நோக்கியும் நகர்ந்துள்ளன.

அதுபோல, நாடுகளுக்கு இடையிலான நேரவேறுபாடு காரணமாக, இலங்கையிலிருந்து வேலை செய்யவேண்டிய நேரங்களும் வேறுபடுகிறது. உதாரணமாக, அமெரிக்காவில் வேலை ஆரம்பிக்கின்ற நேரமானது, இலங்கையில் மாலை அல்லது இரவு பொழுதாக அமைகிறது. எனவே, இலங்கையின் கலாசார அமைப்பின் இறுக்கம் காரணமாக, இத்தகைய வேலைகளுக்குள் பெண்களை உள்வாங்குவதிலும் சரி, வேலையில் உள்வாங்கும் ஊழியப்படையை தக்கவைத்து கொள்ளுவதிலும் சிக்கல் நிலை காணப்படுகிறது. இத்தகைய புதியநிலைக்கு கலாசார கட்டுபாட்டுகளுடன் வளர்ந்த நம்மவர்கள் மாறுவதில் உள்ள சிக்கல்கள் மேலும் பலநாடுகளின் வணிக நடைமுறைசார்ந்த ஒப்பந்தசேவையை பெறுவதில் சிக்கலாக அமைந்துள்ளது.

இலங்கை போன்ற நாடுகள் தொழில்நுட்பத்துறையில் என்னதான் வளர்ச்சியடைந்து இருந்தாலும், அவற்றின் தொழில்நுட்பசேவையின் நம்பகத்தன்மையானது இன்றளவிலுமே கேள்விநிலையில் உள்ளது. பாரிய BPO நிறுவனங்கள் பெரும்பாலும் இரண்டு அல்லது மூன்று இணைய சேவை வழங்குனர்களை தமது தற்பாதுகாப்புக்காக கொண்டுள்ளனர். இது அவர்களின் வாடிக்கையாளர்களுக்கு இடைவிடாத சேவையை வளங்களை உறுதிசெய்கின்றபோதும், நிறுவனங்களுக்கு செலவினங்களை அதிகரிக்கிறது என்றே சொல்லவேண்டும். அண்மைக்காலத்தில் தொலைத்தொடர்பு சேவைகளின் மீது அதிகரிக்கப்பட்ட வரிச்சுமையும், இத்தகைய நிறுவனங்களின் மீதான மேலதிக செலவுச்சுமையாக அமைந்துள்ளது.

இத்தகைய பல்வேறு சவால்களை எதிர்கொண்டே BPO தொழிற்துறையானது வளர்ச்சியடைய வேண்டியநிலை உள்ளது. எதிர்காலத்தில் இலங்கையில் உள்ள ஊழியப்படையின் பெரும்பகுதியினருக்கு தொழில் வழங்கக்கூடிய முக்கியதுறைகளில் ஒன்றான இதனை பொருத்தமான முறையில் வளர்த்தெடுக்கவேண்டிய தார்மீக பொறுப்பு அரசுக்கு உரித்தானதே!

Related Articles