தமிழகத்தில் நிச்சயம் பார்க்க வேண்டிய இடங்கள்

‘என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்’ இந்த பாடல் வரிகளை போன்று அனைத்து வளங்களும் நிறைந்து இருப்பது தான் நமது தமிழ் நாடு. உலகில் எந்த மூளைக்கு நாம் வேலைத்தேடி  சென்றாலும் நம் மண் மனம் என்றும் மாறது. வரலாற்று சிறப்புமிக்க கோவில்கள், மிகச்சிறந்த அறிவியல் வல்லுனர்கள், சிறந்த உணவு வகைகள் என பல சிறப்புகள் மிகுந்த நாடு நம் நாடாகும்.  அதேபோல் தமிழகம் மற்ற இந்திய மாநிலங்களை விட அழகானது என்பது உங்களுக்கு இந்த கட்டுரை முடியும்போது நிச்சயம் தெரியும். இன்று நாம் பார்க்க இருப்பது வாழ்வில் ஒருமுறையாவது தமிழகத்தில் நிச்சயம் பார்க்க வேண்டிய இடங்கள்.

மதுரை

தமிழகத்தின் தூங்கநகரம் மதுரை என்பது பல வருடங்களாக முன்னோர்கள் மற்றும் மதுரை மக்களால் கூறப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் மதுரை வீதிகள் விறுவிறுப்பாக இருக்கும். இரவு 12 மணிக்கு மதுரைக்கு போனாலும் பேருந்து வசதி. சுவையான உணவு என அனைத்து வசதிகளும் கிடைக்கும். மேலும் மதுரையின் முக்கிய சிறப்பு உலகம் அறிந்த மீனாட்சியம்மன் கோவில் ஆகும். இதைத்தவிர மதுரையை சுற்றி பல்வேறு கோவில்கள் உள்ளன குறிப்பாக, அழகர் கோவில் மற்றும் பாண்டி கோவில் தென் மாவட்டங்களில் அனைவராலும் அறியப்படும் கோவில்கள் ஆகும். தமிழர்களின் பாரம்பரியம் பற்றி தெரிந்துக்கொள்ள விரும்பவோர் மதுரைக்கு நிச்சயம் செல்ல வேண்டும்.

Meenakshi Amman Temple (Pic: themysteriousindia)

கன்னியாகுமரி

மிகவும் அமைதியான தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் என்றால் அது கன்னியாகுமரி என்று கூறுவதில் தவறில்லை. கன்னியாகுமரியின் முக்கிய சுற்றுலா தளம் என்றால் கடல் நடுவே அமைந்திருக்கும் 133 அடி திருவள்ளுவர் சிலை மற்றும் சுவாமி விவேகானந்தர்  மண்டபம் ஆகும். மேலும் கன்னியாகுமரியில் அதிகாலையில் சூரிய உதயம் மற்றும் சூரிய ஆஸ்தானமும் பார்ப்பது சொர்கத்துக்கு இணையாகும். முக்கடல்களுக்கு நடுவே அமைந்திருக்கும் கன்னியாகுமரி இயற்கை அழகு நிறைந்ததாகும்.

Kanniyakumari (Pic: undividedtravel)

தஞ்சாவூர்

தஞ்சை பெரியக் கோவில் தமிழன் பெருமை சொல்லும் இந்த கோவில்  பற்றி நாம் அனைவரும் அறிந்ததே. ஆனாலும் இதன் சிறப்பு ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே தான் உள்ளது. இதனால் தான் இந்த் பட்டியலில் தஞ்சை இடம் பெற்றுள்ளது. மேலும் தஞ்சாவூரில் தான் தமிழுக்கென முதல் பல்கலைக்கழகம் துவங்கப்பட்டது. தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்றும் தஞ்சாவூரை அழைகின்றனர் காரணம் விவசாயத்தில் தமிழகத்தில் முதல் இடத்தில் இருக்கும் மாவட்டம் தஞ்சாவூர் என்பதுதான். தஞ்சாவூர் பொம்மைகள் தலையாட்டி பொம்மை என அறியப்படும் இந்த பொம்மை உலகப்புகழ் பெற்ற மண் பொம்மைகள் ஆகும். தஞ்சை மாவட்டத்தின் மற்றொரு பெருமை கும்பகோணம் டிகிரி காபி என்பது குறிப்பிடத்தக்கது.

Thanjai-periya-kovil (Pic: realindia)

ஒகேனக்கல்

கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் இங்கிருந்துதான் நுழைகிறது. ஒகேனக்கல்லில் சிறப்பு இங்கு இருக்கும் அருவிகள் சேலம் மாவட்டத்தில் இருந்து 114 கிலோமீட்டர் துரத்தில் உள்ள இந்த அருவிகள் பல்வேறு சுற்றுலாப் பயணிகளை கவர்கின்றன. இரண்டு மாநிலங்களின் எல்லை இருக்கும் இந்த ஊர் தமிழகத்தில் நிச்சயம் பார்க்க வேண்டிய இடம் என்பது குறிப்பிடத்தக்கது.

Hogenakkal Fall (Pic: tamilnadu-favtourism)

வால்பாறை

அடுத்து நாம் பார்க்க இருப்பது ஆங்கிலத்தில் செவன்த் ஹெவன் என்று அழைக்கப்படும் வால்பாறை. கடல் மட்டத்திலிருந்து 3400 அடிகள் உயரத்தில் உள்ளது என்பது இதன் அழகை பிரதிப்பலிக்கிறது. வால்பாறை கோவை மாவட்டத்தில் ஆனைமலை வனச் சரணாலயத்திற்கு கீழ் வருகின்றது. இங்கு நீங்கள் அனைத்து விதமான வனவிலங்குகளை பார்க்க இயலும் நண்பர்களுடன் காலை வேலையில் பனிபொழியும் போது செல்வது சொர்கத்துக்கு இணையாகும். பசுமையை விரும்புவோர்க்கு வால்பாறை பிடிக்காமல் இருக்காது.

Vaalpaarai- Roadways (Pic: munnartourguide)

சென்னை மெரீனா கடற்கரை

உலகின் நீளமான கடற்கரை என்ற பெருமையை கொண்டுள்ளா மெரீனா கடற்கரை. சென்னையில் இருக்கும் இந்த கடற்கரையை காண தினம்தோறும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. தினமும் 30,000 சுற்றுலாப் பயணிகள் மெரீனா வருகின்றனர் மேலும் விடுமுறை நாட்களில் இந்த எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரிக்கின்றது. வரலாறு சிறப்புமிக்க ஜல்லிக்கட்டு மீட்பு போராட்டம் மற்றொரு சிறப்பாக திகழ்ந்து வருகிறது. இங்கு இருக்கும் மற்றொரு சிறப்பு உணவுகள் கடற்கரையில் கிடைக்கும் உணவு வகைகள் எப்போவுமே சுவையாக இருக்கும் அந்த வகையில் மீன் வறுவல், சூடான வேர்கடலை இதைவிட சுவையான உணவு சுந்தரி அக்கா கிடையில் கிடைக்கும். மெரீனா கடற்கரை சென்றால் சுந்தரி அக்கா கடை எது என்றால் கேட்டால் எல்லோருக்கும் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Chennai Marina Beach (Pic: chennaitourpackages)

இராமேஸ்வரம்

இந்தியாவின் முக்கிய புனித ஸ்தலங்களில் ராமேஸ்வரமும் முக்கியமான ஒரு நகரம் ஆகும். இங்கு இருக்கும் ஸ்ரீ ராமநாத சுவாமி கோவில் தீவுக்கு நடுவே அமைந்திருக்கும் இந்த கோவிலினை காண பக்தர்கள் கூட்டம் உலகமுழுவதிலும் இருந்து தினமும் வந்துக்கொண்டே இருக்கின்றது. மேலும் வரலாற்று சிறப்புமிக்க பாம்பன் பாலம் இந்தியாவின் முதல் கடல் பாலம் என அறியப்படும் பாம்பன் பலம் நுற்றாண்டு கண்ட பாலம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த புனித ஸ்தலமும் தமிழகத்தில் பார்க்க வேண்டிய முக்கிய இடமாகும்.

Pamban Bridge (Pic: travelzza)

சிவகங்கை

செட்டிநாடு நகரம் அழைக்கப்படுவது சிவகங்கை மாவட்டம். இந்த மாவட்டத்தின் சிறப்புகள் செட்டிநாடு வீடுகள், உணவு வகைகள் வரலாறு சிறப்பு மிகுந்த கோவில்கள் என பல சிறப்புகள் நிறைந்திருக்கும் நகரம் சிவகங்கை ஆகும். செட்டிநாடு கலாச்சாரம் பற்றி அறிந்துக்கொள்ள காரைக்குடி மற்றும் அதன் சுற்றுப்புற நகரங்கள் உள்ளன. மண் வாசம் ஊரெல்லாம் வீசும் என்றால் அது சிவகங்கை மாவட்டம்தான்.

Chettinad Palace (Pic: tamilnadu-favtourism)

தமிழகத்தில் இதைதவிர்த்து பல்வேறு சுற்றுலா தளங்கள் உள்ளன. ஆனால் நான் இந்த இடங்களை தேர்ந்தெடுக்க முக்கிய காரணம் இந்த இடங்களை நான் நேரில் சென்று கண்டது என்பது தான். தமிழகத்தின் ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு அழகு உள்ளது மேலும் இந்த ஆக்கத்தில் கூறப்படாத பல்வேறு சுற்றுலா தளங்கள் இருக்கலாம் அப்படி உங்களுக்கு தெரிந்த இடங்களை பற்றி கீழே பதிவு செய்யவும் . எனது அடுத்த கட்டுரையில் அதை பற்றி நாம் மக்களுக்கு எடுத்து சொல்வோம்.

எப்போதும்போல இந்த ஆக்கம் உங்களுக்கு பிடித்திருந்தால் அல்லது கூறப்பட்டுள்ள தகவல்களில் தவறு இருந்தால் தயவுசெய்து கீழ் பதிவிடவும், எங்களது தரத்தை உயர்த்த உங்களது கருத்து எங்களுக்கு மிகவும் முக்கியமாகும். மேலும் ஒரு சுவாரசியமான தகவலுடன் உங்களை சந்திக்கின்றேன்.

Feature Image Credit: pinterest.com

Related Articles