சிங்காரச் சென்னை – ருசி எப்படி?

சென்னை எப்படி தமிழ்நாட்டின் தலைநகராய், பல்வேறு வரலாறுகளை தன்னகத்தே கொண்டுள்ளதோ அதற்க்கு நிகராக, உணவு வகைகளிலும் பல்வகைமை கொண்டதாகவே கொண்டதாகவே இருக்கிறது. வந்தாரை வாழ வைக்கும் சென்னை என்பதைப்போல, பல்வேறு மொழி பேசும் இந்தியர்களைக்கொண்ட ஒரு நகரமாக இருப்பதால் என்னவோ, இந்தியாவின் அனைத்து பிரதேசங்களிலும் பிரசித்திபெற்ற அனைத்துவகை உணவுகளையும் சென்னைக்கு போனாலே ருசி பார்த்துவிடலாம்.

ஒருமுறை இந்தியாவுக்கும், அதிலும் சென்னைக்கு பயணிக்கும் ஒருவராக நீங்கள் இருந்தால், அதிலும் உணவுப்பிரியராக இருந்தால் கீழே உள்ள உணவுகளையும், பிரத்தியேக வீதியோர உணவுகளையும் ஒருமுறையேனும் சுவைக்கத்தவறாதீர்கள்.

பிரியாணி (Briyani)

சென்னையில் பிரியாணி வகைகளை கேட்டாலே தலைசுற்றி கீழே விழுந்துவிடுவோம். ஊர்களின் பெயரிலும் ( திண்டுக்கல் பிரியாணி, ஹைதராபாத் பிரியாணி, மும்பை பிரியாணி,……) அவற்றினுள் சேர்க்கப்படும் மாமிசங்களின் அடிபடையிலும், வர்த்தக நாமங்களின் அடிப்படையிலும் பல்வேறு வகையான பிரியாணி வகைகள் சென்னையில் கிடைக்கும். அதிலும் குறிப்பாக, சென்னையில் மிகச்சிறந்த, சுவையான , தரமிக்க பிரியாணி வகைகளை கீழ்வரும் உணவகங்கள் வழங்குகின்றன.

அஞ்சப்பர் செட்டிநாடு உணவகம் 

ஆட்டிறைச்சி பிரியாணிக்கு மிகப்பிரபலமான உணவகம். இந்திய மதிப்பில் 190/-க்கு (LKR 418/-) பெற்றுக்கொள்ள முடியும். இதுதவிர்த்து ஏனைய பிரியாணி வகைகள் மற்றும்  இந்தியாவுக்கே உரித்தான ஏனைய உணவுகளையும் இங்கே பெற்றுக்கொள்ள முடியும்.

(flickr.com)

(flickr.com)

தலைப்பாக்கட்டி உணவகம்

தமிழ்நாட்டு பிரயாணிகளில் பெயரும், புகழும் கூடவே அதிக விலையும் கொண்ட பிரயாணிகளில் இந்த உணவகத்தின் பிரியாணிக்கும் இடமுண்டு. கோழியிறைச்சி பிரியாணியில் இந்த உணவகத்திற்கென்று தனியான இடமுண்டு.

(4.bp.blogspot.com)

(4.bp.blogspot.com)

இந்திய மதிப்பில் 198/-க்கு ( LKR 400/-) இங்கு பெற்றுக்கொள்ள முடியும். தனித்துவமான சுவையினால் 1957ம் ஆண்டு முதல் இயங்கி வருகின்ற இவ்வுணவகத்தில் ஏனைய, இந்திய பாரம்பரிய உணவுகளையும் பெற்றுக்கொள்ளலாம் என்பது மேலதிக சிறப்பு. சென்னையின் ஒவ்வரு இடங்கள் தோறும், இவர்களுக்கு கிளைகள் உண்டு.

ஆசிப் பிரியாணி உணவகம் 

மேற்கூறிய கடைகளைப்போல, நீண்டகால வரலாற்றினைக் கொண்டிராதபோதும், 2000ம் ஆண்டளவின் ஆரம்பத்தில் ஆரம்பிக்கபட்டு வெற்றிகரமாக இயங்கிக்கொண்டிருக்கிறது இந்த பிரியாணி உணவகம்.

(chennaicitynews.net)

(chennaicitynews.net)

குறைந்தது முட்டை பிரியாணி 120/- ( LKR 264/-) வில் ஆரம்பித்து, அதிகப்படியாக இறால் பிரியாணி 230/- (LKR 506/-) வரை விதவிதமான பிரயாணிகளை பெற்றுக்கொள்ள முடியும். ஆசிப் பிரியாணியை சுவைக்க இந்தியாவுக்குத்தான் செல்ல வேண்டும் என்பது அவசியமில்லை. இலங்கையிலும் இவர்கள் தனக்கான கிளையை திறந்திருக்கிறார்கள் என்பது கூடுதல் தகவல். (https://www.facebook.com/Aasife-Biriyani-Colombo-1607473236219171/)

சுக்குபாய் பிரியாணி உணவகம்

மாட்டிறைச்சி பிரியாணி பிரியர்களையும் நாம் தவறவிடக்கூடாது அல்லவா! சென்னையில், இவ்வகை பிரியாணியை கண்டறிவது சிறிது சிரமம்தான் என்றாலும், அங்குள்ள உள்ளூர்வாசிகளிடம் அதிகம் பிரபல்யமான கடை இந்த கடை ஆகும். இந்திய ரூபாயில் 100/- (LKR 220/-) க்கு இங்கே சுவையான மாட்டிறைச்சி பிரியாணியை பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.

(https://www.zomato.com/chennai/sukkubhai-biriyani-alandur/info)

இவற்றைத் தவிர, சென்னையில் தெருவுக்கு தெரு பிரியாணி உணவகங்களும், வீதியோர பிரியாணி பாய் கடைகளும் கொட்டிக் கிடக்கின்றன. நாளொன்றுக்கு ஒரு கடையென சுவை பார்க்க தொடங்கினாலும், ஒட்டுமொத்த வாழ்நாளும் கூட போதாமல் போகக்கூடும். விசேடம் என்னவெனில், இந்தியாவின் சாதாரண மக்கள் உண்ணக்கூடியவகையில் குறைந்தது 40/- (LKR 88/-) முதல் பிரயாணிகள் கிடைக்கிறது. எனவே, நான் ருசித்த இடங்களை விட சுவையான பிரியாணி சென்னையில் எங்கேனும் இருந்தால், முகநூல் வழியாக அல்லது ஆக்கத்தின் கருத்துரை (Comment) வழியாக ஏனையவர்களோடும் பகிர்ந்துகொள்ளுங்கள்.

இந்திய சாட் உணவுகள் (Chaat Food Items)

சென்னையில் பிரியாணிக்கு போட்டியாக எல்லா உணவுக்கடைகளிலும் கிடைக்கக்கூடிய சிற்றுண்டி உணவுவகைகளே இந்த சாட் வகை உணவுகள். தற்போது, இலங்கையிலும் கூட பிரபல இந்திய உணவகங்களில் இவ்வகை உணவுகள் பிரபல்யமாகிக்கொண்டு வருகின்றன. சாட் உணவுவைகளில் நிறையவே பல்வகைமைகள் உள்ளன.

பாணி பூரி (Paani Puri)

பாணி பூரி

பாணி பூரி

குட்டி குட்டியான பூரி வகைகளுக்குள் கொஞ்சம் அவித்த கடலை, சின்னதாக வெட்டிய வெங்காயம் உட்பட சிலவகை மரக்கறிகள், மிக்சர் முறுக்கு எல்லாவற்றையும் உள்ளடக்கி, பிரத்தியேகமாக பாணி பூரிக்கு என தயாரிக்கபட்ட இனிப்பு மற்றும் கசப்பான இருவகை மசாலா நீரையும் ஒருங்கே கொண்டது இந்த உணவுவகை. இந்தியாவின் எந்த தெருவிலும் நிச்சயம் பாணி பூரிக்கென ஒரு கடையாவது இருக்கும். இந்திய விலையில் 20/- விற்கு (LKR 44/-) குறைந்தது 5 பாணி பூரியையாவது சுவைக்க முடியும்.

பேல் பூரி (Bhel puri)

பேல் பூரி (lekhafoods.com)

பேல் பூரி (lekhafoods.com)

பொரி அரிசிவகையையும், மரக்கறிகளையும் கொண்டது. இதற்கென பிரத்தியேகமாக உருவாக்கப்படும் sauceஐயும் சேர்த்து உருவாக்கப்படும் இவ்வகை உணவுகளும் சென்னையின் உணவகங்களில் பிரபலமானது. பாணி பூரியின் விலைக்கே ஒரு தட்டு பேல் பூரியை சுவைக்கலாம்.

பாவ் பாஜி (Paav Bhaji)

பாவ் பாஜி (a.ctimg.net)

பாவ் பாஜி (a.ctimg.net)

மஹாராஷ்டிரா பிரதேசத்தின் பிரசித்தமான இவ்வகை உணவுக்கும் சென்னையில் பிரத்தியேகமான இடமுண்டு. குட்டியான பாண்துண்டுகளை பட்டர் தடவி சூடாக்கி, அதனுடன் பாவ் பாஜிக்கென பிரத்தியேக மசாலாக்களை கொண்டு சமைக்கபட்ட கடலை அல்லது பருப்பு கலவையுடன் இந்த உணவு பரிமாறப்படுகிறது. வீதியோர உணவகங்களில் இதனை குறைந்தது 40/- ரூபாவுக்கு (LKR 88/-) பெற்றுக்கொள்ள முடியும்.

வடை பாவ் (Vada Paav)

வாட பாவ் (ungree.com)

வாட பாவ் (ungree.com)

கிட்டத்தட்ட இந்தியாவின் buger வடிவமாக இதனை சொல்லலாம். பாவ் பாஜிக்கு பயன்படுத்தப்படும் அதே குட்டிவகை பாண்துண்டுகளை வெட்டி, கிழங்கினை கொண்டு செய்த patty வகையினையோ அல்லது சிறிய மசாலா வடையினையும் உள்ளடக்க்கி, இதரபல உணவுகளையும் கொண்டதாக அமைந்தது இது. பாவ் பாஜியின் விலைக்கே இதனையும் சுவைக்க முடியும்.

சமோசா சாட் (Samosa Chaat) 

சமோசா சாட் (esmartschools.in)

சமோசா சாட் (esmartschools.in)

சமோசா என்றதுமே, இலங்கை உணவகங்களில் உள்ள விதவிதமான சமோசாக்களை நினைத்து விடாதீர்கள். இந்தியாவில் பெரும்பாலான சமோசாக்கள் கிழங்குவகைகளை மட்டுமே கொண்டதாக உருவாகின்றன. இவற்றில், சிறிய சமோசா இரண்டு அல்லது மூன்றை மசித்து அவற்றுக்கு மேல், பாவ் பாஜிக்கான கலவையை ஊற்றி வழங்கப்படும் சிற்றுண்டியாக உள்ளது. இதன் விலையும், பாவ் பாஜிக்கான விலையே!

சானா மசாலா (Chaana masaala) 

சானா மசாலா (kwalitybakeryudaipur.com)

சானா மசாலா (kwalitybakeryudaipur.com)

அவித்த கடலையை மையபடுத்தியதாக உருவாக்கப்படும் இன்னுமொரு சிற்றுண்டி வகைகளுள் இதுவும் ஒன்று. இதற்கென பிரத்தியேகமான மசாலா கறி சமைக்கப்பட்டு, அதனுடன் அவித்தகடலையும் பரிமாறப்படுகிறது. இதனையும் 40/- (LKR 88/-) வுக்கு பெற்றுக்கொள்ள முடியும்.

பஜ்ஜி வகைகள் (Bhajji Varieties)

பஜ்ஜி (revisfoodography.netdna-cdn.com)

பஜ்ஜி (revisfoodography.netdna-cdn.com)

சென்னையில் சாட் வகைகளுக்கு நிகராக, மாலையில் அதிகம் விற்பனையாகும் மற்றுமொரு சிற்றுண்டி வகை பஜ்ஜி ஆகும். இந்தியாவில் பிரத்தியேகமாக உள்ள மைதா மா கலவையுள் வெவ்வேறு வகை (வாழைக்காய்,வெங்காயம், கறி மிளகாய், கிழங்கு, கோவா) மரக்கறிகளை வைத்து பொரிப்பதன் மூலம் இவை தயாரிக்கபடுகிறன. இந்திய விலையில் 20/- முதல் 40/- வரை (LKR 44/- – 88/-) ஒரு தட்டு பஜ்ஜி விற்பனை செய்யப்படுகிறது.

ஏனைய உணவு வகைகள்

சென்னையின் வீதியோரத்தில் இவற்றுக்கு மேலதிகமாக, நமக்கு வித்தியாசமான உணவை தரக்கூடிய உணவுவகைகள் நிறையவே உள்ளன. குறிப்பாக, முறுக்கை சனியாக சாப்பிட்டு இருப்போம். ஆனால், அந்த முறுக்கை கூட சான்வீட்ச் (Muruku Sandwich) செய்து ஒரு தட்டு 55/- (LKR 120/-) க்கு விற்பனை செய்கிறார்கள். இதை விடவும், இளஞ் சோளனையும், சீஸ் வகையினையும் உள்ளடக்கி Corn Canapes என்கிற புதிய உணவையும் பரிமாறுகிறார்கள். இதனையும் ஒரு தட்டு 55/- (LKR 120/-) பெற்றுக்கொள்ளலாம். இதைவிடவும், சென்னையில் சேட்டுகள் வாழும் பகுதியான சவுக்கார்பேட்டையை கடக்கும்போது, கச்சோரி (INR 20/- , LKR 44/-) , மிர்ச்சி பாதா (INR 20/- , LKR 44/-) போன்ற உணவுகளையும், சென்னை கடற்கரை சாலையை கடக்கும்போது அதனை அண்டிவாழும் பர்மாக்காரர்களின் அத்தோ (INR 50/- , LKR 110/-), கவ்சே (INR 50/- , LKR 110/-), மொய்ங்கா (INR 50/- , LKR 110/-), மசாலா முட்டை (INR 20/- , LKR 44/-) என்ற புதுவகை உணவுகளை வாழைதண்டு சூப்புடன் இணைத்து சுவைக்க முடியும்.

குடிபான வகைகள்

இப்படி வயிறுக்கு நிறைவாக சிற்றுண்டிகளை உண்ணும்போது, அதற்க்கு நிகரான குடிபானங்களும் அவசியம்தானே! அவற்றையும் சூடாக மற்றும் குளிராக தருவதற்கு என, நிறையவே வீதியோர கடைகள் சென்னையெங்கும் கொட்டிக் கிடக்கின்றன. குடிபான வகைகளைப்பற்றி பேச, இன்னுமொரு ஆக்கம் தனியாக வேண்டுமென்பதால் அதனை தனியாகவே பார்க்கலாம்.
தனியே, இந்திய பயணத்தில் சென்னையில் கடந்துவந்த வீதியோர உணவுகளை மாத்திரமே, இந்த ஆக்கத்திற்குள் கொண்டுவர முடிந்தது. இவற்றுக்கு மேலாக, நாம் தவறவிட்ட ஏதேனும் சுவாரசியமான உணவுவகைகள் இருப்பின், சென்னைவாசிகளும் சரி, அதனை கடந்து வந்தவர்களும் சரி முகநூல் வழியாக அல்லது கருத்துரை வழியாக ஏனையவர்களுக்கு தெரியபடுத்தலாம்.

Related Articles