தொடக்கநிலை வணிகங்களின் நிதிமூலங்கள் என்ன?

இலங்கையில் தொழிலாளர் வளம் எப்படி செறிந்து உள்ளதோ ? அதுபோல, எதிர்காலத்தில் தொழில்தருநர் வளமும் அதிகரிப்பதற்கான சாதக தன்மையை தொடக்கநிலை வணிகங்கள் (Startups) ஏற்படுத்தி இருக்கின்றன. குறிப்பாக, ஆசியாவில் தொடக்கநிலை வணிகங்கள் ஆரம்பிப்பதற்கு மிகச்சிறந்த இடங்களில் ஒன்றாக இலங்கையும் உள்ளது. இதுவரை தொடக்கநிலை வணிகங்கள் என்றால் என்ன ? இலங்கையில் அதன் நிலை எவ்வாறு உள்ளது என்பதனை அறியாதவர்கள் கீழ்வரும் சுட்டியில் அறிந்து கொள்ளளலாம்.

தொடக்கநிலை வணிகம் (Startup Business) – இலங்கையில் ஓர் பார்வை

மேலதிகமாக, இலங்கையில் ஆரம்பிக்கபடும் தொடக்கநிலை வணிகங்களின் தக்கனபிழைத்தல் நிலை என்ன ? என்பதை இந்த சுட்டியில் அறிந்து கொள்ளலாம்.

பத்தில் ஒன்றே பிழைக்கும்! தொடக்கநிலை வணிகங்கள் (Startup Business)

இலங்கை மக்கள் அடிப்படையில், துணிகர வணிக முயற்சிகளில் பின்நிற்பதும், தமக்கான சாதகமான நிலைகளில் (Comfort Zone) வாழவும் எத்தனிப்பதால், தொடக்கநிலை வணிகங்களின் ஆரம்பத்தில் தங்களை சந்தையில் நிலைநிறுத்திக் கொள்வதற்கு மிகப்பெரும் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இதன்காரணமாக, பெரும்பாலான தொடக்கநிலை வணிகங்கள் சொந்த சேமிப்பிலேயே ஆரம்பிக்கபடுகின்றன.

இவ்வாறு ஆரம்பிக்கபடுகின்ற தொடக்கநிலை வணிகங்களை, சொந்த முதலீட்டிலயே தொடர்ச்சியாக கொண்டு நடாத்துவது சாத்தியமற்றது, இந்தநிலையில், சந்தையில் வெற்றிகரமாக இயங்கக்கூடிய தொடக்கநிலை வணிகங்கள் தங்களுடைய வணிகத்தை வெற்றிகரமாக கொண்டு நடாத்தக் கூடியவகையில், மேலதிக முதலீடுகளை எங்கே பெற்றுக்கொள்ளலாம் என்பது தொடர்பில் அறிந்திருப்பது அவசியமாகிறது.

1. Lankan Angel Network

இலங்கையின் ஆரம்பநிலையில் உள்ள தொடக்கநிலை வணிகங்களில் தேவதை முதலீட்டாளர்களையும் (Angel Investors) , தனிநபர் முதலீட்டாளர்களையும் முதலீடு செய்ய ஒன்றிணைக்கும் ஒரு தளமாக Lankan Angel Network (LAN) உள்ளது. இவர்கள் தனித்து முதலீட்டு வசதிகளை மட்டுமே வழங்காமல், தங்கள் முதலீடுகளை பாதுகாக்கத்தக்க வகையில், வணிக முயற்சியாளர்களுக்கு வழிகாட்டுதல் (mentor-ship) வழங்கல் , புதிய வணிக ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொடுக்க வழி ஏற்படுத்தல் என்பவற்றுடன், வணிக முயற்சியிலிருந்து வெளியேறும் வரை பொருத்தமான ஆலோசனைகளை வழங்கும் சேவைகளையும் வழங்குகிறது. இலங்கையின், வெற்றிபெற்ற வணிக முயற்சியாளர்களின் தலைமைத்துவத்தில் நடாத்தபடுகின்ற இந்த நிறுவனத்தில் நாம் நன்கு அறிந்த பல தொடக்கநிலை நிறுவனங்களும் முதலீட்டு உதவிகளை பெற்றுள்ளன. Portfolio

2. CrowdIsland

இலங்கையில் தொடக்கநிலை வணிகங்களுக்கு புதுவகையில் முதலீடுகளை திரட்டி வழங்கவென உருவாக்கபட்ட தளம் இதுவாகும். இதில், நிதித்தேவைப்பாடு உடைய முதலீட்டாளர்கள், தங்களுடைய வணிகம் தொடர்பிலான விடயங்களையும், முதலீட்டளர்களுக்குத் தேவையான தகவல்களையும் குறித்த இணையத்தளம் வழியாக வழங்க வேண்டும். இதனை, ஆய்வு செய்யும் CrowdIsland நிறுவனத்தின் திறன்வாய்ந்த ஊழியர்கள், நம்பகதன்மை வாய்ந்த தொடக்கநிலை வணிகங்கள் தொடர்பிலான திட்டங்களை தங்களுடன் பதிவு செய்துகொண்ட முதலீட்டாளர்களுக்கு அனுப்பி வைப்பார்கள். இதன் மூலமாக, முதலீட்டாளர்கள் குறித்த தொடக்கநிலை வணிகங்களின் பங்குகளை கொள்வனவு செய்வதன் மூலமாக, நிதியினை பெற்றுக்கொள்ள முடியும். தொடக்கநிலை வணிகங்கள் முதலீடுகளை திரட்டிக்கொள்ள வரையறுக்கப்பட்ட ஏதேனும் காலவரையறைகளை CrowdIsland கொண்டிருக்காமை இதன் விசேடதன்மையாகும். தொடக்கநிலை வணிகர்களையும், முதலீட்டாளர்களையும் இணைக்கும் ஒரு தளமாக செயல்படும் CrowdIsland, தனது தளத்தில் இணைந்து கொள்வதற்கு ஒரு நிலையான கட்டணத்தையும், முதலீடுகளை திரட்டி கொள்ளும்போது, அதில் குறித்த விகிதத்தினை தரகாகவும் பெற்றுக்கொள்ளுகிறது. இதற்கு மேலதிகமான சேவைகளை தொடக்கநிலை வணிகங்கள் பெற்றுக்கொள்ள மேலதிக கட்டணங்களை செலுத்த வேண்டும்.

3. Blue Ocean Ventures

இந்த நிறுவனம், இலங்கையின் தொடக்கநிலை வணிகங்களின் முதலீட்டு தடங்கல்களை நிவர்த்திக்கவும், வணிக வாய்ப்புக்களை ஏற்படுத்தி கொடுக்கவுமென இலங்கை மற்றும் சிங்கப்பூரில் அமைந்துள்ளது. இலங்கையில், மிக வெற்றிகரமாக இயங்கிகொண்டிருக்கும் பல்வேறு வணிகங்களும் இவர்களின் முதலீட்டு உதவிகளை பெற்றுள்ளன.

Blue Ocean Ventures – Portfolio

பெரும்பாலும் 15 மில்லியன் தொடக்கம் 200 மில்லியன் வரை முதலீடுகளை மேற்கொள்ள தயாராக உள்ள இந்த நிறுவனத்தில் Prajeeth Balasubramaniam , Eric Wikramanayake, Rajan Anandan ஆகியோர் முக்கிய அங்கத்துவர்களாக உள்ளனர்.

4. Angel.co

Facebook , Twitter போன்ற சமூக வலைத்தளங்கள் போல, முதலீட்டாளர்கள் மற்றும் வணிக முயற்சிகளை ஒன்றிணைக்கும் ஒரு சமூக வலைத்தளமாக இது தொழிற்படுகிறது. எங்கே, மிகப்பெரும் பணமுதலைகளிடம் தங்கள் வணிகமுயற்சியை முதலீட்டை திரட்டல் என்கிற பெயரில் அடகு வைத்துவிடுகின்றமோ என்கிற கவலை உள்ளவர்கள், இந்த தளத்தின் ஊடாக, தனிநபர் முதலீட்டாளர்களை அணுகி, எந்தவொரு மூன்றாம் தரப்பினர் தலையீடுகளும் இல்லாமல், முதலீடுகளை பெற முடியும்.

இலங்கையில் உள்ள முதலீட்டாளர்கள் தொடர்பிலான விபரங்களை இந்த சுட்டியில் பெறக் கூடியதாக இருக்கும்.

இவற்றுக்கு மேலதிகமாக, முதலீட்டு நிறுவனங்கள் இலங்கையின் தொடக்கநிலை வணிகமுயற்சிகளை ஊக்குவிக்கும் பொருட்டு, வருடந்தோறும் முதலீடுகளை உட்பாய்ச்சல் செய்யவென வெவ்வேறுபட்ட நிகழ்வுகளையும் நடாத்தி வருகின்றன.

VENTURE ENGINE 

(ventureengine.lk)

2016ம் ஆண்டின் இவ்வருடத்திற்கான வெற்றியாளராக Hire1 நிறுவனம் தெரிவு செய்யபட்டிருக்கிறது. (ventureengine.lk)

கடந்த 2012ம் ஆண்டு முதல், தொடக்கநிலை வணிகங்களை ஊக்குவிக்கவும், அவர்களுக்கான பொருத்தமான பாதையை ஏற்படுத்திக்கொடுக்கவும் BOV Capital மற்றும் Indian Angel Network ஆகியவற்றின் அனுசரனையுடன், மேலும் பலரையும் இணைத்துகொண்டு இந்த நிகழ்வை நடாத்துகிறார்கள். 2016ம் ஆண்டின் இவ்வருடத்திற்கான  வெற்றியாளராக Hire1 நிறுவனம் தெரிவு செய்யபட்டிருக்கிறது. வருடாவருடம் இந்த நிகழ்வில் பங்குபற்றி, வெற்றி பெற்றவர்கள் விபரம் இந்த சுட்டியிலும் http://www.ventureengine.lk/participants.php , இதுவரை நிதி அனுசரணையை பெற்ற நிறுவன விபரங்கள் இந்த சுட்டியிலும், http://www.ventureengine.lk/funded_companies.php உள்ளன.

IDEA2FUND

(idea2fund.lk)

ஆரம்பநிலை கல்வி விற்பன்னர்களின் யோசனை, விற்பன்னர்களின் வியாபார திட்டங்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட சந்தையில் உள்ள முயற்சியாளர்கள் (Niche Market Entrepreneurs) ஆகியவர்களை இலக்காக கொண்டு இந்த நிகழ்வு வேவ்வேறு துறைகளில் உள்ள தொடக்கநிலை வணிகமுயற்சிகளை ஊக்குவிக்கும் முகமாக, நடாத்தபடுகிறது. (idea2fund.lk)

MTI Coporate Finance நிறுவன உதவியுடன், அண்மையகாலத்தில் ஆரம்பிக்கபட்ட நிகழ்வுகளில் இதுவுமொன்று. குறிப்பாக, எதிர்வரும் காலங்களில் இலங்கையில் வெற்றிகரமாக இயங்கவுள்ள தொடக்கநிலை வணிகமுயற்சிகளை இனம்காணவும், அவற்றில் முதலீட்டாளர்களை முதலீடு செய்ய உதவவும் இந்த நிகழ்வு உதவுகிறது. ஆரம்பநிலை கல்வி விற்பன்னர்களின் யோசனை, விற்பன்னர்களின் வியாபார திட்டங்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட சந்தையில் உள்ள முயற்சியாளர்கள் (Niche Market Entrepreneurs) ஆகியவர்களை இலக்காக கொண்டு இந்த நிகழ்வு வேவ்வேறு துறைகளில் உள்ள தொடக்கநிலை வணிகமுயற்சிகளை ஊக்குவிக்கும் முகமாக, நடாத்தபடுகிறது.

SPIRALATION

ICTA அனுசரணையுடன், இலங்கையின் தொழில்நுட்பம் சார்ந்த தொடக்கநிலை வணிகங்களை இனம்காணவும், அவற்றுக்கான முதலீடு மற்றும், ஆலோசனைகள் என்பவற்றை வழங்கவும், போட்டித்தன்மை கொண்ட நிகழ்வாக இது நடாத்தபடுகிறது. குறித்த நிகழ்வு, ஏனைய நிகழ்வுகளை போல் அல்லாமல், ஒருவகையான வலையமைப்பை (Network) இலங்கையின் தொடக்கநிலை வணிகமுயற்சிகளுக்கு இடையில் ஏற்படுத்த முயற்சிக்கிறது. இதனால், நிகழ்காலத்திலும் சரி, எதிர்காலத்திலும் சரி இலங்கையின் தொழில்நுட்பம் சார் வணிகங்கள் மேலதிக உதவிகளை பெற்றுக்கொள்ள முடியும்.

(spiralation.com)

செயல்வடிவம் (spiralation.com)

இதுபோன்று, இலங்கையில் 2016ம்ஆண்டில் மாத்திரம் சுமார் 10க்கு மேற்பட்ட நிகழ்வுகள் தொடக்கநிலை வணிகங்களை மையப்படுத்தி நடாத்தபட்டதுடன், வாரம்தோறும் அல்லது மாதந்தோறும் வணிகமுயற்சியாளர்களை ஒன்றிணைக்கும் (Entrepreneurs Networking Session) கூட்டங்களை நடாத்தும் போக்கு (Trend) பிரசித்தம் பெற்று வருகிறது. இவை அனைத்துமே, இலங்கை மக்கள் தொடக்கநிலை வணிகமுயற்சியாண்மை தொடர்பில் கொண்டுள்ள கருத்துக்களில் மாற்றங்களை ஏற்படுத்தும் என ஏற்பாட்டாளர்கள் நம்புகிறார்கள். இதனால், புதிய வணிக முயற்சிகளின் உருவாக்கம் இடம்பெறுவதுடன், அவை வெற்றிகரமாக சந்தையில் நிலைகொள்ளவும் வழிவகுக்கும்.

இலங்கை போன்ற நாடொன்றில், மிகச்சிறந்த புறமுதலீடுகளின்றி வணிகத்தினை கொண்டு நடாத்துவது கடினமானதாகும். காரணம், மிகச்சிறந்த ஊழியற்படை, சந்தைபடுத்தல் போன்ற செயல்பாடுகளுக்கான செலவீனங்கள் அதிகரித்துள்ளநிலையில், தனியே சொந்த சேமிப்பை மாத்திரம் நம்பி, வணிகத்தை நடாத்த முடியாது. அதுபோல, வங்கிகடன்கள் தனியே நிதியனை தருமே தவிர, முதலீட்டாளர்களின் திறனை அதன் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியாது. எனவே, தொடக்கநிலை வணிக முயற்சியாளர்கள் எதிர்காலத்தில் உலகில் வெற்றிபெற்ற முதலீட்டாளர்களாக வலம்வர வேண்டுமாயின், தற்போதைய நிலையின் சிறந்த முதலீட்டாளர்களின் நிதியையும், திறனையும் பயன்படுத்திக் கொள்ளத்தக்கவகையில், தங்கள் பங்குகளை வழங்கி அவர்களை வணிகத்திற்குள் வரவேற்பது சரியானதே!

Related Articles