உலகம் முழுவதும் விலங்குகளை வைத்து விளையாடப்படும் விளையாட்டுகள்

இன்று நாம் பார்க்க இருப்பது ஜல்லிக்கட்டு பற்றி அல்ல, ஏனென்றால்  ஜல்லிக்கட்டு பிரபலமான வீர விளையாட்டு என்பது நமக்கும் உலகிற்கும் மெரீனா போராட்டத்திற்கு பிறகு தெரிந்திருக்கும். அதேபோல் உலகம் முழுவதும்  விலங்குகளுக்கு என   நடத்தப்படும் விளையாட்டு போட்டிகள் பற்றி உங்களுக்கு தெரியுமா.

நத்தை ஓட்டப்பந்தயம்

என்னடா இது வித்தியாசமான விளையாட்டா இருக்க, நம்மை பொறுத்தவரை ‘நத்தை’ என்பது மிகவும் மெதுவாக ஊரும் ஒரு கடல் இனம் என்பதுதான், இது நம்மிடம் கிடைத்தால் நிச்சயம் குழம்பு வைத்துவிடுவோம்,  ஆனால் நத்தைகளுக்கு என  ஓட்டப்பந்தயம் யுனைடெட் கிங்கடமில் நடத்தப்படுகிறது பத்து நத்தைகளை வரிசையாக நிற்க வைத்து அதன் ஒட்டுமேல் எண்களை பதிவு செய்து 15 அடிவரை ஓட வைக்கிறார்கள்.  நத்தைகளுக்கு ஓட்டப்பந்தயம் நடத்தும் அளவுக்கு இங்கு வேலை இல்லாமல் பலரும் உள்ளனர் என்பதை இந்த விளையாட்டு உணர்த்துகிறது.

Snail-Race (Pic: suwalls)

புறா பந்தயம்

இதனை நீங்கள் மாரி படத்தில் பார்த்து இருப்பீர்கள். புறாக்களுக்கு கூகள் மேப்பை விட பலமடங்கு ஜிபிஎஸ் சக்தி அதிகம் என்பது ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் என்னவோ இந்திய மட்டுமின்றி உலகளவில் புறா பறக்கும் பந்தயம் பிரபலமாக உள்ளது. பல மையில்கள் புறாக்களை பறக்க விடுகின்றனர் மேலும் குழந்தைகள் தொலைந்து போகாமல் இருக்க  காலில் கொலுசு மாட்டுவது போல் புறாக்களும் பறக்கும்போது தொலைந்து போகமல் இருக்க கால்களில் ஒரு நாவீன சிப் மூலாமாக கண்காணிக்கப்படுகிறது.

Bird-Race (Pic: tallahassee)

வான்கோழி பவுலிங்

கேட்கவே வித்தியாசமாக இருக்கும் இந்த விளையாட்டு வான்கோழி இறைச்சியை குளிர செய்து சாதாரண பவுலிங் விளையாட்டில் விளையாடப்படும் பந்துக்கு பதிலாக வான்கோழி இறைச்சியை வைத்து விளையாடப்படுகிறது. இந்த விளையாட்டு அமேரிக்கா மற்றும் கேனடா நாட்டில் பிரபலமான விளையாட்டாகும்

Frozen Turkey Bowling (Pic: popsci)

பூச்சிகள் சண்டை

சண்டை அல்லது சண்டை படங்கள் இவை இரண்டுக்கும் பெயர்போன நாடு சீன என்பது உலகம் அறிந்த விஷயம் ஆகும். இங்கு பூச்சிகளை சாதாரணமாகவே கடைகளில் காசு கொடுத்து வாங்கி சாப்பிடுபவர்கள் உள்ளனர் அதேபோல் அந்த பூச்சிகளை வைத்து சண்டையும் போடவைகின்றன்ர் சீன மக்கள் இந்த சண்டை பாரம்பரியமான சண்டைகளில் ஒன்றகுமாம் பல ஆயிரம் வருடங்களாக இந்த பாரம்பரியம் தொடர்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Insect Fight (Pic: uyandagor)

நாய் சண்டை

நாய் என்பது மனிதனின் உண்மையான நண்பன் என்ற ஆங்கில பழமொழி ஒன்று உள்ளது. நாய்களை நம்மில் ஒருவராக வீட்டில் வளர்த்து பார்த்து இருப்போம். ஆனால் இன்றும் நாய்களை வைத்து கொடூரமான விளையாட்டு விளையாடப்படுகிறது. நாய் சண்டை எப்படி நடத்தப்படுகிறது என்றால் ஒரு வட்டத்திற்குள் இரண்டு நாய்களை சண்டையிட செய்து ஒரு நாய் மற்றொரு நாயை கொள்ளும்வரை அல்லது ஒரு நாய் மற்றொரு நாயை பார்த்து பயந்து வட்டத்தை விட்டு ஓடும்வரை இந்த சண்டை தொடர்ந்து நடைபெறுமாம். மேலும் நாய் தோற்றுவிட்டால் அந்த நாயின் உரிமையாளர் அதனை துப்பாகியால் சுட்டுவிடுவது வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த கொடூரமான விளையாட்டும் அமெரிக்க போன்ற தடை செய்திருந்தாலும் இன்றும் ஸ்பெயின், ஜப்பான் போன்ற நாடுகளில் நடைமுறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Dog Fight (Pic: gazettelive)

கிரிக்கெட் துப்புதல் (spitting)

என்னடா இது துப்புகெட்ட விளையாட்ட இருகேன்னு பாக்குறிங்களா! ஆமாங்க அமெரிக்காவின் பிரபலமான விளையாட்டில் இதுவும் ஒன்று சின்ன வயதில் நாம் யார் அதிக தூரம் துப்புவார்கள் என்ற விளையாட்டை விளையாடி இருப்போம் அதுபோல அமெரிக்காவில் கிரிக்கெட் என்கிற பூச்சியை சாகடித்து அதனை வாயினுள் வைத்துக்கொண்டு நீண்ட தூரத்துக்கு யார் துப்புகிறார்களோ அவர்கள் வெற்றியாளர்கள் என அறிவிக்கபடுகிறார்கள்

 

ஒட்டக சண்டை

அரேபிய நாடுகளில் பிரபலமான சண்டை விளையாட்டு ஒட்டக சண்டை ஆகும். இதனை பற்றி நீங்கள் கேள்வி பட்டிருந்தாலும் இதன் வரலாறு நிச்சயம் தெரிந்திருக்காது. அதாவது ஒரு பருவமடைந்த பெண் ஒட்டகத்தை அடைய இரண்டு ஆண் ஒட்டகங்கள் சண்டை போடுமாம் இதில் யார் வெற்றிபெறுகிறார்களோ அந்த ஒட்டகத்திற்கு பெண் ஒட்டகத்தினை திருமணம் செய்து வைப்பார்களாம்

Camel Fight (dailymotion)

ஃபெரெட் லேக்கிங் (Ferret Legging)

இதுவொரு உலகின் அதிர்ச்சியான விளையாட்டு என்று சொன்னால் தவறில்லை இங்கிலாந்தில் அணில் போன்று ஒரு உயிரினம் உள்ளது அதனை உங்களது பேன்ட் உள்ளே போட்டுவிடுவார்களாம் இது என்ன வேட்டிக்குள் ஓனானை விடுவது போல் இருக்க என்று யோசித்தால் அது தான் உண்மை. இந்த விளையாட்டின் விதிமுறைகள் மிகவும் எளிதானது அதாவது இந்த விளையாட்டை ஆண்கள் மட்டும்தான் விளையாட வேண்டுமாம். அதேபோல் அந்த உயிரினத்துக்கு பற்கள் நன்கு கூர்மையாக இருக்க வேண்டுமாம்.

Ferret Legging (Pic: YouTube)

பன்றிகள் ஒலிம்பிக்

ரஷ்யன் நாட்டில் ஒவ்வொரு வருடமும் மிகவும் பிரம்மாண்டமன முறையில் நடத்தப்படும் விளையாட்டு தான் பன்றிகள் ஒலிம்பிக்ஒரு மைதானத்தில் எண்ணையை ஊற்றி அதில் 20 பன்றிகள் இரு அணியாக பிரிந்து கால்ப்பந்து போட்டி நடைபெறுமாம். இதில் வழுக்கிக் கொண்டே எந்த பன்றி வெற்றிபெருகிறதோ அதற்கு பரிசு வழங்கப்படுமாம். மேலும் இந்த பன்றிகளை கொள்வதற்கு தடை விதித்துள்ளது ரஷியன் பன்றிகள் சங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

Pig Olympics (Pic: nydailynews)

காளைகள் விளையாட்டு

ஸ்பெயின் மற்றும் ரஷ்யாவில் விளையாடப்படும் விளையாட்டு தான் இது அதவது அங்குள்ள மக்கள் காளைகள் இனம் அழிந்துவிடக் கூடாது என்பதற்காக இந்த விளையாட்டினை விளையாடி வருகின்றனர். ஒரு காளையின் கழுத்தில் ஆயிரம் கிலோ எடையை இழுக்க வைப்பது இந்த விளையாட்டின் முக்கிய அம்சம் ஆகும் அதேபோல் மற்றொரு விளையாட்டானது ஒரு காளை முன்னால் சிவப்பு கம்பளத்தை காட்டி கோபமடைய செய்வது ஆனால் உண்மை என்னவென்றால் காளைக்கு சிவப்பு நிறம் தெரியாது என்பதுதான் மேலும் இந்த விளையாட்டுக்கு பின் இந்த காளையை அனைவரது முன்பும் கொன்றுவிடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நம்மை விட அதிகளவில் வளர்ச்சி அடைந்த நாடுகளாக இருந்தாலும் அவர்களது பாரம்பரியத்தை இன்று பின்பற்றுவது அந்த நாட்டிற்கு பெருமையை சேர்க்கின்றது

Bull Games (Pic: timeline)

இந்த ஆக்கம் பிடித்தால் அல்லது தகவலில் தவறு இருந்தால் கீழே பதிவு செய்யவும் மீண்டும் ஒரு சுவாரசியமான தகவலுடன் சந்திப்போம்.

Feature Image Credit: youthkiawaaz.com

Related Articles